Saturday, 20 May 2023
"வீட்டுக்கு வீடு குழாய் மூலம் மது விற்பனை செய்யும் நிலையை திமுக அரசு உருவாக்கும்!"- ஆர்.பி.உதயகுமார்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கி உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார்.ஆர்.பி.உதயகுமார்
நிகழ்ச்சியில் பேசியவர், "இந்திய அரசியலில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அம்மா பெற்றுத் தந்தார். அதனைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டினைப் பெற்று கொடுத்தார்.
கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்குத் தடை வந்தபோது, அதற்காக தனிச் சட்டத்தை நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலுக்கு தி.மு.க அனுப்பவில்லை.
ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்த பெருமை அம்மா அரசுக்குத்தான் உண்டு. ஜல்லிக்கட்டுமீதான தடையை நீக்க ஏகமனதாக சட்ட மசோதாவை நிறைவேற்றி வாக்களிக்கும் உரிமையை உறுப்பினர்களுக்கு எடப்பாடியார் வழங்கினார்.
முதன் முதலாக பச்சை தமிழராக ஒரு முதலமைச்சர் வாடிவாசலுக்கு வந்து கொடி அசைத்து, ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்த வரலாறு எடப்பாடியாருக்கு உண்டு. ஆனால், இன்றைக்கு அந்தக் கல்வெட்டை மூடி மறைக்க முயற்சி செய்கிறார்கள்.ஆர்.பி.உதயகுமார்
உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாசார அடையாளமாக இருக்கிறது என்று கூறி, தடை போட மறுத்துவிட்டனர். தமிழக அரசு சார்பில் சிறப்பான வாதங்களை வைத்ததாக ஓர் இடத்தில்கூட நீதிபதிகள் சொல்லவில்லை. ஏற்கெனவே அம்மா அரசு கொண்டுவந்த மசோதாவின் வாதங்களைத்தான் கூறியிருக்கிறார்கள்.
அலங்காநல்லூர் அருகே கட்டப்பட்ட வரும் ஜல்லிக்கட்டு மைதானத்தைக் காரணம் காட்டி, வாடிவாசலை மூட நினைத்தால் எடப்பாடியாரின் அனுமதியுடன் பெரும் போராட்டத்தை நடத்துவோம்.
அ.தி.மு.க அரசு காப்பற்றி வந்த காவிரி, முல்லைப்பெரியாறு, மேக்கேதாட்டூ உள்ளிட்ட பல்வேறு ஜீவாதார உரிமைகளில் இன்றைய முதலமைச்சர் மௌனமாக இருக்கிறார்.
செந்தில் பாலாஜி அமைச்சராக நீடித்தால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும். அடுத்து, வீட்டுக்கு வீடு குழாய் மூலம் டாஸ்மாக் மது விற்பனை செய்யும் நிலை உருவாகும். `மக்களைத் தேடி மது' என்ற நிலையை தி.மு.க அரசு உருவாக்கிவிடும்.
இரண்டு வருட தி.மு.க ஆட்சியில் சாராயம், மதுபான விற்பனை அதிகரித்திருக்கிறது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவருக்கு நிதி வழங்கியவர்கள், மதுரை சித்திரை திருவிழாவில் சாமி கும்பிடச் சென்ற பலியான நான்கு பேருக்கு நிவாரணம் வழங்கவில்லை.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்காமல், டாஸ்மாக் கடைகளை அதிகரித்திருக்கின்றனர். கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களின் உயிரை இந்த அரசால் திருப்பித் தர முடியுமா? வாடிப்பட்டி நிகழ்ச்சியில் ஆர்.பி.உதயகுமார்
இடி அமின், முசோலினியின் மறு உருவமாக இருக்கிற ஸ்டாலின் ஆட்சி அகற்றப்பட வேண்டும். நடந்ததற்கெல்லாம் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்.
நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய 30,000 கோடி ரூபாய் ஊழலை, தி.மு.க-வின் நிதியமைச்சரே தோலுரித்துக் காட்டியிருக்கிறார். இதற்கு முதலமைச்சர் பதில் சொல்லவில்லை. ஊழல் குறித்துப் பேசிய அமைச்சரை தகவல் தொழில்நுட்பத்துறைக்கு மாற்றியிருக்கின்றனர். இவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினால், அடுத்த ஆடியோ ரிலீஸ் ஆகும் என்ற பயத்தில் இருக்கின்றனர். அமைச்சர் தியாகராஜன் வாய் திறந்தால் தி.மு.க ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும்.
இரண்டு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கிற பணியையும், ஆகஸ்ட் மாதம் மதுரையிலே உலகமே திரும்பிப் பார்க்கிற வகையில் பொன்விழா வெற்றி மாநாட்டை நடத்துகிற வரலாற்று பெருமையும் எடப்பாடியாருக்குக் கிடைத்திருக்கிறது.
கள்ளச்சாராயம் இந்தியாவிலே இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் இருக்கின்ற அவலம் ஏற்பட்டிருக்கிறது. இந்த அவலத்தை அகற்றிட எடப்பாடியார் போராடி வருகிறார்" என்றார்.``மனித வெடிகுண்டாக அதிமுக-வினர் மாறுவார்கள்..!" - எச்சரிக்கும் ஆர்.பி.உதயகுமார்
http://dlvr.it/SpKcWW
http://dlvr.it/SpKcWW
Friday, 19 May 2023
சிறுவயதிலேயே திருமணம், ஐ.ஏ.எஸ் பணியிலிருந்து வி.ஆர்.எஸ் - யார் இந்தப் புதிய அமைச்சர் அர்ஜுன் ராம்?!
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக இன்று காலை அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியானது. அந்த அறிவிப்பில், கடந்த சில மாதங்களாகவே உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் அமைப்புக்கு எதிராகப் பேசிவந்த மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, புவி அறிவியல்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.முன்னாள் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு
அதோடு அவர் கவனித்துவந்த மத்திய சட்டம் மற்றும் நீதித்துறைக்கு பா.ஜ.க எம்.பி அர்ஜுன் ராம் மேக்வால் புதிய மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றி பின்பு அரசியலுக்குள் நுழைந்து, மத்திய இணையமைச்சராக இருந்து தற்போது சட்டம் மற்றும் நீதித்துறைக்கு அமைச்சராகியிருக்கும் அர்ஜுன் ராம் மேக்வாலின் அரசியல் பயணம் குறித்து சுருக்கமாகப் பார்ப்போம்..!
யார் இந்த அர்ஜுன் ராம் மேக்வால்?
தற்போது 69 வயதாகும் அர்ஜுன் ராம் மேக்வால், ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்திலுள்ள கிஷ்மிதேசர் என்ற சிறிய குடும்பத்தில், 1953-ம் ஆண்டு லகு ராம் மேக்வால், ஹிரா தேவி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவரான இவர், தன்னுடைய சொந்த கிராமத்திலேயே அரசுப் பள்ளியில் தொடக்கக் கல்வியை முடித்துவிட்டு, பீனாசரிலுள்ள ஜவஹர் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் இடைநிலைக் கல்வியை முடித்தார்.மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்
இதற்கிடையில், எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதே 14 வயதில் அர்ஜுன் ராம் மேக்வாலுக்கு திருமணம் முடிக்கப்பட்டுவிட்டது. பின்னர் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, பிகானேரிலுள்ள ஸ்ரீ துங்கர் கல்லூரியில் சட்டத்துறையில் இளங்கலை முடித்த அர்ஜுன் ராம் மேக்வால், அதே கல்லூரியில் பொலிட்டிகல் சயின்ஸில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன் பிறகு பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்தார்.
ஐ.ஏ.எஸ் `டு' மத்திய அமைச்சர்!
1982-ல் ராஜஸ்தான் மாநில மற்றும் துணை சேவைகள் ஒருங்கிணைந்த தேர்வில் தேர்ச்சியடைந்த அர்ஜுன் ராம் மேக்வால், படிப்படியாக அரசுத்துறையில் பணியாற்றி 1994-ல் ராஜஸ்தானின் அப்போதைய துணை முதல்வர் ஹரி சங்கர் பாப்ராவுக்கு சிறப்புப் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு பல்வேறு துறைகளில் பணியாற்றிய அர்ஜுன் ராம் மேக்வால், 1999-ல் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார். தொடர்ந்து உயர் கல்வித்துறையில் சிறப்பு செயலாளர், வணிக வரித்துறையில் கூடுதல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் எனப் பல பதவிகளை வகித்தார்.மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்
அதன் பின்னர் அரசியலில் ஈடுபட முடிவெடுத்த அர்ஜுன் ராம் மேக்வால் ஐ.ஏ.எஸ் பணியிலிருந்து விருப்ப ஒய்வுபெற்றார். அதையடுத்து, அரசியலில் முழுவீச்சில் இறங்கிய அர்ஜுன் ராம் மேக்வால், 2009-ல் பா.ஜ.க சார்பில் முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குள் எம்.பி-யாக நுழைந்தார். 2014-லும் மீண்டும் எம்.பி-யானார்.
அதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்றத்தில் வெளிவிவகாரங்களுக்கான ஆலோசனைக் குழு, பாதுகாப்புத்துறைக்கான ஆலோசனைக் குழு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான ஆலோசனைக் குழு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கான ஆலோசனைக் குழு, சட்டம் மற்றும் நீதித்துறைக்கான ஆலோசனைக் குழு உட்பட பல ஆலோசனைக் குழுக்களில் அர்ஜுன் ராம் மேக்வால் உறுப்பினராக இருந்தார். கட்சி மட்டத்திலும், ராஜஸ்தான் மாநில பா.ஜ.க துணைத் தலைவர், பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர், மக்களவை தலைமைக் கொறடா உள்ளிட்ட பதவிகளையும் அர்ஜுன் ராம் மேக்வால் வகித்தார்.மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்
இந்த நிலையில் 2016-ம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளுக்கு மத்திய இணையமைச்சராகப் பதவி வகித்துவரும் அர்ஜுன் ராம் மேக்வால், இன்று பிரதமர் மோடியின் பரிந்துரையின்பேரில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறைக்கு அமைச்சராக்கப்பட்டிருக்கிறார்.மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்
முன்னதாக எம்.பி-யாக இருந்தபோது நாடாளுமன்றத்துக்கு அடிக்கடி சைக்கிளில் வந்துகொண்டிருந்த அர்ஜுன் ராம் மேக்வால், 2016-ல் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றதற்குப் பிறகு நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வருவதை நிறுத்திக்கொண்டார்.
நீதித்துறை அமைச்சராகியிருக்கும் அர்ஜுன் ராம் மேக்வாலின் செயல்பாடுகள் எப்படியிருக்கப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!!!`மோடி அலை முடிந்தது; சர்வாதிகாரத்தை மக்கள் முறியடிப்பார்கள்!' - சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்
http://dlvr.it/SpGpRS
http://dlvr.it/SpGpRS
Thursday, 18 May 2023
செயற்கைக்கோள் நிலையத்தை ஆய்வுசெய்த கிம் ஜாங் உன் | மோச்சா புயலால் 60 பேர் பலி - உலகச் செய்திகள்
இரானில் சமீபத்தில் ஒரு கலவரத்தை நடத்த திட்டமிட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட அஜர்பைஜான் நாட்டைச் சேர்ந்த ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் இரான் நாட்டு ரகசிய சேவைகளில் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.
மியான்மரில் ஏற்பட்டிருக்கும் மோச்சா புயல் காரணமாக 60 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மியான்மரில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகச் சக்திவாய்ந்த புயல் இதுவே.
பாகிஸ்தானில் அரசு உடைமைகளை இம்ரான் கானின் ஆதரவாளர்கள் தாக்கியதற்காக, அந்த நாட்டு ராணுவச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
18 ரஷ்ய ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அறிவித்திருக்கிறது. இதனால் அந்தப் பகுதி பரபரப்பாகக் காணப்படுகிறது.
9 மாதங்களுக்கு முன்பு, நியூயார்க்கில் நடந்த இலக்கிய விழாவில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தாக்கப்பட்டார். அந்த தாக்குதலுக்குப் பிறகு, அவர் முதன்முறையாகப் பொதுவெளியில் காணப்பட்டார். மேற்கத்திய நாடுகளில் கருத்து சுதந்திரம் கடுமையான அச்சுறுத்தலில் இருப்பதாகக் கூறினார்.
முன்னாள் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபாவின் நெருங்கிய உறவினரான பூஷண் ரானா, சீனாவுடனான ஓர் ஆயுத ஒப்பந்தத்தில் தொடர்புடையதாக அந்த நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் அமரேஷ் குமார் சிங் குற்றம்சாட்டினார்.
கான் திரைப்பட விழா என்பது பிரான்ஸ் நாட்டின் கான் என்னும் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா. 76-வது கான் திரைப்படத் திருவிழா நேற்று பிரான்சில் தொடங்கியது. இதில் மத்திய அமைச்சர்கள் அனுராக் சிங் தாகூர், எல்.முருகன், சாரா அலி கான், மானுஷி சில்லர் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.
நகைச்சுவை நாடகமான (Comedy Drama) 'தி பியர் - சீசன் 2'-வின் முதல் டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த சீசனின் பத்து தொடர்களும் ஜூன் 22-ம் தேதி வெளியிடப்படுகிறது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தன்னுடைய மகளுடன் சென்று ராணுவ செயற்கைக்கோள் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
http://dlvr.it/SpCrSp
http://dlvr.it/SpCrSp
Wednesday, 17 May 2023
`பொதுவான விவாகரத்து சட்டம் வேண்டும்’ - சுப்ரீம் கோர்ட்டில் கிரிக்கெட் வீரர் மொகமத் சமி மனைவி மனு
கிரிக்கெட் வீரர் மொகமத் சமிக்கும் அவரின் மனைவி ஹசின் ஜஹானுக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. மொகமத் சமி, தனது மனைவியை தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார். அதேநேரம், ஹசின் ஜஹான் விவாகரத்துக் கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.தலாக்
அதோடு ஹசின் ஜஹான், தன் வழக்கறிஞர் தீபக் பிரகாஷ் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், `நீதித்துறைக்கு அப்பாற்பட்ட தன்னிச்சையான முஸ்லிம் திருமண தனிநபர் சட்டமான தலாக், தலாக்-உல்-ஹசன் சட்டத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளேன். முஸ்லிம் விவாகரத்து சட்டப்பிரிவான தலாக்-உல்-ஹசனின் கீழ் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதி மொகமத் சமி எனக்கு முதல் நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீஸை தொடர்ந்து, நான் அறிந்தவர்களிடம் இது குறித்து விசாரித்தபோது அவர்களில் பலரும் இதே போன்று தலாக் விவாகரத்து முறையால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. எனவேதான் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளேன்.
தலாக் முறை ரத்து செய்யப்பட்டாலும் முஸ்லிம் தனி நபர் சட்டத்தில் அது இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. தலாக் சட்டம் முஸ்லிம் ஆண்களுக்கு முஸ்லிம் பெண்களை விவாகரத்து செய்ய அதிகாரங்களை வழங்குகிறது.
தலாக் முறையில் விவாகரத்து செய்யும்போது பெண்களிடம் எந்த விளக்கமும் கேட்பதில்லை. தன்னிச்சையான விவாகரத்து சட்டம் பாலின ரீதியாக பெண்களுக்கு எதிராக பாரபட்சமாக இருக்கிறது. இது பெண்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானது. முஸ்லிம் ஆண்கள் தன்னிச்சையான தலாக் சட்டத்தை தவறாக பயன்படுத்தி, மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக தலாக் கூறி பெண்களிடம் கேட்காமல் விவாகரத்து செய்துவிடுகின்றனர்.பெண் குழந்தை பிறந்ததால் `தலாக்'! - போலீஸில் புகார் அளித்த மனைவி
எனவே, பாலின மற்றும் மதப் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் பொதுவான விவாகரத்து வழிமுறைகளை வகுக்க வேண்டும். இதற்குப் புதிய சட்டம் வகுக்க வேண்டும். தலாக் போன்ற தன்னிச்சையான விவாகரத்துகளை செல்லாது என்று அறிவிக்கவேண்டும். தலாக் விவாகரத்துகளை ஊக்குவிக்கும் முஸ்லிம் தனிநபர் சட்டப்பிரிவுகளையும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’ என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இம்மனு நீதிபதி சந்திரசூட் தலைமையில் விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே இது போன்ற மனுக்கள் நிலுவையில் இருப்பதால் அதோடு சேர்த்து விசாரிப்பதாகக் கூறிய நீதிபதிகள் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.
http://dlvr.it/Sp8rXH
http://dlvr.it/Sp8rXH
Tuesday, 16 May 2023
கள்ளச்சாராய விவகாரம்: "விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்படும்" - முதலமைச்சர் ஸ்டாலின்
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில், கள்ளச்சாராயம் குடித்த 10 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் (மதியம் நிலவரம்), 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அதன் பின்னர், மருத்துவமனை வளாகத்திற்குள்ளாகவே இந்தச் சம்பவம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே இருக்கக் கூடிய எக்கியார் குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த பலர் கள்ளச்சாராயம் அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். இது அரசினுடைய கவனத்திற்கு வந்தவுடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை போன்ற பல்வேறு மருத்துவமனைகளுக்கு அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டு, உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.பாதிக்கப்பட்டோரை பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.20 நாள்கள்... 6 கொலைகள் - `போதை'யால் பதறும் விழுப்புரம்!
மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் இதுவரை 9 பேர் இறந்திருக்கிறார்கள். மேலும், 40 பேர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையிலும், 3 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும் , ஒருவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையிலும் தற்போது சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குத் தேவையான அனைத்து சிசிச்சைகளையும் வழங்கி, உயிர்களை காப்பாற்றிடுமாறு மருத்துவர்களை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இந்தச் சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளிகள் மெத்தனால் எரிசாராயத்தை பயன்படுத்தியதால் இந்தத் துயரச் சம்பவம் ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. இதில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரின் நடவடிக்கையால் உடனடியாக கைதும்செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும், இந்தச் சம்பவம் நடைபெற காரணமாக இருந்த அனைவரையும் கைதுசெய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செங்கல்பட்டு மாவட்டம், பெருக்கரணை கிராமத்தில் ஐந்து பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்த துயரச் சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது. மேலும், 7 நபர்கள் தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். சம்பவத்தில் ஈடுபட்டவர்களும் உடனடியாக காவல்துறையால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். விசாரணையின்போது, இங்கும் கள்ளச்சாராயம் விற்பனை செய்துள்ளவர்கள் மெத்தனால் பயன்படுத்தியுள்ளதாகவும், டாஸ்மாக் நிறுவனத்தினுடைய பாட்டில்களில் கள்ளச்சாராயத்தை ஊற்றி விற்பனை செய்திருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. இரு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை உழங்கிட உத்தரவிட்டிருக்கிறேன். மேலும், பாதிக்கப்பட்டு சிசிச்சை பெற்றுக் கொண்டிருக்கக் கூடியவர்களின் குடும்பங்களுக்கு 50,000 ரூபாய் நிதி உதவியும் வழங்கப்பட்டிருக்கிறது.மு.க.ஸ்டாலின் பேட்டி
இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளது மட்டுமின்றி, இதற்குக் காரணமானவர்கள் அனைவரையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது . இது தவிர, தொழிற்சாலைகளில் பயன்படுத்தக் கூடிய மூலப்பொருள்கள் இத்தகைய கள்ளச்சாராய நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுவதை முழுமையாக தடுத்திடும் பொருட்டு, இந்தப் பிரச்னையின் மூலக்காணத்தை கண்டுபிடித்து ஒழித்திட ஏதுவாக இந்த இரு சம்பவங்கள் குறித்த விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்படும். மேலும், 'கள்ளச்சாராய விற்பனையை முழுமையாக தடுத்திட வேண்டும்' என்ற அரசின் கடுமையான உத்தரவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாமல் கள்ளச்சாராய விற்பனையை கண்காணிக்க தவறியவர்கள் மீதும் இந்த அரசு தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்கும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா
அவரிடம், 'உரிய சிகிச்சை அளிக்கப்படாததே உயிரிழப்பு அதிகரிப்பதற்குக் காரணம்' என்று உறவினர்கள் குற்றம்சாட்டியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்டாலின், "அவர்கள் பதட்டத்தில் சொல்கிறார்கள். உரிய சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். சில பேருக்கு டிரிப்ஸ் ஏற்ற வேண்டும், அதற்குப் பிறகுதான் மருந்து மாத்திரைகள் கொடுக்க வேண்டும். இதில் முறைகள் இருக்கிறது. அதனால் மருத்துவரீதியாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். நன்றாக விசாரித்துவிட்டேன், ஓரிருவர் இதுபோல புகார் செய்தார்கள், அது உண்மையல்ல" என்றார்.
இதனிடையே, கள்ளச்சாராய விவகாரத்தில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, விழுப்புரம் மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி பழனி, கள்ளக்குறிச்சி மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி துரைப்பாண்டி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.`உயிரைப் பறித்த கள்ளச்சாராயம்!' - 3 பேர் பலி... சிகிச்சையில் பலர்! - விழுப்புரத்தில் அதிர்ச்சி
http://dlvr.it/Sp5qvm
http://dlvr.it/Sp5qvm
Monday, 15 May 2023
காங்கிரஸ்: `East to West; அடுத்த பாரத் ஜோடோவுக்குத் திட்டம்!' - கே.சி.வேணுகோபால் தகவல்
கர்நாடகத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் கட்சி முடிவுசெய்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பிரபல ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர், ``கர்நாடகத் தேர்தல் வெற்றியில் பாரத் ஜோடோ யாத்திரையின் பங்கு குறிப்பிடத்தக்கது. கர்நாடகத் தேர்தல்
இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தானில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு முன்னதாக, ராஜஸ்தானின் உயர்மட்டத் தலைவர்களுக்கிடையேயான பூசலை சரிசெய்வதிலும் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறோம். இந்த கர்நாடக வெற்றி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான செய்தியாகும், மேலும், தேசிய அளவில் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.கர்நாடகா: சிஷ்யனிடம் படுதோல்வியடைந்த பாஜக ஆளுமை சி.டி.ரவி; Heavy weight ரவியின் தோல்விக்கு காரணம்?
ஆனால், கேரளாவில் சி.பி.ஐ-எம், தெலங்கானாவில் பி.ஆர்.எஸ் கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி வைக்க முடியாது. மற்ற மாநிலங்களில் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியையும் சில சமயங்களில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியையும் வைத்திருக்க சாத்தியமிருக்கிறது, கர்நாடக முதல்வர் யார் என்பதைக் குறிப்பிட சிறிது காலம் எடுக்கும். கே.சி.வேணுகோபால்
மல்லிகார்ஜுன கார்கே கர்நாடக முதல்வராக பரிசீலிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்கிறேன். வதந்திகளை நம்பவேண்டாம். மேலும், கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மற்றொரு பாரத் ஜோடோ யாத்திரையைத் திட்டமிட்டிருக்கிறோம். கர்நாடகாவில் அதன் பலன்களைக் கண்டிருக்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்."வெறுப்பின் சந்தை மூடப்பட்டு அன்பின் கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன"- கர்நாடக வெற்றி குறித்து ராகுல்
http://dlvr.it/Sp2yf9
http://dlvr.it/Sp2yf9