Monday 29 May 2023
Sunday 28 May 2023
புதிய நாடாளுமன்றம்: ``எதிர்க்கட்சிகள் பாராட்ட வேண்டும்; ஆனால்..." - குலாம் நபி ஆசாத் சொல்வதென்ன?
புதிய நாடாளுமன்றம் நாளை திறக்கவிருப்பதை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது. இந்த நிலையில், பிரதமரால் திறக்கப்படவிருக்கும் நாடாளுமன்றத் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம் என காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி), சிவசேனா (யுபிடி), திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி), ஜனதா தளம் (ஐக்கிய) உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டன.காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
மேலும், இந்த விழாவைப் புறக்கணிப்பதற்கு, ``குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைப் புறக்கணித்த நடவடிக்கை, நமது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல்" எனக் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இதற்கிடையில், காங்கிரஸ், `மலிவான அரசியலில்’ ஈடுபடுவதாகவும், அவசியமற்ற சர்ச்சைகளை கிளப்புவதாகவும் பா.ஜ.க பதிலளித்திருக்கிறது.
இந்த நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவரும், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி (டிபிஏபி) தலைவருமான குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "நான் டெல்லியில் இருந்திருந்தால் நிச்சயம் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்பேன். ஆனால், எனக்கு வேறு ஒரு விழாவில் கலந்துகொள்ளவேண்டிய கட்டாயம் இருக்கிறது. புதிய நாடாளுமன்றம் கட்டியதற்காக எதிர்க்கட்சிகள் மத்திய அரசைப் பாராட்ட வேண்டும். ஆனால், அவர்கள் அரசை விமர்சிக்கிறார்கள்.புதிய நாடாளுமன்றம்
எதிர்க்கட்சிகள் திறப்புவிழாவைப் புறக்கணிப்பதை எதிர்த்து அரசுக்கு ஆதரவாக இருக்கிறேன். 30-35 ஆண்டுகளுக்கு முன்பு நான் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்தபோது புதிய நாடாளுமன்றம் கட்டுவது பற்றிக் கனவு கண்டோம். அப்போது பிரதமர் நரசிம்ம ராவ், சிவராஜ் பாட்டீல் மற்றும் நானும் இந்தத் திட்டத்தைப் பற்றி விவாதித்து, உண்மையில் அதற்கான வரைபடத்தைக்கூட உருவாக்கினோம். அதை எங்களால் அப்போது செய்ய முடியவில்லை.
ஆனால், தற்போது அது கட்டி முடிக்கப்பட்டிருப்பது ஒரு நல்ல விஷயம். சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகளில், மக்கள்தொகை ஐந்து மடங்கு அதிகரித்திருக்கிறது. அதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்திருக்கிறது. அதைக் கருத்தில்கொண்டு புதிய கட்டடத்தின் அவசியம் ஏற்பட்டிருக்கிறது.குலாம் நபி ஆசாத்
குறுகிய காலத்துக்குள் ஒரு நாடாளுமன்றத்தை ஏற்படுத்துவது எளிதானதல்ல, அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கையைக் கண்டிப்பதற்கு பதிலாகப் பாராட்ட வேண்டும். குடியரசுத் தலைவருக்கு எதிர்கட்சிகள் ஆதரவு என்றால், அவருக்கு எதிராக உங்கள் ஜனாதிபதி வேட்பாளரை ஏன் பரிந்துரைத்தீர்கள்?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.`பாஜக-வில் சேருவோர் மோடி வாஷிங் மெஷின் மூலம் சுத்தப்படுத்தப்படுகிறார்கள்’ - காங்கிரஸின் ராஜீவ் கௌடா
http://dlvr.it/SplQxB
http://dlvr.it/SplQxB
Saturday 27 May 2023
Friday 26 May 2023
ரஷ்ய எல்லைக்குள் பயங்கர மோதல்... கொல்லப்பட்ட 70 பேர்! - ஊடுருவியது உக்ரைன் படைகள் இல்லையா?!
உக்ரைன் நேட்டோ படையில் இணைய முயற்சி மேற்கொண்டது. இதற்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் அந்த நாடு தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. இதையடுத்து, உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு புதின் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பிப்ரவரியில் போர் தொடங்கியது.ஜோ பைடன் - ஜெலன்ஸ்கி
இதில் இரண்டு நாடுகளுக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்துவருவதால், போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்குச் சென்றார். பின்னர் சீன அதிபராக மூன்றாவது முறையாகப் பதவியேற்ற ஜி ஜின்பிங், ரஷ்யாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இது சர்வதேச அரசியலில் புயலைக் கிளப்பியது. பின்னர் ரஷ்யா தனது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியது. இதனால் இரு தரப்பிலும் கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது உக்ரைனில் இருக்கும் டோனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸ்போரிஷியா, கெர்சான் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது, ரஷ்யா. மறுபுறம் உக்ரைனும் கடுமையாக எதிர்த் தாக்குதல் நடத்திவருகிறது.சீன அதிபர் ஜி ஜின்பிங்
இதற்கிடையில், ரஷ்யாவின் எல்லையில் பேல்கராடு என்ற மாகாணம் இருக்கிறது. இதற்குள் உக்ரைன் நாட்டிலிருந்து உக்ரைன் ஆதரவுப் படையினர் நுழைந்து தாக்குதல் நடத்தினர். பின்னர் அதே பகுதியில் இருக்கும் கிரேவ ரான் என்ற இடத்தில் உக்ரைன் ஆதரவுப் படையினருக்கும், ரஷ்யப் படையினருக்குமிடையில் கடுமையான மோதல் ஏற்பட்டது.உக்ரைன் பாக்முட் நகரம்
மேலும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில், பெல்கராட் மாகாணத்தில் பயங்கரவாத அவசரநிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் இந்தப் பிரச்னையில் சிக்கி பொதுமக்கள் எட்டு பேர் காயமடைந்தனர் என அந்த மாகாணத்தின் ஆளுநர் வியாசெஸ்லவ் கிளாட்கோவ் கூறினார்.
மறுபுறம் 70 உக்ரைன் ஆதரவுப் படையினர் கொல்லப்பட்டனர். மீதம் இருந்தவர்கள் உக்ரைனுக்குள் விரட்டி அடிக்கப்பட்டனர் என ரஷ்யாவின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்தார். இதையடுத்து, அந்த மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை உத்தரவும் வாபஸ் பெறப்பட்டது.ரஷ்ய அதிபர் புதின்
ஆனால், இதை உக்ரைன் மறுத்திருக்கிறது. இது குறித்து அந்த நாட்டின் ராணுவ அதிகாரிகள், ``ரஷ்யாவில் நடந்த தாக்குதலில் ரஷ்ய விடுதலைப் படை, ரஷ்ய தன்னார்வப் படை ஆகிய இரண்டு கிளர்ச்சிக் குழுக்கள்தான் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதில் ரஷ்யர்கள்தான் இருக்கிறார்கள். உக்ரைன் ராணுவத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை" எனத் தெரிவித்திருக்கிறது.
பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்த ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கேய் ஷாயிகு, "பெல்கராட் எல்லை மாகாணத்துக்குள் நுழைந்து, உக்ரைன் தேசியவாதிகள் நடத்திய தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டிருக்கிறது. இதில் 70-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். உக்ரைன் போர்!
எஞ்சியவர்கள் மீண்டும் உக்ரைனுக்கே விரட்டியடிக்கப்பட்டனர். ஊடுருவல் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் தக்கபதிலடி கொடுக்கப்படும்" எனக் கூறியிருந்தார். இதற்கிடையில், இந்தத் தாக்குதலுக்கு ரஷ்ய விடுதலைப் படை, ரஷ்ய தன்னார்வப் படை ஆகிய ஆயுதக்குழுக்கள் பொறுப்பேற்றன.'புதின் - ஜி ஜின்பிங் சந்திப்பு; உக்ரைன் வந்த ஜப்பான் பிரதமர்' - அடுத்த கட்டத்துக்கு நகர்கிறதா போர்?
இது குறித்து அவர்கள், "புதினின் ஆட்சியிலிருந்து ரஷ்யாவையும், ரஷ்ய மக்களையும் காப்பதற்காகத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான ரஷ்யப் படையினர் இறந்திருக்கிறார்கள்" எனத் தெரிவித்திருக்கின்றனர். உக்ரைன் - ரஷ்யாவுக்கிடையே ஓராண்டுக்கும் மேலாகப் போர் நடந்துவரும் நிலையில், திடீரென நடந்திருக்கும் இந்தத் தாக்குதல் சம்பவங்கள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.Loading…
http://dlvr.it/SpfF6x
http://dlvr.it/SpfF6x
Thursday 25 May 2023
நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் 'செங்கோல்' - தூதுவிட்ட 'ஷாக்' அமைச்சர் - WHO எச்சரிக்கை - Mr. மியாவ்
புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் 'செங்கோல்': வரலாற்று பின்னணி...
செங்கோல்
பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி, நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைக்க உள்ளார்.
அதற்கான ஏற்பாடுகள் பரபரத்துக் கொண்டிருக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டின் 'செங்கோல்' தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றினை இன்று வெளியிட்டிருக்கிறார்.
ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரமடைந்தபோது, திருவாவடுதுறை ஆதீன மடத்திலிருந்து அப்போதைய ஆளுநராக இருந்த மவுன்ட் பேட்டனால் பெறப்பட்ட 'செங்கோல்', இந்தியாவின் முதல் பிரதமரான நேருவிடம் ஆட்சி மாற்றத்தை குறிக்கும்வகையில் வழங்கப்பட்டது.
இந்திய நிலப்பரப்பின் ஆட்சிமாற்ற அடையாளமாகக் கருதப்படும் இந்தச் செங்கோல் குறித்தான வரலாறுதான் என்ன..?
விரிவாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...
ஸ்டாலின் அதிரடி... திமுக-வில் வெடிக்கப்போகும் அடுத்த சுற்று பட்டாசுகள்..!
ஸ்டாலின்
இரண்டாண்டு தி.மு.க ஆட்சி நிறைவடைந்திருக்கும் நிலையில், ஆட்சியிலும் கட்சிக்குள்ளும் தொடர்ச்சியாக தவுசண்ட் வாலா பட்டாசுகளை முதல்வர் ஸ்டாலின் கொளுத்துவார் என யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.
இந்த நிலையில், "வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு முதல்வர் ஊர் திரும்பியதும் அடுத்த சுற்று பட்டாசுகள் கொளுத்தப்படும்" என்கிறார்கள் அறிவாலயத்தில்.
'என்னதான் நடக்கிறது தி.மு.க-வில்..?' அறிவாலயத்தை வலம் வந்ததில் கிடைத்த உள்மட்ட தகவல்களுடன் விரிவாக விளக்குகிறது இன்று வெளியான ஜூனியர் விகடன் இதழில் இடம்பெற்றுள்ள கவர் ஸ்டோரி...
படிக்க இங்கே க்ளிக் செய்க...
"ஸ்டாலின் இன்பச்சுற்றுலாவா..?" - எடப்பாடியை எச்சரிக்கும் தங்கம் தென்னரசு
சிங்கப்பூரில் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
வெளிநாடு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 9 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் சென்றுள்ளார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின். இது குறித்து விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, " ஸ்டாலின் இன்பச்சுற்றுலா சென்றிருக்கிறார்" எனச் சாடி இருந்தார்.
இந்த நிலையில், எடப்பாடியின் விமர்சனத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, " 13 நாள்கள் பயணமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எடப்பாடி பழனிசாமி செல்வதற்கு முன்பு, அவருடைய மகன் மிதுன் அங்கு போனது பழனிசாமியின் ஊழல் பணத்தை முதலீடு செய்வதற்குத்தானோ" எனச் சாடி உள்ளார்.
இது குறித்த தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையை படிக்க இங்கே க்ளிக் செய்க...
மேலும்,
ஸ்டாலின் 9 நாள் முதலீட்டுப் பயண ஹைலைட்ஸ்!
படிக்க இங்கே க்ளிக் செய்க...
IPL: 'நீ சிங்கம் தான்' - தோனியைப் புகழ்ந்த ஹர்பஜன்!
தோனி
நடப்பு 2023 ஐபிஎல் சீசனில், பிளே ஆஃப் சுற்று போட்டிகளில் வீசப்படும் ஒவ்வொரு டாட் பந்திற்கும், பி.சி.சி.ஐ சார்பில் 500 மரக்கன்றுகள் நடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டாட் பந்துகள், கிரீன் பால்களாக கணக்கிடப்படுகின்றன. நேற்று நடைபெற்ற CSK vs GT இடையேயான போட்டியில், சிஎஸ்கே அணி விளையாடிய முதல் இன்னிங்ஸில் 34 டாட் பால்கள் வீசப்பட்டன.
மேலும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...
முக்கிய நிதி இலக்குகளை கண்டறிவது எப்படி?
நிதி இலக்கு
ஒருவருக்கு ஏகப்பட்ட நிதி சார்ந்த இலக்குகள் இருக்கும். அவற்றில் எவை முக்கியமானது என்பதை எப்படி அடையாளம் காண்பது ?
உங்கள் ஆசைகளை நிதி இலக்குகளாக மாற்றுவது எப்படி என்பதற்கான ஆலோசனைகளைத் தருகிறார் நிதி ஆலோசகர் ஏ.ஜி.வி ஸ்ரீநாத் விஜய்...
இந்த வார நாணயம் விகடன் இதழில் இடம்பெற்றிருக்கும் இது குறித்த சிறப்பு கட்டுரையை வாசிக்க இங்கே க்ளிக் செய்க...
TNEA: படிப்பு, கல்லூரி, வேலைவாய்ப்பு - கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளை தேர்வுசெய்வது எப்படி ? - PART 1
தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...
பெருந்தொற்றுக்கு வாய்ப்பு - WHO எச்சரிக்கை!
WHO
சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்ற உலக சுகாதார நிறுவனத்தின் 76-வது உலக சுகாதார சபையில், தனது அறிக்கையை சமர்பித்தார் WHO-வின் தலைவர் டெட்ரோஸ் அதானோம்.
அதன்பின் பேசிய அவர், " கோவிட் தொற்று இனி உலகுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் கோவிட் தொற்றைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய மற்றும் ஆபத்தான புதிய பெருந்தொற்று பரவ வாய்ப்புள்ளது" என்று எச்சரித்தார்.
இது குறித்த அவரது பேச்சை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க...
மிஸ்டர் மியாவ்: தமிழ் என்ட்ரிக்கு தயாராகிறாரா ஜான்வி கபூர்?
ஜான்வி கபூர்
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தமிழில் பக்கா என்ட்ரி கொடுக்க நல்ல இயக்குநரைத் தேடிவருகிறாராம்.
ஷங்கர் தொடங்கி அ.வினோத் வரை அவர் எதிர்பார்க்கும் அத்தனை இயக்குநர்களும் பிஸியோ பிஸி என்கிற நிலையில், 'நல்ல கதையுடன் யார் வந்தாலும் ஓகே' என்கிறாராம் ஜான்வி.
மிஸ்டர் மியாவ் தரும் சுவாரஸ்யமான சினிமா செய்திகள் மேலும்...
* சமுத்திரக்கனிக்குப் பதில் பசுபதி!
* நானியை யோசிக்க வைத்த அட்வைஸ்!
* விஜய் தேவரகொண்டா - சமந்தா கெமிஸ்ட்ரி!
* பிகு காட்டும் 'குஸ்தி' நடிகை!
அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...
கிசுகிசு: 'பவனு'க்கு தூதுவிட்ட 'ஷாக் அமைச்சர்..!
கிசுகிசு
டெல்லியின் காவிக் கட்சி ஆட்களை அணுகிக் காரியம் சாதிக்க, பணிவானவரின் ரூட்டை இனிஷியல் தலைவர் எடுக்க, "அங்க போக வழியில்லாமத்தானே இங்க வந்து குத்தவெச்சேன்" எனக் குமுறுகிறாம் பணிவானவர்.
- முதன்மையானவர் அரங்கேற்றும் தடாலடிகள்
'பவனு'க்கு தூதுவிட்ட 'ஷாக் அமைச்சர்', கதர்க் கட்சியின் வாரிசின் தீராத கோபம்
புதுப்பாய்ச்சலுக்கு திட்டமிடும் துணிவானவர்...
என சுவாரஸ்யமான அரசியல் கிசுகிசுக்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...
http://dlvr.it/Spb5nj
http://dlvr.it/Spb5nj
Wednesday 24 May 2023
`கண்காணிப்பைத் தீவிரப்படுத்துங்கள்..!' - அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மாவட்ட அளவிலான அனைத்துத் துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை முதன்மைச் செயலாளர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர், மாவட்ட அளவிலான அனைத்து துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் கலந்துகொண்டனர்.டாஸ்மாக் மதுக்கடை
இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது தொடர்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``தொழிற்சாலைகளால் கொள்முதல் செய்யப்படும் மெத்தனால், இயல்பு மாற்றப்பட்ட சாராவி மற்றும் தெளிந்த சாராவி ஆகியன உரிய வழிமுறைகளுடன் பெறப்படுகின்றனவா என்பதை ஆய்வுசெய்ய வேண்டும். உரிய உரிமதாரர்களுக்கு மட்டுமே சாராவி மற்றும் தெளிந்த சாராவி விற்பனை செய்யப்படுகின்றனவா என்பதையும், பெறப்படுகின்ற மூலப்பொருள் எதை உற்பத்தி செய்ய வழங்கப்படுகிறதோ, அதற்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறதா இல்லை தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
மேலும், டாஸ்மாக் கடைகள், எஃப்.எல்.2 உரிமம் பெற்ற கிளப், எஃப்.எல்.3 உரிமம் பெற்ற ஹோட்டல், NDRC உரிமத்தலங்கள் ஆகியவற்றைக் கண்காணித்து விதிமுறைகள் ஏதேனும் மீதி இருப்பின், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலோர மாவட்டங்கள் மற்றும் மாநில எல்லை மாவட்டங்களில் தொடர்புடைய மாவட்ட கலால் அலுவலர்கள், கலால் காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து, காவல் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டு, வெளிமாநில மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் ஆகியவற்றின் விற்பனையை முற்றிலும் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.டாஸ்மாக் கடை
மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்கள் டாஸ்மாக் கடைகளுடன் இணைக்கப்பட்டவை, மனமகிழ் மன்றங்கள் மற்றும் ஹோட்டல்களுடன் இணைக்கப்பட்ட மதுபானக் கூடங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குள்ளாக மூடப்படுகின்றனவா என்பது குறித்து கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மதுவில்லா நாள்கள் மற்றும் அரசு மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டிருக்கும் நாள்களில் கடைகள் மூடப்பட்டிருக்கின்றனவா என்பதைக் கள ஆய்வு மேற்கொண்டு உறுதிசெய்ய வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரைக்கிணங்க, கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள்கள் பயன்படுத்துதலைத் தடுத்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தை வாரம்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்த வேண்டும். மேலும், அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட நிதியை முழுமையாகப் பயன்படுத்தி, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்தும், போதை மருந்தை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.மது விற்பனை
இது தொடர்பாக மாவட்டம்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் விழிப்புணர்வுப் பேரணி, முகாம்கள், கருத்தரங்குகள், தெரு நாடகங்கள், சிறு நாடகங்கள், பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, பொது இடங்களில் விளம்பரம் மற்றும் துண்டுப்பிரசுரம் விநியோகித்தல், மனிதச் சங்கிலிப் பேரணி போன்றவற்றின் மூலம் பிரசாரம் மேற்கொள்ளுதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த குழு கலந்துரையாடல் ஆகியவற்றை நடத்த வேண்டுமென அலுவலர்களை கேட்டுக்கொள்ளப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.``பாஜக-வில் சேர்ந்து, அண்ணாமலையின் பதவியைக்கூடக் கைப்பற்றுவார் செந்தில் பாலாஜி" - கரூர் சின்னசாமி
http://dlvr.it/SpWwy9
http://dlvr.it/SpWwy9
Tuesday 23 May 2023
Tamil News Today Live: ``முதலீட்டாளர்களைச் சந்தித்து உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கிறேன்'' - ஸ்டாலின்
லாரியில் பயணித்த ராகுல்காந்தி!
ராகுல்காந்தி நேற்று இரவு திடீரென எந்த திட்டமிடலும் இல்லாமல் ஹரியானா நெடுஞ்சாலையில் உள்ள லாரி நிறுத்துமிடத்துக்கு சென்றிருக்கிறார். அப்போது ஓட்டுநர்களுக்கு இருக்கும் பிரச்னைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார்.
சிங்கப்பூர் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!
முதல்வர் ஸ்டாலின்
சிங்கப்பூர் புறப்படுவதற்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``முதலீட்டாளர்களைச் சந்தித்து உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கிறேன். புதிய முதலீடுகளை ஈர்க்க ஜப்பான், சிங்கப்பூருக்கு பயணம் செய்கிறேன். துபாய் பயணத்தின் போது ஒப்பந்தமான 6 நிறுவனங்கள் பணிகளை தொடங்கிவிட்டன'' என்றார்.
சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின், இன்று பயணம்!
இரண்டாடுகளுக்கு முன்னர், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழகத்தை ஒரு ட்ரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்தது. இதன் ஒரு பகுதியாக தொழில் முதலீடுகளை ஈர்க்க சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. அதற்கான முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், 9 நாள் பயணம் மேற்கொள்கிறார்.
இன்று சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கு அந்நாட்டு அமைச்சர்களை சந்திக்கிறார். மேலும் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து பேசுகிறார். மேலும் சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.முதல்வர் ஸ்டாலின்
இதனைத் தொடர்ந்து, வரும் 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை ஜப்பான் நாட்டில் முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு முன்னணி தொழில் துறைத் தலைவர்கள், அரசு அதிகாரிகளையும் சந்தித்து உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்க உள்ளார்.
200-க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் கலந்துகொள்ளும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் பங்கேற்று, சில நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல்வருடன் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் உயர்அதிகாரிகளும் செல்கின்றனர்.
http://dlvr.it/SpSprS
http://dlvr.it/SpSprS