Thursday 1 June 2023
Wednesday 31 May 2023
``மதிமுக-வை நடத்துவது வீண் வேலை; கட்சியிலிருந்து விலகுகிறேன்!" - வைகோவுக்கு சு.துரைசாமி கடிதம்
ம.தி.மு.க-வில் வைகோவின் மகன் துரை வைகோவின் நியமனத்துக்கு தொடக்கத்திலிருந்து எதிர்ப்பு தெரிவித்துவரும் அந்தக் கட்சியின் அவைத்தலைவர் சு.துரைசாமி, தற்போது ம.தி.மு.க-விலிருந்து விலகும் முடிவுக்கு வந்திருக்கிறார். இது தொடர்பாக திருப்பூரில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``ம.தி.மு.க-வின் வாழ்நாள் உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுகிறேன்.
எனது விலகல் கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, ஏ.கே.மணி ஆகியோருக்கு அனுப்பியிருக்கிறேன். நான் எந்த அரசியல் கட்சியிலும் சேருவதாக இல்லை. ஆனால் பெரியாரும், அண்ணாவும் எந்த லட்சியத்துக்காகப் பாடுபாட்டார்களோ, அந்த லட்சியத்துக்காக இனி என் வாழ்நாள் முழுவதும் பணியாற்றுவேன். சு.துரைசாமி
கடந்த சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களிலும் ம.தி.மு.க-விலிருந்து ராஜினாமா செய்துவிட்டுதான், தி.மு.க-வில் இணைந்து உதயசூரியன் சின்னம் பெற்று தேர்தலில் போட்டியிட்டார்கள். அப்படியென்றால், ஏற்கெனவே தி.மு.க-வில் இணைந்து விட்டதாகத்தானே அர்த்தம். ம.தி.மு.க இனி தனிக்கட்சி நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இனியும் ம.தி.மு.க-வை நடத்துவது வீண் வேலை.
இளைஞர்களின் ஆற்றலை விரயமாக்க வேண்டாம். வைகோ சொல்வதை நான் பலமுறை எதிர்த்திருக்கிறேன். பேசுவது என்றாலும், விமர்சிப்பது என்றாலும் அவர் எல்லை தாண்டுவார். ஒருமுறை தன்னுடைய தவற்றை உணர்ந்து வைகோ என்னிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்தார். அந்தக் கடிதம் என்னிடம் பத்திரமாக இருக்கிறது.
கோயமுத்தூர் பெரியார் மாவட்ட திராவிட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் பொதுச்செயலாளராக நானும், பொருளாளராக சீனிவாசனும் இருக்கிறோம். தொழிற்சங்கம் பதிவுசெய்யப்பட்ட அமைப்பு. ஆண்டுதோறும் வரவு, செலவு கணக்கு தாக்கல் செய்கிறோம். 1967-ம் ஆண்டு தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினராக நான் இருந்தபோது, கோவையில் தொழிற்சங்க கட்டடத்தை கருணாநிதி திறந்துவைத்தார். ம.தி.மு.க-வுக்கும், நாங்கள் நடத்திவரும் தொழிற்சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவே நான் தொடர்வேன்.வைகோ - திருப்பூர் துரைசாமி
கொரோனா காலகட்டத்துக்குப் பிறகுதான் துரை வைகோ கட்சிக்குள் வந்தார். ம.தி.மு.க-வில் வைகோவுக்கு அடுத்து மல்லை சத்யா இருக்கிறார். அவர் கடந்த 30 ஆண்டுகளாக வைகோ செல்ல முடியாத இடங்களுக்கும், பல போராட்டங்களிலும் ஈடுபட்டவர். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர், அவருக்குத்தான் பொறுப்பு கொடுத்திருக்க வேண்டும். ஆனால், கட்சிக்குப் பாடுபட்டவர்களை ஒதுக்கும் நிலைதான் இன்றைக்கு ம.தி.மு.க-வில் நிலவுகிறது” என்றார்.Loading…
http://dlvr.it/SpvWbL
http://dlvr.it/SpvWbL
Tuesday 30 May 2023
”ஸ்டாலின் அரசு ஃபெயிலியர் ஆகிவிட்டது..!” - சொல்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ்
தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாரயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றுக்கு முழுப் பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, அ.தி.மு.க தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் சார்பில் ரயிலடியில், முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஆர்.காமராஜ், ``விடியா தி.மு.க அரசை வீட்டுக்கு அனுப்புகிற ஆர்ப்பாட்டம் இது. பலர் அ.தி.மு.க-வை அழித்துவிடலாம் என நினைத்தார்கள். எந்தக் கொம்பனாலும் இந்த இயக்கத்தை அழிக்க முடியாது. தஞ்சாவூர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆர்.காமராஜ்
அது இந்த ஊரிலுள்ள கொம்பனாக இருந்தாலும் சரி. யாரும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. எம்.ஜி.ஆர், ஜெயலிதாவுக்கு வாரிசுகள் கிடையாது. அ.தி.மு.க-வின் தொண்டர்கள்தான் அவர்களுடைய வாரிசுகள். அவர்கள் வழியில் அ.தி.மு.க-வின் மூன்றாம் தலைமுறையாகக் கட்சியை எடப்பாடி பழனிசாமி வழி நடத்திக்கொண்டிருக்கிறார். அம்மா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க வாழுமா, வளருமா... இனி யார் இருக்கிறார்கள் என பலர் எத்தனையோ கேலி, கிண்டல் செய்தனர். சேப்டர் முடிந்தது என்றனர். அப்போது அ.தி.மு.க-வைக் காப்பாற்றுவதற்கு எடப்பாடி வந்தார்.
நான்கு ஆண்டுக்காலம் ஆட்சி நடத்தி ஜம் என்று முதலமைச்சராக இருந்தார். தஞ்சாவூரில் ஜெயலலிதாவுக்குப் பொன்னியின் செல்வி, திருவாரூரில் எடப்பாடிக்கு காவிரி காப்பாளன் பட்டம் கொடுத்தோம். எம்.ஜி.ஆர், தி.மு.க-வை தீயசக்தி என்றார். தி.மு.க-வை எதிர்ப்பவர்தான் அ.தி.மு.க-வில் பொதுச்செயலளாரக இருக்க முடியும். தி.மு.க ஆட்சிக்கு துணை போகிறவர்கள் தலைவராக இருக்க முடியுமா... அ.தி.முக-வைக் காட்டிக் கொடுத்தவர்கள் தற்போது தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள்.அ.தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ்
தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும் வேலி சண்டை கிடையாது. அரசியல்ரீதியாக இருகட்சிகளும் எதிர்க்கட்சிகள். திட்டமிட்டே தி.மு.க-வை ஆதரித்த காரணத்தால் ஓ.பி.எஸ் போன்றவர்கள் வெளியேற்றப்பட்டனர். சாதரண மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் அ.தி.மு.க வலிமையோடு இருக்க வேண்டும். ஸ்டாலின் அரசில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. ஸ்டாலின் அரசு ஃபெயிலியர் ஆகிவிட்டது. எல்லாவற்றிலும் தோற்றுப்போன ஆட்சியாக இருக்கிறது.
கள்ளச்சாரயத்தால் பத்து நாள்களில் 25 பேர் இறந்திருக்கின்றனர். எந்த ஆட்சியிலாவது இப்படி நடந்திருக்கிறதா... அதனால்தான் தி.மு.க அரசு பதவி விலக வேண்டும் என்கிறோம். குவார்ட்டருக்கு ரூ.10 அதிகம் வாங்குகின்றனர். பத்தரை மணிக்கு கடை திறக்கக் கூடாது என்ற சட்டம் இருக்கிறது. அதற்கு முன்பு பாரில் மது வாங்கிக் குடித்த இரண்டு பேர் உயிரிழந்திருக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் சயனைடு கலந்து குடித்ததே இறப்புக்குக் காரணம் என்கிறார்.தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் ஆர்.காமராஜ்
சயனைடு கலந்த மது, சாராயம் குறித்து இதுவரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா... தி.மு.க ஆட்சிக்கு கெட்டப்பெயர் என்றால் சயனைடு மட்டுமல்ல எல்லாம் வரும். ஆட்சிக்கு கெட்ட நேரம் வந்துவிட்டது. சாதரண மக்களுக்காக தி.மு.க ஆட்சி நடப்பதில்லை. ஒரு குடும்பத்துக்கான ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது. எனவே சாராய சாவுக்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலினும், அந்தத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் பதவி விலக வேண்டும்.
இரண்டு வருடங்களில் ரூ.30,000 கோடி கொள்ளையடித்திருக்கின்றனர். உதயநிதியும், சபரீசனும் அந்தப் பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கின்றனர் என அவர்களுடைய அமைச்சர் பி.டி.ஆர் சொல்லியிருக்கிறார். உண்மையைச் சொல்லிவிட்டார் என்ற கோபத்தில் அவரின் இலாகாவை மாற்றிவிட்டனர். தஞ்சாவூரில்
நடைபெற்ற அ.தி.மு.க கண்டன் ஆர்ப்பாட்டம்
இந்த ஊழலுக்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும், ஆட்சியை விலக்கிக் கொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. தி.மு.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம், அராஜகம் நடக்கும். தஞ்சாவூரில் நாம் கொடுக்கின்ற குரல் தமிழகத்தை உலுக்க வேண்டும்" என்றார்.``செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில் திமுக; ஸ்டாலினுக்கு இது தெரியாதா?"- ஆர்.பி.உதயகுமார் பாய்ச்சல்
http://dlvr.it/SprX78
http://dlvr.it/SprX78
Monday 29 May 2023
Sunday 28 May 2023
புதிய நாடாளுமன்றம்: ``எதிர்க்கட்சிகள் பாராட்ட வேண்டும்; ஆனால்..." - குலாம் நபி ஆசாத் சொல்வதென்ன?
புதிய நாடாளுமன்றம் நாளை திறக்கவிருப்பதை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது. இந்த நிலையில், பிரதமரால் திறக்கப்படவிருக்கும் நாடாளுமன்றத் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம் என காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி), சிவசேனா (யுபிடி), திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி), ஜனதா தளம் (ஐக்கிய) உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டன.காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
மேலும், இந்த விழாவைப் புறக்கணிப்பதற்கு, ``குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைப் புறக்கணித்த நடவடிக்கை, நமது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல்" எனக் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இதற்கிடையில், காங்கிரஸ், `மலிவான அரசியலில்’ ஈடுபடுவதாகவும், அவசியமற்ற சர்ச்சைகளை கிளப்புவதாகவும் பா.ஜ.க பதிலளித்திருக்கிறது.
இந்த நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவரும், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி (டிபிஏபி) தலைவருமான குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "நான் டெல்லியில் இருந்திருந்தால் நிச்சயம் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்பேன். ஆனால், எனக்கு வேறு ஒரு விழாவில் கலந்துகொள்ளவேண்டிய கட்டாயம் இருக்கிறது. புதிய நாடாளுமன்றம் கட்டியதற்காக எதிர்க்கட்சிகள் மத்திய அரசைப் பாராட்ட வேண்டும். ஆனால், அவர்கள் அரசை விமர்சிக்கிறார்கள்.புதிய நாடாளுமன்றம்
எதிர்க்கட்சிகள் திறப்புவிழாவைப் புறக்கணிப்பதை எதிர்த்து அரசுக்கு ஆதரவாக இருக்கிறேன். 30-35 ஆண்டுகளுக்கு முன்பு நான் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்தபோது புதிய நாடாளுமன்றம் கட்டுவது பற்றிக் கனவு கண்டோம். அப்போது பிரதமர் நரசிம்ம ராவ், சிவராஜ் பாட்டீல் மற்றும் நானும் இந்தத் திட்டத்தைப் பற்றி விவாதித்து, உண்மையில் அதற்கான வரைபடத்தைக்கூட உருவாக்கினோம். அதை எங்களால் அப்போது செய்ய முடியவில்லை.
ஆனால், தற்போது அது கட்டி முடிக்கப்பட்டிருப்பது ஒரு நல்ல விஷயம். சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகளில், மக்கள்தொகை ஐந்து மடங்கு அதிகரித்திருக்கிறது. அதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்திருக்கிறது. அதைக் கருத்தில்கொண்டு புதிய கட்டடத்தின் அவசியம் ஏற்பட்டிருக்கிறது.குலாம் நபி ஆசாத்
குறுகிய காலத்துக்குள் ஒரு நாடாளுமன்றத்தை ஏற்படுத்துவது எளிதானதல்ல, அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கையைக் கண்டிப்பதற்கு பதிலாகப் பாராட்ட வேண்டும். குடியரசுத் தலைவருக்கு எதிர்கட்சிகள் ஆதரவு என்றால், அவருக்கு எதிராக உங்கள் ஜனாதிபதி வேட்பாளரை ஏன் பரிந்துரைத்தீர்கள்?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.`பாஜக-வில் சேருவோர் மோடி வாஷிங் மெஷின் மூலம் சுத்தப்படுத்தப்படுகிறார்கள்’ - காங்கிரஸின் ராஜீவ் கௌடா
http://dlvr.it/SplQxB
http://dlvr.it/SplQxB
Saturday 27 May 2023
Friday 26 May 2023
ரஷ்ய எல்லைக்குள் பயங்கர மோதல்... கொல்லப்பட்ட 70 பேர்! - ஊடுருவியது உக்ரைன் படைகள் இல்லையா?!
உக்ரைன் நேட்டோ படையில் இணைய முயற்சி மேற்கொண்டது. இதற்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் அந்த நாடு தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. இதையடுத்து, உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு புதின் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பிப்ரவரியில் போர் தொடங்கியது.ஜோ பைடன் - ஜெலன்ஸ்கி
இதில் இரண்டு நாடுகளுக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்துவருவதால், போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்குச் சென்றார். பின்னர் சீன அதிபராக மூன்றாவது முறையாகப் பதவியேற்ற ஜி ஜின்பிங், ரஷ்யாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இது சர்வதேச அரசியலில் புயலைக் கிளப்பியது. பின்னர் ரஷ்யா தனது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியது. இதனால் இரு தரப்பிலும் கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது உக்ரைனில் இருக்கும் டோனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸ்போரிஷியா, கெர்சான் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது, ரஷ்யா. மறுபுறம் உக்ரைனும் கடுமையாக எதிர்த் தாக்குதல் நடத்திவருகிறது.சீன அதிபர் ஜி ஜின்பிங்
இதற்கிடையில், ரஷ்யாவின் எல்லையில் பேல்கராடு என்ற மாகாணம் இருக்கிறது. இதற்குள் உக்ரைன் நாட்டிலிருந்து உக்ரைன் ஆதரவுப் படையினர் நுழைந்து தாக்குதல் நடத்தினர். பின்னர் அதே பகுதியில் இருக்கும் கிரேவ ரான் என்ற இடத்தில் உக்ரைன் ஆதரவுப் படையினருக்கும், ரஷ்யப் படையினருக்குமிடையில் கடுமையான மோதல் ஏற்பட்டது.உக்ரைன் பாக்முட் நகரம்
மேலும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில், பெல்கராட் மாகாணத்தில் பயங்கரவாத அவசரநிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் இந்தப் பிரச்னையில் சிக்கி பொதுமக்கள் எட்டு பேர் காயமடைந்தனர் என அந்த மாகாணத்தின் ஆளுநர் வியாசெஸ்லவ் கிளாட்கோவ் கூறினார்.
மறுபுறம் 70 உக்ரைன் ஆதரவுப் படையினர் கொல்லப்பட்டனர். மீதம் இருந்தவர்கள் உக்ரைனுக்குள் விரட்டி அடிக்கப்பட்டனர் என ரஷ்யாவின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்தார். இதையடுத்து, அந்த மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை உத்தரவும் வாபஸ் பெறப்பட்டது.ரஷ்ய அதிபர் புதின்
ஆனால், இதை உக்ரைன் மறுத்திருக்கிறது. இது குறித்து அந்த நாட்டின் ராணுவ அதிகாரிகள், ``ரஷ்யாவில் நடந்த தாக்குதலில் ரஷ்ய விடுதலைப் படை, ரஷ்ய தன்னார்வப் படை ஆகிய இரண்டு கிளர்ச்சிக் குழுக்கள்தான் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதில் ரஷ்யர்கள்தான் இருக்கிறார்கள். உக்ரைன் ராணுவத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை" எனத் தெரிவித்திருக்கிறது.
பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்த ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கேய் ஷாயிகு, "பெல்கராட் எல்லை மாகாணத்துக்குள் நுழைந்து, உக்ரைன் தேசியவாதிகள் நடத்திய தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டிருக்கிறது. இதில் 70-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். உக்ரைன் போர்!
எஞ்சியவர்கள் மீண்டும் உக்ரைனுக்கே விரட்டியடிக்கப்பட்டனர். ஊடுருவல் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் தக்கபதிலடி கொடுக்கப்படும்" எனக் கூறியிருந்தார். இதற்கிடையில், இந்தத் தாக்குதலுக்கு ரஷ்ய விடுதலைப் படை, ரஷ்ய தன்னார்வப் படை ஆகிய ஆயுதக்குழுக்கள் பொறுப்பேற்றன.'புதின் - ஜி ஜின்பிங் சந்திப்பு; உக்ரைன் வந்த ஜப்பான் பிரதமர்' - அடுத்த கட்டத்துக்கு நகர்கிறதா போர்?
இது குறித்து அவர்கள், "புதினின் ஆட்சியிலிருந்து ரஷ்யாவையும், ரஷ்ய மக்களையும் காப்பதற்காகத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான ரஷ்யப் படையினர் இறந்திருக்கிறார்கள்" எனத் தெரிவித்திருக்கின்றனர். உக்ரைன் - ரஷ்யாவுக்கிடையே ஓராண்டுக்கும் மேலாகப் போர் நடந்துவரும் நிலையில், திடீரென நடந்திருக்கும் இந்தத் தாக்குதல் சம்பவங்கள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.Loading…
http://dlvr.it/SpfF6x
http://dlvr.it/SpfF6x