கர்நாடக காங்கிரஸ் அரசு, பள்ளிப்பாடத் திட்டங்களில் பா.ஜ.க சேர்த்த, சாவர்க்கர் தொடர்பான கவிதை, ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் தொடர்பான பாடம் என, பல பாடங்களை நீக்கியிருக்கிறது.
கர்நாடகத்தில் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், காங்கிரஸ் வெற்றிபெற்று முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்றிருக்கிறார். காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு, பா.ஜ.க கொண்டுவந்த மதமாற்ற தடைச் சட்டம் திரும்பப் பெறுதல், பல்வேறு திட்டங்கள் டெண்டர்களை மறுபரிசீலனை செய்தல் என, பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது.
தேர்தலின்போது பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படுமெனவும், சமூகநீதி நிலைநாட்டப்படுமெனவும் காங்கிரஸ் அறிவித்திருந்தது. இந்த நிலையில், பள்ளிப் பாடப்புத்தகங்களில் பா.ஜ.க சேர்த்த, வலதுசாரி தொடர்பான பாடங்களை நீக்கி உத்தரவிட்டிருப்பதால், பா.ஜ.க-வினர் அதிருப்தியில் இருக்கின்றனர்.கர்நாடகா பள்ளிக் கல்வி.
இரு நாள்களுக்கு முன்பு, கர்நாடக பள்ளிப் பாடப்புத்தகங்களில் மாற்றம் கொண்டுவர கேபினட் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. அதன் பிறகு, 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான கன்னடா மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில், 18 மாற்றங்கள் கொண்டுவர அரசு உத்தரவிட்டிருக்கிறது.
பா.ஜ.க சேர்த்தது என்னென்ன?
பா.ஜ.க ஆட்சியின்போது, பாடநூல் திருத்தக்குழுவிலிருந்த வலதுசாரி சிந்தாந்தத்தைப் பின்பற்றும் ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையிலான குழுவினர், பள்ளிப் பாடத்திட்டத்தில், ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவர் தொடர்பான பாடம், சாவர்க்கர் தொடர்பான கவிதையைச் சேர்த்தனர்.ஹெட்கேவர், சாவர்க்கர்.
மேலும், நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தன் மகளுக்கு எழுதிய, ‘என் மகளுக்குக் கடிதம்’ என்ற பாடத்தை நீக்கிவிட்டு, ‘Bhoo Kailasa’ என்ற பாடத்தைச் சேர்த்தனர்.
இந்த மாற்றங்கள் குறித்து அப்போதைய எதிர்க்கட்சியான காங்கிரஸ், ‘பா.ஜ.க., பள்ளி மாணவர்களிடம் இந்துத்துவத்தை வளர்க்க நினைக்கிறது’ என, கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்திருந்தது.பா.ஜ.க Vs காங்கிரஸ்.
ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் காங்கிரஸ் தற்போது, ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவரின் ‘யார் ஒரு சிறந்த மனிதராக இருக்க வேண்டும்’ என்ற பாடத்தை நீக்கிவிட்டு, இதற்கு பதிலாக, சிவகோட்டாச்சார்யா எழுதிய ‘சுகுமார சுவாமியின் கதை’ என்ற பாடத்தைச் சேர்த்திருக்கிறது. மேலும், சாவர்க்கர் தொடர்பான கவிதைகள், ‘Bhoo Kailasa’ ஆகிய பாடங்களை நீக்கிவிட்டு, நேருவின் ‘என் மகளுக்குக் கடிதம்’ பாடத்தைச் சேர்த்திருக்கிறது.
புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம்!
ஒட்டுமொத்தமாக, இந்துத்துவா பின்னணிகொண்ட, அனைத்துப் பாடங்களையும், வலதுசாரி எழுத்தாளர்களின் கவிதைகளையும் காங்கிரஸ் அரசு நீக்கியிருக்கிறது. மேலும், புதிய பாடத்திட்டங்களான, வேத கலாசாரம், புதிய மதங்களின் எழுச்சி, பெண் சுதந்திரப் போராட்ட வீரர்கள், பெண் சமூக சீர்திருத்தவாதிகள் உள்ளிட்ட பாடங்களைப் புதிதாக அறிமுகம் செய்திருக்கிறது.மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
‘துரதிஷ்டவசமானது’
இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய, போக்குவரத்துத்துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ‘‘டாக்டர் ஹெட்கேவர், சுதந்திரப் போராட்ட வீரர் சாவர்க்கரின் பாடத்திட்டங்களை, கர்நாடக அரசு அகற்றியிருப்பது துரதிஷ்டவசமானது. இதைவிட வேதனையானது எதுவுமில்லை’’ எனத் தெரிவித்திருக்கிறார்.
பாடத்திட்டத்தில் மாற்றம் செய்திருப்பதை பலதரப்பினர் வரவேற்றிருக்கும் நிலையில், ஒட்டுமொத்தமாக வலதுசாரி மற்றும் இந்துத்துவா பாடத்திட்டங்கள் அகற்றப்பட்டிருப்பதால், பா.ஜ.க தலைவர்கள் அதிருப்தியடைந்து, காங்கிரஸைச் சாடிவருகின்றனர்.சம்ஸ்கிருத ஒலிபரப்பு... இந்துத்துவ பிரசார மேடையா?
http://dlvr.it/Sqtbf5