Thursday 6 July 2023
Wednesday 5 July 2023
பொது சிவில் சட்டம்: ஜூலை 14-க்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிப்பது எப்படி?!
பொது சிவில் சட்டம் தொடர்பாக பா.ஜ.க-வுக்கும் எதிர்க்கட்சிகளுக்குமிடையே கடுமையான கருத்து யுத்தம் கனன்றுகொண்டிருக்கின்றன. எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் விதமாக பிரதமர் மோடி தொடங்கி பா.ஜ.க முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக விவாதித்துக்கொண்டிருக்க, அதற்கான பதிலடிகளையும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில், பொது சிவில் சட்டம் குறித்து தங்களின் கருத்துகளை மத்திய அரசிடம் தெரிவிக்கக்கூடிய கால அவகாசம் வரும் 14-ம் தேதியுடன் முடிவடையவிருக்கிறது. பா.ஜ.க திட்டம்?
பொது சிவில் சட்டம் கருத்துக்கேட்பு அறிவிப்பு:
கடந்த ஜூன் 14-ம் தேதி 22-வது சட்ட ஆணையம் இந்தியா முழுவதுக்கும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவருவது பற்றி பொதுமக்கள், மத அமைப்புகள் என அனைத்துத் தரப்பினரும் தங்கள் கருத்துகளைப் பதிவுசெய்யும் வகையில், ஒரு மாதம் கால வரையரையுடன் ஜூலை 14-ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என அறிவித்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் தங்கள் கருத்துகளை சட்ட ஆணையத்திடம் தெரிவித்துவருகின்றனர். இதுவரையில் 9 லட்சம் கருத்துகள் பெறப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.பொது சிவில் சட்டம்: `தீவிரம்' காட்டும் பாஜக... எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் - அடுத்து என்ன நடக்கும்?
கருத்து தெரிவிப்பது எப்படி?
கருத்து தெரிவிப்பது தொடர்பாக இந்தியாவின் 22-வது சட்ட ஆணையம், சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ``பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகளிடம் கருத்துகளையும் யோசனைகளையும் பெற மீண்டும் முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. விருப்பமும் ஆர்வமும் இருப்பவர்கள், அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 30 நாள்களுக்குள் Membersecretary-lci@gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக இந்திய சட்ட ஆணையத்துக்கு தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்!" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது அறிவிப்பு வெளியான ஜூன் 14-ம் தேதியிலிருந்து ஜூலை 14-ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சட்டம்
மின்னஞ்சல் தவிர தபால் மூலமாகவும் கீழ்க்காணும் முகவரிக்கு பொது சிவில் சட்டம் தொடர்பாக கருத்துகளை எழுதி அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தபால் அனுப்ப வேண்டிய முகவரி:
'உறுப்பினர் செயலர்,
இந்திய சட்ட ஆணையம்,
4-வது தளம், லோக் நாயக் பவன்,
கான் மார்க்கெட், புதுடெல்லி-110 003.'``பன்முகத்தன்மையே பலம்; பொது சிவில் சட்டம் இந்தியாவின் சிந்தனைக்கு எதிரானது!" - மேகாலயா முதல்வர்
எதிர்ப்பும் ஆதரவும்:
பொது சிவில் சட்டத்துக்கு ஏற்கெனவே காங்கிரஸ், தி.மு.க, ஐக்கிய ஜனதா தளம், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எனப் பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். `பொது சிவில் சட்டம் என்ற பெயரில் நாட்டின் பன்முகத்தன்மையைப் பறிக்க பா.ஜ.க அரசு திட்டமிடுகிறது. இந்தச் சட்டத்தால் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள்! 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து வேண்டுமென்றே இந்தச் சட்டத்தைக் கொண்டுவர பா.ஜ.க முயல்கிறது' என குற்றம்சாட்டியிருக்கின்றனர்.பொது சிவில் சட்டம் - மோடி, கெஜ்ரிவால்
அதேபோல சமீபத்தில் டெல்லியில் நடந்த சட்டம் மற்றும் நீதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆலோசனைக் கூட்டத்திலும் எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்திருக்கின்றன. அதேசமயம், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தைப் புறக்கணித்திருக்கின்றன. விதிவிலக்காக ஆம் ஆத்மி கட்சி மட்டும் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவு அளித்திருக்கிறது. பொது சிவில் சட்டம்: ``9 ஆண்டுகளாக இல்லாமல், இப்போது ஏன் இந்த அழுத்தம்?"- மோடிக்கு கபில் சிபல் கேள்வி
http://dlvr.it/SrhkCJ
http://dlvr.it/SrhkCJ
Tuesday 4 July 2023
பொது சிவில் சட்டம்: `தீவிரம்' காட்டும் பாஜக... எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் - அடுத்து என்ன நடக்கும்?
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரபரப்பு இப்போதே தொடங்கிவிட்ட நிலையில், பா.ஜ.க தனது முக்கிய அஜண்டாக்களில் ஒன்றான பொது சிவில் சட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறது. பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் மோடி சமீபத்தில் பேசியதைத் தொடர்ந்து, பொது சிவில் சட்டம் பற்றிய விவாதம் கிளம்பியது. `நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், இந்துக்களின் வாக்குகளைக் குறிவைத்து இந்த விவகாரத்தை பா.ஜ.க கையிலெடுக்கிறது' என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது.மோடி
இந்த நிலையில், பொது சிவில் சட்டம் குறித்துப் பேசுவதற்காக நாடாளுமன்ற நிலைக்குழு இன்று (ஜூலை 3) கூடியது. அதில், ஆளும் பா.ஜ.க மற்றும் எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சியினர், பொது சிவில் சட்டத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
பல்வேறு மதங்களையும், இனங்களையும்கொண்ட இந்தியாவில், ‘ஷரியத்’ சட்டம் என்கிற முஸ்லிம் தனிநபர் சட்டத்தை முஸ்லிம்கள் பின்பற்றுகிறார்கள். குடும்பம், திருமணம், மண முறிவு, வாரிசு, வக்பு உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களின் நிர்வாகம் ஆகிய விவகாரங்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் பொருந்தும். ஆனால், இந்தியாவில் அனைவருக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டம்தான் இருக்க வேண்டும் என்பது பா.ஜ.க-வின் நிலைப்பாடு.மோடி
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, ஜம்மு காஷ்மீருக்கான பிரிவு 370-ஐ நீக்குவது, பொது சிவில் சட்டம் கொண்டுவருவது ஆகிய மூன்றும் பா.ஜ.க-வின் முக்கிய அரசியல் அஜண்டாக்கள். இவை பற்றி நீண்டகாலமாகப் பேசிவரும் பா.ஜ.க., முதல் இரண்டு அஜண்டாக்களை நிறைவேற்றிவிட்டது. மூன்றாவது அஜண்டாவைத் தக்க சமயத்தில் தற்போது கையிலெடுத்திருக்கிறது.
பொது சிவில் சட்டம் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, “குடும்பத்தில் ஓர் உறுப்பினருக்கு ஒரு சட்டமும், இன்னோர் உறுப்பினருக்கு வேறொரு சட்டமும் இருந்தால் அந்தக் குடும்பம் முறையாகச் செயல்படுமா... அதுபோல வெவ்வேறுவிதமான சட்டங்களுடன் நாடு எப்படி வளர்ச்சியைக் காண முடியும்… ஆகவே, இந்தியாவில் பொது சிவில் சட்டம் அவசியம்" என்றார்.
மோடியின் பேச்சை எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், "குடும்பம் என்பது ரத்த உறவுகளால் பிணைக்கப்பட்டது. தேசம் என்பது அரசியலமைப்புச் சட்டத்தால் பிணைக்கப்பட்டது. பொது சிவில் சட்டத்தை மக்கள்மீது திணிக்க முடியாது” என்றார். ப.சிதம்பரம்
“மதப் பிரச்னையை அதிகரித்து, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி தேர்தலில் வெற்றிபெற்றுவிடலாம் என்று பிரதமர் மோடி நினைக்கிறார்” என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்தார். இந்த நிலையில், வரக்கூடிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர பா.ஜ.க திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன.
தற்போது, பொது சிவில் சட்டம் குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட எதிர்க்கட்சியினர், ‘நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், பொது சிவில் சட்டத்தை ஏன் கொண்டுவர வேண்டும் என்கிறீர்கள்... இப்போது என்ன அவசரம்’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், “பொது சிவில் சட்டம் குறித்து விவாதமே தேவையில்லை. இது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கவும் வேண்டியதில்லை” என்று கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. ஸ்டாலின்
பெரும்பாலான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், டெல்லியிலும் பஞ்சாப்பிலும் ஆளுங்கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மி, பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. ‘பொது சிவில் சட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. அதை அமல்படுத்த நினைக்கும் முறையைத்தான் எதிர்க்கிறோம்’ என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறியிருக்கிறார். மணிப்பூர் போராட்டத்தில் முக்கியத்துவம் பெறும் பெண்கள்! - பின்னணி என்ன?
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படவிருக்கிறது. அதன் மூலமாக, உத்தரப்பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் பா.ஜ.க-வுக்கு வாக்குகள் அதிகம் கிடைக்கலாம். ஆனால், இந்தியா முழுமைக்கும் ராமர் கோயிலால் மட்டுமே வாக்குகளைப் பெற்றுவிட முடியாது என்று பா.ஜ.க கருதக்கூடும்.
காரணம், கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தீவிரமாகப் பிரசாரம் செய்தும்கூட, அங்கு பா.ஜ.க படுதோல்வியை அடைந்தது. ஆகவே, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற ராமர் கோயில் மட்டுமே போதாது என்று பா.ஜ.க கருதுகிறது. எனவே, பொது சிவில் சட்டத்தை அவர்கள் கையிலெடுக்கிறார்கள் என்கிற விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன. கெஜ்ரிவால்
மக்களவையில் பா.ஜ.க-வுக்குப் பெரும்பான்மை இருப்பதால், அங்கு இதற்கான மசோதாவை நிறைவேற்றிவிடுவார்கள். மாநிலங்களவையில் பா.ஜ.க-வுக்குப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும், ஆம் ஆத்மி போன்ற சில கட்சிகளின் ஆதரவுடன் மசோதாவை நிறைவேற்ற பா.ஜ.க முயலும். பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவந்தால், அது தங்களுக்கு நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய அளவுக்குக் கைகொடுக்கும் என்பது பா.ஜ.க-வின் கணக்கு. ஆனால், உணர்ச்சிபூர்வமான இந்த விவகாரம் சமூகத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்களும், எதிர்க்கட்சியினரும் கவலையுடன் கூறுகிறார்கள்.
http://dlvr.it/Srf0pW
http://dlvr.it/Srf0pW
Monday 3 July 2023
``கலவரம் நடக்க வேண்டுமென மோடி விரும்புகிறார்..!" - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் சாடல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்டக் கோரிக்கை மாநாடு, காட்பாடி, துளுவ வேளாளர் திருமண மண்டபத்தில் நேற்று (02.07.23) நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், ``ஏழைகளுக்கு வீட்டுமனைப் பட்டா, சாலை வசதி, பாலாற்றில் கலக்கப்படும் தோல் தொழிற்சாலைகளின் கழிவுகளைத் தடுத்து நிறுத்தி அதற்கு மாற்று வழி கண்டறிவது உள்ளிட்ட இந்த மாவட்டத்தின் முக்கிய மக்கள் பிரச்னைகளை முன்நிறுத்தி, இந்த மாநாட்டில் சொல்லியிருக்கிற 13 கோரிக்கைகள் மாவட்ட நிர்வாகத்துக்கும், மாநில அரசுக்கும் முறையாக அனுப்பப்படும். முத்தரசன்
கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மோடி, அமித் ஷா ஆகியோர் தீவிரமாகப் பிரசாரம் செய்தும் அங்கு அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. பா.ஜ.க-வின் இந்தத் தோல்விக்குப் பிறகு, தேசிய அளவில் பா.ஜ.க-வை வீழ்த்த கடந்த 23-ம் தேதி பாட்னாவில் 17 எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி ஒற்றுமையை வலியுறுத்தியிருக்கின்றன. இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்குப் பிறகு பா.ஜ.க மிகப்பெரிய பதற்ற நிலைக்கு உள்ளாகியிருக்கிறது. அதனுடைய வெளிப்பாடுதான் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என்று அண்மையில் பிரதமர் மோடி பேசியது. பல மதங்கள், பல சாதிகள் இருக்கும் இந்த நாட்டில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சட்டம் என்பது சாத்தியமில்லை. அது பிரதமருக்கும் தெரியும். இந்தச் சட்டத்தை நிறைவேற்றினால் நாட்டில் கலகம்தான் நடக்கும்.
மணிப்பூர் மாநிலத்தில் நடந்துவரும் கலவரத்தை நிறுத்தி, அமைதியை ஏற்படுத்த பிரதமர் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. பிரதமரைப் பொறுத்தவரை அந்தக் கலவரம் நடக்க வேண்டும் என்று விரும்புகிறார். கலவரம் நடந்தால் தங்களுடைய கட்சிக்கு ஆதாயம் ஏற்படும் என்றும் நம்புகிறார். கடந்த காலத்தில் இப்படிப்பட்ட கலவரத்தை ஏற்படுத்தி, அரசியல் ஆதாயமும் அடைந்திருக்கிறார். முத்தரசன்
இதற்கு குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமே ஓர் உதாரணம். நாட்டில் கலவரம் ஏற்பட்டால் இந்துக்களின் வாக்குகள் அனைத்தையும் பெற்றுவிடலாம் என்ற நப்பாசையில் இது போன்ற முயற்சிகள் அவரால் மேற்கொள்ளப்படுகின்றன.
`சனாதனத்தைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கின்றனர், சனாதனத்தில் சாதியே இல்லை' என்று கவர்னர் ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறார். கவர்னர் வேலையைத் தவிர மற்ற எல்லா வேலையையும் அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். செந்தில் பாலாஜி வழக்கு விவகாரத்தில் நீதிமன்றம்தான் தீர்ப்பு வழங்க வேண்டுமே தவிர கவர்னர் கிடையாது.
வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்த முரசொலி மாறன் நோய்வாய்ப்பட்ட சமயத்தில் இலாகா இல்லாத அமைச்சராக ஓராண்டு இருந்தார். செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதா, வேண்டாமா என்பதை முதல்வர் மட்டுமே முடிவுசெய்ய வேண்டும். செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கி அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக கவர்னர் செயல்படுகிறார். பிறகு ஐந்து மணி நேரத்தில் அதை நிறுத்திவைப்பதாக மறு கடிதம் முதல்வருக்கு எழுதுகிறார். தன் இஷ்டம்போல் செயல்படும் இவர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட வேண்டியவர். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய அமைப்புகள் அனைத்தும் மோடி, அமித் ஷாவின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்டுவிட்டன.
ஆபத்திலிருந்து நாட்டையும், ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும் காப்பாற்ற, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வைத் தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப முன்வந்திருப்பது ஒரு நல்ல நம்பிக்கை அறிகுறியாகும்" என்றார்.
இந்த மாநாட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா பங்கேற்கவிருந்தார். தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் பங்கேற்க முடியவில்லை'' என்று முத்தரசன் தெரிவித்தார். உதயநிதி பாணியில் செங்கல்லை கையில் எடுத்த அண்ணாமலை - குமரி சங்கமத்தில் ஆவேசம்!
http://dlvr.it/Srb7FT
http://dlvr.it/Srb7FT
அழுகிய கை: ``தவறுதலாக ஊசி போடப்பட்டதா? விசாரணைக்குழு அமைப்பு" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ராமநாதபுரத்தைச் சேர்ந்த குறைப்பிரசவத்தில் பிறந்த ஒன்றரை வயது குழந்தைக்குத் தலையில் ரத்தக்கசிவு, நீர்க்கசிவு இருப்பதாக, குழந்தை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில், திடீரென குழந்தையின் வலது கை மட்டும் அழுகத் தொடங்கியிருக்கிறது. இதற்கு குழந்தையின் கையில் ட்ரிப் போடும்போது கவனக்குறைவாக இருந்ததால்தான் இந்த நிலை ஏற்பட்டதாகக் குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.மா.சுப்பிரமணியன்
இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "குறைப்பிரசவத்தில் பிறந்ததால் குழந்தையின் உடலில் பல பிரச்னைகள் இருந்திருக்கின்றன. இது பற்றி பெற்றோர்களிடமும் மருத்துவர்கள் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். மருத்துவர்களோ, செவிலியர்களோ குழந்தையைக் காப்பாற்றத்தான் போராடுவார்கள். தவறுதலாக ஊசி போட்டிருக்க வாய்ப்பு குறைவு. ஒருவேளை கவனக்குறைவாக இருந்தார்களா என விசாரிக்க மூன்று மருத்துவர்களைக்கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தச் சம்பவம் கவனக்குறைவால் ஏற்பட்டிருந்தால் அதற்கான பொறுப்பை அவர்கள்தான் ஏற்க வேண்டும். மேலும், குழந்தைக்குத் தேவையான சிகிச்சையை மருத்துவர்கள் அளித்துவருகின்றனர்" எனத் தெரிவித்திருக்கிறார். குழந்தையின் அழுகிய கை எழும்பூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டிருக்கிறது. மேலும், குழந்தை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகத் தகவலளிக்கப்பட்டிருக்கிறது.முதல் நாள் திருமணம்; அடுத்த நாள் மணமகளுக்கு குழந்தை... அதிர்ச்சியில் மணமகன் - என்ன நடந்தது?
http://dlvr.it/Srb702
http://dlvr.it/Srb702
Sunday 2 July 2023
``பன்முகத்தன்மையே பலம்; பொது சிவில் சட்டம் இந்தியாவின் சிந்தனைக்கு எதிரானது!" - மேகாலயா முதல்வர்
2024-ம் ஆண்டு லோக் சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், தற்போது பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் கொண்டுவர வேண்டும் என மத்தியில் ஆளும் பாஜக வலியுறுத்திவருகிறது. அரசாங்கரீதியாகப் பொதுமக்கள், மத அமைப்புகளிடம் பொது சிவில் சட்டம் குறித்து கருத்து கேட்க 22-வது சட்ட ஆணையத்தை மத்திய அரசு அமைத்திருக்கிறது.பொது சிவில் சட்டம்
இன்னொரு பக்கம், `பொது சிவில் சட்டத்தின்பேரில் இஸ்லாமியர்களை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன. எனவே, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்" என இந்த வார தொடக்கத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். பிரதமரின் இத்தகைய பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து பல்வேறு எதிர்ப்புகளும் வந்தன.
இந்த நிலையில் மேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மா, பொது சிவில் சட்டம் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரானது என்றும், வடகிழக்கில் தனித்துவமான கலாசாரங்கள் இருக்கின்றன என்றும் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பொது சிவில் சட்டம் தொடர்பாகப் பேசிய கான்ராட் கே சங்மா, ``இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு.மேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மா
அத்தகைய பன்முகத்தன்மையே நம்முடைய பலம், அடையாளம். ஆனால் பொது சிவில் சட்டம், இந்தியாவின் சிந்தனைக்கு எதிரானது. பொது சிவில் சட்டத்தின் உண்மையான உள்ளடக்கத்தைப் பார்க்காமல் அதனுள் செல்வது சரியாக இருக்காது. வடகிழக்கில் பல தனித்துவமான கலாசாரங்கள், சமூகங்கள் இருக்கின்றன. நாங்கள் அவ்வாறே இருக்க விரும்புகிறோம். இங்கு மேகாலயாவில் தாய்வழிச் சமூகம் இருக்கிறது. இவற்றையெல்லாம் மாற்ற முடியாது" என்று கூறினார்.'பொது சிவில் சட்டம்' ஸ்டாலின் சீற்றம்... அமித் ஷா வகுத்த வியூகம்! | Elangovan Explains
http://dlvr.it/SrY0WV
http://dlvr.it/SrY0WV
Saturday 1 July 2023
`நிபந்தனைகளை மீறியிருப்பது தெரிகிறது; ஏனாதிமங்கலம் மணல் குவாரிக்கு இடைக்காலத் தடை’ - உயர் நீதிமன்றம்
கர்நாடக மாநிலத்தில் உருப்பெறும் பெண்ணை ஆறு, 430 கி.மீ தூரம் பயணித்து வங்கக் கடலில் கலக்கிறது. இதில், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 106 கி.மீ பாய்ந்து செல்கிறது. எனவே, விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கும், மக்களுக்கும் முக்கிய ஆதாரமாகத் திகழ்கிறது தென்பெண்ணை. ஆனால், இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தளவானூர் மற்றும் எல்லீஸ் சத்திரம் தடுப்பணைகளில் 2021-ம் ஆண்டு தொடக்கம் முதலே அடுத்தடுத்து உடைப்பு ஏற்பட்டு பெரும் சேதங்களைச் சந்தித்தன. மேலும், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் மேம்பாலங்கள், மின்கோபுரங்கள் உள்ளிட்ட முக்கியக் கட்டுமானங்களும் சமீபகாலமாகத் தொடர் சேதங்களைச் சந்திக்கத் தொடங்கின. இந்த அபாயகர நிலைக்குக் முக்கியக் காரணமே, தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரிகள் செயல்பட்டபோது அதிகப்படியான மணல் சுரண்டப்பட்டதுதான் எனக் கொதித்தனர் விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும்.உடைப்பெடுத்த எல்லீஸ் சத்திரம் தடுப்பணைதென்பெண்ணை: மீண்டும் மணல் குவாரி; வாழ்வாதாரம் பாதிப்பு? கொந்தளிக்கும் மக்கள்; கண்டுகொள்ளாத அரசு!
இந்த நிலையில் தான், ஏனாதிமங்கலம் ஆற்றுப்பகுதியிலேயே மீண்டும் மணல் குவாரி அமைக்கப்போவதாக கடந்த வருடம் அறிவிப்பு வெளியான நிலையில், ஜூன் 2022-ல் அப்போதைய மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் ஏனாதிமங்கலம் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டமும் நடைபெற்றது. அப்போது பெருவாரியான மக்கள், புதிய மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதே ஏனாதிமங்கலம் பகுதியில், 11 ஹெக்டர் பரப்பளவில் மணல் குவாரி அமைப்பதற்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் 'சுற்றுச்சூழல் தடையின்மை சான்று' வழங்கியது. இது அந்தப் பகுதி மக்களையும் விவசாயிகளையும் கொதிப்படையச் செய்தது. எனவே, அரசு ஏனாதிமங்கலம் பகுதியில் மணல் குவாரி அமைக்க முற்படுவதைத் தடைசெய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் 26.10.2022 அன்று மனு அளித்து தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர் விவசாய சங்கத்தினர்.
அப்போதும், எவ்வித மாற்றமும் இன்றி அங்கு மணல் குவாரியை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில்... நவம்பர் மாதம், ஏனாதிமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு தீர்மானம் இயற்றி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள். மேலும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் புகார்களை அனுப்பிவந்தனர். இப்படியாக அந்தப் பகுதி மக்கள் பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்து, மணல் குவாரி அமைவதற்கு எதிராகத் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்திவந்த நிலையிலும், கடந்த டிசம்பர் மாதம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏனாதிமங்கலத்தில் செயல்படத் தொடங்கியது மணல் குவாரி.தொடங்கிய குவாரிப் பணி, மக்கள் போராட்டம்சுரண்டப்படுகிறதா தென்பெண்ணை ஆறு?! - உடைந்த தடுப்பணைகள்; அபாயகர நிலையில் பாலங்கள்; கவனிக்குமா அரசு?!
அதன் பின்னர், அந்த மணல் குவாரியில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகப்படியான மணல் சுரண்டப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன. இதற்கிடையே, அண்மையில் ஒருநாள் ஏனாதிமங்கலம் மணல் குவாரியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்த ராஜா என்பவரை, மறுதினமே மர்மக் கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில்தான், ஏனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜன் என்ற வழக்கறிஞர், இந்த குவாரிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அதில், `ஏற்கெனவே இங்கு செயல்பட்ட மணல் குவாரிகளால் தங்கள் பகுதியில் நீர்மட்டம் வெகுவாக குறைந்திருக்கும் நிலையில், இந்த குவாரி புதிதாக அமைக்கப்பட்டிருப்பதாகவும்; இந்த குவாரியை முழுமையாக நிறுத்துவது தொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் அரசு அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை இல்லை எனவும், ஒரு மீட்டர் ஆழத்துக்கு மேல் மணலை ஆற்றிலிருந்து எடுக்கக் கூடாது எனும்போது 3 முதல் 4 மீட்டர் ஆழம் எடுக்கப்படுவதாகவும், அரசு அனுமதியைத் தாண்டி 8-க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாகவும், 24 மணி நேரமும் மணல் குவாரி இயங்குகிறது’ என்பதையெல்லாம் உள்ளடக்கி அந்த மனுவில் தெரிவித்திருக்கிறார்.ஏனாதிமங்கலம்
மணல் குவாரி - ஹேமராஜன்கோடி கோடியாய் அறிவிப்பு... மீண்டும் மீண்டும் உடைப்பு!
இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, ``2 பொக்லைன் இயந்திரங்களே செயல்பட அனுமதி இருக்கும்போது, சுமார் 6 பொக்லைன் இயந்திரங்கள் இருப்பது ஆதாரமாக இணைக்கப்பட்ட புகைப்படத்தில் தெரிகிறது. சுமார் 10 நிபந்தனைகளை மீறியிருப்பதாகத் தெரிகிறது..." எனத் தெரிவித்தார். ``எனவே, இந்த மணல்குவாரி செயல்படுவதற்கு இடைகால தடை விதிக்கிறேன்’’ எனவும், ``விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உட்பட மனுவில் கூறப்பட்டிருக்கும் மற்ற 7 அரசுத்துறை அதிகாரிகளும் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டிருக்கிறார்.
http://dlvr.it/SrVvys
http://dlvr.it/SrVvys