சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சமீபத்தில் தன்னுடைய வாட்ஸ்அப்பில் வைத்த ஸ்டேட்டஸ், பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து தற்போது சேலம் மாவட்ட எஸ்.பி-யாக இருந்துவரும் சிவக்குமார், தனது வாட்ஸ்அப்பில் வைத்த ஸ்டேட்டஸ் காவல்துறை வட்டாரங்களில் பேசுபொருளாகியிருக்கிறது. எஸ்.பி சிவக்குமார் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்
சேலம் மாவட்ட எஸ்.பி பணியிடத்துக்கான போட்டி நிலவி வந்தது. ஏற்கெனவே சேலம் மாவட்ட எஸ்.பி-யாக இருந்த ஸ்ரீ அபினவ், வேறு இடத்துக்குப் பணிமாறுதல் பெற்ற பிறகு, அந்த இடத்தைப் பிடிப்பதற்கான போட்டி இன்னும் கடுமையாக இருந்தது. அதற்கு பல உயரதிகாரிகள் போட்டிப் போட்டு வந்தனர். அந்த வரிசையில் சேலம் மாநகரக் காவல் துணை ஆணையராக இருந்துவரும் லாவண்யா பெயரும் அந்த ரேஸில் அடிபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சேலம் மாவட்ட எஸ்.பி-யாக சிவக்குமார் பணியமர்த்தப்பட்டார்.
இந்த நிலையில், சேலம் மாவட்ட எஸ்.பி சிவக்குமார் அண்மையில் தன்னுடைய வாட்ஸப் ஸ்டேட்டஸ் ஒன்று வைத்திருந்தார். அதில், ``பதவியைப் பிடிக்க வசூல் வேட்டை... சேலம் மாநகரத்தில் திருமதி.லாவண்யா என்பவர் காவல் துணை ஆணையராக இருக்கிறார். இவர் சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பதவிபெற வேண்டும் என்று கடந்த பத்து மாதங்களாகவே முயற்சி செய்து வருகிறார். ஓய்வுபெற்ற டி.ஜி.பி-யிடம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பதவியைப் பெற முயற்சி செய்தார்'' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.காவல் துணை ஆணையர் லாவண்யா
இது குறித்து சேலம் மாவட்ட எஸ்.பி சிவக்குமாரிடம் பேசியபோது, ``என்னுடைய நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பினார். அதை என் மனைவிக்கு அனுப்பும்போது, தெரியாமல் ஸ்டேட்டஸில் வந்திருக்கிறது... அவ்வளவுதான்" என்றார்.
இது குறித்து சேலம் மாநகர துணை ஆணையர் லாவண்யாவிடம் பேசியபோது, ``எனக்கு எந்தப் பதவியின்மீதும் ஆசை இல்லை. இருக்கும் பணியைத் திறம்படச் செய்துவருகிறேன். சம்பந்தப்பட்ட அதிகாரி இது போன்று ஸ்டேட்டஸ் வைத்தது எதனால் என்று தெரியவில்லை. இதை என்னுடைய உயரதிகாரிக்குத் தெரிவித்திருக்கிறேன்" என்றார்.சேலம்: விளையாடிக்கொண்டிருந்த சிறுவனைக் கடத்தி பாலியல் துன்புறுத்தல்; 45 வயது நபர் சிக்கியது எப்படி?
http://dlvr.it/SsCVll
http://dlvr.it/SsCVll