Wednesday 2 August 2023
"கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது!"- பத்ரி சேஷாத்ரி கைதை எதிர்க்கும் தமிழ் எழுத்தாளர்கள்
பதிப்பாளரும், அரசியல் விமர்சகரும், எழுத்தாளருமான பத்ரி சேஷாத்ரியின் கைது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது.நேர்காணல் ஒன்றில் பேட்டியளித்த பத்ரி சேஷாத்ரி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்தும் மணிப்பூர் கலவரம் குறித்தும் பேசியிருந்தது சர்ச்சைகளைக் கிளப்பியது. இதையடுத்து ஜூலை 29 அதிகாலை தமிழ்நாடு காவல்துறையால் பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டார்.
பத்ரி சேஷாத்ரி இந்தக் கைது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்று பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவிக்க இன்று அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.பத்ரி சேஷாத்ரி மீது போடப்பட்டிருக்கும் முதல் தகவல் அறிக்கை
இந்நிலையில் பத்ரி சேஷாத்ரியின் கைது நடவடிக்கையைக் கைவிட்டு அவரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழ் எழுத்தாளர்கள் அம்பை, பால் சக்கரியா, பெருமாள் முருகன், ஆ.இரா.வேங்கடாசலபதி, ஸ்டாலின் ராஜாங்கம் உள்ளிட்டோர் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், "கருத்துரிமையைக் காக்க உங்கள் கவனத்தை ஈர்க்க வேண்டி இக்கடிதத்தை எழுதுகின்றோம். தமிழ்ப் பதிப்பாளரும் எழுத்தாளருமாகிய திரு.பத்ரி சேஷாத்ரியை தமிழ்நாடு அரசு கைது செய்திருக்கிறது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை அவதூறாகப் பேசியது தொடர்பான புகார் காரணமாக இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பத்ரி சேஷாத்ரியின் கருத்து கடும் கண்டனத்துக்குரியது. எனினும் இத்தகைய செயலுக்கு கைது என்பது மிகையான நடவடிக்கை என்றும் நமது அரசியல் சாசனம் வழங்கும் கருத்துரிமைக்கு மாறானது என்றும் நாங்கள் உறுதியாகக் கருதுகிறோம்.
எழுத்தாளர்களாகவும் பேச்சாளர்களாகவும் தமிழ்நாட்டு மக்களை ஈர்த்த தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் வழியில் நடைபெற்று வரும் 'திராவிட மாடல் ஆட்சி'யின் கூறுகளில் கருத்துரிமையும் ஒன்று என நம்புகின்றோம். இந்தியாவின் பிற மாநிலங்கள் எல்லாவற்றிலும் இருந்து வேறுபட்டு நிற்கும் திராவிட மாடல் ஆட்சி, கருத்துரிமையைக் காப்பதிலும் முன்னோடியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்."பத்ரி சேஷாத்ரியை விடுதலை செய்ய வேண்டும்!" - வரலாற்று ஆராய்ச்சியாளர் ராமச்சந்திர குஹா சொல்வது என்ன?
'வீண் அர்த்தமற்ற வார்த்தைகளுக்குக் காது கொடுக்காதீர்கள். ஒவ்வொன்றையும் நன்றாய் யோசித்துப் பார்த்து உங்கள் அபிப்ராயப்படி எதையும் முடிவு செய்யுங்கள்' என்பது தந்தை பெரியார் அடிக்கடி மக்களைப் பார்த்துச் சொல்லும் வாசகம். எந்தக் கருத்தையும் சொல்பவருக்கு இருக்கும் உரிமையை வலியுறுத்தும் பெரியார், அதைக் கேட்பவருக்கு இருக்கும் உரிமையையும் வலியுறுத்துவார். எதையும் மக்கள் முடிவுக்கு விட்டுவிடுவதி ல் நம்பிக்கை கொண்டவர் பெரியார். அவற்றுக்கான எதிர்வினையைக் கருத்துரீதியாக அதற்குரிய தளங்களில் வெளிப்படுத்த வேண்டும் என்பதே பெரியார் சிந்தனை.
ஆகவே பத்ரி சேஷாத்ரியின் கைது நடவடிக்கையைக் கைவிட்டு அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் கருத்துக்களுக்கான எதிர்வினையைக் கருத்துரீதியாக அதற்குரிய தளங்களில் வெளிப்படுத்த ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
http://dlvr.it/St4mb2
http://dlvr.it/St4mb2
Tuesday 1 August 2023
`ஓபிஎஸ் போன்ற துரோகிகளுக்குப் பாடம் புகட்டவே மதுரையில் அதிமுக மாநாடு!' - தேனியில் கே.பி.முனுசாமி
கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு எம்.பி தேர்தலில், பெரியகுளம் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டார். அப்போது தேனியில் நடந்த அறிமுகக் கூட்டத்தில் ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன் ஆகிய இருவரும் ஒன்றாக மேடையேறினர். அதன் பிறகு நாளை நடைபெறவிருக்கும் தி.மு.க-வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இருவரும் ஒன்றாக மேடையேறவிருக்கின்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க பொன்விழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி மதுரையில் எழுச்சி மாநாடு நடைபெறவிருக்கிறது. தேனி மாவட்ட அ.தி.மு.க சார்பில் இந்த மாநாட்டுக்கு தொண்டர்களை ஒருங்கிணைப்பது, அழைத்து வருவது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஓ.பி.எஸ், டி.டி.வி குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றனர். கூட்டம் நடந்த தனியார் மஹால்
இந்தக் கூட்டத்தில் பேசிய நத்தம் விஸ்வநாதன், ``அரசியலில் விபத்துபோல ஒருவரை முதலமைச்சராகவும், கட்சித் தலைமைக்கும் கொண்டுவந்தோம். ஓ.பி.எஸ் முடிந்துபோன சகாப்தம், அவரைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. செத்த பாம்பை அடித்து என்ன பயன். எம்.பி தேர்தலில் அவரின் மகனை, பண பலம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தைப் பயன்படுத்தி வெற்றிபெற வைத்தார். கட்சியினர் யாரையும் வெற்றிபெறச் செய்யவில்லை. கட்சித் தொண்டர்களுக்கு எதுவும் செய்யவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற எம்.பி தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட தங்கதமிழ்ச்செல்வன் தோல்விக்குக் காரணம் ஓ.பி.எஸ்-தான் என்று, ஜெயலலிதாவால் `துரோகி' எனப் பட்டம் வாங்கியவர் ஓ.பி.எஸ். அதன் பின்னரும், தன் சுயநலத்துக்காக தேனி மாவட்ட அ.தி.மு.க-வை வலுவிழக்கச் செய்ய முயன்றார். அதை அறிந்த ஜெயலலிதாவால் பலமுறை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு, எச்சரிக்கப்பட்டார்.
தர்மயுத்தக் காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் என்ற தனி மனிதனுக்காக, அன்று அவருடன் நாங்கள் செல்லவில்லை. கட்சியில் ஆதிக்கச் சக்திகள் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் அன்று அவருக்கு ஆதரவு கொடுத்தோம். ஜெயலலிதா சொல்வதுபோல் நூறாண்டுக்காலம் கட்சி இருக்க வேண்டும் என்றால், மன்னார்குடி குடும்பம் கட்சியில் இருக்கக் கூடாது. இடைத்தேர்தலில் ஆண்டிபட்டி, பெரியகுளத்தில் அ.தி.மு.க தோல்வியடைந்ததற்குக் காரணம் ஓ.பி.எஸ். தான் முதல்வராக வரவில்லை என்றால், அ.தி.மு.க-வே ஆட்சிக்கு வரக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்தவர் ஓ.பி.எஸ். அவர் செய்த துரோகம் காரணமாக அவர் மகனின் எம்.பி பதவி செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. ராமன் இருக்கும் இடம்தான் அயோத்தி, அதுபோல் எடப்பாடி இருக்கும் இடம்தான் அ.தி.மு.க" என்றார். திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ``சசிகலா குடும்பத்தால்தான் ஜெயலலிதா சிறைக்குச் சென்றார். தினகரனால் அடையாளம் காட்டப்பட்டவர்தான் ஓ.பி.எஸ். இந்த மாவட்டத்துக்கு அவர் செய்த சாதனைதான் என்ன... போடியில் தப்பித்தவறி வெற்றிபெற்றுவிட்டார். எம்.ஜி.ஆரைப் பற்றி பேசுவதற்கு, ஜெயலலிதாவைப் பற்றி பேசுவதற்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் என்ன தகுதி இருக்கிறது.
`எடப்பாடி முதல்வராக நான் ஏன் தேர்தலில் உழைக்க வேண்டும்?' என்று இருந்தவர் ஓ.பி.எஸ். தைரியம் இருந்தால் ஓ.பி.எஸ் தனிக்கட்சி தொடங்கி வெற்றிபெறட்டும்" என்றார். கூட்டத்தில் பங்கேற்ற கட்சியினர்
கே.பி.முனிசாமி பேசுகையில், ``எதிரிகளிடம் நம் பலத்தைக் காட்டுவதற்காகவும், துரோகிகளுக்குப் பாடம் புகட்ட வேண்டிய நிலையிலும் நாம் இருக்கிறோம். எம்.ஜி.ஆருடன் இருந்த ஆர்.எம்.வீரப்பன், ஜெயலலிதாவை ஏற்றுக்கொள்ளாமல், ஜானகியை முதலமைச்சர் ஆக்கினார். அதனால் கட்சியில் பிளவு ஏற்பட்டு, சின்னம் முடக்கப்பட்டது. பின்னர் ஜெயலலிதா முதல்வரான பிறகு, அவரை மன்னித்து மூத்தவர் என்று ஆர்.எம்.வீரப்பனைக் கட்சியில் சேர்த்து அமைச்சர் பதவி வழங்கினார். ஆனால், அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த ரஜினிகாந்துக்கு ஆதரவாகப் பேசியதால், அமைச்சர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் நீக்கினார். அ.தி.மு.க-வை அழிக்க வேண்டும் என்று நினைத்தால், ஆர்.எம்.வீரப்பனுக்கு நேர்ந்த நிலைதான் தற்போது ஓ.பி.எஸ்-ஸுக்கும் ஏற்படும்.
தன்னுடைய முதல்வர் பதவி பறிபோன பிறகுதான், அம்மா ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று கூறினார் ஓ.பி.எஸ். தர்மயுத்தத்தில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை வெளியேற்ற வேண்டும் எனக் கூறியவர்தான் ஓ.பி.எஸ். சசிகலா சிறைக்குச் சென்ற பின்பு அ.தி.மு.க ஆட்சியைக் கலைக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறிவந்தார். ஆனால், அவரால் அது கடைசி வரையில் முடியவில்லை. கட்சி பிளவுபடக் கூடாது என்றுதான் ஓ.பி.எஸ்-ஸிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது துணை முதல்வர், நிதித்துறை, வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் என உயரிய பதவிகள் வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்தார்.முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள்
முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்ற கேள்வி வந்தபோது, தான் முதல்வராக வேண்டும் என ஒருபோதும் எடப்பாடி நினைக்கவில்லை. ஓ.பி.எஸ்-ஸிடம் கேட்டோம், `அதைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம்' எனக் கூறினார். ஓ.பி.எஸ் போன்ற துரோகிகளுக்குப் பாடம் புகட்டுவதற்காகத்தான் இந்த மாநாடு. பகவத்கீதை கூற்றுப்படி துரோகியான ஓ.பி.எஸ் அழிக்கப்பட வேண்டும். எடப்பாடியை அழிக்க நினைத்தால் ஓ.பி.எஸ்-ஸாக இருந்தாலும், டி.டி.வி-யாக இருந்தாலும் காணாமல்போய்விடுவார்கள்" என்றார்.
மேலும் இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, வளர்மதி,வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் ஓ.பி.எஸ்-ஸுக்கு எதிராகப் பேசினர். ``அவர்களாக முறித்துக்கொள்ளும் வரை, பாஜக கூட்டணியில் தொடர்வோம்..!" - ஓபிஎஸ்
http://dlvr.it/St24nP
http://dlvr.it/St24nP
Monday 31 July 2023
என்.எல்.சி-க்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறை - காவல்துறை கையாண்ட `விதம்' எப்படி?!
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டுவரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில், நிரந்தரத் தொழிலாளர்கள், கம்பெனி தொழிலாளர்கள், சொசைட்டி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என சுமார் 20,000-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விநியோகம் செய்யும் என்.எல்.சி நிர்வாகம், தமிழக அரசுக்கு மட்டும் குறைந்த கட்டணத்தில் கொடுத்து வருகிறது.நெய்வேலி அனல் மின்நிலையம்
இந்த நிலையில் நிலக்கரி எடுப்பதற்குப் போதுமான நிலம் இல்லை என்றும், அதனால் ஆகஸ்ட் மாதம் முதல் 1,000 மெகாவாட் மின்சாரத்தை நிறுத்தப்போகிறோம் என்றும் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது என்.எல்.சி நிர்வாகம். அதையடுத்து, இரண்டாவது சுரங்க விரிவாக்கத்துக்காக மேல் வளையமாதேவி, கரிவெட்டி, கத்தாழைப் பகுதிகளில் 2006 – 2013 காலகட்டங்களில் கையகப்படுத்திய நிலங்களில் கடந்த 26-ம் தேதி பணியைத் தொடங்கியது என்.எல்.சி நிர்வாகம். என்.எல்.சி சுரங்க நீரை வெளியேற்ற புதிய பரவனாறு அமைக்கும் அந்தப் பணிக்காக, நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த விவசாயப் பயிர்கள் ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு, கால்வாய் தோண்டப்பட்டது. அதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போலீஸார் பாதுகாப்புடன் பணியைத் தொடர்ந்தது என்.எல்.சி நிர்வாகம்.
இதற்கிடையில், விவசாய நிலங்களில் ஜே.சி.பி இயந்திரத்தை இறக்கியதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தார்கள். அதையடுத்து, என்.எல்.சி-க்கு எதிராக ஜூலை 28-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ். அதைத் தொடர்ந்து, நிலம் கையகப்படுத்தும் பணியை என்.எல்.சி நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தியது. அதோடு போராட்ட அறிவிப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி ஜியாஉல்ஹக் தலைமையில் 2,000 போலீஸார் நெய்வேலி பகுதியில் குவிக்கப்பட்டனர். அத்துடன் நெய்வேலி நுழைவுவாயிலை சீல் வைத்ததுடன், வஜ்ரா வாகனங்களும் தயாராக நிறுத்தப்பட்டிருந்தன.என்.எல்.சி
முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக நெய்வேலிக்கு வந்த அன்புமணி, அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில், “தனியாருக்கு விற்கப்படவிருக்கும் என்.எல்.சி-க்காக தமிழக அரசு ஏன் நிலங்களைக் கையகப்படுத்திக் கொடுக்க வேண்டும்... அது அரசின் வேலை கிடையாது. மீண்டும் தமிழக அரசை எச்சரிக்கிறோம். நிறுத்திக்கொள்ளுங்கள். இனி ஒரு பிடி மண்ணைக்கூட கையகப்படுத்தக் கூடாது. இதுவரை கையகப்படுத்திய நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படையுங்கள்” என்று பேசிவிட்டு கீழே இறங்கினார். தொடர்ந்து பா.ம.க வழக்கறிஞர் பாலு, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்களுடன் என்.எல்.சி நுழைவுவாயில் பகுதியை நோக்கிச் சென்றார் அன்புமணி. அவர்களை போலீஸார் தடுத்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பா.ம.க-வைச் சேர்ந்தவர்கள் போலீஸார்மீது தண்ணீர் பாக்கெட்டை வீசியதுடன், போலீஸ் வாகனங்களை கல்வீசித் தாக்கினர். அதனால் போலீஸார் தடியடி நடத்த ஆரம்பித்தனர். ஆனால், அதன் பிறகும் போலீஸார்மீது கல்வீச்சைத் தொடர்ந்தனர் பா.ம.க-வினர். அதில் நெய்வேலி டவுன் இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீதின் மண்டை உடைந்தது. அவர் உட்பட 12 போலீஸாருக்குக் காயம் ஏற்பட்டது. அதையடுத்து, வானை நோக்கி கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. அப்படியும் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாததால், கல்வீசியவர்களை கலைப்பதற்காக, காவல்துறையின் வஜ்ரா வாகனம் மூலம் அவர்கள்மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. அன்புமணி இருந்த காவல் பேருந்தின்மீதும் கற்கள் விழுந்தன. இதையடுத்து, பேருந்தில் இருந்து இறங்கிய பா.ம.க வழக்கறிஞர் பாலு, மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினார். பின்னர், அன்புமணி உட்பட கைதுசெய்யப்பட்ட அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். நெய்வேலி.
இதற்கிடையே, கலவரத்தில் காயமடைந்து என்.எல்.சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த காவலர்களை, தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால் ஜூலை 28-ம் தேதி மாலை சந்தித்து ஆறுதல் கூறி, உடல்நலம் விசாரித்தார். தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்திலேயே கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ், என்.எல்.சி தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி ஆகியோருடன் டி.ஜி.பி ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த ஐ.ஜி கண்ணன், “என்.எல்.சி நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்தல் தொடர்பான பா.ம.க முற்றுகைப் போராட்டத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 400 பேர் கைதுசெய்யப்பட்டனர். போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், அன்புமணியைக் கைதுசெய்தபோது, பா.ம.க தொண்டர்கள் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டு வீசினர். இந்தச் சம்பவத்தால் 6 காவலர்கள், 14 காவல் அதிகாரிகள் காயமடைந்தனர். 3 வாகனங்கள் சேதமடைந்தன. அவர்களுக்கு என்.எல்.சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அன்புமணி கைதுசெய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடக்கு மண்டலத்தில் சாலைமறியல் போராட்டங்களில் ஈடுபட்டதாக 800 பேர் வரை கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்” என்றார். இந்தச் சந்திப்பின்போது, காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி பகலவன், விழுப்புரம் டி.ஐ.ஜி ஜியாஉல் ஹக் ஆகியோர் உடன் இருந்தனர்.ஐ.ஜி கண்ணன்
இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ``என்.எல்.சி விவகாரம் சர்ச்சையானது முதலே வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன் அங்கு அனுப்பிவைக்கப்பட்டார். பா.ம.க போராட்டம் அறிவித்ததும் இரவு நேர அரசுப் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அந்த நேரங்களில் வெளியூர் செல்பவர்களுக்கு தனியார் வேன்கள் பயன்படுத்தப்பட்டன. காவல்துறை பாதுகாப்பும் வழங்கியது. அதோடு பா.ம.க மற்றும் வன்னியர் சங்கத் தலைவர்கள் சிலரிடம் முன்கூட்டியே பேச ஆரம்பித்தோம்.
அன்புமணி ராமதாஸிடமும் எந்த ஓர் அசம்பாவிதமும் ஏற்படாதவாறு போராட்டம் நடக்க வேண்டும் எனச் சொல்லியே அனுமதி கொடுக்கப்பட்டது. அதோடு டெல்டா மாவட்டத்தில் இருக்கும் அமைச்சர் மூலமாகவும் அவரிடம் பேசப்பட்டது. வடக்கு மண்டலத்தின் பல இடங்களிலிருந்து காவல்துறையில் பணியாற்றும் இளைஞர்கள் பலர் வரவழைக்கப்பட்டனர்.
போராட்டக்காரர்களை என்.எல்.சி நிறுவனத்துக்குள் விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். அன்புமணி வந்து பேசிய பிறகு அவரை வேனில் ஏற்றும்போது, அந்த வேன்மீதும் சிலர் கல் எரிய ஆரம்பித்தனர். உடனே அவருக்கான பாதுகாப்பை அங்கு உறுதிசெய்தோம். அதன் பிறகு மண்டபத்துக்கு கொண்டு சென்றதும், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி, காவல்துறை உயர் அதிகாரிக்கு கால் செய்து அன்புமணியிடம் பேச வைத்தார். அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டத்தின் வீரியம் குறைய ஆரம்பித்தது. கடலூர்:
என்.எல்.சி
போராட்டக்காரர்கள் கல் எரிந்தும்கூட, அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். அதனால்தான் கண்ணீர் புகை குண்டுகளைக்கூட வானை நோக்கிச் செலுத்தினோம். அதைத்தான், சிலர் வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியிட்டிருக்கின்றனர். எந்த ஒரு சூழ்நிலையிலும் வன்முறையாக மாறிவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு அடியும் கவனமாக எடுத்து வைத்தோம். ஏனென்றால் இதற்கு முன்பு கள்ளக்குறிச்சி சம்பவம் போல் நடந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம்.
எங்கள் தரப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், 28-க்கும் மேற்பட்டோர்மீது பொது சொத்துகள் சேதப்படுத்தியது, கலவரம் உருவாகத் தூண்டுதலாக இருந்தது போன்ற காரணங்களுக்காக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இதுபோல் நடந்ததை அன்புமணியே எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை” என்றார்கள். என்.எல்.சி நில எடுப்பு விவகாரம்: பாமக போராட்டமும், வன்முறையின் பின்னணியும்!
http://dlvr.it/SszLXN
http://dlvr.it/SszLXN
Sunday 30 July 2023
அமித் ஷா பயணத்திட்டத்தில் திடீர் மாற்றம்; எதிர்பார்த்து காத்திருந்த தொண்டர்; ஆறுதல் கூறிய அண்ணாமலை!
ராமேஸ்வரத்துக்கு அண்ணாமலையின் `என் மண், என் மக்கள்' பாதயாத்திரையை தொடங்கி வைப்பதற்காக வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதைத் தொடர்ந்து ராமேஸ்வரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதில், ராமேஸ்வரம் அருகே ஏறகாடு கிராமத்தில் பா.ஜ.க நகர் பொதுச்செயலாளர் முருகன் என்பவர் வீட்டுக்கு அமித் ஷாவை அழைத்துச் செல்வதற்காக மாநிலத் தலைவர் அண்ணாமலை திட்டமிட்டிருந்தார். அமித் ஷாவின் பயண திட்டத்திலும் பா.ஜ.க தொண்டர் வீட்டுக்குச் செல்வது இடம்பெற்றிருந்தது. அதனால், அந்த கிராமத்தில் இரண்டு அடுக்கு போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டன. அவரது வீடு முழுவதும் சோதனை செய்யப்பட்டு, பாதுகாப்பு கருதி காஸ் சிலிண்டர் உட்பட சில பொருள்களை அப்புறப்படுத்தியிருந்தனர். அமித் ஷா பயணத்திட்டத்தில் இடம்பெற்ற தொண்டர் வீடு
மேலும் வெளி நபர்கள் யாரும் அந்த கிராமத்திற்குள் வரக் கூடாது என உத்தரவிட்டு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அமித் ஷா வரும்போது யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என கிராமத்தினருக்கு கட்டுப்பாடு விதித்தனர். இந்த நிலையில் நேற்று காலை அமித்ஷா வருகையையொட்டி அவருக்கு கொடுப்பதற்காக பா.ஜ.க நிர்வாகி முருகன் தேநீர் மற்றும் பிஸ்கட்டுகளை தயார் நிலையில் வைத்திருந்தார். ராமநாதபுரம் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த தேநீர் மற்றும் பிஸ்கட்டுகளைப் பரிசோதித்தனர். அமித் ஷா வருகைக்காக முருகன் அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அமித் ஷா வருகை ரத்துசெய்யப்பட்டு, அவரது சார்பாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வருவதாகத் தெரிவிக்கப்பட்டதால், அனைவரும் ஏமாற்றமடைந்தனர். தொண்டர் முருகன் வீட்டில் அவரிடம் உரையாடும் அண்ணாமலை
பின்னர் வீட்டுக்கு வந்த அண்ணாமலையைக் காலில் விழுந்து பா.ஜ.க நிர்வாகி முருகன் வரவேற்றார். பதிலுக்கு அண்ணாமலையும் முருகன் காலில் விழுந்தார். அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். அமித் ஷா பயணத்திட்டத்தின் திடீர் மாற்றத்தால் இங்கு வர முடியவில்லை. கவலைப்பட வேண்டாம். அவரது சார்பில்தான் நான் வந்திருக்கிறேன், உங்களது கோரிக்கையை என்னிடம் கூறுங்கள் என தெரிவித்தார். அப்போது தனக்கு வீடு கட்டி கொடுக்குமாறு அண்ணாமலையிடம் கோரிக்கை வைத்தார். உங்களுக்குப் பிடித்த இடத்தில் மூன்று சென்ட் நிலத்தைக் காட்டுங்கள், அங்கு உங்களுக்கு புதிய வீடு கட்டி கொடுக்கிறேன் என உத்தரவாதம் அளித்தார். அதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் தேநீர் அருந்திய அண்ணாமலை, அவரது குடும்பத்தாரிடம் சிறிது நேரம் உரையாடிய பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ``கைது நடவடிக்கையை மட்டுமே நம்பியிருக்கிறது திமுக அரசு!” - பத்ரி சேஷாத்ரி கைதுக்கு அண்ணாமலை கண்டனம்
http://dlvr.it/SsxKhY
http://dlvr.it/SsxKhY
Saturday 29 July 2023
அடுத்து மும்பையில்... வேகமெடுக்கும் ’இந்தியா’ கூட்டணியின் அடுத்த மூவ் என்ன?!
மத்தியில் இருக்கும் மோடி ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்று பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ‘இந்தியா’ கூட்டணியைக் கட்டமைத்திருக்கின்றன. முதல் கூட்டத்தை பட்னாவிலும், இரண்டாவது கூட்டத்தை பெங்களூரிலும் நடத்திய எதிர்க்கட்சிகள், மூன்றாவது கூட்டத்தை வரும் ஆகஸ்ட் 25, 26 ஆகிய தேதிகளில் மும்பையில் நடத்தவிருக்கின்றன.பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டம்
வெறுமனே கூட்டம் போட்டு விவாதிப்பது, கலைந்து செல்வது என்றில்லாமல், முக்கியமான முடிவுகளையும் அவர்கள் எடுத்திருக்கிறார்கள். ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிதிஷ்குமார் முதல்வராக இருக்கும் பீகாரிலும், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் கர்நாடகாவிலும் கூடிய எதிர்க்கட்சிகள், இந்த முறை ‘இந்தியா’ கூட்டணி ஆட்சியில் இல்லாத மும்பையில் கூடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஏற்பாடுகளைச் செய்கின்றன.
சிவசேனாவை உடைத்து, தேசியவாத காங்கிரஸை உடைத்து மகாராஷ்டிராவில் பா.ஜ.க அதிகாரத்தில் இருக்கும் நிலையில், அந்த மாநிலத்தின் தலைநகரில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் 26 கட்சிகளின் தலைவர்கள் கூடவிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இரண்டாவது கூட்டத்திலேயே தங்கள் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் வைத்து, ஆளும் தரப்புக்கு அதிரவைத்தவர்கள், மும்பை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகளை எடுக்கப்போகிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.பெங்களூரு கூட்டத்தில் சோனியா காந்தி, ஸ்டாலின், மம்தா பானர்ஜி
மும்பை கூட்டத்தில் தங்கள் கூட்டணிக்கான குறைந்தபட்ச பொதுத்திட்டத்தை உருவாக்க இந்தியா அணி திட்டமிட்டுவருகிறது. அதற்காக, இந்தியா அணியில் இருக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவும் அமைக்கப்படவிருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வைத் தோற்கடிப்பதே அவர்களின் முக்கிய நோக்கம். அதனால்தான், பல்வேறு முரண்டுபாடுகளைக் கொண்டிருந்தபோதிலும், இந்தக் கட்சிகள் ஓரணியில் திரண்டிருக்கின்றன.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு எதிராக ஒவ்வொரு தொகுதியிலும் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது என்கிற உத்தி குறித்து இந்தியா அணி ஆலோசித்துவருகிறது. அது பற்றிய முக்கிய ஆலோசனை மும்பையில் நடக்கவிருக்கும் கூட்டத்தில் நடைபெறும் என்கிறார்கள். ராகுல் காந்தி
இது பற்றிய முடிவுகளை ஒரே கூட்டத்தில் எடுத்துவிட முடியாது என்றும், இரண்டு கூட்டங்களிலாவது இது பற்றிப் பேச வேண்டியிருக்கும் என்றும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியிருக்கிறார்.அண்ணாமலை நடைப்பயணம்: தமிழக அரசியல் கட்சிகளின் ரியாக்ஷன்கள் என்னென்ன?!
‘இந்தியா’ என்ற எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பெயரை மோடி கடுமையாக விமர்சித்திருக்கிறார். இந்தியா என்ற பெயர் இந்தியன் முஜாஹிதீன், கிழக்கிந்திய கம்பெனி, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா ஆகிய பெயர்களிலும் இருக்கிறது என்று சாடினார் பிரதமர். இந்தியா என்ற பெயரே ஆளும் பா.ஜ.க-வை அச்சமடையச் செய்திருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் பிரதமரின் பேச்சு என்று எதிர்க்கட்சிகள் பதிலடி கொடுத்தன. சீதாராம் யெச்சூரி
‘இந்தியாவின் விடுதலைக்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இந்திய தேசிய ராணுவத்தை ஆரம்பித்தார். அது பிரதமர் மோடிக்குத் தெரியுமா?’ என்று ட்வீட் செய்தார் சி.பி.எம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி. ‘இந்தியா’வுக்கு எதிராக மோடி பேசுகிறார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேச ஆரம்பித்தனர். ‘இந்தியாவைக் காக்க இந்தியா அணியை உருவாக்கியிருக்கிறோம் என்றார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிலையில், ஆளும் பா.ஜ.க-வுக்கு அரசியல்ரீதியாக பல சவால்களை ஏற்படுத்தும் வகையில் மும்பை கூட்டத்தில் இன்னும் பல முடிவுகளை எடுப்போம் என்கிறார்கள் `இந்தியா’ அணி தலைவர்கள்.
http://dlvr.it/SsvMgp
http://dlvr.it/SsvMgp
Friday 28 July 2023
மணிப்பூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மோரே நகரில் மீண்டும் வன்முறை... கள நிலவரம் என்ன?
மணிப்பூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மோரே பகுதியில் மீண்டும் வன்முறை வெடித்திருக்கிறது. மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் எல்லையில் மோரே நகரம் அமைந்திருக்கிறது. அங்கு, சுமார் 3,000 தமிழர்கள் வசித்துவருகிறார்கள். மணிப்பூரில் இரண்டரை மாதங்களுக்கு மேலாக கலவரம் நீடித்துவரும் நிலையில், மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், மோரே பகுதியில் பெரியளவுக்கு வன்முறைச் சம்பவங்கள் நிகழவில்லை என்று செய்திகள் கூறுகின்றன.மணிப்பூரில் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள்
மணிப்பூரில் மலை மாவட்டங்களில் வசிக்கும் குக்கி பழங்குடி மக்களுக்கும், சமவெளிப்பகுதியில் வசிக்கும் மைதேயி இனத்தவருக்கிடையே கடந்த மே 3-ம் தேதி மோதல் வெடித்தது. அதன் பிறகு, அங்கு இரண்டு முறை தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன.
அங்கு, குக்கி பழங்குடியினர் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். இரண்டாவதாக மைதேயிகளும், மூன்றாவதாக தமிழர்களும் அதிக எண்ணிக்கையில் வாழ்கிறார்கள்.
தமிழர்களைப் பொறுத்தளவில் குக்கி, மைதேயி ஆகிய இரண்டு இனத்தவருடனும் நல்ல நட்புடன் இருக்கிறார்கள். ஆகவே, தமிழர்களை அவர்கள் விரோதிகளாகப் பார்ப்பதில்லை. கடந்த மே மாதம் வன்முறை வெடித்தபோது, அங்குள்ள மைதேயி இனத்தவரின் வீடுகளையும் கடைகளையும் குக்கி மக்கள் எரித்திருக்கிறார்கள். அந்தத் தாக்குதலில், 10-க்கும் மேற்பட்ட தமிழர்களின் வீடுகளும் தீயில் எரிந்திருக்கின்றன. ராணுவம்
உடனே, தமிழர்களுடன் குக்கி மக்களும் சேர்ந்து அந்தத் தீயை அணைத்திருக்கிறார்கள். அதன் பிறகு, தமிழர்களின் வீடுகளோ, கடைகளோ தாக்கப்படவில்லை என்று செய்திகள் கூறுகின்றன.
இந்த நிலையில், ஜூலை 16-ம் தேதியன்று மோரே நகரில் தமிழர்களின் வீடுகளும் கடைகளும் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மோரே கடைவீதியில் குக்கி இனத்தைச் சேர்ந்த வன்முறையாளர்கள், மைதேயி இனத்தவரின் கடைகளையும், வீடுகளையும் தீவைத்துக் கொளுத்தியிருக்கிறார்கள். அதில், 30-க்கும் மேற்பட்ட கடைகளும் வீடுகளும் தீக்கிரையானதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தையடுத்து, மோரே நகரம் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது.மணிப்பூர்
இது குறித்து மோரே தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.சேகர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “ஆரம்பத்தில், மோரே நகரில் 14,000 தமிழர்கள் வசித்தோம். 1995-ம் ஆண்டு குக்கி மக்களுக்கும் தமிழர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அதன் பிறகு, அங்கு தமிழர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. தற்போது, 3,000 தமிழர்கள் இருக்கிறோம். குக்கி, மைதேயி என இரண்டு இனத்தவரிடையேயும் தமிழர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. மோரே என்பது ஒரு மினி இந்தியா மாதிரி. அனைத்து மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் அங்கு வசிக்கிறார்கள்.தொடரும் `அதிபயங்கரங்கள்' - மணிப்பூர் மக்களுக்காக இதர மாநிலங்களில் ஆதரவுக்குரல் எழவில்லையா?!
கடந்த மே 3, 28 ஆகிய இரண்டு நாள்களில் ஏற்பட்ட வன்முறையில், தமிழர்களுக்குச் சொந்தமான 40 வீடுகளும், கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டன. தற்போது, மீண்டும் தாக்குதல் நடந்திருக்கிறது. இதனால், மோரே நகரில் பதற்றம் நிலவுகிறது. மணிப்பூர் முதல்வருடன் அமித் ஷா
அங்கு கடந்த 60 - 65 வருடங்களாக வசித்துவருகிறோம். எங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால், தமிழக மக்களும் தமிழக அரசும்தான் எங்களுக்கு உதவ வேண்டும். தற்போது, தமிழர்களுடைய 35 வீடுகள் எரிந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அரசு உதவிசெய்ய வேண்டும்” என்றார் வி.சேகர்.
http://dlvr.it/Ssrkp3
http://dlvr.it/Ssrkp3