Monday, 14 August 2023
Sunday, 13 August 2023
ம.நீ.ம-வின் அடுத்த விக்கெட்... கட்சியை விட்டு விலகிய மாநில நிர்வாகி பொன்னுசாமி - பின்னணி என்ன?!
2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு டாக்டர் மகேந்திரனில் ஆரம்பித்து சி.கே.குமரவேல், முருகானந்தம், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ்பாபு, பழ.கருப்பையா எனக் கட்சியின் முன்னணி பிரமுகர்கள் பலர் கட்சியைவிட்டு வெளியேறிய நிலையில், தற்போது 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சியின் தொழிலாளர் நல அணி மாநிலச் செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி கட்சியை விட்டு விலகியிருப்பது ம.நீ.ம-வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.மனோ தங்கராஜுடன் பொன்னுசாமி
இது குறித்து நம்மிடம் பேசிய அந்தக் கட்சிப் பிரமுகர்கள் சிலர், “தொழிலாளர் நல அணி மாநிலச் செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி தமிழ்நாடு பால் முகவர் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவராகவும் பொறுப்பு வகித்துவருகிறார். இந்த நிலையில், தமிழ்நாடு அமைச்சர் மனோ தங்கராஜைப் பால் முகவர் நலச்சங்கத்தின் தலைவர் என்கிற முறையில் சந்தித்ததோடு அந்தச் செய்தியை கட்சியின் வாட்ஸ்அப்பிலும் பகிர்ந்திருக்கிறார். பின்னர் தவறுதலாகப் பதிவிட்டதாக அதை நீக்கவும் செய்திருக்கிறார். இதைக் காரணம் காட்டி கட்சித் தலைமை நிர்வாகிகள் முன் விசாரணைக்கு ஆஜராகக் கட்சி தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. உடையும் உலகநாயகனின் மக்கள் நீதி மய்யக் கனவு… அடுத்தடுத்து வெளியேறும் நிர்வாகிகள்… காரணம் என்ன?!
கடந்த மே மாதம் அழைப்பை ஏற்று ஆஜரான பொன்னுசாமியிடம் `அமைச்சரைச் சந்திக்கத் தலைமையிடம் அனுமதி பெற்றீர்களா?’ என்பது போன்ற கேள்விகளை முன்வைத்திருக்கின்றனர். அதோடு கட்சிப் பொறுப்புக்கு வருபவர்கள் சங்கப் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத்தான் வருவார்கள் என்றும் கட்சியின் பொறுப்புகளிலிருந்தால் பால் முகவர் சங்க பொறுப்புகளில் இருக்கக் கூடாதென்ற தொனியில் பேசியிருப்பது பொன்னுசாமியை காயப்படுத்திவிட்டது. ஒருசில மாதங்களாகவே கட்சிக்குள் ஓடிக்கொண்டிருந்த விவகாரம் இன்று வெடித்திருக்கிறது” என்கிறார்கள் விவரமறிந்த கட்சிப் பிரமுகர்கள்.பொதுச் செயலாளர் அருணாச்சலம்
இது குறித்து சு.ஆ.பொன்னுசாமி ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம் ``கட்சியில் இணைவதற்கு முன்பே தமிழ்நாடு பால்முகவர் நலச் சங்கத்துக்காக உழைத்து வருபவர் சு.ஆ.பொன்னுசாமி. இதை அறிந்தே ம.நீ.ம அவருக்குப் பதவி வழங்கியது. ஆரம்பத்திலிருந்தது போலான சுதந்திரம் கட்சிக்குள் இப்போதில்லை. கட்சியின் பதவியைச் சுட்டிக்காட்டி பொன்னுசாமியின் சமூகப் பணிகளைத் தடுக்க நினைக்கிறார்கள். ஒரு ட்வீட் போடுவதாக இருந்தாலும் கட்சித் தலைமையிடம் அனுமதி பெற்றுத்தான் போட வேண்டும் என்ற நிலையில் கட்சி இருக்கிறது. கட்சிப் பிரமுகர்களின் தனிப்பட்ட வாழ்வு, தொழில், சமூகப் பணிகளிலும் மூக்கை நுழைக்கும் போக்கு அதிகரிப்பதனால்தான் சு.ஆ.பொன்னுசாமி விலகியிருக்கிறார்” என்கிறார்கள்.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்
https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3OITqxsபத்தல... பத்தல... நிதியும் பத்தல..! - திண்டாடும் ‘மக்கள் நீதி மய்யம்’
http://dlvr.it/StZcxL
https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3OITqxsபத்தல... பத்தல... நிதியும் பத்தல..! - திண்டாடும் ‘மக்கள் நீதி மய்யம்’
http://dlvr.it/StZcxL
Saturday, 12 August 2023
பிரதமர் மோடியின் பதிலுரையில் தெரிந்தது விரக்தியா, சமாளிப்பா, நம்பிக்கையா?! - ஓர் அலசல்
மத்தியில் இருக்கும் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சிகளின் எம்.பி-க்கள் கொண்டுவந்தனர். அதன்மீது விவாதங்கள் நடைபெற்று, நேற்று (ஆக.10) பிரதமர் மோடி பதிலுரை அளித்தார். மணிப்பூர்
வன்முறை
மூன்று மாதங்களுக்கு மேலாக வன்முறைகள் தொடர்ந்துகொண்டிருக்கும் மணிப்பூர் மாநிலத்தின் பிரச்னையை முன்வைத்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்திருக்கும் நிலையில், பிரதமரின் இரண்டே கால் மணி நேர உரையில், மணிப்பூர் பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.
இன மோதல் காரணமாக மணிப்பூரில் நிகழ்ந்த கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், சொந்த நாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக இருக்கும் துயரங்கள் போன்றவை பற்றியெல்லாம் மோடி பேசவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இவை பற்றியெல்லாம் பேசவில்லை என்றால், அந்த இரண்டே கால் மணி நேரத்தில், காங்கிரஸ் கட்சியைத் தாக்குவதிலேயே பிரதமர் அதிக கவனம் செலுத்தினார். பிரதமர் மோடி
மணிப்பூர் பிரச்னையைப் பற்றி பேசுவதற்கு அவருக்குத் தயக்கம் இருந்திருக்கலாம். ஏனென்றால், பல கொடூரங்கள் நிகழ்ந்தும் அந்த மாநிலத்துக்கு இதுவரை அவர் செல்லவில்லை. எதிர்க்கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தியும், ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த எம்.பி-க்களும் மணிப்பூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துவிட்டு வந்துவிட்டனர். ஆனால், பிரதமர் மோடி இன்னும் மணிப்பூருக்குச் செல்லவில்லை. மணிப்பூர் விவகாரம் பற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷா விரிவாகப் பேசியிருக்கிறார் என்பதைச் சொல்லி, மணிப்பூரைக் கடந்துசென்றுவிட்டார் பிரதமர் மோடி.
“இதேபோல, 2018-ம் ஆண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்கள். அது எங்களுக்கு மங்கலகரமாக அமைந்தது. 2019 தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றோம். அதுபோல இப்போது கொண்டுவந்திருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானமும் எங்களுக்கு மங்கலகரமாக அமையும். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய வெற்றியைப் பெறுவோம். மூன்றாவது முறையாக ஆட்சியமைப்போம்” என்று பேசினார் பிரதமர் மோடி.மணிப்பூர்
நாடாளுமன்றத்துக்கு வராமல் இருந்த பிரதமர் மோடியை, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் எதிர்க்கட்சிகள் வரவழைத்துவிட்டன. அந்தக் கோபம் பிரதமருக்கு இருக்கலாம். காங்கிரஸை ‘ஆணவம் நிறைந்த கட்சி’ என்றெல்லாம் சாடினார் பிரதமர். ‘தேசியக்கொடியிலிருந்து மூவர்ணத்தை எடுத்துக்கொண்டது, காந்தி பெயரையும் திருடிக்கொண்டது’ என்கிறார் பிரதமர். அதற்கு, ‘காந்தியைக் கொலைசெய்தவர்களை ஆதரிக்கும் நீங்கள், காந்தி பற்றிப் பேசலாமா?’ என்று பதிலடி கொடுக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான மக்களவை விவாதத்தில் நடந்த சில `தரமான’ சம்பவங்கள்!
‘எதிர்க்கட்சிகளுக்கு என்மீது பாசம் அதிகம். அது எந்த அளவுக்கு என்றால், நான் நாடாளுமன்றத்தில் பேசும்போது தண்ணீர் குடித்தால்கூட அதைப் பிரச்னையாக்குவார்கள். 24 மணி நேரமும் மோடியைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்‘ என்றார் பிரதமர் மோடி. மோடியைப் பார்த்து எதிர்க்கட்சிகளுக்கு பயம் இருக்கிறதா அல்லது எதிர்க்கட்சிகளைப் பார்த்து மோடிக்கு பயம் இருக்கிறதா என்பது தெரியவில்லை. எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டிருப்பதையும், ‘இந்தியா’ என்று கூட்டணிக்குப் பெயர் வைத்திருப்பதையும் கண்டு பா.ஜ.க-வுக்கும் மோடிக்கும் பயம் வந்துவிட்டதாக எதிர்க்கட்சியினரும், அரசியல் பார்வையாளர்களும் கூறுகிறார்கள். ராகுல் காந்தி
ஏனெனில், ‘கூட்டணியின் பெயரை மாற்றினால், ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று எதிர்க்கட்சியினர் நினைக்கிறார்கள். `இந்தியா’ என்று பெயர் வைத்ததன் மூலம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு பெங்களூரில் இறுதிச்சடங்கு செய்துவிட்டனர்’ என்றெல்லாம் கடுமையாக மோடி பேசியிருக்கிறார். `இது, அவரது விரக்தியின் வெளிப்பாடு’ என்கிறார்கள் எதிர்க்கட்சியினர். `இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா என இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியைப் பறிகொடுத்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணி பலமடைந்திருப்பது பிரதமருக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியிருக்கலாம்’ என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்
https://bit.ly/3OITqxs">
https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3OITqxs">
https://bit.ly/3OITqxs
http://dlvr.it/StXpTM
https://bit.ly/3OITqxs">
https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3OITqxs">
https://bit.ly/3OITqxs
http://dlvr.it/StXpTM
Friday, 11 August 2023
இந்தியாவின் $6.7 டிரில்லியன் பொருளாதாரக் கனவு சாத்தியமாகுமா..? ஆய்வறிக்கை என்ன சொல்கிறது?
இந்தியா 2023-24-ம் ஆண்டில் இருந்து ஆண்டுக்கு 6.7 சதவிகித வளர்ச்சியடைந்தால் தான் 2030-31-க்குள் 6.7 டிரில்லியன் டாலர் பொருளாதார கனவு சாத்தியமாகும் என ஆய்வு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் குளோபல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ 2022-23-ல் இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 3.7 டிரில்லியன் டாலராக உள்ளது. இந்த வளர்ச்சி தொடர்ந்தால் நாட்டின் மூலதன வருமானம் 2,500 டாலரில் இருந்து சுமார் 4,500 டாலராக உயரும் என மதிப்பீடு நிறுவனம் கூறியுள்ளது. GDP ஆசிரியர் வேலை To பில்லியன் டாலர் கம்பெனி... `பிசிக்ஸ் வாலா' -வின் நம்ப முடியாத வெற்றிக்கதை!
தற்போது சர்வதேச அளவு பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா 26 டிரில்லியன் டாலருடன் முதலிடத்திலும் சீனா 19 டிரில்லியன் டாலருடன் 2-வது இடத்திலும் ஜப்பான் 4.4 டிரில்லியன் டாலருடன் 3-வது இடத்திலும் ஜெர்மனி 4.3 டிரில்லியன் டாலருடன் 4-வது இடத்திலும் இந்தியா 3.7 டிரில்லியன் டாலருடன் 5-வது இடத்திலும் உள்ளன.
கொரோனாவுக்கு பின்னர் உலகளவில் காணப்படும் பொருளாதார சுணக்கம் மற்ற நாடுகளின் வேகத்துக்கு தடையாகியுள்ளது. இதே போல இந்தியாவில் வட்டி விகிதம் அதிகமாக இருப்பதும் இந்த சுணக்கத்தின் வேகத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இது போன்ற இடர்பாடுகளை அரசு மற்றும் ரிசர்வ் வங்கி சரியான முறையில் அணுகி பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். இல்லையெனில் இந்தியாவின் வளர்ச்சி 6.7 டிரில்லியன் டாலர் மதிப்பில் இருந்து 6 டிரில்லியனாக குறையலாம்.
எனவே தொழில் நடவடிக்கைகளை ஊக்குவித்து அவற்றின் பங்கை அதிகரிக்கும் வகையில் கொள்கைகளை வகுப்பதுடன் உலகச் சந்தையில் போட்டியிடும் அளவில் இந்தியாவின் தனித்தன்மையை அதிகரிக்க வேண்டும்’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://dlvr.it/StVQky
http://dlvr.it/StVQky
Thursday, 10 August 2023
``மணிப்பூரில் வன்முறை நடந்தது உண்மைதான்; கைகூப்பி கேட்கிறேன், வன்முறையை நிறுத்துங்கள்..!" - அமித் ஷா
பா.ஜ.க ஆளும் மணிப்பூரில் பழங்குடிப் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், மூன்று மாதங்களாக நடந்துகொண்டிருக்கும் வன்முறை விவகாரம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்திவந்த எதிர்க்கட்சிகள், பா.ஜ.க அரசு ஒத்துழைக்காததால் அரசுமீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தன. அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மீதான விவாதம் நேற்று தொடங்கி இரண்டாவது நாளாக இன்று நடைபெற்றது.ராகுல் காந்தி
இருப்பினும், நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, அதன் பிறகு இன்றுவரை நாடாளுமன்றத்துக்கு வரவில்லை. இன்றைய விவாதத்தில் முதல் ஆளாக உரையாற்றிய ராகுல் காந்தி, ``பிரதமர் ஏன் இன்னும் மணிப்பூருக்குச் செல்லவில்லை. பிரதமரைப் பொறுத்தவரை, அவருக்கு மணிப்பூர் இந்தியாவில் இல்லை. மணிப்பூரில் பாரத மாதாவை எரித்துவிட்டீர்கள் நீங்கள் (பா.ஜ.க). நீங்கள் தேசத்துரோகிகள்" என்று கடுமையாகச் சாடினார்.
இந்த நிலையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மீதான விவாதத்தில் மணிப்பூர் வன்முறைப் பற்றி உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``மணிப்பூரில் வன்முறை நடந்ததை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால், இது போன்ற சம்பவங்களில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது வெட்கக்கேடானது. இந்த வன்முறையில் 152 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும், மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்தது துரதிர்ஷ்டவசமானது. ஒட்டுமொத்த சமூகத்துக்கும் ஏற்பட்ட அவமானம் இது.அமித் ஷா
ஆனால், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள் இந்த வீடியோ வெளியானது ஏன்... அந்த வீடியோ யாரிடமாவது இருந்திருந்தால், அதை அப்போதே டி.ஜி.பி-யிடம் கொடுத்திருக்க வேண்டும். அப்படிக் கொடுக்கப்பட்டிருந்தால் சம்பவம் நடந்த அன்றே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். இப்போது ஒன்பது பேரை நாங்கள் அடையாளம் கண்டு கைதுசெய்திருக்கிறோம். மேலும், மணிப்பூரில் மூன்று நாள்கள் நான் இருந்தேன். அந்தச் சமயத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல், இந்த விவகாரத்தில் முதல் நாளிலிருந்தே விவாதத்துக்கு நான் தயாராக இருந்தேன். ஆனால், எதிர்க்கட்சிகள் விவாதத்தை விரும்பவில்லை. நான் பேசுவதைக்கூட அவர்கள் விரும்பவில்லை. இருப்பினும் அவர்கள் என்னை வாயடைக்க முடியாது.மணிப்பூர் வன்முறை - பாஜக
130 கோடி மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். எனவே, நாங்கள் பேசுவதைக் கேட்க வேண்டும். ஒரு மாநில முதல்வர் மத்திய அரசுக்கு ஒத்துழைக்கவில்லையென்றால்தான் அவரை மாற்ற வேண்டும். மணிப்பூர் முதல்வர் அரசுக்கு ஒத்துழைக்கிறார். எனவே, அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டிய தேவை இல்லை. மேலும் குக்கி, மைதேயி சமூகங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன், ஏனெனில் எந்தவொரு பிரச்னைக்கும் வன்முறை ஒருபோதும் தீர்வாகாது. மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்துவோம் என்று நான் உறுதியளிக்கிறேன். அதேசமயம், இந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்யக் கூடாது" என்றார்.``இந்தியைத் திணிப்பதை நிறுத்திவிட்டு, சிலப்பதிகாரத்தைப் படியுங்கள்!" - மக்களவையில் கனிமொழி காட்டம்
http://dlvr.it/StRrc9
http://dlvr.it/StRrc9
Wednesday, 9 August 2023
ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி; இந்திய அணி வெற்றி | மேகமலை வனப்பகுதியில் காட்டுத்தீ - News In Photos
நீலகிரி:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழுக் கூட்டம், மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் ஊட்டியில் நடந்தது.சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடரில், இந்திய அணி நடப்பு சாம்பியனான கொரியாவை எதிர்கொண்டிருந்தது. வலுவான கொரியாவை வீழ்த்தி இந்தப் போட்டியை 3-2 என இந்திய அணி வென்றது. அடுத்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் காட்டுத்தீ.திருநெல்வேலி:
பாளையங்கோட்டை செயின்ட்ஸ் பால்ஸ்நகர் பகுதியில் சீரான குடிநீர் வழங்கிட கோரி, தண்ணீர் பாட்டில் மாலை அணிந்து மாநகராட்சிக்கு மனு அளிக்க வந்த காங்கிரஸார்.திருநெல்வேலி:
சுதந்திர தினத்துக்காக தபால் அலுவலகத்தில் விற்பனைக்கு வந்திருக்கும் தேசியக்கொடி.சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்களை, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் பார்வையிட்டனர்.ஆகஸ்ட் 18 அன்று மண்டபம் முகாமில் நடைபெறும் மீனவர் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார். அதற்காகத் தயாராகும் மாநாட்டு திடல்.விருதுநகரில் பி.ஜே.பி தலைமை அலுவலகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பாரத மாதா சிலையை, வருவாய்த்துறையினர் அகற்றினர்.விருதுநகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தஞ்சாவூர் அடுத்த வண்ணாரப்பேட்டை கிராமத்தில் ஆடிப்பட்டத்தை முன்னிட்டு விவசாய நிலத்தை டிராக்டர் மூலம் தொழு அடித்த விவசாயிகள்.ஈரோடு:
ரயில்வே ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி வந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, முருகம்பாக்கம் கைவினை கிராமத்தில் ஓவியர் வரைந்த புகைப்படத்தை பெற்றுக்கொண்டார்.ஈரோடு:
தமிழகத்தில் சாதி, மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வரும் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைதுசெய்ய வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சியினர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.புதுச்சேரி வந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, திருக்காஞ்சி கோயிலில் தரிசனம் செய்தார்.புதுச்சேரி வந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, அரபிந்தோ சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.வேலூர் தலைமை தபால் நிலையத்தில் விற்பனைக்கு வந்திருக்கும் தேசியக்கொடி.பரணிக்காவடியை முன்னிட்டு வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருத்தணிக்குச் செல்லத் தயாராக இருக்கும் சிறப்புப் பேருந்துகள்.ஸ்ரீரங்கம் கோயில் கோபுர சுவர் இடிந்து விழுந்ததை, அமைச்சர் சேகர் பாபு பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.ஸ்ரீரங்கம் கோயில் கோபுர சுவர் இடிந்து விழுந்ததை ஹெச்.ராஜா பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
http://dlvr.it/StPFsW
http://dlvr.it/StPFsW
Tuesday, 8 August 2023
`நரம்பை நீக்கிவிட்டனர் காலைக்கூட அசைக்க முடியவில்லை' - செந்தில் பாலாஜி, `ED Will take Care'- நீதிபதி
அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று காலை, 5 நாள்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்த நிலையில், காவலுக்காக விண்ணப்பித்து அமலாக்கத்துறையினர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தை இன்று மாலை அணுகினர். அப்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலையும் அவர்கள் சமர்ப்பித்தனர். இதையடுத்து, மாலை 5 மணியளவில் விசாரணை தொடங்கியது.
புழல் சிறையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக காணொளி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் தாடியுடன் தோற்றமளித்தார். நீதிபதி அல்லி - அமைச்சர் செந்தில் பாலாஜி
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் நகலைப் பார்த்த பின்பு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, ``செந்தில் பாலாஜி, உங்களை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி, இன்று முதல் 12-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தருகிறோம்" என்றார். அதற்கு செந்தில் பாலாஜி, "பைபாஸ் அறுவை சிகிச்சை காரணமாக என் காலில் இருந்த நரம்பை எடுத்துவிட்டனர். அதனால் காலை அசைக்கக்கூட முடியாத நிலையில் நான் இருக்கிறேன். என் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு விசாரணையைத் தள்ளி வைக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.செந்தில் பாலாஜி - அமலாக்கத்துறை
அப்போது குறுக்கிட்ட நீதிபதி அல்லி, "உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்திருப்பதால், நான் தனியாக ஏதும் தீர்ப்பளிக்க இயலாது. மேலும், உச்ச நீதிமன்றத்திலேயே உங்கள் தரப்பு உங்கள் உடல்நிலை குறித்து விளக்கியிருக்கிறது. அதற்கு உச்ச நீதிமன்றம், `அதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கவனித்துக்கொள்வார்கள்' எனக் குறிப்பிட்டிருக்கிறது. எனவே உங்களுக்கு உடல்ரீதியாக ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்" என்று கூறி, அவருக்கு ஐந்து நாள்கள் நீதிமன்றக் காவல் அளித்து உத்தரவிட்டார்.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்
https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3OITqxsTamil News Live Today: செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்தது ED; சிறையிலிருந்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்!
http://dlvr.it/StLc5P
https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3OITqxsTamil News Live Today: செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்தது ED; சிறையிலிருந்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்!
http://dlvr.it/StLc5P