சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ``இன்று (நேற்று, 28-08-2023) வசந்தகுமாரின் நினைவுநாள். தமிழக காங்கிரஸின் நட்சத்திரமாக விளங்கியவர். அவருடைய இரத்தமே காங்கிரஸ். தான் சார்ந்திருந்த கட்சிக்காக, கொள்கைக்காக, பெருந்தலைவர் காமராஜருக்காக எதையும் இழக்கத் தயாராக இருந்தார்.சத்திய மூர்த்தி பவன்
கொடூரமான கொரோனா காலத்தில் இறந்தார். யாரும் எதிர்பார்க்காத இழப்பு. சந்திராயன் -3 தனது இலக்கை அடைந்திருக்கிறது. ஐரோப்பிய, அமெரிக்காவுக்கு இணையாக நாமும் விண்வெளியில் இருக்கிறோம் என்பது அனைத்து இந்தியர்களும் பெருமைப்படக்கூடிய விஷயம். இதற்கு காரணமான விஞ்ஞானிகளுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதற்கு அடிப்படையாக இருந்தவர் ஜவகர்லால் நேரு. அவர்தான் முதலில் விஞ்ஞானிகளை அழைத்து விண்வெளியிலும் நாம் பயணிக்க வேண்டும், ஆராய வேண்டும் என ஆராய்ச்சி மையத்தை உருவாக்கினார். அப்போது அமெரிக்க பத்திரிகைகள் கிண்டலாக எழுதின.ஜவர்ஹலால் நேரு
அதையெல்லாம் துட்சமாக மதித்து, விண்வெளி பயணத்தைத் தொடங்கினார். அதன் வளர்ச்சியாக இன்று நிலவைத் தொட்டிருக்கிறோம். காமராஜர் மதிய உணவைக் கொண்டுவந்தார். அதைத் தொடர்ந்து தற்போது தமிழக அரசு காலை உணவையும் தொடங்கியிருக்கிறது. அதற்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
குறுவைக்கு தண்ணீர் இல்லாதபோது, `எங்களிடம் தண்ணீர் குறைவாக இருக்கிறது. எனவே, தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க முடியாது' என கர்நாடக அரசு தெரிவித்தது. தமிழக அரசு அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழக காங்கிரஸும் அரசின் பக்கமும், விவசாயிகளின் பக்கமும் நின்றது.அண்ணாமலை - பாஜக
நீதிமன்றத்தின் மூலமாக ஒரு நாளைக்கு 15,000 கன அடி தண்ணீரை திறக்க வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கியிருக்கிறோம். அப்போது பா.ஜ.க-வைத் தவிர, தமிழகத்தில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசின் பக்கம் நின்றோம். பா.ஜ.க அரசியலாக்க முற்பட்டது.
இன்று கர்நாடக அரசு தண்ணீரை திறந்ததும், அதற்கு முன்னாள் முதல்வர்கள் பொம்மை, எடியூரப்பா கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இருவரும் அந்த மாநில பா.ஜ.க தலைவர்கள். `தி.மு.க-வுடன் கூட்டணி என்பதற்காக கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டிருக்கிறது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்கிறார்கள்.காவேரி
அதற்கு தமிழகத்தில் இருக்கும் பா.ஜ.க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நாம் அப்போது எதிர்பார்த்தோம். ஆனால் இந்த வாய்ச்சொல் வீரர்கள் அதை மறந்துவிட்டார்கள். பதில் சொல்லவில்லை. அண்ணாமலை, தமிழக பா.ஜ.க பதில் சொல்லவில்லை. இது என்ன நியாயம்... நீங்கள் ஒரு தமிழ் விரோதி என்பதைக் காட்டுகிறீர்கள்.
தண்ணீர் வராதபொழுது கடுமையாகத் தாக்கிப் பேசினீர்கள். வரும்பொழுது கர்நாடக பா.ஜ.க எதிர்க்கிறது. நீங்கள் வாய்திறக்காமல் இருக்கிறீர்கள் என்றால், உங்களைவிட தமிழ் விரோதிகள் இருக்க முடியுமா.... நீங்கள் யார் என்பதைக் காட்டியிருக்கிறீர்கள். நாங்கள் இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தப் போக்கு மாற வேண்டும். சமீபத்தில் சிஏஜி அறிக்கை வந்திருக்கிறது.காங்கிரஸ்
தன்னை நேர்மையானவர் என மோடி சொல்லிக்கொள்கிறார். பா.ஜ.க சொல்கிறது. ஆனால், சி.ஏ.ஜி அறிக்கை எவ்வளவு கொடூரமாக இருக்கிறது தெரியுமா... 7.5 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்திருக்கிறது. பணம் தவறாக செலவு செய்யப்பட்டிருக்கிறது என்று அந்த அறிக்கை சொல்கிறது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்கள்.
பல நூறு கோடி மதிப்புடைய திட்டங்களை அதானிக்கு கொடுத்திருக்கிறீர்கள். அவருக்கு எந்த முன் அனுபவமும் இல்லை. முன் அனுபவம் இல்லாதவருக்கு வேலை கொடுத்ததும் இல்லாமல், வங்கிகளின் மூலமாகவும், நிதி நிறுவனங்கள் மூலமாகவும் முன்பணமும் கொடுத்திருக்கிறீர்கள். கிட்டத்தட்ட நீங்கள்தான் அந்த வேலை அதானி பெயரில் செய்கிறீர்கள்.அதானி
மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டிருக்கிறது. இதை நாங்கள் சொல்லவில்லை. சி.ஏ.ஜி அறிக்கை சொல்கிறது. அதற்கு உங்களுடைய பதில் என்ன... பிரதமர் ஏன் பதில் சொல்ல மறுக்கிறார்... அவருடைய தலைமைக்கு கீழ் இருக்கிற துறைகள். அதற்காக அவர் அமர்ந்து கோப்புகளை கிளியர் செய்கிறார்.
ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுக்களை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், நீங்கள் பதில் சொல்லவில்லை. பரனூர் சுங்கச்சாவடியில் மட்டும் கிட்டத்தட்ட 6.5 கோடி முறைகேடு நடந்திருக்கிறது. பொதுவாகவே தமிழக மக்களுக்கு சுங்கச்சாவடிகள் மீது வருத்தம் உண்டு. எவ்வளவு நாள்களாகப் பணம் வசூல் செய்கிறீர்கள் என்பது அனைவரும் கேட்கும் கேள்வி.சுங்கச்சாவடி
இந்தியாவில் 600 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. அனைத்திலும் இது போன்ற முறைகேடுகள் நடக்கின்றன. நீங்கள் எவ்வளவு கெட்டிக்காரர்களாக இருக்கிறீர்கள். ரோடு போட்டோம் பணம் எடுத்தோம் அப்படினு சொல்வது வழக்கமாக இருக்கக் கூடியது. ஆனால், டோல்கேட்டில் ஒருத்தன் இவ்வளவு கொள்ளை அடித்திருக்கிறான் என்றால் இந்தியாவில் இதுவரை நடக்காத விஷயம்.
இதற்கெல்லாம் இந்த ஊர் பா.ஜ.க-வினர் என்ன பதில் சொல்கிறார்கள். வாய்கிழிய பேசுகிறவர்கள் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாமா... எக்ஸ்பிரஸ் சாலைக்கு எஸ்டிமேட் ரூ.18 கோடி. நீங்கள் செலவு செய்தது ஒரு கி.மீ-க்கு ரூ.250 கோடி. 278 மடங்கு அதிகமாக செலவு செய்திருக்கிறார்கள். இது எப்படி சாத்தியம்... நிதித்துறை எப்படி அந்தப் பணத்தைக் கொடுத்தார்கள்... இதற்கெல்லாம் பிரதமர் பதில் சொல்லவில்லை.அண்ணாமலை, கே.எஸ்.அழகிரி
வரும் 31-ம் தேதி சோழ மண்டலத்தில் இருக்கும் மாவட்டங்களில் வாக்குச்சாவடி உறுப்பினர்கள் பயிற்சி பாசறையை நடத்துகிறோம். தினேஷ் குண்டுராவ் கலந்துகொள்கிறார். 10 மாவட்டங்களைச் சேர்ந்த வட்டார, நகரத் தலைவர்கள், வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். முதலில் கும்பகோணத்தில் நடத்துகிறோம். பிறகு தமிழகம் முழுவதும் 9 இடங்களில் நடக்கிறது" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiYஎதிர்க்கும் செல்வப்பெருந்தகை; கடுப்பில் கே.எஸ்.அழகிரி தரப்பு - பரபரப்பு அடங்காத சத்தியமூர்த்தி பவன்
http://dlvr.it/SvK2Yd