Saturday, 2 September 2023
முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனின் எம்.பி பதவி செல்லாது! - கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு
`கர்நாடகாவில் ஹஸ்ஸன் (Hassan) மக்களவைத் தொகுதி உறுப்பினரும், முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் எம்.பி பதவி செல்லாது' என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. முன்னதாக, 2019 மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் வெற்றிபெற்ற ஒரே எம்.பி-யான பிரஜ்வல் ரேவண்ணா, தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், சொத்து விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கவில்லை என்றும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.பிரஜ்வல் ரேவண்ணா
அதில், ஒரு மனுவை அதே தொகுதியைச் சேர்ந்த ஜி.தேவராஜேகவுடாவும், இன்னொரு மனுவை தோல்வியுற்ற பா.ஜ.க வேட்பாளர் ஏ.மஞ்சுவும் தாக்கல் செய்திருந்தனர். தேர்தல் தோல்விக்குப் பிறகு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் சேர்ந்துகொண்டு ஏ.மஞ்சு, தற்போது எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் தேர்தல் வெற்றிக்கு எதிரான மனுக்களின்மீதான விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கே.நடராஜன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது விசாரணையின் முடிவில் நீதிபதி கே.நடராஜன், பிரஜ்வல் ரேவண்ணாவின் தேர்தல் வெற்றி செல்லாது எனத் தீர்ப்பளித்து, தேர்தல் நடத்தை விதிகளின்படி அவர்மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.
அதோடு, இரண்டு மனுக்களிலும் ஏ.மஞ்சுவை வெற்றி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதைக் கவனித்த நீதிபதி கே.நடராஜன், ஏ.மஞ்சு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார் என்பதைக் கருத்தில்கொண்டு அந்தக் கோரிக்கையை நிராகரித்தார்.கர்நாடக உயர் நீதிமன்றம்
மொத்தமாக, தேர்தல் நேரத்தில் ஊழல் செய்ததற்காக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட புகாரில் பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா, சகோதரர் சூரஜ் ரேவண்ணா, ஏ மஞ்சு ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY`ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா?' மத்திய அரசின் திட்டமும் எதிர்க்கட்சிகளின் விமர்சனமும் - ஓர் அலசல்!
http://dlvr.it/SvWbJZ
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY`ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா?' மத்திய அரசின் திட்டமும் எதிர்க்கட்சிகளின் விமர்சனமும் - ஓர் அலசல்!
http://dlvr.it/SvWbJZ
Friday, 1 September 2023
அண்ணாமலை தலைமையில் பாஜக கூட்டம் | இந்தியாவை சைக்கிளில் வலம்வரும் 56 வயது இளைஞர் - News in Photos
தூத்துக்குடியில் இரு சக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் பயங்கர தீ விபத்து.விழுப்புரத்தில்
மத்திய அரசின் சட்ட மசோதாவைக் கண்டித்து, வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தலைமையில் மாமன்றக் கூட்டம் நடைபெற்றது.நீலகிரி:
ஊட்டியில் சுமார் இருபது நிமிடங்கள் பெய்த மழையின் காரணமாக, நகராட்சி சந்தையின் ஒரு பகுதியில் குளம்போல மழைநீர் தேங்குவதைத் தவிர்க்க, பாதாளச்சாக்கடை வசதியை மேம்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துவருகிறது.கிருஷ்ண ஜயந்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் வடசேரியில் விற்பனைக்காக வந்திருக்கும் வண்ணமயமான கிருஷ்ணர் மற்றும் விநாயகர் சிலை கொலு பொம்மைகள்.தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கண்தான இரு வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.விருதுநகர்:
70, 80 காலங்களின் திரைப்பட விளம்பரங்களை நினைவூட்டிய ஜூஸ் கடை விளம்பர வண்டி.கடலூர்,
ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு அணிவகுப்பு கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.பசுமையான இந்தியாவை உருவாக்க இந்தியாவை
மூன்றாவது முறையாக சைக்கிளில் சுற்றி வரும் கொல்கத்தாவைச் சேர்ந்த 56 வயது இளைஞர் பரிமல் காஞ்சி.மேயர் பிரியா தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் நடைபெற்றது.குதிரன் சுரங்கப்பாதை:
இது தென்னிந்திய மாநிலமான கேரளாவில் 1.6 கிலோமீட்டர் அளவில் அமைக்கப்பட்டிருக்கும் முதல் சுரங்கப்பாதையாகும்.அடையாறு ஆற்றின் நீர் கடலில் கலப்பதால், பட்டினம்பாக்கம் கடற்கரையில் நுரை பொங்கி காணப்படுகிறது.சென்னை கமலாலயத்தில்
தமிழக பா.ஜ.க அனைத்து மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் கூட்டம், மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.ஈரோட்டில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலத்தை விதிமுறைகளைப் பின்பற்றி நடத்த வேண்டும் என்பது குறித்து பல்வேறு அமைப்புகளின் பிரதிகளுடன் போலீஸார் ஆலோசனை நடத்தினர்.திருநெல்வேலி:
பி.ஜே.பி பிரமுகர் ஜெகன் பாண்டியன் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.அவரது குடும்பதினருக்கு நயினார் நகேந்திரன் ஆறுதல் கூறினார்.திருநெல்வேலி:
பி.ஜே.பி பிரமுகர் ஜெகன் பண்டியன் கொல்லப்பட்டதைக் கண்டித்து, சாலைமறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.வேலூர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சத்துவாச்சாரி காகிதப்பட்டறை சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்.
http://dlvr.it/SvT4j4
http://dlvr.it/SvT4j4
Thursday, 31 August 2023
ஓ.பி.எஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு; மீண்டும் கையிலெடுக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!
2001 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஓ.பி.எஸ்., வருவாய்த்துறை அமைச்சராகப் பதவியேற்றார். டான்சி வழக்கில் சிறைத் தண்டனை உறுதிசெய்யப்பட்டதால், ஜெயலலிதாவிடமிருந்து முதல்வர் பதவி பறிபோனது. அதனால், தமிழ்நாட்டின் திடீர் முதல்வரானார் ஓ.பி.எஸ். பிறகு, மீண்டும் ஜெயலலிதா முதல்வரான பின்னர், பொதுப்பணித்துறை அமைச்சராக ஓ.பி.எஸ் பதவிவகித்தார். 2006-ல் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அப்போது, மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், ஓ.பி.எஸ், அவரின் குடும்பத்தினர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.ஓபிஎஸ் - அதிமுக
ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட அந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட முதல் நபராக ஓ.பி.எஸ் சேர்க்கப்பட்டார். அவருடன் அவரின் மனைவி விஜயலெட்சுமி, மகன் ரவீந்திரநாத் குமார், தம்பி ஓ.ராஜா, ராஜாவின் மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன் மற்றும் அவரின் மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கப்பட்டனர்.
தேனி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. 2009 ஜூலை 30-ம் தேதி, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘2001 சட்டமன்றத் தேர்தலின்போது ஓ.பி.எஸ் கணக்கில் காட்டிய சொத்து மதிப்பு, 17 லட்சத்து 44 ஆயிரத்து 840 ரூபாய். தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று, வருவாய்த்துறை அமைச்சர், முதல்வர், பொதுப்பணித்துறை அமைச்சர் என பதவிகள் வகித்த ஐந்து வருடங்களில், ஓ.பி.எஸ்-ஸின் சொத்து மதிப்பு ஒரு கோடியே 77 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. அதாவது, ஐந்து ஆண்டுகளில் 374 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது’ என்று குற்றம்சாட்டப்பட்டது. 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை நடைபெற்ற அ.தி.மு.க ஆட்சியில் முதலமைச்சராகவும், வருவாய்த்துறை அமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.
2012-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி தன்மீதான ஊழல் வழக்கை, மதுரை நீதிமன்றத்திலிருந்து, சிவகங்கை நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஓ.பன்னீர்செல்வம் மனுத் தாக்கல் செய்தார். இதை நீதிபதி பெரிய கருப்பையா விசாரித்து வழக்கை மதுரை நீதிமன்றத்திலிருந்து, சிவகங்கையிலுள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார். பல்வேறு கட்டங்களைக் கடந்து, சிவகங்கை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே 2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு, திடீர் திருப்பங்கள் நிகழ்ந்தன. 2012 அக்டோபர் 27-ம் தேதி தமிழக சபாநாயகர் தனபால், ஓ.பி.எஸ் மீது வழக்கு போடுவதற்காக ஏற்கெனவே சட்டமன்றம் கொடுத்திருந்த அனுமதியைத் திரும்பப் பெற்றார்.ஓ.பி.எஸ்
அதைத் தொடர்ந்து சிவகங்கை நீதிமன்றத்தில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்தது. ‘குற்றம்சாட்டப்பட்டவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை நிரூபிக்கும்விதமான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. எனவே, இந்த வழக்கைத் திரும்பப் பெறுகிறோம்’ என்றது அந்த அறிக்கை. அதன் அடிப்படையில், இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, வழக்கு சிவகங்கை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், 2012-ம் ஆண்டு ஓ.பி.எஸ் விடுவிக்கப்பட்டார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கப்போவதாக எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோரை சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து கீழமை நீதிமன்றங்கள் விடுதலை செய்ததற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாமாக முன்வந்து மேல்முறையீடு செய்து, விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்த நிலையில், தற்போது நான்காவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY
http://dlvr.it/SvQMgc
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY
http://dlvr.it/SvQMgc
Wednesday, 30 August 2023
சிலிண்டர் விலை குறைப்பு: `பாஜக வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டது; திமுக எப்போது..?' - அண்ணாமலை
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டது. அதில், நாடு முழுவதும் சமையல் சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்தும், உஜ்வாலா திட்டத்தின்கீழ் சிலிண்டர் பெறும் பயனாளிகளுக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பயனாளிகளுக்கு குறைக்கப்படும் 200 ரூபாயை, மத்திய அரசே நேரடியாக எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.சிலிண்டர்
இதன் மூலம் நாடு முழுவதும் 10 கோடி பேர் பயனடைவார்கள் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், நடைப்பயணம் மேற்கொண்டிருக்கும் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ``நாடு முழுவதுமுள்ள அனைத்து சமையல் எரிவாயு பயனாளர்களுக்கும், ரூ.200 கூடுதலாக மானியம் அறிவித்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.200 குறைத்து அறிவித்திருக்கும், நமது பிரதமர் மோடிக்கு தமிழக பா.ஜ.க சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
உஜ்வாலா சமையல் எரிவாயு திட்டத்தின்கீழ், மேலும் 75 லட்சம் பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கி அறிவிப்பு வெளியிட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். 2022-ம் ஆண்டு மே மாதம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உஜ்வாலா சமையல் எரிவாயு பயனாளிகளுக்கு ரூ.200 மானியம் அறிவித்திருந்தார். இந்த ஆண்டு மார்ச் மாதம், மேலும் ஓராண்டுக்கு ரூ.200 மானியம் நீட்டிக்கப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடி
இன்றைய அறிவிப்பின் மூலம், நாடு முழுவதுமுள்ள 9.6 கோடி உஜ்வாலா பயனாளிகள், ஒரு சிலிண்டருக்கு ரூ.400 மானியமாகப் பெறுவார்கள். இந்த நேரத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியமாக வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி எண் 503-ல் கூறிய ஊழல் தி.மு.க, ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் கடந்தும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்" என தி.மு.க அரசைச் சாடியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY`உள்ளூர் தலைவர்களுக்குத் தடை’ - 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் `மோடி மேஜிக்’-ஐ கையில் எடுக்கும் பாஜக?!
http://dlvr.it/SvMhSH
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY`உள்ளூர் தலைவர்களுக்குத் தடை’ - 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் `மோடி மேஜிக்’-ஐ கையில் எடுக்கும் பாஜக?!
http://dlvr.it/SvMhSH
Tuesday, 29 August 2023
``தமிழ் விரோதி; தமிழக பாஜக-வினர் வாய்ச்சொல் வீரர்கள்” - கே.எஸ்.அழகிரி ஆவேசம்
சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ``இன்று (நேற்று, 28-08-2023) வசந்தகுமாரின் நினைவுநாள். தமிழக காங்கிரஸின் நட்சத்திரமாக விளங்கியவர். அவருடைய இரத்தமே காங்கிரஸ். தான் சார்ந்திருந்த கட்சிக்காக, கொள்கைக்காக, பெருந்தலைவர் காமராஜருக்காக எதையும் இழக்கத் தயாராக இருந்தார்.சத்திய மூர்த்தி பவன்
கொடூரமான கொரோனா காலத்தில் இறந்தார். யாரும் எதிர்பார்க்காத இழப்பு. சந்திராயன் -3 தனது இலக்கை அடைந்திருக்கிறது. ஐரோப்பிய, அமெரிக்காவுக்கு இணையாக நாமும் விண்வெளியில் இருக்கிறோம் என்பது அனைத்து இந்தியர்களும் பெருமைப்படக்கூடிய விஷயம். இதற்கு காரணமான விஞ்ஞானிகளுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதற்கு அடிப்படையாக இருந்தவர் ஜவகர்லால் நேரு. அவர்தான் முதலில் விஞ்ஞானிகளை அழைத்து விண்வெளியிலும் நாம் பயணிக்க வேண்டும், ஆராய வேண்டும் என ஆராய்ச்சி மையத்தை உருவாக்கினார். அப்போது அமெரிக்க பத்திரிகைகள் கிண்டலாக எழுதின.ஜவர்ஹலால் நேரு
அதையெல்லாம் துட்சமாக மதித்து, விண்வெளி பயணத்தைத் தொடங்கினார். அதன் வளர்ச்சியாக இன்று நிலவைத் தொட்டிருக்கிறோம். காமராஜர் மதிய உணவைக் கொண்டுவந்தார். அதைத் தொடர்ந்து தற்போது தமிழக அரசு காலை உணவையும் தொடங்கியிருக்கிறது. அதற்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
குறுவைக்கு தண்ணீர் இல்லாதபோது, `எங்களிடம் தண்ணீர் குறைவாக இருக்கிறது. எனவே, தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க முடியாது' என கர்நாடக அரசு தெரிவித்தது. தமிழக அரசு அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழக காங்கிரஸும் அரசின் பக்கமும், விவசாயிகளின் பக்கமும் நின்றது.அண்ணாமலை - பாஜக
நீதிமன்றத்தின் மூலமாக ஒரு நாளைக்கு 15,000 கன அடி தண்ணீரை திறக்க வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கியிருக்கிறோம். அப்போது பா.ஜ.க-வைத் தவிர, தமிழகத்தில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசின் பக்கம் நின்றோம். பா.ஜ.க அரசியலாக்க முற்பட்டது.
இன்று கர்நாடக அரசு தண்ணீரை திறந்ததும், அதற்கு முன்னாள் முதல்வர்கள் பொம்மை, எடியூரப்பா கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இருவரும் அந்த மாநில பா.ஜ.க தலைவர்கள். `தி.மு.க-வுடன் கூட்டணி என்பதற்காக கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டிருக்கிறது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்கிறார்கள்.காவேரி
அதற்கு தமிழகத்தில் இருக்கும் பா.ஜ.க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நாம் அப்போது எதிர்பார்த்தோம். ஆனால் இந்த வாய்ச்சொல் வீரர்கள் அதை மறந்துவிட்டார்கள். பதில் சொல்லவில்லை. அண்ணாமலை, தமிழக பா.ஜ.க பதில் சொல்லவில்லை. இது என்ன நியாயம்... நீங்கள் ஒரு தமிழ் விரோதி என்பதைக் காட்டுகிறீர்கள்.
தண்ணீர் வராதபொழுது கடுமையாகத் தாக்கிப் பேசினீர்கள். வரும்பொழுது கர்நாடக பா.ஜ.க எதிர்க்கிறது. நீங்கள் வாய்திறக்காமல் இருக்கிறீர்கள் என்றால், உங்களைவிட தமிழ் விரோதிகள் இருக்க முடியுமா.... நீங்கள் யார் என்பதைக் காட்டியிருக்கிறீர்கள். நாங்கள் இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தப் போக்கு மாற வேண்டும். சமீபத்தில் சிஏஜி அறிக்கை வந்திருக்கிறது.காங்கிரஸ்
தன்னை நேர்மையானவர் என மோடி சொல்லிக்கொள்கிறார். பா.ஜ.க சொல்கிறது. ஆனால், சி.ஏ.ஜி அறிக்கை எவ்வளவு கொடூரமாக இருக்கிறது தெரியுமா... 7.5 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்திருக்கிறது. பணம் தவறாக செலவு செய்யப்பட்டிருக்கிறது என்று அந்த அறிக்கை சொல்கிறது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்கள்.
பல நூறு கோடி மதிப்புடைய திட்டங்களை அதானிக்கு கொடுத்திருக்கிறீர்கள். அவருக்கு எந்த முன் அனுபவமும் இல்லை. முன் அனுபவம் இல்லாதவருக்கு வேலை கொடுத்ததும் இல்லாமல், வங்கிகளின் மூலமாகவும், நிதி நிறுவனங்கள் மூலமாகவும் முன்பணமும் கொடுத்திருக்கிறீர்கள். கிட்டத்தட்ட நீங்கள்தான் அந்த வேலை அதானி பெயரில் செய்கிறீர்கள்.அதானி
மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டிருக்கிறது. இதை நாங்கள் சொல்லவில்லை. சி.ஏ.ஜி அறிக்கை சொல்கிறது. அதற்கு உங்களுடைய பதில் என்ன... பிரதமர் ஏன் பதில் சொல்ல மறுக்கிறார்... அவருடைய தலைமைக்கு கீழ் இருக்கிற துறைகள். அதற்காக அவர் அமர்ந்து கோப்புகளை கிளியர் செய்கிறார்.
ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுக்களை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், நீங்கள் பதில் சொல்லவில்லை. பரனூர் சுங்கச்சாவடியில் மட்டும் கிட்டத்தட்ட 6.5 கோடி முறைகேடு நடந்திருக்கிறது. பொதுவாகவே தமிழக மக்களுக்கு சுங்கச்சாவடிகள் மீது வருத்தம் உண்டு. எவ்வளவு நாள்களாகப் பணம் வசூல் செய்கிறீர்கள் என்பது அனைவரும் கேட்கும் கேள்வி.சுங்கச்சாவடி
இந்தியாவில் 600 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. அனைத்திலும் இது போன்ற முறைகேடுகள் நடக்கின்றன. நீங்கள் எவ்வளவு கெட்டிக்காரர்களாக இருக்கிறீர்கள். ரோடு போட்டோம் பணம் எடுத்தோம் அப்படினு சொல்வது வழக்கமாக இருக்கக் கூடியது. ஆனால், டோல்கேட்டில் ஒருத்தன் இவ்வளவு கொள்ளை அடித்திருக்கிறான் என்றால் இந்தியாவில் இதுவரை நடக்காத விஷயம்.
இதற்கெல்லாம் இந்த ஊர் பா.ஜ.க-வினர் என்ன பதில் சொல்கிறார்கள். வாய்கிழிய பேசுகிறவர்கள் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாமா... எக்ஸ்பிரஸ் சாலைக்கு எஸ்டிமேட் ரூ.18 கோடி. நீங்கள் செலவு செய்தது ஒரு கி.மீ-க்கு ரூ.250 கோடி. 278 மடங்கு அதிகமாக செலவு செய்திருக்கிறார்கள். இது எப்படி சாத்தியம்... நிதித்துறை எப்படி அந்தப் பணத்தைக் கொடுத்தார்கள்... இதற்கெல்லாம் பிரதமர் பதில் சொல்லவில்லை.அண்ணாமலை, கே.எஸ்.அழகிரி
வரும் 31-ம் தேதி சோழ மண்டலத்தில் இருக்கும் மாவட்டங்களில் வாக்குச்சாவடி உறுப்பினர்கள் பயிற்சி பாசறையை நடத்துகிறோம். தினேஷ் குண்டுராவ் கலந்துகொள்கிறார். 10 மாவட்டங்களைச் சேர்ந்த வட்டார, நகரத் தலைவர்கள், வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். முதலில் கும்பகோணத்தில் நடத்துகிறோம். பிறகு தமிழகம் முழுவதும் 9 இடங்களில் நடக்கிறது" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiYஎதிர்க்கும் செல்வப்பெருந்தகை; கடுப்பில் கே.எஸ்.அழகிரி தரப்பு - பரபரப்பு அடங்காத சத்தியமூர்த்தி பவன்
http://dlvr.it/SvK2Yd
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiYஎதிர்க்கும் செல்வப்பெருந்தகை; கடுப்பில் கே.எஸ்.அழகிரி தரப்பு - பரபரப்பு அடங்காத சத்தியமூர்த்தி பவன்
http://dlvr.it/SvK2Yd
Monday, 28 August 2023
`குளச்சல் மருத்துவமனையில் மருத்துவர்களே இல்லை’ - காங்., எம்.எல்.ஏ-வை உடனே ஆய்வுக்கு அழைத்த மா.சு!
நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.5.40 கோடியில் புதிய கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தும், மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் செய்தார். இந்த விழாவில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் ஸ்ரீதர், கல்லூரி டீன் டாக்டர் கிளாரன்ஸ் டேவி, நாகர்கோவில் மேயர் மகேஷ், விஜய் வசந்த் எம்.பி, பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பிரின்ஸ் எம்.எல்.ஏ
இதில் குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ் பேசும்போது, "குளச்சல் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை. பிரேத பரிசோதனை செய்யப்படுவதில்லை. குளச்சல் மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்" எனப் பேசினார். பின்னர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது "எம்.எல்.ஏ-க்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருக்கின்றனர். அது தொடர்பாக அலுவலர்களுடன் கலந்துபேசி எதையெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஓர் ஆரம்ப சுகாதார நிலையம்கூட வரவில்லை. ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் பேசி 25 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொண்டுவந்திருக்கிறார்.
தமிழகத்தில் 708 மருத்துவமனைகள் அறிவிக்கப்பட்டு ஒரு நாளில் 500 மருத்துவமனைகள் திறக்கப்பட்டன. இதில் நாகர்கோவில் மாநகருக்கு 10 அறிவிக்கப்பட்டு 5 மருத்துவமனைகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் செவிலியர் கல்லூரிகள் 6-தான் இருந்தன. தற்போது மத்திய அரசிடம் 30 செவிலியர் கல்லூரி கேட்கப்பட்டது. அதில் 11 செவிலியர் கல்லூரிகளுக்கு அனுமதி தரப்பட்டிருக்கிறது. விரைவில் அவை தொடங்கப்படும். தமிழகத்தில் கடந்த 11 ஆண்டுகளில் 478 தேசிய தர உறுதி சான்றிதழ் கிடைத்திருக்கிறது. இதில் கடந்த ஆண்டு மட்டும் 239 கிடைத்திருக்கிறது. 50 சதவிகித சான்றிதழ்கள் இந்த ஆட்சியில் கிடைத்திருக்கின்றன. 239 சான்றிதழ்களில் குமரி மாவட்டத்துக்கு மட்டும் 5 சான்றிதழ் கிடைத்திருக்கின்றன.கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கோட்டார் அரசு மருத்துவமனையில் 100 படுக்கை கூடிய கட்டடம் இருக்கிறது. ஆனால், 135 உள்நோயாளிகள் இருக்கின்றனர். இதனால் இடப்பற்றாக்குறை இருக்கிறது. அடுத்த நிதி அறிக்கையில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவமனைக்கு மேலும் 100 படுக்கைகளுடன் கூடிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருப்பூர், ஈரோடு உட்பட 5 மாவட்டங்களில் புற்றுநோய் தாக்கம் அதிகமிருக்கிறது. காஞ்சிபுரத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க ஏற்கெனவே 130 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது கூடுதலாக 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடக்கின்றன.
குளச்சல் அரசு மருத்துவமனையில் பிணவறை இருக்கிறது. மருத்துவர்களும் இருக்கின்றனர். பிரின்ஸ் எம்.எல்.ஏ இப்போது என்னுடன் வந்தால் குளச்சல் அரசு மருத்துவமனையில் நேரில் சென்று ஆய்வு செய்யலாம்" எனப் பதிலடி கொடுத்தார். இதனால் அரசு விழாவில் சிறு சலசலப்பு ஏற்பட்டது.
http://dlvr.it/SvGQzc
http://dlvr.it/SvGQzc