சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில், தி.மு.க கழக இளைஞர் அணிச் செயலாளரும், தமிழ்நாடு மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், `` `சனாதன எதிர்ப்பு மாநாடு’ எனக் குறிப்பிடாமல், ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது.உதயநிதி ஸ்டாலின்
கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்றால் என்ன... சனாதனம் என்கிற பெயரே சம்ஸ்கிருதத்திலிருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரானது. சனாதனம் என்பதன் அர்த்தம் நிலையானது, யாரும் கேள்வி கேட்க முடியாதது, மாற்ற முடியாதது என்பதுதான். எல்லாவற்றையும் மாற்ற முடியும், எதுவுமே நிலையானது கிடையாது, எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கங்கள்தான் கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்றக் கழகமும்.
இந்த ஆண்டு, வள்ளலார்க்கு 200-வது ஆண்டு, கலைஞருக்கு 100-வது ஆண்டு, வைக்கம் போர் நடந்து 100-வது ஆண்டு, தி.மு.க-வுக்கு பவள விழா ஆண்டு. பல்வேறு நிலைகளில் சிறப்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலும், மாணவர்களுக்கு உணவு வழங்குவதால் பள்ளிகளில் கக்கூஸ் நிரம்பி வழிகிறது என செய்தி போடுகிறார்கள். அதற்கு முதல்வர் நிலவுக்கு சந்திராயன் விடும் இந்தக் காலத்திலேயே இப்படி பேசுகிறார்கள் என்றால், அப்போது எப்படியெல்லாம் இருந்திருப்பார்கள் எனக் குறிப்பிட்டார்.கலைஞர் கருணாநிதி
கலை என்றாலே ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்குத்தான் எனக் கூறி வந்தபோது, அதை உடைத்தவர் கலைஞர். சம்ஸ்கிருத வார்த்தைகளை விட்டொழித்து தமிழில் வசனங்களை எழுதியவர். திராவிட இயக்கமும், கம்யூனிஸமும் வந்த பிறகுதான் கலையும், இலக்கியமும் உழைக்கும் மக்களிடம் வந்து சேர்ந்தன. தமிழ்நாட்டில் ராமாயணமும், மகாபாரதமும்தான் மக்களுக்கான கலையாகவும், எழுத்தாகவும் பேசப்பட்டு வந்தன. திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும் வந்த பிறகுதான் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவை சமூகத்தில் பேசப்பட்டன.
கலைஞர் குறளோவியம் எழுதினார். பூம்புகார் திரைப்படத்தின் கதை, வசனம் வாயிலாக சிலப்பதிகாரத்தின் கதையைச் சொன்னார். மனிதர்கள் யாரும் பசியால் வாடக் கூடாது என்றுதான் வள்ளலார், வடலூரில் அணையா அடுப்பைப் ஏற்றினார். அந்த அடுப்பு இன்னமும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. வள்ளலார் ஏற்றிய அந்த அடுப்பிலிருந்து நெருப்பை எடுத்துத்தான் நமது முதல்வர் தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களில் காலை உணவுத் திட்டம் என்ற அடுப்பைப் பற்ற வைத்திருக்கிறார்.முதல்வர் ஸ்டாலின்
31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 1 - 5 வகுப்பு மாணவர்கள் 17 ஆயிரம் பேர் பயனடைந்து வருகிறார்கள். எந்த மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் சென்றாலும், பள்ளிக்குச் சென்று அங்குதான் காலை உணவை மாணவர்களுடன் உட்கொள்வேன். அதன் மூலம் மாணவர்களிடமும், ஆசிரியர்களிடம் உணவு குறித்தும், மாணவர்கள் வருகை குறித்தும் விசாரிப்பேன். மக்களை சாதிகளாகப் பிரித்து தனித்தனியாக இருக்கவேண்டும் என்று சொன்னதுதான் சனாதனம். ஆனால், கலைஞரோ எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடியமர்த்தி அந்த இடத்திற்கு, `சமத்துவபுரம்’ என்று பெயர் வைத்து சனாதனத்துக்குச் சம்மட்டி அடி கொடுத்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY
சமத்துவ புரம் பராமரிக்கப்பட்டு, அனைத்து சாதியினரும் அர்ச்சகம் ஆகலாம் என்ற சட்டத்தை அமல்படுத்தி சமத்துவத்தை வளர்ப்பதுதான் திராவிட மாடல். பெண்கள் வீட்டுப் படியைத் தாண்டக் கூடாது என்பதுதான் சனாதானம். நீலம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என அவர்களை சாதனையின் பக்கம் அழைத்துச் செல்வதுதான் திராவிட மாடல். கணவன் இறந்தால் உடன்கட்டை ஏறுதல், கைம் பெண்களை வெள்ளைப் புடவை அணியச் செய்வது, குழந்தை திருமணம் என்பதெல்லாம் சனாதானம். திராவிட மாடல், பெண்களுக்கு உதவித்தொகை, இலவசப் பேருந்து, மகளிர் சுய உதவிக்குழுவுக்கு நிதி என பெண்களே தங்களை முன்னேற்றிக்கொள்ள வழி செய்தது.உதயநிதி ஸ்டாலின்
பா.ஜ.க ஆளும் மணிப்பூரில், தன் சொந்த மாநில மக்களையே இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரம் அரங்கேற்றியதுதான் சனாதானம். ஆனால், மணிப்பூரில் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்களை இங்கே வரவழைத்து பயிற்சி அளித்ததுதான் திராவிடம். பொய் செய்திகளை பரப்பி பிரச்னையை வளர்த்தது. அதையும் திராவிட மாடல் அடித்து ஒடித்தது. விஷ்வ கர்மா திட்டம் மூலம் குலத்தொழில் செய்வதை ஊக்குவிக்கும் சனாதான திட்டத்தை திராவிட மாடல் எதிர்க்கும். கல்வியைப் பறிப்பதுதான் சனாதானம். அதற்காக சனாதானத்தை எதிர்ப்பதுதான் திராவிடம். இந்த மாநாட்டை பார்க்கும் சிலருக்கு வயிறு எரியும். அது இன்னும் நன்றாக எரியட்டும். தொடர்ந்து இது போன்ற மாநாடுகளை நடத்துங்கள். எனவே, சனாதனம் வீழட்டும், திராவிடம் வெல்லட்டும்" என்று கூறியிருந்தார்.
உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ``உதயநிதியின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள். இது மிஷினரிகளிடமிருந்து பெறப்பட்ட வார்த்தைகள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். பா.ஜ.க மூத்த தலைவர் ஷாநவாஸ் ஹுசைன், "தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியா கூட்டணியின் தூணாக இருக்கிறார். அவரின் மகன் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை எதிர்த்துப் பேசுகிறார். இந்த விவகாரத்தில் காங்கிரஸும், இந்தியா கூட்டணிக் கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை விளக்க வேண்டும். இத்தகைய பேச்சுகள் துரதிஷ்டவசமானவை. இத்தகைய பேச்சு கடும் கண்டனத்துக்குரியது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.அண்ணாமலை
இதற்கிடையில், சனாதன தர்மத்திற்கு எதிராக கருத்து தெரிவித்ததாக அமைச்சர் உதயநிதி மீது வழக்கு பதிவுசெய்யக்கோரி டெல்லி காவல் நிலையத்தில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் புகார் அளித்திருக்கிறார். சட்ட உரிமைகள் கண்காணிப்பகம் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது.
இவை அனைத்துக்கும் பதிலளிக்கு விதமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ``நான் ஒருபோதும் சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்களை இனப்படுகொலைக்கு அழைத்ததில்லை. சனாதன தர்மம் என்பது சாதி, மத பெயரால் மக்களைப் பிரிக்கும் கொள்கை. அதை வேரோடு பிடுங்குவது மனித நேயத்தையும், மனித சமத்துவத்தையும் நிலை நிறுத்துவதாகும்.உதயநிதி ஸ்டாலின்
இதனால் பாதிக்கப்படும் ஒடுக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் சார்பாகவே பேசினேன். காவிகளின் மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம். நீதிமன்றமாக இருந்தாலும் சரி, மக்கள் மன்றமாக இருந்தாலும் சரி எனக்கு வரும் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiYமிஸ்டர் கழுகு: தமிழ்நாட்டுக்கு உதயநிதி... I.N.D.I.A-வுக்கு ஸ்டாலின் - தேர்தல் மூடில் தி.மு.க!
http://dlvr.it/SvbLMZ