கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சமீபகாலமாக சூடுபிடித்துக்கொண்டிருக்கிறது. அமைதியாக இருந்த வழக்கை, மீண்டும் பரபரப்பாக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜின் அண்ணன் தனபால் பேட்டி அளித்து வருகிறார்.
இந்த நிலையில்தான், ``கொடநாடு வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி முக்கியக் குற்றவாளிகளான எடப்பாடி பழனிசாமியையும், அவரின் ஆதரவாளரான ஆத்தூர் இளங்கோவனையும் விசாரிக்காமல் இருந்துவருகிறது. இதனால் சி.பி.சி.ஐ.டி விசாரணையில் எனக்கு நம்பிக்கை இல்லை. என்னை சி.பி.சி.ஐ.டி அழைத்து விசாரித்தால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக பல தகவல்களை வழங்கத் தயாராக இருக்கிறேன்” என்று கூறி வந்தார். இந்த நிலையில்தான் கடந்த 06.09.2023 அன்று கோவை சி.பி.சி.ஐ.டி கனகராஜின் அண்ணன் தனபாலுக்கு வருகின்ற 14.09.2023 அன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருக்கிறது. தனபால்
இதற்கிடையே, தனபாலின் மனைவி செந்தாமரைச் செல்வி சேலம் மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் ஒன்று அளித்திருக்கிறார். புகார் அளித்துவிட்டு வெளியே வந்த அவர் ஜூனியர் விகடனுக்கு ஒரு பிரத்யேக பேட்டி கொடுத்தார். அதில், "தன்னுடைய கணவரால் தனது உயிருக்கும், பிள்ளைகள் உயிருக்கும் பாதிப்பு இருக்கிறது. இவர் சிறையிலிருந்து வெளியில் வந்ததிலிருந்து பலரின் தூண்டுதலின் பேரில் செய்தியாளர்களைச் சந்தித்துவருகிறார். இதனால் அவருக்கு லாபமாக இருந்தாலும்கூட இதனால் பல பிரச்னைகள் மீண்டும் எங்களை வந்து சேரும். ஆகையால் அவரை கொடநாடு தொடர்பாக எதுவும் பேச வேண்டாம் என்று கூறியிருந்தேன். ஆனால், தேவையில்லாத பொய்களைக் கூட்டியும் குறைத்தும் பேசி வருகிறார். இவர் சிறையில் இருந்தபோது ஓ.பி.எஸ் தரப்பிலிருந்து குருமூர்த்தி என்பவர் நேரில் சந்திக்க வந்திருந்தார். அவர், அண்ணனிடம் எல்லாம் பேசி விட்டேன் உங்களுக்கு எல்லா உதவியும் செய்து கொடுக்க கூறியிருக்கிறார்” என்று மேலும் கொளுத்திப் போட்டார். கொடநாடு விவகாரம்: `சிறையில் நடந்த சந்திப்பு; என் கணவரால் உயிருக்கு ஆபத்து!' - தனபால் மனைவி `பகீர்'
மேலும் ``அவர் ஒரு மன நோயாளி. அவர் சொல்வதெல்லாம் பொய் மட்டுமே அதில் உண்மை கொஞ்சம்கூட இல்லை’' என்று போட்டுடைத்தார்.
தன்னுடைய மனைவி புகார் கொடுத்தது தெரியவந்த உடனே தனபால் மீண்டும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அதன் பின்னர் ஜூனியர் விகடனுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ``என்னுடைய மனைவியை எடப்பாடி பழனிசாமி பின்னிருந்து இயக்கிவருகிறார். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். எடப்பாடி பழனிசாமிக்கு பயம் வந்துவிட்டது. எங்கடா சி.பி.சி.ஐ.டி-யில் எல்லா உண்மைகளையும் சொல்லிவிடுவானோ என்ற பயத்தில் என்னை எப்படி ஆஃப் செய்வது என்று தெரியாமல், தற்போது என் மனைவியைத் தூண்டிவிட்டு இதுபோலெல்லாம் பேசவைத்துவருகிறார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நேரடியாகத் தொடர்புடைய 45 பேரின் லிஸ்ட் எனது கையில் இருக்கிறது. இதைதான் சி.பி.சி.ஐ.டி-யில் ஒப்படைக்கப்போகிறேன்.எடப்பாடி பழனிசாமி
இதில் என் தம்பி கனகராஜின் இறப்புக்குக் காரணமாக இருந்த எனது உறவினர்களின் பெயர்களும் இருக்கிறது" என்றார்.
இந்த நிலையில், இன்று சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும், அ.தி.மு.க சேலம் புறநகர் மாவட்டச் செயலாளருமான இளங்கோவன் புகார் ஒன்று அளித்திருந்தார்.
அந்த மனுவில், `கடந்த சில நாள்களுக்கு முன்பு கொடநாடு கொலை, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கனகராஜின் அண்ணன் தனபால் தன்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அவர் ஏற்கெனவே மனநலம் பாதிக்கப்பட்டவர் என நீதிமன்றமும் பதிவுசெய்திருக்கிறது. அதேபோல அரசு மருத்துவர்களும் இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில், அவர் என்மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருவது ஏற்றுக்கொள்ள முடியாது, கண்டிக்கத்தக்கது. எனவே, அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.தனபால்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இளங்கோவன், "கொடநாடு கொலை வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் இளங்கோவனிடம் கொடுக்கப்பட்டதாக கொடநாடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கனகராஜின் அண்ணன் தனபால் கடந்த சில நாள்களுக்கு முன்பு குற்றம்சாட்டியிருந்தார். என்மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறிவரும் தனபாலை தி.மு.க-வும் ஓ.பி.எஸ் அணியும் பின்புறம் இருந்து இயக்குகிறது. ஏற்கெனவே அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர்தான் என அவரின் மனைவி கூறியிருப்பதோடு, தங்கள் உயிருக்குப் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் புகாரும் அளித்திருக்கிறார்” என்றார்.
மேலும், கொடநாடு கொலை, கொள்ளைச் சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால், இது குறித்து தான் மேலும் பேச முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiYகொடநாடு: `என் மனைவியைத் தூண்டிவிடுகிறார் எடப்பாடி; பேரம் பேச ஆள்கள் அனுப்புகிறார்’ - தனபால்
http://dlvr.it/SvtTbq