புதிய நாடாளுமன்றத்தில் கடந்த 19-ம் தேதி மத்திய பா.ஜ.க அரசு தாக்கல் செய்த, `மகளிர் இட ஒதுக்கீடு மசோதா' நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இதை ஆதரித்தாலும்கூட, புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி வரையறை முடிந்த பிறகு 2029-ம் ஆண்டுவாக்கில்தான் இந்த மசோதா நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுவதால், இது பா.ஜ.க-வின் தேர்தல் நேர கண்துடைப்பு செயல், 2029-வரை காத்திருக்காமல் உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.இடஒதுக்கீடு
இந்த நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி வரையறை போன்றவற்றால் மசோதா நடைமுறைக்கு வருவது தள்ளிப் போவதைக் குறிப்பிட்டு, பெண்கள் என்ன பசுக்களை விடவும் குறைந்தவர்களா என்று பா.ஜ.க அரசைச் சாடியிருக்கிறார்.
நேற்று மக்களவையில் இந்த மசோதா குறித்து உரையாற்றிய மஹுவா மொய்த்ரா, ``இந்த அரசு கொண்டுவந்திருப்பது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அல்ல, மகளிர் இட ஒதுக்கீடு மறுசீரமைப்பு மசோதா. இந்த மசோதாவின் அஜண்டா பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது அல்ல, அதைத் தாமதப்படுத்துவது. அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது, தொகுதி வரையறை எப்போது என்று தொடர்ந்து குழப்பம் ஏற்படுவது, பெண்களுக்கான இட ஒதுக்கீடு காலவரையின்றி தாமதமாகிறது என்று அர்த்தம்.மஹுவா மொய்த்ரா
இது வரலாற்றுச் சிறப்பு மிக்க மசோதா அல்ல, வெறும் போலித்தனம். மகளிர் இட ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு நடவடிக்கைதான் தேவையே தவிர, சட்டப்படி கட்டாயமான ஒத்திவைப்பு அல்ல. இந்த மசோதாவை ஆதரிக்கிறோம் என்பதை நாங்கள் பதிவுசெய்ய வேண்டிய எந்த அவசியமில்லை. ஏனெனில், ஏற்கெனவே 37 சதவிகித எம்.பி-க்களை பெண்களாக நாங்கள் அனுப்புகிறோம். உண்மையில் இந்த மசோதாவை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்பதை நீங்கள்தான் பதிவுசெய்ய வேண்டும். மக்களவைக்கு 33 சதவிகித பெண்களை அனுப்ப முடியும் என்பதை நீங்கள்தான் காட்ட வேண்டும்.
இந்த அரசு பசுக்களைப் பாதுகாக்க விரும்பியது. அதை நான் ஆதரிக்கிறேன். அதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால், பசுக்கள் எத்தனை இருக்கின்றன என்று எண்ணுவதற்கு நீங்கள் காத்திருக்கவில்லை. அந்தப் பசுக்கள், ஜெர்சியா, கிர் பசுவா அல்லது சாஹிவாலாவா என்று பார்க்க நீங்கள் காத்திருக்கவில்லை. அப்படியே சென்று பசுக் கூடங்களை கட்டினீர்கள். ஆனால், நாங்கள் காத்திருக்க பெண்கள் என்ன பசுக்களை விடவும் குறைந்தவர்களா?மோடி
எங்களுக்கு எந்த வணக்கங்களும் தேவையில்லை, நேரடி நடவடிக்கை எங்களுக்குத் தேவை. பிரதமரே, `மோடி இருந்தால் சாத்தியம் என்பதற்கான தருணம் இது'. எனவே, இட ஒதுக்கீட்டை உடனே அமல்படுத்துங்கள். இன்றைய வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், 33 சதவிகித பெண்களை மக்களவைக்கு அனுப்புங்கள். இந்த அரசுக்கு ஒன்றைச் சொல்கிறேன், `இன்று எங்களுக்குச் சம உரிமைகளை வழங்குங்கள், அதை வானளவுக்கு உயர்த்துகிறோம். குறைந்தபட்சம் எங்கள் மண்ணில் மூன்றில் ஒரு பங்கையாவது தாருங்கள்'.மஹுவா மொய்த்ரா
பா.ஜ.க-வின் உண்மையான இரட்டைப் பேச்சு பாணியைப் பார்க்கையில், மக்களவையில் 33 சதவிகித பெண்களை அமர வைப்பது எப்போது என்பது எங்களுக்குத் தெரியாது. அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் தேதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. அதற்கு ஒருபடி மேலாக தொகுதி வரையறை எப்போது என்பதும் தீர்மானிக்கப்படவில்லை. கனிமொழி (தி.மு.க எம்.பி) கூறியதுபோல, தரவுகளின்படி கேரளாவுக்கு 0 சதவிகித இடங்களும், தமிழ்நாட்டுக்கு 26 சதவிகித இடங்களும் மட்டுமே. ஆனால், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் 79 சதவிகித இடங்கள் அதிகரிக்கும். இதைவிட பெரிய ஜும்லா இருக்க முடியுமா... 2024-ஐ மறந்துவிடுங்கள், 2029-ல் கூட இது சாத்தியமில்லை" என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY"மகளிர் இட ஒதுக்கீடு மசோதா முழுமையடையாமல் இருப்பது வருந்தத்தக்கது!" - ராகுல் காந்தி காட்டம்
http://dlvr.it/SwSFHF
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY"மகளிர் இட ஒதுக்கீடு மசோதா முழுமையடையாமல் இருப்பது வருந்தத்தக்கது!" - ராகுல் காந்தி காட்டம்
http://dlvr.it/SwSFHF