Wednesday 4 October 2023
Tuesday 3 October 2023
கேள்வியெழுப்பிய விவசாயி; நெஞ்சில் எட்டி உதைத்த ஊராட்சிச் செயலர்! - கிராமசபைக் கூட்டத்தில் பரபரப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சியில், மகாத்மா காந்தி பிறந்ததினத்தை முன்னிட்டு, ஊராட்சிக்குட்பட்ட கங்காகுளம் கிராமத்திலுள்ள கோயிலில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ மான்ராஜ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, ஊராட்சித் தலைவர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வேப்பங்குளத்தைச் சேர்ந்த அம்மையப்பன் எனும் விவசாயி பங்கெடுத்துப் பேசினார். அப்போது, "ஊராட்சியிலுள்ள கிராமங்களில் சுழற்சிமுறையில் கிராமசபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என, உள்ளாட்சித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.எம்.எல்.ஏ தலைமையில் கிராமசபைக் கூட்டம்!
ஆனால் கடந்த முறை நடந்த அதே இடத்தில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோது, நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது மீண்டும் அதே இடத்தில் கூட்டம் நடைபெறுகிறது. இதனால் பிற கிராமங்களிலுள்ள பொதுமக்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்க முடியாமல் சிரமத்துக்காளாகின்றனர்" எனத் தன் கருத்தை முன்வைத்தார். அப்போது இதற்கு பதிலளித்த ஊராட்சிச் செயலர் தங்கபாண்டியன், ``கடந்த கூட்டம் நடந்தபோது, நீ ஏன் வரவில்லை?" என ஒருமையில் எதிர்க் கேள்வியெழுப்பினார்.தங்கபாண்டியன்
தொடர்ந்து அம்மையப்பன் பேசுகையில், ``சுற்றுவட்டத்தில் 13 கிராமங்கள் இருக்கின்றன. அவற்றில் எங்கு நடைபெறும் கூட்டத்தில் வேண்டுமானாலும் பங்கெடுக்கலாம். கூட்டத்தில் நான் ஏதும் தவறாகக் கேட்கவில்லை. எனது கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால், நிராகரிக்கப்பட்டது எனத் தெரிவித்திவிடுங்கள்" எனச் சொல்லிவிட்டு தனது அடுத்தக் கேள்வியை முன்வைத்தார். அதில், ``ஆகஸ்ட் 17-ம் தேதி ஊராட்சித் தலைவர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் வெளியிட்ட சுற்றறிக்கையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் பிள்ளையார்குளம் ஊராட்சியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவுக்கு பொதுமக்களிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில் நிர்வாகம், ஊராட்சிச் செயலர் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்மீது எடுத்த நடவடிக்கை என்ன?" என `பரபர' கேள்வியை முன்வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சிச் செயலர் தங்கபாண்டியன், ஓடி வந்து தரையில் அமர்ந்திருந்த அம்மையப்பன் நெஞ்சில் காலால் எட்டி உதைத்ததாகக் கூறப்படுகிறது. அவரின் ஆதரவாளர்களும், விவசாயி அம்மையப்பனைக் கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.சமாதானம்
அந்தக் காணொளியில், "நான் நீதிமன்ற உத்தரவு பெற்று பணியில் தொடர்கிறேன். என்னைப் பற்றி இவன் எப்படிப் பேசலாம்" என்று மரியாதைக் குறைவான வார்த்தைகளால் விவசாயி அம்மையப்பனை வசைபாடுவதும் பதிவாகியிருக்கிறது. இதனால் கிராமசபைக் கூட்டமே கலவரக் களமானது. அப்போது ஏற்பட்ட நிலைமையைச் சரிசெய்ய மான்ராஜ் எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகள் முயன்றனர். விவசாயி அம்மையப்பனுக்கு ஆதரவாக, 'புகார் அளித்தவரை எப்படித் தாக்கலாம்?' என்று கூறி, அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சிச் செயலர் ஆகியோருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து கிராமசபைக் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து, காயமடைந்த விவசாயி அம்மையப்பன், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார். அவர் வன்னியம்பட்டி போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் தங்கபாண்டியன் மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்திவருகின்றனர். கிராமசபைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ., பி.டி.ஓ மற்றும் அதிகாரிகள் முன்னிலையில், கேள்வி கேட்ட விவசாயியை, ஊராட்சிச் செயலர் காலால் எட்டி உதைத்த சம்பவம், விருதுநகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
`அந்த குளுக்கோஸ் ஆலையால் ஏற்படும் மாசுபாட்டால் நாங்கள்..’ - கிராமசபை கூட்டத்தில் கவனம்பெற்ற மாணவி
http://dlvr.it/SwwL6b

Monday 2 October 2023
சேலம்: சாலையில் தேங்கிய சாக்கடை கழிவுநீர்... செய்தி வெளியிட்ட விகடன்; விரைந்து சீரமைத்த மாநகராட்சி!
சேலம் மாவட்டம், அழகாபுரம் காட்டூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது சிவாய நகர். இந்தப் பகுதியில் பொதுவாகவே மழைக்காலங்களில் கழிவுநீர் மழைநீரோடு சேர்ந்து சாலையிலும், தெருக்களிலும் தேங்கி நிற்கும். இது குறித்து பொதுமக்களின் தொடர் வேண்டுகோளால் அழகாபுரம் காட்டூர் மெயின் ரோட்டில் கழிவுநீர் சீராகச் செல்ல சிறிய பாலம் கட்டும் பணி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டது. இந்தப் பாலம் கட்டுவதற்காக ஏற்கெனவே இருந்த சாக்கடை கால்வாய் உடைக்கப்பட்டு, அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், அதற்குப் பிறகு பணிகள் நாளுக்கு நாள் மந்தமடைந்து கொண்டே போனது.சேலம்
அதன் விளைவாக, தெருக்களின் இரு புறமும் உள்ள குறுகிய கால்வாயிலிருந்து வரும் சாக்கடை நீர், முதன்மை கால்வாயோடு சேர முடியாமல் கழிவு நீர் அனைத்தும் சிவாயநகர் சாலையில் நிரம்பி வழிந்து 20 நாள்களுக்கும் மேலாக தெருவில் தேங்கி நின்றது. இது குறித்து பொதுமக்கள் பலமுறை கவுன்சிலர், எம்.எல்.ஏ, எம்.பி என பல அதிகாரிகளிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர். இருப்பினும், பாலம் கட்டும் பணிகள் தீவிரமடையாமல் கிடப்பிலேயே இருந்தது. இதனால், நீர் மூலம் பரவும் நோய்க் குறித்து மக்கள் கொள்ளும் அச்சத்தையும், பள்ளிக்குச் செல்லும் சிறிய குழந்தைகள் முதல் முதியவர்கள், கர்ப்பிணிகள் உட்பட பலரும் சாலையில் நடக்க முடியாமல் அல்லல்படுவதையும், நேரடியாக சிவாயநகருக்குச் சென்று மக்களிடம் பேசி அந்தப் பகுதியின் அவலநிலை குறித்து, செப்டம்பர் 6-ம் தேதி ஜூனியர் விகடனில் செய்தியாகவும், முகநூல் பக்கத்தில் லைவாகவும் வெளியிட்டிருந்தோம்.சேலம்:`சாக்கடை நிரம்பி வழியுது, நடக்கவே முடில'; சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் மக்கள் அவதி!
இதன் எதிரொலியாக, சேலம் மாநகராட்சியினர் தற்போது, உடைக்கப்பட்ட முதன்மை சாக்கடையை ஜேசிபி உதவியுடன் தூர்வாரி கம்பிகள் கொண்டு தற்காலிகமாக சிறுபாலம் அமைத்தனர். அதன்பின், சாலையில் தேங்கிய கழிவு நீர் வடிந்து காய்வதற்கு ஒரு வார காலம் காத்திருந்து, தெருக்களின் இருபுறமும் கழிவு நீர் சீராகச் செல்ல வழி செய்யப்பட்டு, தற்காலிக பாலம் மீது சிமென்ட் அடுக்குகளை அமைத்து பணிகளை முடித்தனர். பொதுமக்களின் துயருக்குத் தற்காலிக தீர்வும் கிடைத்திருக்கிறது.சேலம்
இதையடுத்து பொதுமக்கள், ``மெயின் ரோட்டுல போற சாக்கட ஃப்ரீயா போகும். ஏன்னா அங்கெல்லாம் பாலம் கட்டிட்டாங்க. இப்போ இங்க என்ன பண்ணிட்டாங்கன்னா, தெருவோட ரெண்டு பக்கம் இருக்கிற குறுகிய சாக்கடைய, புதுசா பாலம் கட்டன பெரிய சாக்கடையோட சேர்த்துட்டாங்க. அதனால கழிவுநீர் தேங்குறதில்ல. ஆனா, குறுகிய சாக்கடையில இருக்கிற குப்பைங்க, மண்ணு, கழிவுங்க இதெல்லாத்தையும் முழுசா தூர்வாராமலே போயிட்டாங்க. தூர்வாருன குப்பையையும் அல்லாம அப்படியே விட்டுட்டாங்க. குப்பைய முழுசா எடுத்தாதான் இனி நிரந்தரமா சாக்கடை நீர் தேங்காது, கொசு உற்பத்தியும் அதிகரிக்காது. தற்காலிகமா எங்களுக்குத் தீர்வு கிடைச்சிடுச்சி. இருந்தாலும், மாநகராட்சி இந்த குப்பையை முழுசா எடுத்து எங்களுக்கு நிரந்தர தீர்வு கொடுக்கணும்" என்று சேலம் மாநகராட்சிக்குக் கோரிக்கை வைக்கின்றனர். ‘ஸ்பா’க்களில் களைகட்டும் பாலியல் தொழில்... சேலம் திகுதிகு! - பின்னணியில் காவல் அதிகாரிகள்?
http://dlvr.it/Swsp7W

Sunday 1 October 2023
செந்தில் பாலாஜி இல்லாத திமுக - கோவையில் சறுக்குமா... சாதிக்குமா..?!
நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்ட தொடங்கிவிட்டன. தேர்தல் என்றாலே கொங்கு மண்டலம் தனி கவனத்தை ஈர்க்கும். 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க ஆட்சியைப் பிடித்தாலும், கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியைக்கூட வெல்லவில்லை.கோவைஎடப்பாடியின் ‘மெகா’ கூட்டணித் திட்டம்! - அலர்ட் ஆகிறதா திமுக?!
கொங்கு மண்டலம் முழுவதுமே தி.மு.க எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து கோவை மாவட்டத்துக்கு செந்தில் பாலாஜியை பொறுப்பு அமைச்சராக நியமித்தனர். தேர்தல் என்றாலே பூத்கமிட்டிதான் அரசியல் கட்சிகளின் முதுகெலும்பு.
தி.மு.க-வுக்கு கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் அது வீக்காக இருந்தது. பூத் கமிட்டியை வலுப்படுத்தி சந்தித்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அதே கோவை மாவட்டத்தில் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது தி.மு.க. அதேவேகத்தில் மற்ற கட்சிகளுக்கு முன்பே நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்களையும் செந்தில் பாலாஜி வகுத்தார்.செந்தில் பாலாஜி
பூத்கமிட்டி அமைக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில், அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைதுசெய்துவிட்டது. இதையடுத்து முத்துசாமியை கோவை பொறுப்பு அமைச்சராக நியமித்துள்ளனர்.
கோவை வந்த உடனே, “நான் தற்காலிகம்தான். உங்களுக்கு செந்தில் பாலாஜிதான் நிரந்தரம். அவர் விரைவில் வந்துவிடுவார்” என்று முத்துசாமி கூறியிருந்தார். ஆனால் செந்தில் பாலாஜி விரைவில் விடுதலையாகிவிடுவார் என்ற நம்பிக்கை உடன்பிறப்புகளிடம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருக்கிறது.முத்துசாமி
செந்தில் பாலாஜி இல்லாத தி.மு.க கோவையில் எப்படி தேர்தலை சந்திக்கப் போகிறது என்பதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
இது குறித்து நம்மிடம் பேசிய உடன்பிறப்புகள், “அ.தி.மு.க பூத்கமிட்டி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. தி.மு.க சில மாதங்களுக்கு முன்பே அந்தப் பணிகளை முடித்திருந்தாலும், அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேர்தலில் எந்த அளவுக்கு இறங்கி வேலை செய்வார் என்பது அனைவரும் அறிந்ததே.கோவை திமுக
செந்தில் பாலாஜி இருந்திருந்தால் அவருக்குக் கடும் போட்டி கொடுத்திருப்பார். தொழில்துறை கோவை மாவட்டத்தின் அஸ்திவாரம். மின்கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தொழில்துறையினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
கடந்த இரண்டரை ஆண்டுக்கால தி.மு.க ஆட்சியில் சொல்லிக் கொள்ளுமளவுக்கு கோவைக்கு பெரிய திட்டங்கள் வரவில்லை. கட்சிக்காரர்களும் மகிழ்ச்சியாக இல்லை. செந்தில் பாலாஜி இருந்தபோது ஒவ்வொரு பூத்கமிட்டிக்கும் பொறுப்பாளரை நியமித்திருந்தார். அவர்கள் மூலம் பல்வேறு வியூகங்களை செயல்படுத்துவார். தற்போது பூத்கமிட்டிக்கு பொறுப்பாளர்கள் உள்ளனர். அவர்கள் சம்பிரதாயத்துக்காக மேற்பார்வை மட்டுமே செய்கின்றனர். கோவை திமுக
மற்றபடி பூத்கமிட்டிக்கும், கட்சிக்கும் தொடர்பே இல்லை. சமீபத்தில் முதல்வர் தலைமையில் நடந்த பாக முகவர்கள் கூட்டமும் கண் துடைப்புதான். தேர்தலின்போது மட்டும் பூத்கமிட்டியை தூசி தட்டியதே, கடந்த தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தியது. அப்படி இல்லாமல், இப்போதிருந்தே பூத்கமிட்டியை வலுப்படுத்தினால்தான், கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை தக்கவைக்க முடியும்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
எடப்பாடியின் ‘மெகா’ கூட்டணித் திட்டம்! - அலர்ட் ஆகிறதா திமுக?!
http://dlvr.it/Swqyqs

Saturday 30 September 2023
ராணிப்பேட்டை: 40 ஆண்டுக்கால கோரிக்கை; ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடிக்கல் - கிராம மக்கள் மகிழ்ச்சி
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுகா திமிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் இருக்கிறது காவனூர் கிராமம். இது, சுற்றியுள்ள குக்கிரமங்களுக்கு ஊராட்சி நிர்வாக இடமாகவும் செயல்பட்டுவருகிறது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. இந்தக் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது, ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என்பது. இங்கிருக்கும் மக்கள் மருத்துவத் தேவைகளுக்காக விளாப்பாக்கம், திமிரி, ஆற்காடு போன்ற இடங்களிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் செல்வார்கள்.
இந்தக் கிராமத்தில் இரவு நேரங்களில் பேருந்து வசதியில்லாததால், சிகிச்சைக்காகச் செல்பவர்கள் சிரமப்பட்டுவந்தனர். இந்த நிலையில் இவர்களின் 40 ஆண்டுக்கால கோரிக்கையை ஏற்று, காவனூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் வாங்கப்பட்டு, பூமி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல்.ஈஸ்வரப்பன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ``ராணிப்பேட்டை மாவட்டத்துக்காக ஓர் ஆரம்ப சுகாதார நிலையம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதை எந்தத் தொகுதிக்கு வழங்குவது என்பது குறித்த மாவட்டக் கூட்டத்தில் பல்வேறு இடங்களுக்கான கோரிக்கைகள் வந்தன, எனது தொகுதி உட்பட. இருப்பினும், இந்த முறை ஆற்காடு தொகுதிக்குட்பட்ட காவனூர் ஊராட்சிக்குத்தான் தேவை அதிகம் இருப்பதால், இது அவர்களுக்குத்தான் வழங்க வேண்டும் என முடிவுசெய்யப்பட்டது.
மருத்துவமனை கட்ட போதிய இடம் இல்லாததால், 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிதி திரட்டப்பட்டு,ஒரு ஏக்கர் பரப்பளவு இடம் வாங்கப்பட்டு, ஒரு கோடி ரூபாய் செலவில் ஆரம்ப சுகாதார நிலையம் அமையவிருக்கிறது. இதில் காவனூர் ஊராட்சி மட்டுமல்லாமல், சுற்றியிருக்கும் நான்கு ஊராட்சிகளைச் சேர்ந்த இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் பயனடைவார்கள்” எனத் தெரிவித்தார். பல ஆண்டுகளாக வைக்கப்பட்டு வந்த கோரிக்கையை ஏற்று, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பது குறித்து மக்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/Swp6mT

Friday 29 September 2023
`இது முடியாவிட்டால், மோடி தனது பதவியை ராஜினாமா செய்யத் தயாரா?!' - சவால் விடுக்கும் கெஜ்ரிவால்
டெல்லி ஆம் ஆத்மி அரசில் அமைச்சர்களாகப் பதவி வகித்த சத்யேந்தர் ஜெயின் பண மோசடி வழக்கிலும், மணீஷ் சிசோடியா மதுபானக் கொள்கை ஊழல் வழக்கிலும் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட பிறகு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சொகுசு பங்களா பராமரிப்பில் ரூ.48 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக பா.ஜ.க குற்றம்சாட்டியது.அரவிந்த் கெஜ்ரிவால்
பின்னர் இந்த விவகாரத்தை விசாரிக்குமாறு சி.பி.ஐ-க்கு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார். அதன்படி நேற்றைய தினம் சி.பி.ஐ தனது விசாரணையைத் தொடங்கியது. சி.பி.ஐ இன்று தனது விசாரணையின் முதற்கட்ட அறிக்கையைப் பதிவுசெய்திருக்கும் நிலையில், `சி.பி.ஐ விசாரணையில் எதுவும் கிடைக்கவில்லையென்றால், பிரதமர் மோடி தனது பதவியை ராஜினாமா செய்வாரா?' என அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விட்டிருக்கிறார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், ``பிரதமர் மன உளைச்சலில் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. இதுவரை 50-க்கும் மேற்பட்ட விசாரணைகளை அவர் நடத்தியிருக்கிறார். என்மீது மட்டும் 33-க்கும் மேற்பட்ட வழக்குகளை அவர் பதிவுசெய்திருக்கிறார். அனைத்தையுமே அவர் விசாரித்தார். ஆனால், ஒன்றுகூட வெளிவரவில்லை. டெல்லி முதல்வராக நான் பொறுப்பேற்ற நாள் முதல் இது போன்று என்னிடம் விசாரணை நடத்திவருகிறார்கள்.கெஜ்ரிவால் - மோடி
எனவே, இந்த விசாரணையில் சி.பி.ஐ எதையும் கண்டுபிடிக்காது. அவர்களின் முன்பு நான் அடிபணிய வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், ஒருபோதும் நான் அடிபணிய மாட்டேன். எனவே, பிரதமர் மோடிக்கு நான் ஒரு சவால் விடுக்கிறேன். இந்த விசாரணையில் நீங்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லையென்றால், தவறான விசாரணை நடத்தியதற்காக மோடி தனது பதவியை ராஜினாமா செய்யத் தயாரா?" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
`எனக்குச் சொந்தமாக, எனது பெயரில் ஒரு வீடுகூட கிடையாது, ஆனால்..!'- குஜராத்தில் பிரதமர் மோடி பெருமிதம்
http://dlvr.it/SwlgZ2

Thursday 28 September 2023
`` `டெல்டாகாரன்' எனக் கூறிக்கொள்ளும் ஸ்டாலின், இதைச் செய்ய வேண்டும்!" - பிரேமலதா சொல்வதென்ன?
தஞ்சாவூர், பனகல் கட்டடம் முன்பு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட தே.மு.தி.க சார்பில், அந்தக் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும், காவிரி நதிநீரை தர மறுக்கும் கர்நாடக அரசையும், பெற்றுத் தராத மத்திய அரசையும், தமிழக அரசையும் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது. அப்போது பிரேமலதா செய்தியாளர்களிடம் பேசுகையில், 1968-ம் ஆண்டிலிருந்து காவிரி நதிநீர் பிரச்னை போய்க்கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னை நடந்துகொண்டிருக்கிறதே ஒழிய, இதுவரைக்கும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. தஞ்சாவூரில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம்
விவசாயிகள் கடனாளிகளாக மாறியிருக்கும் நிலையைக் காணும்போது, மிகவும் வேதனையாக இருக்கிறது. இத்தனை காலம் ஆட்சி செய்தவர்கள், செய்துகொண்டிருப்பவர்கள் தமிழகத்துக்கும் மக்களுக்கும் என்ன செய்தார்கள்... காவிரி நதிநீர்ப் பிரச்னையை அரசியலாக்கிக்கொண்டிருக்கிறார்கள். கர்நாடகாவில் ஒற்றுமையாகப் போராட்டம் நடத்துகிறார்கள். அந்த ஒற்றுமை தமிழக அரசிடம் ஏன் இல்லை?
எத்தனையோ பிரதமர்கள், முதல்வர்கள் வந்தாலும் ஆட்சி மாறியதே தவிர, காட்சி மாறவில்லை. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண தமிழக முதல்வரும், பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துச் சென்று, பிரதமரைச் சந்திக்க வைத்து காவிரி நீரை பெற்றுத்தர வேண்டும்.தே.மு.தி.க சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம்
காவிரி பிரச்னை தொடர்பாக தமிழக ஆளுநரிடம் தே.மு.தி.க சார்பில் கோரிக்கை மனு அளிக்கவிருக்கிறோம். இந்தியாவிலுள்ள அனைத்து நதிகளையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். `டெல்டாகாரன்’ எனக் கூறிக்கொள்ளும் தமிழக முதல்வர் ஸ்டாலின், சோனியா காந்தியைச் சந்தித்து கர்நாடகாவை வலியுறுத்தி, தமிழகத்துக்கு உரிய தண்ணீரைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கொள்ளை, கனிம வளக் கொள்ளை போன்ற காரணங்களால் தமிழகம் பாலைவனமாக மாறிவருகிறது. டெல்டாவில் தண்ணீரைச் சேர்த்து வைப்பதற்கு நடவடிக்கை இல்லை.
பா.ஜ.க-வும், அ.தி.மு.க-வும் பிரிந்து இரண்டு நாள்கள்தான் ஆகின்றன. எனவே பொறுத்திருந்து பார்ப்போம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் கிடையாது. இரண்டு கட்சிகளுக்கும் இடையே பிரச்னை கிடையாது. இரண்டு தலைவர்களுக்கிடையேதான் பிரச்னை. தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருப்பதால், யார் தலைமையில் கூட்டணி அமையும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். கூட்டணி தொடர்பான விஷயத்தில் தே.மு.தி.க உரிய நேரத்தில் நல்ல முடிவை எடுக்கும்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
`கர்நாடகம் நீலிக்கண்ணீர் வடிப்பதை ஏற்க முடியாது' கர்நாடக காவிரி போராட்டத்தின் பின்னணி என்ன?
http://dlvr.it/Swj30y