தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அ.தி.மு.க விலகிவிட்டது, பா.ஜ.க-வுடன் கூட்டணியில்லை என்று கட்சியின் மூத்த தலைவர்கள் முதல் எடப்பாடி பழனிசாமி வரை அனைவரும் வெளிப்படையாகப் பேசத் தொடங்கிவிட்டனர். ஆனால், பா.ஜ.க தரப்பிலிருந்து யாரும் அ.தி.மு.க-வின் கூட்டணி முறிவு குறித்து உறுதியாக எதுவும் கூறவில்லை. எல்லாம் டெல்லி மேலிடம்தான் முடிவுசெய்யும் என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை முதற்கொண்டு அனைவரும் கூறுகின்றனர்.அண்ணாமலை
இவ்வாறான சூழலில், டெல்லிக்குச் சென்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துவிட்டு தமிழகத்துக்குத் திரும்பிய அண்ணாமலை, சென்னையில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் பா.ஜ.க-வுக்கும், தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக இருக்கும் தி.மு.க-வுக்கும் நடக்கும் போட்டிதான் 2024 தேர்தல்" என்று கூறினார். இந்த நிலையில், தி.மு.க-வுக்கு யார் போட்டி என்பதில்தான் போட்டி நடக்கிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
முன்னதாக, உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் தி.மு.க-வுக்கும், பா.ஜ.க-வுக்கும்தான் போட்டி என்று அண்ணாமலை கூறியது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், ``இதை நீங்கள் அ.தி.மு.க தலைவர்களிடம்தான் கேட்க வேண்டும். யாராக இருந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான். தலைவரின் வழிகாட்டுதலின்படி தேர்தலை எதிர்கொள்வோம். எங்களுக்கு யார் போட்டி என்பதற்குத்தான் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க-வுக்கு யார் போட்டி என்பதில்தான் மிகப்பெரிய போட்டி நடக்கிறது" என்று கூறினார்.உதயநிதி ஸ்டாலின்
மேலும், சனாதன விவகாரம் குறித்துப் பேசுகையில், ``இது திசைதிருப்பும் முயற்சி. சி.ஏ.ஜி அறிக்கை, மணிப்பூர் குறித்துப் பேசுவோம். அதேசமயம், சனாதனம் குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருப்பேன். பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் ஆகியோர் பேசியதைவிட, நான் அதிகமாகப் பேசவில்லை" என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
``கூட்டணியில் இருக்கிறார்கள் என மகிழ்ச்சியோ, இல்லை என வருத்தமோ கிடையாது!” - அண்ணாமலை ஓப்பன் டாக்
http://dlvr.it/Sx4RNN