நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக அரசின் பரிந்துரைமீது ஆளுநர் முடிவெடுக்காததால், `ஐந்து சிறைவாசிகளுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபனை இல்லை' என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. நீண்டகாலமாகச் சிறையிலுள்ள இஸ்லாமியச் சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக் கோரிய வழக்குகள்மீது, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது.தமிழ்நாடு அரசு
கடந்த முறை இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, முதலமைச்சரின் பரிந்துரையின்பேரில் 49 சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான பரித்துரையை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியிருப்பதாகவும், அந்தப் பரிந்துரைகள் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிட்டு, உள்துறைச் செயலாளரின் கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் ஆகியோரின் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறைவாசிகள் ஷாகுல் ஹமீது, அஸ்லாம் உள்ளிட்ட ஐந்து பேரின் சார்பில், ஜாமீனில் விடுவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக அரசின் பரிந்துரைமீது ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்றம்
மேலும், ஏற்கெனவே உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் இதே போன்ற மற்றொரு சிறைவாசி ஜாமீன் வழக்கு விசாரணையின்போது, ஆளுநரிடம் கோப்புகள் நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, மனுதாரர்களை ஜாமீனில் விடுவிக்க அரசுக்கு ஆட்சேபனை இல்லை என்று குறிப்பிட்டார். இதையடுத்து, மனுதாரர்கள் ஐந்து பேரையும் மூன்று மாதங்கள் இடைக்கால நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர். சிறைவாசிகள் ஐந்து பேரில், மூன்று பேர் இஸ்லாமியர்கள், இரண்டு பேர் இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
ஆயுள் சிறைவாசிகள் விடுதலை கோரிக்கை... என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?
http://dlvr.it/Sx6SPg