நாகை - காங்கேசன் துறை( இலங்கை) இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்தை மத்திய கப்பல் நீா்வழிப் போக்குவரத்துதுறை அமைச்சர் சா்வானந்த சோனாவால் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கடந்த ஜூலை மாதம் அரசு முறை பயணமாக இந்தியா வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் மோடியை சந்தித்து இருநாட்டு உறவு, தமிழக மீனவர்கள் கைது, தமிழர்கள் நலன் குறித்து விவாதித்தனர். அதில் குறிப்பாக நாகை இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியது. அதனைத்தொடர்ந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நாகை துறைமுகத்தில் பூர்வாங்க பணிகள் நடைபெற்றது.
இதற்காக சுமார் ரூ. 25 கோடி செலவில் பிரத்யேகமாக கொச்சினில் தயாரிக்கப்பட்ட சிரியாபாணி கப்பல் நாகை துறைமுகத்தை வந்தடைந்து. இதற்கான சோதனை ஓட்டம் எல்லாம் முடிவடைந்த பிறகு இன்று சனிக்கிழமை காலை 8.15 க்கு மத்திய கப்பல் நீா்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சா் சா்வானந்த சோனாவால் மற்றும் தமிழக நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வா வேலு உள்ளிட்டோர் கொடியசைத்து பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் நாகை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி வர்கீஸ் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாகை - காங்கேசன்துறை பயணிகள் கப்பலில் செல்ல ரூ. 6,500 மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி சோ்த்து ஒரு நபருக்கு ரூ. 7,670 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கப்பல் போக்குவரத்து தொடக்க நாள் கட்டண சலுகையாக (இன்று) சனிக்கிழமை ஒருநாள் மட்டும் நபா் ஒருவருக்கு ரூ. 2,803 மட்டும் பயணக் கட்டணமாக (75 சதவீத சிறப்பு சலுகை) வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/SxSX6t