Thursday 2 November 2023
``PMLA சட்டத்தின்கீழ் ஜெட் ஏர்வேஸின் ரூ.538 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!" - அமலாக்கத்துறை
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ரூ.538 கோடியளவில் கடன் மோசடி செய்ததாக சிபிஐ-யிடம் கனரா வங்கி புகாரளித்தது. அதாவது, நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.848 கோடியில் ரூ.538 கோடி நிலுவையிலிருப்பதாகக் குற்றம்சாட்டியது. அதன்படி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல், அவரின் மனைவி அனிதா, நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகள்மீது சிபிஐ வழக்கு பதிவுசெய்தது. பின்னர் இந்த வழக்கைக் கையிலெடுத்த அமலாக்கத்துறை, இதைப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் வழக்கு பதிவுசெய்தது.ஜெட் ஏர்வேஸ்
அதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 1-ம் தேதி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலை அமலாக்கத்துறை கைதுசெய்து சிறையிலடைத்தது. இவ்வாறிருக்க, நேற்றைய தினம் டெல்லி நீதிமன்றத்தில் நரேஷ் கோயல் உட்பட ஐந்து பேர்மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வெளிநாடுகளில் அறக்கட்டளையை நிறுவி, அதன் மூலம் வரும் பணத்தை, அசையா சொத்துககளை வாங்கப் பயன்படுத்தியதாகவும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தால் வாங்கப்பட்ட கடன் மரச்சாமான்கள், ஆடைகள், நகைகள் போன்றவற்றை வாங்கப் பயன்படுத்தப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
இந்த நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்குத் தொடர்புடைய ரூ.538 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கியிருக்கிறது. இது குறித்து அமலாக்கத்துறை தனது X வலைதளப் பக்கத்தில், ``ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு எதிரான பண மோசடி விசாரணையில், பண மோசடி தடுப்புச் சட்டம் 2008-ன் கீழ் நிறுவனத்துக்குத் தொடர்புடைய ரூ.538 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கியிருக்கிறது.
ED has provisionally attached properties worth Rs 538.05 Crore under the provisions of PMLA, 2002 in the money laundering investigation against M/s Jet Airways (India) Limited (JIL). The attached properties include 17 residential flats/bungalows and commercial premises in the… pic.twitter.com/jJAOTaYG3o— ED (@dir_ed) November 1, 2023
இந்தச் சொத்துகளில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நபர்களின் பெயரில் 17 குடியிருப்புகள்/பங்களாக்கள் மற்றும் வணிக வளாகங்கள் இருக்கின்றன. குறிப்பாக அவை, Jetair Private Limited, Jet Enterprises Private Limited, Jet Airways (India) Limited-ன் நிறுவனர் தலைவர் நரேஷ் கோயல், அவரின் மனைவி திருமதி அனிதா கோயல், அவரின் மகன் நிவான் கோயல் ஆகியோர் பெயரில் லண்டன், துபாய் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருக்கின்றன" என்று பதிவிட்டிருக்கிறது.
2019-லேயே ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்தியது என்பதும், கடந்த மார்ச்சில் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து நரேஷ் கோயல் விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
சங்கரய்யா டாக்டர் பட்டம்: ``காந்தியடிகளையே வேண்டாமென்று சொன்னவர்கள்" - ஆளுநரைச் சாடிய பொன்முடி
http://dlvr.it/SyGxGX

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகவும், சுதந்திரத்துக்குப் பின்பு உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும் போராடி, தற்போது 101 வயதில் வாழும் வரலாறாகத் திகழும் சங்கரய்யாவுக்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவுசெய்திருக்கிறது. ஆனாலும், அதற்கான கோப்புகளில் கையெழுத்திட ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துவருகிறார். இதனால், அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், அரசியலுக்கு அப்பாற்பட்ட பலரும் ஆளுநர் ரவிக்கு கண்டங்கள் தெரிவித்துவருகின்றனர். தோழர் சங்கரய்யா
இப்படியிருக்க, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி கலந்துகொள்ளும் நிலையில், பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார். அதோடு, பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஸுக்காகத்தான் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்க ஆளுநர் ரவி மறுப்பதாகவும் பொன்முடி விமர்சித்திருக்கிறார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, ``சுதந்திரப் போராட்ட வீரராக இருந்த ஒருவருக்கு, இன்றளவும் மக்களுக்காகக் குரல் கொடுத்துவரும் ஒருவருக்கு, கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்று சிண்டிகேட் செனட் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய பிறகும் ஆளுநர் மறுத்திருக்கிறார். அதன் பிறகு மீண்டும் சிண்டிகேட் செனட் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பியிருக்கிறது. கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் அதிகாரம், மதுரை காமராசர் பல்கலைக்கழக சட்டம் 1965, அத்தியாயம் 20 தொகுதி ஒன்றில் ஆட்சிப் பேரவைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.அமைச்சர் பொன்முடி
எந்தச் சட்டத்தையும் ஆளுநர் மதிப்பதில்லை. திராவிட மாடல், பொருளாதார சமத்துவம், சமூகநீதி பேசுபவர்களைக் கண்டாலே இவர்களுக்குப் பிடிப்பதில்லை. அதனால்தான் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ஆளுநர் இருக்கிறார். முதன்முதலாக சங்கரய்யாவுக்கு `தகைசால் தமிழர் விருது’ வழங்கியபோதுகூட, அவருக்கு கொடுக்கப்பட்ட 25 லட்சத்தை வாங்காமல், `ஏழை மக்களுக்கு உதவுங்கள்’ என்று கூறியவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க மறுக்கிறார்.
`சுதந்திரப் போராட்ட வீரர்கள்மீது தமிழக அரசுக்கு அக்கறை இல்லை’ என்று கூறும் இவர், கௌரவ டாக்டர் பட்டத்தைக் கொடுக்க வேண்டியதுதானே... எத்தனை முறை கோரிக்கை விடுத்தும் எதற்கும் அவர் செவி சாய்ப்பதாக இல்லை. அது என்ன செவி என்றே தெரியவில்லை. அவர், அந்தக் காலத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ்-ஸில் இருந்தவர். அவர்களுக்கு சுதந்திரப் போராட்டக்காரர்கள் மீதெல்லாம் மதிப்பு கிடையாது. காந்தியடிகளையே வேண்டாம் என்று சொன்னவர்கள்தான் அவர்கள். அதிலிருந்து வந்தவர் என்பதால்தான் அந்த வெறித்தனத்தோடு பேசுகிறார். பா.ஜ.க-வுக்கும், ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கும் ஆதரவாகத்தான் இதையெல்லாம் அவர் செய்கிறார் என்று தெளிவாகத் தெரிகிறது. தினமும் பொய் பேசுவதையே தொழிலாகக்கொண்டிருக்கிறார்.ஆளுநர் ரவி
எனவே, இந்த நாட்டில் மாநில உரிமைகளைப் பறிக்கிற வகையில் ஆளுநர் செயல்படுகிறார் என்றால் அது கண்டிக்கத்தக்கது. நீங்கள் வேண்டுமானால் தேர்தலில் நின்று வெற்றிபெற்று வந்த பிறகு உங்கள் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க கருத்துகளைப் பேசுங்கள். ஆனால், அதற்கெல்லாம் உங்களுக்குத் தைரியமில்லை. எனவே, சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் மறுப்பதால் நாளை நடைபெறவிருக்கின்ற பட்டமளிப்பு விழாவில் நான் கலந்துகொள்வதாக இல்லை. வேந்தர் என்ற பதவியைப் பயன்படுத்திக்கொண்டு எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று அவர் நினைக்கிறார். எனவேதான், வேந்தருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில் இந்தப் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம்" என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
என்.சங்கரய்யா 100: ``வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு'' - பொதுவுடைமை முழங்கிய நம் காலத்து நாயகர்!
http://dlvr.it/SyGwmC

”பவுன்சர்கள் பாதுகாப்புடன்தான் எடப்பாடி பழனிசாமி வந்தார்” - விளக்கும் திண்டுக்கல் சீனிவாசன்
தேவர் ஜயந்தியை முன்னிட்டு முத்துராமலிங்கத் தேவருக்கு அதிமுக சார்பில் அணிவிக்கப்பட்ட தங்கக் கவசத்தை மீண்டும் வங்கியில் ஒப்படைப்பதற்காக அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரைக்கு வந்திருந்தார்.தேவர் ஜயந்தியில் எடப்பாடி பழனிசாமி
அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது, ``பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக யார் கோஷமிட்டார்கள், யார் கல்வி வீசினார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. ஊடகச் செய்தியை பார்த்த பின்புதான் தெரியும். நாங்கள் எல்லோரும் எடப்பாடியார் வண்டியில்தான் சென்றோம். அதனால் கல் எங்கு விழுந்தது என்று எங்களுக்குத் தெரியாது. தற்போது காவல்துறையினர் சிலரைப் பிடித்து விசாரித்துவருவதாகச் சொல்கிறார்கள். காவல்துறைதான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். பணம் கொடுத்தால் கல்வீசும் நபர்கள் இருக்கின்றனர். ஆளுநர் மாளிகையில் குண்டுவைத்தவன் நீட் தேர்வு பற்றி கூறியிருக்கிறான். அதேபோல் தற்போது கல்வீசியவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வருக்கு வழங்கியதுபோல் உரிய பாதுகாப்பு காவல்துறையால் கொடுக்கப்படவில்லை. முதலமைச்சர் வந்து சென்ற பிறகு காவல்துறையிடம் கட்டுப்பாடு இல்லை. அதனால்தான் அந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.
பவுன்சர்களின் பாதுகாப்புடன்தான் எடப்பாடி பசும்பொன்னுக்கு வந்தார். அதனால்தான் பாதுகாப்புடன் வந்து செல்ல முடிந்தது. காவல்துறை திட்டமிட்டு எங்களுக்கு முறையாக பாதுகாப்பு வழங்கவில்லை” என்றார். திண்டுக்கல் சீனிவாசன்
அப்போது செய்தியாளர்கள், ``கல்வீச்சு சம்பவத்தை ஓ.பி.எஸ் கண்டித்திருக்கிறாரே?’’ என்று கேட்டதற்கு...
``ஓ.பன்னீர்செல்வம் ஏன் இப்போது இரட்டை வேடம் போடுகிறார்... தொட்டிலை ஆட்டிவிட்டு, பிள்ளையையும் கிள்ளிவிடுகிறார். இந்த நாடகமெல்லாம் அதிமுக-விடம் எடுபடாது. அவருடைய நீலிக்கண்ணீரைப் பலமுறை பார்த்துவிட்டோம். ஓ.பி.எஸ் ஏற்கெனவே பல தோல்விகளைச் சந்தித்திருக்கிறார். வாகனத்தின் மீது யார் கல் எறிந்தார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால், மகாத்மா காந்தியைப்போல் ஓ.பி.எஸ்-ஸை ஒப்பிட வேண்டாம். ஓ.பி.எஸ்-ஸின் நாடகத்தை யாரும் நம்பத் தயாராக இல்லை. கோட்சே, மகாத்மா காந்தியை சுட்டது சரிதான் என்பதுபோல் இருக்கிறது’’ என்றவர்,
``எம்.ஜி.ஆர் ராம்நாடு சென்றபோது எப்படி வரவேற்பு அளிக்கப்பட்டதோ, ஜெயலலிதா தங்கக் கவசம் வைக்கும்போது எப்படி வரவேற்பு அளிக்கப்பட்டதோ அதேபோல் இம்மி அளவுகூட குறையாத வகையில், எடப்பாடியாரைச் சிறப்பாக வரவேற்று `எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான்’ என்று மக்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், பசும்பொன்னில் கறுப்பு சிவப்பு சேலை அணிந்து நின்றுகொண்டிருந்த திமுக சகோதரிகள் அனைவரும் இரட்டை இலையைக் காண்பித்தார்கள். திமுக வேட்டியைக் கட்டியவர்கள்கூட `எடப்பாடியார் வாழ்க’ என்று கோஷமிட்டனர்" என்றார்.தங்கக்கவசம் ஒப்படைப்பு
``பிரதமராக எடப்பாடி பழனிசாமி தகுதி உள்ளவர் என்ற கேள்விக்கு அண்ணாமலை சிரித்திருக்கிறாரே?’’ என்ற கேள்விக்கு, ``அண்ணாமலையிடம் செய்தியாளர் கேட்ட கேள்வியே மிகக் கேவலமானது. அதிமுக-வின் இலக்கு 2026-ல் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவதுதான். அவர் ஏன் சிரித்தார் என்று அவரிடம் போய்க் கேளுங்கள்’’ என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/SyGwFC

Wednesday 1 November 2023
தேசியக்கொடி விவகாரம்: `கோவா ஆளுநரை அவமதிப்பதா?' - தெலங்கானா ஆளுநர் தமிழிசை கண்டனம்!
சேலம், காமலாபுரம் விமான நிலையத்தில் கடந்த 29-ம் தேதியன்று, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, சேலம் – சென்னை விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. அந்த வகையில் சென்னையிலிருந்து சேலம் வந்த விமானத்தில் கோவா ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை பயணித்துவந்தார். சேலத்துக்கு வருகைபுரிந்த ஆளுநருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாவட்ட வருவாய் அதிகாரி மேனகா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் பூங்கொத்து வழங்கி, விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர். பின்னர் ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை கர்நாடக மாநிலத்துக்குச் செல்லவிருந்ததால், சேலம் அஸ்தம்பட்டியில் அமைந்திருக்கும் விருந்தினர் மாளிகையில் மதிய உணவு அருந்திவிட்டு, மாலை கிளம்புவதாக இருந்தார். கோவா ஆளுநரின் சேலம் வருகை என்பது, முன்கூட்டியே அனைத்துப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தது.
ஆனால், சேலத்துக்கு வருகைபுரிந்த ஒரு மாநிலத்தின் ஆளுநருக்கு அரசின் மூலம் வழங்கப்படும் அங்கீகாரம் என்பது வழங்கப்படாமால் போய்விட்டதாக அரசியல் வட்டாரங்களில் சர்ச்சை கிளம்பியது. காரணம், ஆளுநர் விமான நிலையத்திலிருந்து பயணித்துச் சென்ற வாகனத்தில் தேசியக்கொடி இல்லாமல் இருந்திருக்கிறது.கொடி இல்லாத வாகனம்
தேசியக்கொடி இல்லாத காரிலேயே விருந்தினர் மாளிகை வரை, ஆளுநர் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இதையெல்லாம் முன்கூட்டியே ஆராய்ந்து தயார்நிலையில் வைத்திருக்க வேண்டிய அதிகாரிகள், ஆளுநரை அவமதிக்கும்விதமாக தேசியக்கொடி இல்லாத வாகனத்தில் அவரை அழைத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து ஒருபக்கம் பா.ஜ.க-வினர், `ஆளுநரை அவமதித்தது மாநில, மாவட்ட நிர்வாகங்களின் திட்டமிட்ட செயல்' என்று கடுமையாக விமர்சனம் செய்துவந்தனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை, “நீங்கள் சொல்லும் செய்தியை நானும் இணையத்தில் படித்தேன். ஆளுநர் வருகை உள்ளிட்ட புரோட்டோகாலுக்கென்றே தனியாக எப்போதும் தேசியக்கொடி பொருத்திய வாகனம் இருக்கும். அப்படி இருக்கும் நிலையில், ஏதோ கடமைக்கென்று ஒரு வண்டியில் ஆளுநரை ஏற்றினார்களா அதிகாரிகள்... இது முழுவதும் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் காட்டுகிறது. இதை ஆளுநரை அவமதிக்கும் செயலாகவே பார்க்கிறேன்.தமிழிசை சௌந்தரராஜன்
இதை மாவட்ட கலெக்டர்தான் வெரிஃபை பண்ணியிருக்கணும். ஒரு மாநிலத்தின் ஆளுநர் எங்கு போனாலும், ஆளுநர்தான். அவருக்குக் கொடுக்கவேண்டிய மரியாதை என்பது இந்தியாவுக்குள் எங்கே போனாலும் ஒரே மாதிரிதான் இருக்கும். அந்த வகையில், ஒருசில இடங்களில் மாவட்ட ஆட்சியர்களே வராமல் இருக்கிறார்கள். காரணம், அப்படி மரியாதை நிமித்தமாக வந்தால் அவர்களுக்கு அரசியல்ரீதியாக சாயம் பூசிவிடுவார்களோ என்று அச்சப்படுகின்றனர்” என்றார்.சேலம்: `ஆளுநர் காரில் தேசியக்கொடி எங்கே... திட்டமிட்ட சதி'- பாஜக குற்றச்சாட்டும், போலீஸ் விளக்கமும்!
http://dlvr.it/SyDR3H

`பெண் கர்ணன்' மேயர் பிரியா முதல் `What are our duties?'- BJP கவுன்சிலர் பேச்சு வரை; மாமன்றக் கூட்டம்
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் இன்று (31-10-2023) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை மேயர் மகேஸ் குமார், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள், அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தின் கேள்வி நேரத்தின்போதும், நேரமில்லா நேரத்தின்போதும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகள், பகுதிகள் மற்றும் மண்டலங்களிலுள்ள பிரச்னைகள் குறித்தும், அவற்றைத் தீர்ப்பதற்கான கோரிக்கைகளை முன்வைத்தும் பேசினர். மேயர் பிரியா
அந்த வகையில் சென்னை மாநகராட்சியின் 35-வது வார்டு ம.தி.மு.க கவுன்சிலர் சு.ஜீவன், ``சென்னை மாநகராட்சி மழலையர் பள்ளிகளின் ஆசிரியர்கள், அங்கு பணியாற்றும் ஆயாக்கள் உள்ளிட்ட ஊழியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. அவர்கள் 500 பேரும் ஊதிய உயர்வுடன், பணி நிரந்தரம் செய்யப்படவேண்டும்" எனக் கோரிக்கை வைத்தவர், மகாபாரதத்தின் கர்ணன், தருமர் புரணாக்கதை ஒன்றை உதாரணமாகக் கூறிவிட்டு, ``இந்த கோரிக்கையை மட்டும் மேயர் பிரியா நிறைவேற்றினால் அவரை `பெண் கர்ணன்' என அனைவரும் பார்ப்பார்கள்" எனப் பேசினார். இதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த மேயர் பிரியா, ``நிச்சயம் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து பேசிய சில கவுன்சிலர்களும், தங்களின் கோரிக்கையை மேயர் பிரியா நிறைவேற்றினால் அவர்தான் `பெண் கர்ணன்' என ஐஸ் வைத்தனர்.சென்னை மாமன்றக் கூட்டம்: `மெட்ரோ வாட்டர் சர்ச்சை முதல் டெங்கு காய்ச்சல் வரை' - காரசார விவாதம்!
அதைத் தொடர்ந்து பேசிய 145-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் சத்தியநாதன், ``நெற்குன்றம் பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றும் மருத்துவர் வெண்ணிலா சரியான நேரத்துக்குப் பணிக்கு வருவதில்லை. இதனால் நாள்தோறும் அந்த மருத்துவமனைக்கு வந்து போகும் கர்ப்பிணிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, சேவை மனப்பான்மையுள்ள நல்ல மருத்துவரை நியமிக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார். தொடர்ந்து, ``என்னுடைய மூன்று ஆண்டுகளுக்கான (மாதம் ரூ.10,000) மதிப்பூதியத்தை சென்னை மாநகராட்சியில் இருக்கும் முதியோர் இல்லங்களுக்கு வழங்க வேண்டும்" என்றும் வலியுறுத்தினார்.சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம்
அதேபோல, 84-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் ஜான், ``எனது வார்டு இருக்கும் மண்டலத்தில் போதிய குடிநீர் வசதி இல்லை! பலமுறை கோரிக்கைவைத்தும் மெட்ரோ வாட்டர் நிர்வாகம் எதையும் சரிசெய்யவில்லை. வசதி படைத்தவர்களின் வீடுகள் இருக்கும் பகுதிகளுக்கு மட்டுமே முறையாக உடனடிக் குடிநீர் வசதிகளை செய்துதருகின்றனர். ஏழை மக்கள் வசிக்கக்கூடிய யாதவா தெரு, பெரியார் நகர், கொரட்டூர், கச்சரவாக்கம், ஹவுஸிங் போர்டு உள்ளிட்ட பகுதிகளில் 10 நாள்களுக்கு ஒரு முறைதான் மெட்ரோ வாட்டர் குழாயில் தண்ணீர் விடுகிறார்கள். புழல் ஏரி நிரம்பியிருக்க, அதிலிருந்து சப்ளை செய்யப்பட்டுவந்த தண்ணீரையும் நிறுத்திவிட்டார்கள். பல இடங்களில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. ஓராண்டாகக் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை" எனச் சரமாரியாகக் குற்றம்சாட்டினார். அதேபோல மற்றொரு கவுன்சிலரும், ``தொடர்ந்து பிரச்னை செய்துவரும் மெட்ரோ வாட்டர் துறையை சென்னை மாநகராட்சியுடன் இணைத்துவிடலாமே?" எனக் கேள்வி எழுப்பினார்.சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம்
தொடர்ந்து 134-வது வார்டு பா.ஜ.க கவுன்சிலர் உமா ஆனந்தன் பேசத் தொடங்கினார். எடுத்த எடுப்பிலேயே ஆங்கிலத்தில் தனது உரையைத் தொடங்கி, அனைவரையும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டு `நமஸ்காரம்' என்றவர், `ஆன்மிக அரசியல்தான் எல்லாவற்றுக்கும் காரணம்' என்ற முத்துராமலிங்கத் தேவருக்கும், வல்லபாய் படேலுக்கும் பிறந்தநாள் வாழ்த்தைக் கூறினார். தொடர்ந்து தனது வார்டு பிரச்னைகளைப் பேசுவதற்கு பதிலாக, `What is our Duties and representation...' என ஆரம்பித்து ஆங்கிலத்திலேயே பேசினார். அப்போது, சிலர் அவையைவிட்டு எழுந்து சென்றனர். உடனே துணை மேயர் மகேஸ்குமார் குறுக்கிட்டு, ``உங்க பகுதி பிரச்னை, கோரிக்கையைச் சொல்லுங்க!" எனக் கூற, மீண்டும் ஆங்கிலத்துடன் தமிழும் கலந்து பேசினார். ``சென்னை மாநகராட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை, நிதித்துறை செயல்பாடுகள் மர்மமாக இருக்கின்றன, சென்னை மாநகராட்சிக்கு வரும் டொனேஷன்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்" எனக் குற்றம்சாட்டினார். `Innova கார் வேண்டும்..!’ - நிறுத்திவைத்த மேயர் பிரியா... கொந்தளித்த திமுக நிலைக்குழுத் தலைவர்கள்
தொடர்ந்து 57-வது வார்டு உறுப்பினர் ராஜேஷ், தங்கள் பகுதியிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தெருக்களுக்கு பெயர்ப்பலகை இல்லை என்று கூற, துணை மேயர் மகேஸ்குமார், ``நானே இது குறித்து கோரிக்கை வைக்கலாமென்று இருந்தேன். சென்னை மாநகராட்சியின் அனைத்துத் தெருக்களிலும் புதிதாக போர்டுகள் வைக்க வேண்டும். அந்த போர்டுகளில் மாமன்ற உறுப்பினரின் பெயரையும் இடம்பெறச் செய்ய வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார். இந்தக் கோரிக்கைக்கு பதிலளித்த கமிஷனர் ராதாகிருஷ்ணன், ``சென்னை மாநகராட்சியில் 35,000-க்கும் மேலாக தெருக்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டன. வரும் நிதியாண்டில் அனைத்துத் தெருக்களிலும் புதிய போர்டுகள் வைக்கப்படும்" என உறுதியளித்தார்.சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம்
தொடர்ந்து 98-வது வார்டு சி.பி.எம் கவுன்சிலர் பிரியதர்ஷினி, ``சென்னை மாநகராட்சியிலுள்ள பல்வேறு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்கப்படுகிறது. அவர்களை போதைப் பழக்கத்திலிருந்து மீட்டெடுக்க, மாணவர்களுக்கான போதை மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும்" என்றார். அதேபோல, 106-வது வார்டு கவுன்சிலரும், ஆளுங்கட்சி தலைவருமான இராமலிங்கம், ``சென்னை மாநகராட்சியில் சாலைகளில் திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துவிட்டன. மாடுகளை வண்டிகளில் பிடிக்கப்போகும் ஊழியர்களும், மாட்டின் உரிமையாளர்களால் மிரட்டப்படுகின்றனர். இதைப் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும்" என்றார். சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம்
இறுதியாகப் பேசிய துணை மேயர் மகேஸ்குமார், ``சென்னை மாநகராட்சியின் பல இடங்களில் பேருந்து நிழற்குடைகள் பழுதடைந்து கிடக்கின்றன. அவற்றைச் சீரமைக்க வேண்டும். வரும் நிதியாண்டில் அதற்கான நிதி ஒதுக்கி, புதிய பேருந்து நிழற்குடைகள் அமைத்துத்தர வேண்டும். அதேபோல, புதிய நடைபாதைகளும் அமைக்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார். கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு, தொடர்ந்து மேயர் பிரியா, கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உரிய பதில்களை அளித்தனர். இறுதியாக, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, மாமன்றக் கூட்டம் நிறைவடைந்தது."நான் பேசும்போது குறுக்கப் பேசாதீங்க..!" - கோபத்தில் கொந்தளித்த மேயர் பிரியா
http://dlvr.it/SyDQv9

Tuesday 31 October 2023
``இந்தியா கூட்டணியின் நிலை தற்போது வலுவாக இல்லை..!" - உமர் அப்துல்லா சொல்வதென்ன?
வருகின்ற நவம்பரில் தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அடுத்தாண்டு லோக் சபா தேர்தலுக்கு முன் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் என்பதால் இதில் பெற்றிபெற்று லோக் சபா தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதேசமயம், லோக் சபா தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்த எதிர்க்கட்சிகளின் `இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள், இந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் தனித்தனியே போட்டியிடுகின்றன.இந்தியா கூட்டணி
இதனாலேயே, லோக் சபா தேர்தலுக்கு முன்பாகவே இந்தியா கூட்டணியிலிருந்து எதிர்க்கட்சிகள் கழன்றுவிடும் என பா.ஜ.க விமர்சித்து வருகிறது. அதற்கான காரணம், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸுக்கும், சமாஜ்வாதிக்கும் இடையே மத்தியப் பிரதேசத்தில் கடந்த ஒருவாரமாக ஏற்பட்டிருக்கும் மோதல்போக்குதான்.
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் சமாஜ்வாதிக்கு சீட் ஒதுக்காமல் தனித்து களமிறங்குவதால், ``சமாஜ்வாதி தங்களுக்குத் தேவையில்லை என்றால் காங்கிரஸ் அதை நேரடியாகக் கூறவேண்டும். அதன்பிறகு கூட்டணி குறித்து ஒருமுறை கூட பேச மாட்டோம். பா.ஜ.க-வை தோற்கடிக்க நாங்களே ஆயத்தமாவோம்" என அகிலேஷ் வெளிப்படையாகப் பேசினார். இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, இந்தியா கூட்டணியின் நிலை தற்போது வலுவாக இல்லாதது துரதிஷ்டவசமானது எனத் தெரிவித்திருக்கிறார்.உமர் அப்துல்லா
இந்த விவகாரம் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, ``இந்தியா கூட்டணியின் நிலை தற்போது வலுவாக இல்லை என்பது துரதிஷ்டவசமானது. அடுத்த மாதம் தேர்தல் இருப்பதால், உட்பூசல்கள் இருக்கக்கூடாது. காங்கிரஸுக்கும், சமாஜ்வாதிக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருப்பதும், இரு கட்சிகளும் உத்தரப்பிரதேசத்தின் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தனியாகப் போட்டியிடுவோம் என்று கூறுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்லதல்ல. மாநில தேர்தல்களுக்குப் பிறகு சந்திப்பு நடத்தி, ஒன்றாக இணைந்து வேலை செய்ய முயற்சிப்போம்" என்று கூறினார்.Electoral Bonds: ``அரசியல் கட்சிகளின் நிதி ஆதாரம் பற்றி அறிய மக்களுக்கு உரிமையில்லை!" - மத்திய அரசு
http://dlvr.it/Sy9t4Z