இந்த மாதம் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலும், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலும் நடக்கவிருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் பிரசாரத்தைத் தீவிரமாக முன்வைத்து வருகின்றன. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க ராஜஸ்தான் மாநிலத்திலும் ஆட்சியைக் கைப்பற்றத் தீவிர அரசியலை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில், பா.ஜ.க- வேட்பாளர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சித் தலைவர்கள் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.பஞ்சாப் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங்
அவ்வப்போது சர்ச்சைக் கருத்துகளை வெளியிட்டு விமர்சனத்துக்குள்ளாகும் சம்பவங்களும் நடக்கிறது. இந்தத் தேர்தல் பிரசாரத்திலும், சர்ச்சைக் கருத்துகள் வெடித்திருக்கிறது. சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் திஜாராவில், ஆல்வார் தொகுதி வேட்பாளர் பாலக்நாத்-க்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தல் பிரசாரத்துக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்திருந்தார்.
அவர் இருந்த மேடையில் பேசிய ராஜஸ்தான் பா.ஜ.க தலைவர் சந்தீப் தயாமா, "ராஜஸ்தானில் பா.ஜ.க ஆட்சியமைத்தவுடன் குருத்வாரா சாஹிப்களை வேரோடு பிடுங்க வேண்டும். இந்தத் தொகுதியில் சமீப காலமாக குருத்வாராக்கள் அதிகம் வந்ததிருக்கிறது. பள்ளிவாசல்களும், குருத்வாராக்களும் எதிர்காலத்தில் பெரிய பிரச்னையாக மாறும். அவை நாட்டின் திறந்திருக்கும் புண்கள். எனவே, இந்தப் பிரச்னையை இங்கிருந்து அகற்றுவதும், வேரோடு பிடுங்கி எறிவதும் நமது மதப் பொறுப்பு" எனப் பேசியிருந்தார்.தயாமா வெளியிட்ட மன்னிப்பு வீடியோவில்...
இந்தப் பேச்சுக்குச் சிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி (எஸ்ஜிபிசி) தலைவரும், வழக்கறிஞருமான ஹர்ஜிந்தர் சிங் தாமி, "ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத் முன்னிலையில், சிறுபான்மையினர் சமுதாயத்துக்கு எதிராகப் பகிரங்கமான வெறுப்புப் பேச்சு பேசப்படுகிறது. அதை அந்த முதல்வர் சற்றும் பொருட்படுத்தவில்லை. இது பெரும் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளிக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, பா.ஜ.க மூத்த தலைவரும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான அமரீந்தர் சிங் உள்ளிட்ட பலரும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இதற்கிடையில், பா.ஜ.க தலைவர் சந்தீப் தயாம மன்னிப்புக் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,"ஆல்வார் தொகுதி வேட்பாளருக்கான தேர்தல் பிரசாரத்தில் நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. நான் பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் என்றுதான் கூறவந்தேன். ஆனால், எப்படியோ தவறுதலாக குருத்வாராக்கள் என மாற்றிக் கூறிவிட்டேன். இது பலரை வருத்தியிருப்பதை அறிந்துகொண்டேன். அதனால் மன்னிப்பு கோருகிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.சண்டிகர் காவல்நிலையத்தில் பா.ஜ.க புகார்.
ஆனாலும், பஞ்சாப் பா.ஜ.க தலைவர் சுனில் ஜாகர், "ராஜஸ்தான் தலைவரின் இந்த மூர்க்கத்தனத்தை, சக குடிமக்களின் மத உணர்வுகளுக்கு எதிராக ராஜஸ்தான் தலைவரின் தகுதியற்ற பேச்சை மன்னிக்க முடியாது. அவரது பேச்சால் மக்களுக்கு ஏற்பட்ட காயம் குறித்து மத்திய தலைமைக்குத் தெரிவித்திருக்கிறேன். அவரை கட்சியிலிருந்து உடனே நீக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டார். பஞ்சாப் பா.ஜ.க மகளிர் அணித் தலைவி ஜெய் இந்தர் கவுர், சண்டிகர் காவல் நிலையத்தில் சந்தீப் தயாமா மீது புகாரளித்து தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். பஞ்சாப் பா.ஜ.க-வின் தொடர் வற்புறுத்தலினால், ஒழுங்கு நடவடிக்கையாக பா.ஜ.க தலைமை சந்தீப் தயாமாவை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
``திமுக - பாஜக கூட்டணி வைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன!” - கொளுத்திப் போடும் CTR நிர்மல் குமார்
http://dlvr.it/SyRQKD