இந்த ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க, அகாலி தளம் போன்ற பெரும் கட்சிகளை பின்னுக்குத் தள்ளி, டெல்லியில் மட்டும் ஆட்சியிலிருந்த ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப்பிலும் ஆட்சி அமைப்பதற்றக்கான பெரும்பான்மையைப் பெற்றது. ஆனால், அதன் பின்னர் ஆம் ஆத்மி கட்சி தொடர் சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாகக் கடந்த சில மாதங்களாக அமலாக்கத்துறை, வருமானவரித்துறையினரால் டெல்லியில் தொடங்கி, தற்போது பஞ்சாப் வரை அந்தக் கட்சியின் முக்கிய எம்.பி-கள், எம்.எல்.ஏ-க்கள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுவருகிறார்கள்.ஜஸ்வந்த் சிங் கஜ்ஜன்மஜ்ரா
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜஸ்வந்த் சிங் கஜ்ஜன்மஜ்ராவை அமலாக்க இயக்குநரகம் நேற்று கைது செய்திருக்கிறது. இது தொடர்பாக வெளியான தகவலில், "கடந்த 2011 - 2014-ம் ஆண்டுகளில் தாரா காா்பரேஷன் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த ஜஸ்வந்த் சிங் கஜ்ஜன்மஜ்ரா, பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் நிறுவனம் சார்பாக சுமார் ரூ.40 கோடி கடன் பெற்றதாகவும், ஆனால், பெற்ற கடனை திரும்பச் செலுத்தாததால், அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கடன் வாராக் கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, இந்தக் கடன் விவகாரம் தொடர்பாகக் கடந்த ஆண்டு மே மாதம் சி.பி.ஐ அதிகாரிகளும், செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறையும் ஜஸ்வந்த் சிங் கஜ்ஜன்மஜ்ரா தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அதில், ரூ.32 லட்சம் ரொக்கம், செல்போன், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், வங்கி மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில், விசாரணைக்காகப் பலமுறை சம்மன் அனுப்பியும் புறக்கணித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலம் மலா்கோட்லா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில், ஜஸ்வந்த் சிங் கஜ்ஜன்மஜ்ரா பங்கேற்றபோது அவரை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் கைது செய்திருக்கின்றனர்.மல்வீந்தா் சிங் காங்
இந்தக் கைது தொடர்பாகப் பஞ்சாப் மாநில செய்தித் தொடர்பாளர் மல்வீந்தா் சிங், "ஆம் ஆத்மி கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிப்பதற்காகவே இது போன்ற கைது நடவடிக்கைகளை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு மேற்கொண்டு வருகிறது. அவர் ஆம் ஆத்மியில் சேருவதற்கு முன்பாகவே இந்த வழக்கு அவர் மீது பதிவு செய்யப்பட்டிருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
``கெஜ்ரிவாலைக் கைதுசெய்தால், சிறையிலேயே அமைச்சரவைக் கூட்டம் நடத்த அனுமதி கேட்போம்!" - ஆம் ஆத்மி
http://dlvr.it/SyV2PH