ஜம்மு - காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா 2023, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா 2023 ஆகிய இரண்டு மசோதாக்கள் மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்கள்மீது விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதத்தின்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு செய்த இரண்டு பெரிய தவறுகள்தான், ஜம்மு-காஷ்மீர் மக்களின் துன்பங்களுக்கு வழிவகுத்தன.அமித் ஷா
1948-ல் இந்தியா - பாகிஸ்தான் போரின்போது, இந்தியா வெற்றிப் பெறுவதற்கு முன்பே, அதாவது, நமது ராணுவம் பஞ்சாப் பகுதியை அடைந்தவுடன், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதனால்தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிறந்தது. இல்லையென்றால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பஞ்சாப் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும். நேரு செய்த இரண்டாவது தவறு, இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னையை ஐ.நா-வுக்கு எடுத்துச் சென்றது. அதன் காரணமாகத்தான் இவ்வளவு நிலத்தை இந்த நாடு இழந்திருக்கிறது. இதுவும் ஒரு வரலாற்றுத் தவறு.
கடந்த 70 ஆண்டுகளாக உரிமைகள் பறிக்கப்பட்ட பண்டிட்களுக்கு இந்த இரண்டு மசோதாக்களும் நீதி வழங்கும். இடம்பெயர்ந்த மக்களுக்காக, சட்டசபையில் குரல் கொடுப்போம். நான் இங்குக் கொண்டுவந்திருக்கும் மசோதா, அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கும், அவமதிக்கப்பட்டவர்களுக்கும், புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும் நீதி வழங்குவது மற்றும் உரிமைகளை வழங்குவது தொடர்பானது" எனக் குறிப்பிட்டார்.ஃபரூக் அப்துல்லா
அமித் ஷாவின் கருத்துரைக்குப் பதிலளித்த ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா, ``இந்தியா பாகிஸ்தான் போர் நடந்துகொண்டிருந்தபோது, பூஞ்ச், ரஜோரி பகுதிகளைக் காப்பாற்ற இந்திய ராணுவம் திசை திருப்பப்பட்டது. அப்படிச் செய்யாமல் இருந்திருந்தால் பூஞ்ச், ரஜோரியைக்கூட பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும். இதைத் தவிர அப்போது வேறு வழியில்லை. ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தை சர்தார் வல்லபாய் படேலும், மவுன்ட் பேட்டன் பிரபுவும் ஐக்கிய நாடுகள் சபைக்குச் எடுத்துச் செல்ல வேண்டும் என்று பரிந்துரைத்தார்கள்" எனக் கூறினார்.J & K: ஜம்மு காஷ்மீரில் மீண்டும் அதிகரிக்கும் துப்பாக்கிச் சத்தம்... என்னதான் நடக்கிறது அங்கு?
http://dlvr.it/SzqTtN