மிக்ஜாம் புயல் சென்னையைப் புரட்டிப்போட்டது ஒருபக்கமிருக்க, புயல் மற்றும் பெருமழைக்கான முன்னெச்சரிக்கைப் பணிகளையும் மீட்புப்பணிகளையும் மேற்கொள்வதில் தி.மு.க அரசு கோட்டைவிட்டதாக விமர்சிக்கப்படுகிறது. இது குறித்து விரிவாக விசாரித்தோம். சென்னை வெள்ளம்
நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், ``புயல் தொடர்பான அறிவிப்புகளை தி.மு.க அரசு வெளியிட்டபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்றே கருதப்பட்டது. ஆனால், மழை பெய்து நான்கு நாள்கள் ஆகியும் மடிப்பாக்கம், வேளச்சேரி, வடசென்னை, சோழிங்கநல்லூர் பகுதிகள் எனப் பல இடங்களில் நீர் தேங்கியிருப்பதால், நீரை வெளியேற்றும் ராட்சத பம்புகள் பெரிய அளவில் தயாராக இல்லை என்பது தெரியவருகிறது.மழை வெள்ளம்:
மேலும், மழைக்குப் பிறகு பால் தட்டுபாடு வரும் என்பது எல்லா மழைக்காலத்திலும் கற்ற பாடம். ஆனால், இந்த முறையும் பால் இல்லை என்றால் அரசு எவ்வளவு மெத்தனமாக இருந்திருக்கிறது என்று பார்க்கலாம். இதுவரை வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களை அரசு அணுகவே இல்லை என்றால் பணியாளர் நியமனம், திட்டமிடல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையோ என்ற கேள்வி எழுகிறது. இவற்றுக்கும் மேலாக மழை வடிகால் திட்டத்தில் அரசு முற்றாகக் கோட்டைவிட்டதாகப் பார்க்கப்படுகிறது” என்றனர்வடபெரும்பாக்கம் | வெள்ளம்
நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் சி.டி.ஆர்.நிர்மல் குமார், ``புயல் அறிவிப்புகள் முன்னரே வந்தபோதும், அரசின் எந்தத் துறையும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படவில்லை. பெருமழைக்குப் பிறகு பால் கிடைக்கவில்லை, மின்சார விநியோகம் சீராகவில்லை, பாதிக்கப்பட்ட மக்களை மீட்க வழியில்லை. 16,000 மீட்புப்பணியாளர்கள் இருப்பதாக முதலில் சொன்னார்கள். பிறகு எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்கள். வார்டுக்கு இத்தனை பேர் என நியமித்திருந்தால் அனைத்து மக்களையும் ஒரே நாளில் சென்றடைந்திருக்கலாம். ஆனால் 50% மக்களுக்கு எந்த உதவியுமில்லை.நிர்மல் குமார்
98% வடிகால் பணிகள் முடிந்ததாகக் குத்துமதிப்பாகச் சொன்னார்கள். எங்கே முடிந்தது.. எங்கே தொடங்கவில்லை என்ற விவரம் முதலமைச்சர் உட்பட யாருக்குமே தெரியவில்லை. 4,000 கோடி ரூபாய் செலவிட்டோம் என இவர்கள் சொல்லும் வடிகால் திட்டம் டோட்டல் ஃபெயிலியர். அதன் புளூ பிரின்ட்கூட யாரிடமும் இல்லை. வடிகால் பணிகளைக் குளறுபடிகளுடன் மேற்கொண்டதால் நீர் தேங்காத இடங்களில் நீர்தேங்கி நிற்கிறது” என்றார் கொதிப்புடன். மழை வெள்ளம்
நம்மிடம் பேசிய நாம் தமிழர் இடும்பாவனம் கார்த்திக், ``ஒரு நாள் மழைக்கே சென்னை வெள்ளக்காடாக மாறுவதுதான் திராவிட மாடல் அரசின் லட்சணம். தமிழகத்தின் தலைநகரமாகவும், தொழில் நகரமாகவும் விளங்கும் சென்னையில் அடிப்படை நீர்வழிப்பாதைகளைக்கூட கட்டமைக்காமல், மக்களைத் திண்டாட வைத்திருக்கிறது தி.மு.க அரசு. தண்ணீரைத் தேங்கவிடாமல் வடிகால் அமைப்பிலும், வாய்க்கால் அமைப்பிலும் கவனம் செலுத்தாமல் உணவுப்பொருள்கள் தருவதும், தண்ணீரை இறைத்து வெளியேற்றுவதும் என தன்னார்வலர்கள் செய்யும் வேலைகளையே அரசும் செய்துகொண்டிருப்பது வேடிக்கை.இடும்பாவனம் கார்த்திக்
பல்லாயிரக்கணக்கில் வடிகால் திட்டங்களுக்குச் செலவிட்டதாகச் சொல்கிறார்கள். அதனால் என்ன பயன், பல்லாயிரம் கோடியை வைத்து என்ன செய்தனர்... இதைவிட பெரும் கொடுமை, மழையில் சிக்கிய மக்களை மீட்க பெருங்கூட்டம் முயலும் நிலையில், மழைநீரெல்லாம் வடிந்து, இயல்பு வாழ்க்கை திரும்பி மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதுபோல தி.மு.க-வினர் பரப்புவது கொடுமையிலும் கொடுமை” என்றார்.முத்தரசன்
நம்மிடம் பேசிய சி.பி.ஐ முத்தரசன், ``மழைநீர் வடிகால் பணிகளில் அரசு தொடர்ச்சியாக கவனம் செலுத்தினார்கள். அரசு எதுவுமே செய்யவில்லை என்றால் பாதிப்புகள் இன்னும் கடுமையாக இருந்திருக்கும். கடல் சீற்றம் இருப்பதால் தண்ணீர் உள்வாங்கப்படவில்லை என்பதே பிரச்னை. இருந்தாலும், மழைநீர் வடிகால் தொடர்பான பிரச்னைகள் அடிக்கடி எழுவதால் வடிகால் கட்டமைப்பு குறித்து ஆய்வுசெய்ய தமிழ்நாடு அரசு குழு அமைத்திட வேண்டும்” என்றார். தேங்கி நிற்கும் மழைநீர்
நம்மிடம் பேசிய சமூகச் செயற்பாட்டாளர்கள் சிலர் ``மின்சாரமில்லை, நீர் தேங்கியிருக்கிறது என்பதைக்கூடப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க முடியாத, குடிநீரையும் பாலையும்கூட கொண்டு சேர்க்க முடியாத கையறுநிலையில் அரசு இருக்கிறதா என்ற சந்தேகம் கிளம்புகிறது. சொல்லப்போனால் புயலைக் கையாள்வதில் தி.மு.க ஃபெயில் என்றே கூற வேண்டும்” என்றனர் கோபத்துடன்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
மிரட்டிய மிக்ஜாம்... தத்தளிக்கும் தலைநகர்! | Flood Day Roundup
http://dlvr.it/SzszSp