பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் அதிகமாக மது அருந்தக்கூடியவர் என்று ஏற்கெனவே செய்திகள் வெளியாகி இருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் மதுவை கைவிடுவதாக மான் குறிப்பிட்டு இருந்தார். அவர் ஏற்கெனவே அமெரிக்காவில் இருக்கும் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவி இப்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து முதல்வர் மான் மகள் ஷீரத் மான் தனது தந்தை குறித்து பேசிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. அதில், ``நான் இந்த வீடியோவை வெளியிடுவதற்கு எந்த வித அரசியல் நோக்கமும் கிடையாது. என்னைப்பற்றிய கதை வெளியில் வரவேண்டும் என்ற நோக்கத்தில் வெளியிடுகிறேன். எங்களை பற்றி முதல்வர் மான் தெரிவித்த தகவல்கள்தான் உங்களுக்கு தெரியும்.
இது வரை நானும் எனது தாயாரும் அமைதியாகத்தான் இருக்கிறோம். நாங்கள் அமைதியாக இருக்கிறோம் என்பதற்காக நாங்கள் பலவீனமானவர்கள் என்று நினைத்துக்கொண்டனர். நாங்கள் அமைதியாக இருப்பதால்தான் அவர்(மான்) இந்த அளவுக்கு உயரிய பதவியில் இருக்கிறார் என்பது அவருக்கு தெரியாது. முதல்வரின் மனைவி டாக்டர் குர்கிரத் கர்ப்பமாக இருக்கிறார்.
முதல்வர் மூன்றாவது முறையாக தந்தையாகிறார். மற்றவர்கள் மூலம் இதை தெரிந்து கொண்டேன். முதல்வர் இது குறித்து என்னிடமோ எனது சகோதரனிடமோ தெரிவிக்கவில்லை. உங்களுக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் இருக்கிறது. அவர்களை கவனிக்காமல் விட்டுவிட்டீர்கள். இப்போது மூன்றாவது குழந்தையை இந்த உலகத்திற்கு கொண்டு வர விரும்புகிறீர்கள். அதற்கு என்ன காரணம்?.
முதல்வரின் மகன் தோஷன் இரண்டு முறை முதல்வரை சந்திக்க சென்றார். அவன் தனது தந்தையுடன் நேரத்தை செலவிட விரும்பினார். ஆனால் அவரை முதல்வர் வீட்டிற்கு வர அனுமதிக்கப்படவில்லை. இரண்டு முறையும் எவ்வளவோ நடந்துவிட்டது. தோஷன் சண்டிகரில் குடும்ப நண்பரின் வீட்டில் தங்கி இருந்தார். அவர் மீண்டும் ஒரு முறை முதல்வர் வீட்டிற்கு சென்றார். அவர் வீட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார். இனி வரக்கூடாது என்று சொல்லிவிட்டனர். சொந்த குழந்தைகளின் பொறுப்பை ஏற்க முடியாத ஒருவரால்... பஞ்சாப் மக்களுக்கு பொறுப்பு ஏற்க முடியாது.
முதல்வர் அரசியலுக்கு வரக்கூடாது என்று அம்மா விரும்பியதால் அவரை விவாகரத்து செய்ததாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார். விவாகரத்துக்கு பல காரணங்கள் இருக்கிறது. அந்த கதையை எனது அம்மா சொல்வார். எனது அம்மா எப்போது அதற்கு தயாராகிறாரோ அப்போது அதனை சொல்வார்.
மது பழக்கம், உணர்ச்சி மற்றும் உடல் ரீதியான தாக்குதல், பொய் சொல்லும் பழக்கம் மற்றும் உணர்ச்சிப்பூர்வமாக மிரட்டுவது முதல்வர் மானின் பழக்கம் ஆகும்.
சட்டமன்றம், குருத்வாரா அல்லது பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு செல்லும் போது குடிபோதையில் இருப்பார்'' என்று ஷீரத் தனது தந்தை மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். பஞ்சாப் முதல்வராக மான் பதவியேற்ற போது அமெரிக்காவில் வசிக்கும் அவரது இரண்டு பிள்ளைகளும் வந்து கலந்து கொண்டனர். ஆனால் மான் இரண்டாவது திருமணம் செய்த பிறகு நிலைமை மாறி இருக்கிறது. ஷீரத்தின் குற்றச்சாட்டு குறித்து மான் எதுவும் தெரிவிக்கவில்லை. ``இரவும், பகலும் குடித்துக்கொண்டிருந்தால் உயிரோடு இருக்க முடியுமா?" - பகவந்த் மான் காட்டம்
http://dlvr.it/Szxs7L