கோவை மாநகர் பா.ஜ.க அலுவலகத்தில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி ஸ்ரீனிவாசன், பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ``தற்போது காங்கிரஸ் எம்.பி தீரஜ் சாஹுவின் வளாகத்தில் நடந்து கொண்டிருக்கும் வருமான வரித்துறை சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு, 200 கோடி ரூபாயைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. பணம் எண்ணக்கூடிய இயந்திரமே பழுதாகும் அளவுக்குப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இதைத் தட்டிக்கேட்டால், இந்தச் சோதனையின் பின்னணியில் ஆளுங்கட்சியின் அரசியல் அடங்கியுள்ளது எனப் பொய் குற்றம்சாட்டுகின்றனர். இந்த வருமான வரித்துறை சோதனையில் கைப்பற்றிய பணத்தைப் பற்றி இந்தியா அலையன்ஸ் கூட்டணியிலிருந்து ஒருவர்கூட பேசவில்லை.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகக் கூட்டணி அமைத்திருக்கிறோம் என்று சொல்லக்கூடிய தி.மு.க-வின் தலைவரான ஸ்டாலின், பீகாரின் நிதிஷ் குமார், மேற்கு வங்காளத்தின் மம்தா பானர்ஜி என ஒவ்வொருவருக்குப் பின்னாலும், இப்படிப் பல கோடி ரூபாய் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள் நெருக்கமாக இருக்கின்றனர். இவ்வாறான கூட்டணி எப்படி ஒரு நாட்டை ஆளும்... அதனால்தான் நரேந்திர மோடி சொல்கிறார் 'சட்டத்திற்குப் புறம்பாகச் சேர்க்கப்பட்ட பணத்தையும் எடுத்து ஏழைமக்களுக்குக் கொடுப்பதுதான் என்னுடைய உத்தரவாதம்' என்று.
மிக்ஜாம் புயல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வெள்ள நிவாரண பணிகள் குறித்து அமைச்சர்கள் மாற்றி மாற்றிப் பேசிவருகின்றனர். ஒருவர், வெள்ள நிவாரணத்தில் 98 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ளது என்று கூறுகிறார்.
4,000 கோடி மதிப்புள்ள பணம் செலவழிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார். ஆனால் அவ்வளவு பணம் செலவழித்த பிறகும் ஏன் சென்னையின் நிலைமை இவ்வாறுள்ளது என்று கேட்கையில், குறைவான அளவிலேயே பணிகள் முடிவடைந்துள்ளது என்று மாற்றிப் பேசுகிறார் இன்னொருவர். இவ்வாறான ஏமாற்று நாடகத்தை தி.மு.க இங்கு நடத்திக்கொண்டிருக்கிறது. மேலும் மிக்ஜாம் புயலுக்கு இழப்பீடாகத் தமிழக மக்களுக்கு அரசு, ரேஷன் கார்டு வாயிலாக 6,000 ரூபாய் தருவதாக நேற்று அறிவித்துள்ளது. அதை 10,000 ரூபாயாக உயர்த்த வேண்டுமென பா.ஜ.க மாநிலத் தலைவர் கோரிக்கை வைத்துள்ளார்.வானதி சீனிவாசன்
மேலும், முக்கியமாக வெள்ள நிவாரணமாக மக்களுக்குக் கொடுக்கவேண்டிய பணத்தை ரேஷன் கார்டு வாயிலாகத் தராமல், மக்களுடைய வங்கிக் கணக்குக்கு நேரடியாகப் போய்ச் சேர வழிவகை செய்ய வேண்டும். இதன் மூலம் இடைத்தரகர்களின் கையில் இந்தப் பணம் போய்ச் சேர்வதைத் தடுப்பதுடன், பணம் கொடுக்கப் பணம் செலவழிப்பதைத் தடுக்கலாம்.
கோவை மாவட்டத்துக்கு ஒரு நற்செய்தி. விரைவில் கோவைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வரப்போகிறது. பெங்களூருவையும் கோயம்புத்தூரையும் இணைக்கும் வகையில் பல்வேறு வசதிகளையும் இந்த திட்டம் கொண்டுவரப் போகிறது" என்றார்.காலில் விழுந்து நன்றி தெரிவித்த வானதி சீனிவாசன்; தடுத்து அறிவுரை சொன்ன மோடி - நடந்தது என்ன?!
http://dlvr.it/Szyxqk