2019-ல் மத்திய பா.ஜ.க அரசு ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ ரத்துசெய்தது. அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட மனுக்களை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான நீதிமன்ற அமர்வு விசாரித்த நிலையில்,``ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்தது செல்லும். 2024 செப்டம்பருக்குள் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த வேண்டும்" எனத் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு பா.ஜ.க-வினரால் வெகுவாக வரவேற்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, நேற்று நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீரில் சட்டசபை இடங்களை அதிகரிப்பது, எஸ்.சி, எஸ்.டி பிரதிநிதித்துவம் உள்ளிட்ட திருத்தங்களுடன் ஜம்மு காஷ்மீர் மறுவரையறை 2019 திருத்த மசோதாவைத் தாக்கல் செய்தார்.அமித் ஷா
இந்த மசோதா மீதான விவாதத்தின் போது தி.மு.க சார்பில் பேசிய எம்.பி அப்துல்லா, ”நமது முன்னோர்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும். ஜம்மு காஷ்மீர் மகாராஜா ஹரிசிங்குக்கு சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற முன்னோர்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி இருக்க வேண்டும். வல்லபாய் பட்டேலுக்கு பிரமாண்ட சிலை வைப்பதை விட அவரின் வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதுதான் மிகவும் முக்கியமானது. மேலும், ஒவ்வொரு இனமும் தங்களது தலைவிதியைத் தீர்மானித்துக் கொள்ள உரிமை உண்டு எனத் தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளார். எனவே, 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்தது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதல்” எனப் பேசினார்.
இதில் பெரியாரின் கருத்து ஏற்கமுடியாது என பா.ஜ.க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.
இதற்கிடையே பேசிய மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், "370-வது சட்டப்பிரிவை ரத்து செய்தது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதல் என வர்ணித்த தி.மு.க உறுப்பினரின் கருத்தை ஏற்க முடியாது. இனத்தின் அடிப்படையில் தீர்மானிப்பது, அரசியலமைப்பின் சாரத்திற்கு எதிரானது. நாடாளுமன்ற அவையில், கருத்துச் சுதந்திரம் எனும் உரிமையால் தேசத் துரோகக் கருத்தைக் கூட மேற்கோள் காட்ட முடியுமா என்ன? தி.மு.க உறுப்பினர் அப்துல்லாவின் கருத்து நமது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது. அதை ஏற்க முடியாது.திமுக எம்.பி அப்துல்லா
இந்தக் கருத்து பேச்சு சுதந்திரத்துக்குத் தகுதியற்றது. இது போன்ற பிரச்னையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? நாம் அனைவரும் அரசியலமைப்பின் மீது சத்தியப்பிரமாணம் செய்துள்ளோம். இது பேச்சு சுதந்திரம் அல்ல. ஒரு உறுப்பினரின் இத்தகைய தவறான செயல்களை நாம் எவ்வாறு எதிர்கொள்வது? உறுப்பினர் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் ஏற்றுக்கொள்ள முடியாது. நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நம்பிக்கை உள்ளவர்களால் இதை ஏற்க முடியாது. எனவே, அந்த பகுதிகளை நான் நீக்குகிறேன்" என்றார்.
அதைத் தொடர்ந்து, பெரியாரின் பெயருடன், அவருடைய கருத்துகளும் நாடாளுமன்ற அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.
அப்போது குறுக்கிட்ட தி.மு.க உறுப்பினர் அப்துல்லா, "நான் கூறமுனைந்ததை அவைக்குத் தவறாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. அவைத் தலைவர் எனது கருத்துகளைத் தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்" என விளக்கமளிக்க முன்வந்தார்.
அப்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுந்து, "தி.மு.க-வுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், தி.மு.க உறுப்பினருடைய கருத்துடன் உடன்படுகிறீர்களா என்பதைக் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று பதில் சொல்ல வேண்டும்" எனப் பேசினார்.ஜக்தீப் தன்கர்
இதற்கு மத்தியில் பேசிய தி.மு.க எம்.பி திருச்சி சிவா, "மத்தியில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் 370வது பிரிவை மீண்டும் அமல்படுத்தி ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவோம். எம்.பி அப்துல்லா பேசியதிலும், பெரியாரின் கருத்திலும் என்ன தவறு இருக்கிறது? அது ஏன் அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்" எனக் கண்டனம் தெரிவித்தார்.
இதற்கு நடுவே குறுக்கிட்ட அமித் ஷா, "திருச்சி சிவா தி.மு.க சார்பில் பேசுகிறாரா அல்லது இந்தியா கூட்டணி சார்பில் பேசுகிறாரா?" எனக் கேள்வி எழுப்பினார். மேலும், எம்.பி திருச்சி சிவாவின் கருத்துக்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. இதனால், அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, "அவை உறுப்பினர் ஒருவரின் கருத்து சபையின் அலுவல் விதிகளுடன் ஒத்துப்போகவில்லை என்றால், அவைத் தலைவர் அந்தக் கருத்துக்களை நீக்கலாம். இது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று சொல்வதால் மட்டும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது" எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், "தி.மு.க உறுப்பினர் மேற்கோள் காட்டி, பேசிய பெரியார் கூறிய கருத்து எந்தச் சூழலில் தெரிவிக்கப்பட்டது என்பதை ஆய்வு செய்து சரிபார்க்குமாறு அவைத் தலைவரைக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.அமித் ஷா - மல்லிகார்ஜுன கார்கே
இதற்கிடையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சி தலைவரிடம், "எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. தி.மு.க உறுப்பினர் கூறியதைக் காங்கிரஸ் ஆதரிக்கிறதா... அப்துல்லாவின் இந்த அறிக்கையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?" எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "அப்துல்லா பெரியாரை மேற்கோள் காட்டியிருக்கிறார். அதை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பது விவாதத்திற்குரிய விஷயமாக இருக்கலாம், ஆனால் ஒருவரை நாடாளுமன்றத்தில் பேசவிடாமல் தடுப்பது ஜனநாயக விரோதமானது" எனத் தெரிவித்தார்.
சி.பி.ஐ எம்.பி சந்தோஷ் குமார், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் பிரிவு 370 மசோதாவை எதிர்த்து, "இந்த விவகாரத்தில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தை அமைக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இந்த விவாதத்துக்குப் பிறகு, தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில்,"மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி அப்துல்லா உரையாற்றும்போது சுட்டிக்காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரியாரின் பெயரும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது!முதல்வர் ஸ்டாலின்
மண்டல் ஆணையப் பரிந்துரையை அமல்படுத்தியபோது தந்தை பெரியார்தான் இதற்குக் காரணம் என்று பிரதமர் வி.பி.சிங் பேசிய நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவமானம்! மக்களின் மனங்களில் நிலைத்து நின்று, வகுப்பு வாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும் தந்தை பெரியாரின் பெயரை எங்கும் - எப்போதும் - எந்தச் சூழலிலும் பயன்படுத்துவோம்! அனைவரும் பயன்படுத்துங்கள்!" எனப் பதிவிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
`தந்தை பெரியார் தனி மனிதர் அல்லர்; பெரிய இயக்கம்!' - டி.டி.வி.தினகரன்
http://dlvr.it/T01bsl