கேரள மாநிலத்தில் பல்கலைக்கழகங்களில் வேந்தர்களை நியமிப்பது தொடர்பாக ஆளும் சி.பி.எம் அரசுக்கும், கவர்னர் ஆரிஃப் முகமது கானுக்கும் இடையே அதிகார மோதல் நடந்துவருகிறது. இந்த நிலையில் கவர்னருக்கு எதிராக சி.பி.எம் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ உள்ளிட்டவை கறுப்புக்கொடி காட்டுதல் போன்ற போராட்டங்களை நடத்திவருகின்றன. பல்கலைக்கழகங்ககுக்கு கவர்னர் காவிபூச முயல்கிறார் எனக் கூறி கடந்த வெள்ளிக்கிழமை ராஜ் பவன் முன்பு எஸ்.எஃப்.ஐ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் நேற்று இரவு கவர்னர் ஆரிஃப் முகமது கான் டெல்லிக்குச் செல்வதற்காக கவர்னர் மாளிகையிலிருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.
அவர் காரில் பயணித்தபோது ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குள் மூன்ரு இடங்களில் எஸ்.எஃப்.ஐ அமைப்பினர் கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர். திருவனந்தபுரம் பேட்டை பள்ளிமுக்கு பகுதியில் கவர்னர் ஆரிஃப் முகமது கான் காரில் சென்றுகொண்டிருந்த சமயத்தில், எஸ்.எஃப்.ஐ அமைப்பினர் ரோட்டில் இறங்கி கவர்னருக்கு கறுப்புக்கொடி காட்டி கோஷங்களை எழுப்பினர். போலீஸார் தடுத்து நிறுத்தியும் நிற்காமல் ரோட்டில் ஓடிச் சென்று கறுப்புக்கொடி காட்டினர்.நடுரோட்டில் இறங்கி திட்டிய கவர்னர் ஆரிஃப் முகமது கான்
அப்போது காரை நிறுத்தச் சொன்ன கவர்னர் ஆரிஃப் முகமது கான் காரிலிருந்து வெளியே இறங்கி, ``ஃபூல்ஸ், கிரிமினல்ஸ், வாருங்கள்... தாக்க வருவதென்றால் வாருங்கள். நான் பயப்பட மாட்டேன். யார் இங்கிருக்கும் சீனியர் போலீஸ் ஆபீஸர்?" என நடுரோட்டில் ஆவேசமானார். பின்னர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கவர்னர் ஆரிஃப் முகமது கான், "முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி என்மீது தாக்குதல் நடத்த முயல்கிறார்கள். தலைநகரம் குண்டர்களின் ராஜ்ஜியம் ஆகிவிட்டது. கிரிமினல்கள் எனது கார் கண்ணாடியில் வந்து இடித்தனர். எனக்குப் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை" என்றார் காட்டமாக.பினராயி விஜயன், ஆரிஃப் முகமது கான்
இதற்கிடையே கவர்னருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.எஃப்.ஐ அமைப்பைச் சேர்ந்த 19 பேரை போலீஸார் கைதுசெய்தனர். அவர்களில் 11 பேர்மீது ஜாமீன் கிடைக்காத பிரிவில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே 'நவகேரள சதஸ்' என்ற பெயரில் பஸ்ஸில் யாத்திரை நடத்தும் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டுவருகின்றனர். நேற்று முன்தினம் முதல்வர் பினராயி விஜயன் பயணித்த பஸ்ஸை நோக்கி கறுப்பு ஷூவை வீசிய காங்கிரஸ் நிர்வாகிமீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்யப்பட்டது. எனவே கவனர் கார்மீது இடித்து கறுப்புக்கொடி காட்டிய எஸ்.எஃப்.ஐ நிர்வாகிகள் மீது கொலை முயற்சி வழக்கு தொடரப்படுமா என காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆளுநர் Vs அரசு விவகாரத்தால் கேரளாவிலும் பரபரப்பான நிலையே தொடர்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/T02LfR