பிரசவத்துக்குப் பெண்களுக்குச் சம்பளத்துடன்கூடிய விடுமுறை கொடுக்கப்படுகிறது. அதே போன்று மாதவிடாய்க்கு பெண்களுக்குச் சம்பளத்துடன்கூடிய விடுமுறை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்துவருகிறது. இந்தப் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர் கேள்வி எழுப்பினார். ராஷ்ட்ரிய ஜனதா தள உறுப்பினர் மனோஜ் குமாரும் ராஜ்ய சபாவில் இது குறித்துக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, ''பெண்களுக்கான மாதவிடாய் மற்றும் மாதவிடாய் சுழற்சி ஒரு குறைபாடு கிடையாது. ஸ்மிருதி இரானி
பெண்களின் வாழ்க்கைப் பயணத்தில் அதுவும் ஓர் இயற்கையான பகுதி. மாதவிடாய் இல்லாத ஒருவருக்கு மாதவிடாய் குறித்து ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டம் இருக்கிறது என்பதற்காக, பெண்களுக்கு சம வாய்ப்புகள் மறுக்கப்படும் பிரச்னைகளை முன்மொழியக் கூடாது.
சில பெண்கள்/ சிறுமிகள் கடுமையான டிஸ்மெனோரியா அல்லது இதே போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பிரச்னைகள் பெரும்பாலானவை மருந்துகளால் சரிசெய்யப்படுகின்றன. இருப்பினும், மாதவிடாய் மற்றும் அதனுடன் தொடர்புடையவை பெரும்பாலும் அவமானத்துடன் நடத்தப்படுகின்றன. மாதவிடாய்
மேலும் மாதவிடாய் நபர்களின் நடமாட்டம், சுதந்திரம் மற்றும் சாதாரண நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இது பல நேரங்களில், துன்புறுத்தலுக்கும், சமூக விலக்கலுக்கும் வழிவகுக்கிறது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து மாதவிடாய் சுகாதார வரைவுக் கொள்கை வகுக்கப்பட்டிருக்கிறது'' என்று தெரிவித்தார்.
10-19 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளிடையே மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தை மத்திய அரசு ஏற்கெனவே கொண்டுவந்திருக்கிறது. பணியில் இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சம்பளத்துடன்கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தியாவில் சில தனியார் நிறுவனங்கள் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஆண்டுக்கு 10 நாள்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி கொடுத்திருக்கின்றன.Mahua Moitra: `பாலினத்தை ஊழலுக்குக் கவசமாகப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது’ - ஸ்மிருதி இரானி
http://dlvr.it/T08x64