2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பெரிய கட்சியான திமுக-வும், அதிமுக-வும் அதற்கான பணிகளை துரிதப்படுத்தி வருகின்றன. இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கும் 2026-ல் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என்பதை அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார். இதனால், தமிழ்நாட்டில் பா.ஜ.க-வின் என்.டி.ஏ கூட்டணியில் விரிசல் விழுந்து இருக்கிறது. என்.டி.ஏ கூட்டணியில் இருந்த கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியும், பூவை ஜெகன் மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சியும் அ.தி.மு.க பக்கமும், ஜான்பாண்டியனின் தமிழக முன்னேற்ற கழகமும், ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக்கட்சியும் பா.ஜ.க பக்கமும் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி
அதன்படி, அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்படுவதாக பேச்சு அடிப்படுகிறது. அதேபோல, பூவை ஜெகன் மூர்த்தியும் சீட் கேட்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுதொடர்பாக அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, " 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து புரட்சி பாரதம் கட்சி அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்து வருகிறது. அதன்படி, 2021 சட்டமன்றத் தேர்தலில் புரட்சி பாரதத்துக்கு கே.பி.குப்பம் தொகுதி ஒதுக்கப்பட்டது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு ஜெகன் மூர்த்தி வெற்றியும் பெற்றார். பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என்பதை அறிவித்ததும், முதல் ஆளாக அதிமுக-வுக்கு ஆதரவு கொடுத்தது ஜெகன்தான். அவரின் கட்சி சார்பாக மனிதம் காப்போம் மாநாடு விழுப்புரத்தில் கடந்த டிசம்பர் 20-ம் தேதி நடத்தப்பட்டது. புரட்சி பாரதம் கட்சியின் மனிதம் காப்போம் மாநாட்டில் எடப்பாடி
அதில் சிறப்பு விருந்தினராக பொதுச் செயலாளர் எடப்பாடியை அழைத்து பெருமைப்படுத்தினார் ஜெகன். இதனால், எடப்பாடியும் ஜெகன் மீது நல்ல அன்பில் இருக்கிறார். இந்நிலையில்தான், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாட்டில் உள்ள 7 தனித்தொகுதியில் ஏதேனும் ஒரு தொகுதியை கேட்டு இருக்கிறார் ஜெகன். அதிலும் குறிப்பாக புரட்சி பாரதம் பலமாக இருக்கும் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் ஒன்றை குறிவைக்கிறார். இதுதொடர்பான பேச்சுவார்த்தை தலைமை கழகத்தில் நடந்து வருகிறது. நல்ல முடிவை எடப்பாடியாரே விரைவில் அறிவிப்பார்" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/T15qWn