குஜராத் கலவரத்தின்போது பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகள் 11 பேரையும், கடந்த ஆண்டு மாநில அரசு விடுதலை செய்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரித்து வந்தது. இதில் கடந்த வாரம் தீர்ப்பு கூறிய உச்ச நீதிமன்றம், குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை கடுமையாக விமர்சனம் செய்தது. குற்றவாளிகள் சரணடைய கோர்ட் உத்தரவிட்டது. `பில்கிஸ் பானு வழக்கு மும்பை கோர்ட்டில் நடந்தது என்பதால் அந்த மாநில அரசுதான் குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து முடிவு செய்ய வேண்டும்’ என்று கோர்ட் தெரிவித்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இத்தீர்ப்பை வழங்கியவர் நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வு.`கருவை பாதிக்கும் பிளாஸ்டிக்': ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீரில் 2,40,000 பிளாஸ்டிக் துகள்கள் - ஆய்வு!
நீதிபதி நாகரத்னா இதற்கு முன்பு பல முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கி இருக்கிறார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நாகரத்னா 2027-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்க இருக்கிறார். ஆனால், அவர் பதவியேற்ற ஒரு மாதத்தில் ஓய்வு பெற்றுவிடுவார். நாகரத்னா சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்தும், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தும் பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கி இருக்கிறார்.
நாகரத்னாவின் தந்தை வெங்கடராமையா, கர்நாடகாவில் இருந்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற முதல் நீதிபதி என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். 1962-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி பிறந்த நீதிபதி நாகரத்னா தன் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை டெல்லியில் முடித்தார். 1987-ம் ஆண்டு கர்நாடகா பார் கவுன்சிலில் தன்னை வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்ட நாகரத்னா, வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார்.
2008-ம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நாகரத்னா நியமிக்கப்பட்டார். 2010-ம் ஆண்டு நிரந்தர நீதிபதியானார். 2021-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தபோது, 2012-ம் ஆண்டு எலெக்ட்ரானிக் மீடியாவை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். தீர்ப்பு `இஸ்லாமிய பெண் மறுமணம் செய்தாலும், முதல் கணவரிடம் மெஹர் பெற உரிமை உண்டு' - மும்பை உயர்நீதிமன்றம்!
நாகரத்னா 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில் கோயில்கள் வர்த்தக நிறுவனம் கிடையாது என்றும், அங்கு பணிபுரிபவர்களுக்குக் கருணைத் தொகையான கிராஜுவிட்டி கொடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார். அதோடு சுப்ரீம் கோர்ட்டில் பணமதிப்பிழப்பு வழக்கு விசாரணையில் தீர்ப்பு கூறப்பட்டபோது, அதில் மற்ற நீதிபதிகளில் இருந்து நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பையே வழங்கினார். தன் தீர்ப்பில், பணமதிப்பிழப்பு நல்ல நோக்கத்தில் கொண்டு வரப்பட்டதுதான் என்றாலும் சட்டதந்துக்கு எதிரானது என்றும், வெறும் ஓர் உத்தரவு மூலம் இதைச் செயல்படுத்தக் கூடாது என்றும், பாராளு மன்றத்தின் மூலம் கொண்டு வந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
http://dlvr.it/T1FKJT