மொத்தம் 55 வார்டுகள் உள்ள நெல்லை மாநகராட்சியில் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பாக 51 கவுன்சிலர்கள் உள்ளனர். அ.தி.மு.க-வுக்கு நான்கு கவுன்சிலர்களே உள்ளனர். மாநகராட்சியில் அசுர பலத்துடன் இருக்கும் தி.மு.க-வின் சார்பாக பி.எம்.சரவணன் மேயராக தேர்வு செய்யப்பட்டார். தனக்கு வேண்டப்பட்டவர் என்கிற ஒரே காரணத்துக்காக அவருக்கு மேயர் பொறுப்பு கிடைக்க அப்போது மாவட்டச் செயலாளராக இருந்த அப்துல் வஹாப் ஏற்பாடு செய்தார். மேயர் சரவணன்
கட்சிக்காக உழைத்தவர்கள், மூத்த கவுன்சிலர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது அப்போதே கட்சிக்குள் விமர்சனத்தை ஏற்படுத்தியது. ஆனால் மேயர் சரவணன், தனக்கு வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்த அப்துல் வாஹாபுக்கு எதிராக ஓரிரு மாதங்களிலேயே முரண்பட்டார். அத்துடன், தனது வீட்டுப் பத்திரத்தை மிரட்டி வாங்கி வைத்துக் கொண்டதாக கட்சித் தலைமையிடம் புகார் அளித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
அப்துல் வஹாபுக்கு எதிரான நிலைப்பாட்டை மேயர் சரவணன் எடுத்ததால், ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் பலரும் அவருக்கு எதிரான மனநிலைக்குச் சென்றனர். மாநகராட்சிக் கூட்டங்களில் ஆளுங்கட்சி கவுன்சிலர்களே வெளிப்படையாக மேயரை குற்றம்சாட்டினார்கள். அத்துடன் மேயர் கொண்டுவரும் தீர்மானங்களை ஏற்க மறுத்து முரண்டு பிடித்தனர். மேலும் மேயரை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையுடன் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவிடமும் கட்சித் தலைமையிடமும் பலமுறை முறையிட்டனர். ஆனால் கவுன்சிலர்களை கட்சித் தலைமை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தது. சரவணன் மற்றும் அப்துல் வஹாப்
மேயருக்கும் ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்கும் எதிரான மோதல் முடிவுக்கு வராத நிலையில், மாவட்டச் செயலாளராக இருந்த அப்துல் வாஹாப் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் அமைச்சரான டி.பி.எம்.மைதீன்கான் நியமிக்கப்பட்டார். அதன் பின்னரும் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் திருச்சிக்கும் சென்னைக்கும் சென்று அமைச்சர் நேருவிடமும் கட்சித் தலைமையிடமும் புகார் தெரிவித்தனர். அதில் பலன் கிடைக்காததால் மாநகராட்சி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் இரு கவுன்சிலர்கள் மற்றும் ஒரு பெண் கவுன்சிலரின் கணவர் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
மாநகராட்சி டெண்டர்களில் கிடைக்கும் கமிஷன் பணத்தை முழுமையாக மேயர் சரவணன் எடுத்துக் கொள்வதே கவுன்சிலர்களுடனான மோதலுக்குக் காரணம் என பொதுமக்களே பேசிக் கொண்டனர். நெல்லை மாநகராட்சியின் அடிப்படை பிரச்னைகளைத் தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் தங்களுடைய கமிஷன் விவகாரத்துக்காக மேயரும் கவுன்சிலர்களும் மோதிக்கொண்ட சம்பவத்தால், பொதுமக்கள் மட்டுமல்லாமல் கட்சி நிர்வாகிகளும் மாநகராட்சி மீது அதிருப்தியடைந்தனர். மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள்
இந்த நிலையில், மாநகராட்சி ஆணையரை மாற்றினால் பிரச்னை முடிவுக்கு வரும் எனக் கருதி, அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் புதிய ஆணையர் வந்த பின்னரும் மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாநகராட்சி முழுமையாக முடங்கும் அளவுக்கு மேயருக்கும் கவுன்சிலர்களுக்குமான மோதல் வெளிப்படையாக நடைபெற்றது. இந்த நிலையில், மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக கடந்த மாதம் 38 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு ஆணையரிடம் மனு அளித்தனர்.
கவுன்சிலர்களின் கையெழுத்து உண்மையானது தானா என ஒவ்வொரு கவுன்சிலரையும் தனித்தனியாக அழைத்து ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் விசாரணை நடத்தினார். அதில் ஒவ்வொரு கவுன்சிலரும் தாங்கள் கையெழுத்திட்டது உண்மை என உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து ஜனவரி 12-ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதமும் வாக்கெடுப்பும் நடத்தப்படும் என அறிவித்தார். அதனால் அடுத்து என்ன நடக்குமோ என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் மாநகராட்சி
இந்த நிலையில், மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றால், ஆளுங்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என தி.மு.க தலைமை கருதுகிறது. இந்த விவகாரம் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதோடு, தமிழகம் முழுவதும் பல்வேறு மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இதே போன்ற பிரச்னை நிலவுவதால், அடுத்தடுத்து நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டுவரப்படும் என்கிற அச்சம் எழுந்துள்ளது.
நெல்லை மாநகராட்சியில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படாமல் தடுக்க மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசு அனுப்பிவைக்கப்பட்டார். அவர் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரும், மேயரை மாற்ற வேண்டும் என்கிற தங்களின் கோரிக்கையில் கவுன்சிலர்கள் பிடிவாதமாக இருந்தனர். மாவட்ட பொறுப்பாளரான டி.பி.எம்.மைதீன்கான் பேச்சையும் கவுன்சிலர்கள் கேட்கவில்லை. அதனால் முன்னாள் மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான அப்துல் வஹாப் மற்றும் மாலைராஜா ஆகியோர் இதில் தலையிட்டு சமரச முடிவைக் கொண்டுவர கட்சித் தலைமை உத்தரவிட்டது.டி.பி.எம்.மைதீன்கான்
அப்துல் வஹாப் தரப்பில் 40-க்கும் அதிகமான கவுன்சிலர்கள் இருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் இரு குழுக்களாக குற்றாலம், கேரளாவின் பூவாறு என சுற்றுலா சென்றுள்ளனர். அத்துடன் கவுன்சிலர்களுக்கு பணம் வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த கூட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என கட்சித் தலைமை விரும்புகிறது. அதற்காக அப்துல் வஹாப் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு தொடர்ந்து பேசிவருகிறார்.
இது குறித்து ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் சிலரிடம் பேசியபோது, “நெல்லை மாநகராட்சி முடங்கிப் போனதற்கு மேயர் சரவணன் மட்டுமே காரணம். எந்த வேலை நடந்தாலும் அதில் தனக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும் என கணக்குப் போடுகிறாரே தவிர மக்கள் நலனில் துளியும் அக்கறை காட்டவில்லை. அதனால் வார்டு மக்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக வேண்டிய சூழல் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவரை மாற்றினால் மட்டுமே மக்களிடம் கட்சிக்கு நல்ல பெயர் ஏற்படும்.தி.மு.க கவுன்சிலர்கள்38 கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தபோதே மேயர் பொறுப்பில் இருந்து விலகியிருக்க வேண்டும்
அதன் காரணமாகவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளோம். கட்சித் தலைமை சார்பாக பேசியவர்கள், எங்களின் கோரிக்கையை ஓரிரு மாதங்களில் பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறார்கள். 55 கவுன்சிலர்களில் 38 பேர் மேயருக்கு எதிராக கையெழுத்திட்டுள்ளோம். மேயர் சரவணன் நியாயமானவராக இருந்தால் அப்போதே தனது பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்திருக்க வேண்டாமா? இருந்தாலும் கட்சியின் முடிவுக்குக் கட்டுப்படுவோம்” என்றார்கள்.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கான கூட்டம் நடக்க வேண்டுமானால் 80 சதவிகிதம் கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் இருக்க வேண்டும். அதன்படி 44 கவுன்சிலர்கள் பங்கேற்றால் மட்டுமே கூட்டம் நடைபெறும். ஆனால் கட்சித் தலைமையின் வேண்டுகோளை ஏற்று பெரும்பான்மையான தி.மு.க கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் எனத் தெரிகிறது. அதனால் தற்போதைக்கு நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனின் பதவிக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இல்லை என்கிறார்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள். நெல்லை: "மேயர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!" - திமுக கவுன்சிலர்கள் மனு
http://dlvr.it/T1FjhW