மகாராஷ்டிராவில் 2022-ம் ஆண்டு சிவசேனா தற்போது முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனி அணியாக பிரிந்தது. இதையடுத்து ஏக்நாத் ஷிண்டேயுடன் சென்ற எம்.எல்.ஏ.க்களை கட்சித்தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதவியை பறிக்கவேண்டும் என்று கோரி சபாநாயகர் ராகுல் நர்வேகர், உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த சபாநாயகர் ராகுல் நர்வேகர் சமீபத்தில் தனது முடிவை அறிவித்தார். அதில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவே உண்மையான சிவசேனா என்று அறிவித்தார். அதேசமயம் எம்.எல்.ஏ.க்கள் யாரின் பதவியையும் பறிக்கவில்லை. சபாநாயகரின் இந்த உத்தரவு முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் தற்போது புதிய திருப்பமாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 16 பேரும் ஏக்நாத் ஷிண்டே அணியின் கட்சி கொறடா பரத் கோகாவாலா பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு கட்டுப்படவேண்டும் என்று சபாநாயகர் ராகுல் நர்வேகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ''உண்மையான சிவசேனாவாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே அணியின் கொறடா பரத் கோகாவாலா பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு உத்தவ் தாக்கரே அணி எம்.எல்.ஏ.க்கள் கட்டுப்படவேண்டும். அவ்வாறு உத்தரவை மீறி செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு கட்சிக்கு இரண்டு கொறடா இருக்க முடியாது.
சட்டமன்றத்திலும் உத்தவ் தாக்கரே ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இனி ஆளும் கட்சி உறுப்பினர்கள் அமரும் இடத்தில் அமரவேண்டும். சிவசேனா ஆளும் கட்சியாகும். எனவே அவர்கள்(உத்தவ்) எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமரும் இடத்தில் அமர்ந்தால் அதனால் ஏற்படும் நடவடிக்கைகளுக்கு அவர்கள்தான் பொறுப்பு. சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின் படிதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.
தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்திலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படுமா என்று கேட்டதற்கு, ''சட்டத்தின் கொள்கை ஒன்றுதான். ஆனால் உண்மைகளின் அடிப்படையில் ஒவ்வொரு வழக்கிற்கும் இது மாறுபடும்''என்றார்.
உத்தரவுக்கு முன்பு முதல்வரை ஏன் சந்தித்தீர்கள் என்று கேட்டதற்கு, ''எனது தொகுதி விவகாரம் குறித்தும், சில பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பது தொடர்பாக முதல்வரை சந்தித்து பேசினேன். முதல்வரும், சபாநாயகரும் சந்திப்பது வழக்கமான ஒன்றுதான்'' என்றார். உத்தவ் தாக்கரே
சபாநாயகரின் உத்தரவு தொடர்பாக உத்தவ் தாக்கரே தனது கட்சி நிர்வாகிகளை தனது இல்லத்திற்கு அழைத்துள்ளார். 2018-ம் ஆண்டு கட்சியின் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதை தேர்தல் கமிஷனுக்கு கொடுக்காதது குறித்து உத்தவ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 2018-ம் ஆண்டுக்கான கட்சியின் விதிகளின் மாற்றம் செய்யப்பட்டது தேர்தல் கமிஷனில் இல்லாத காரணத்தால் 1999ம் ஆண்டுக்கான கட்சியின் விதிகளின் அடிப்படையில் சபாநாயகர் எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார் என்கிறார்,
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/T1Hp2K