செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு; தள்ளுபடி செய்து உத்தரவிட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்!
ஜாமீன் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது.
பொன்முடி சரணடைவதில் இருந்து விலக்கு!
முன்னாள் அமைச்சர் பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவர் குற்றவாளி என அறிவித்தது. பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது நீதிமன்றம். மேலும் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனை ஒரு மாத காலம் நிறுத்திவைக்கப்பட்டது. ராஜகண்ணப்பன் - பொன்முடி
தொடர்ந்து பொன்முடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணையில், பொன்முடி, அவரின் மனைவி ஆகியோர் இந்த வழக்கில் சரணடைவதில் இருந்து உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.
நம்பிக்கை இல்லா தீர்மானம் கைவிடப்பட்டது - நெல்லை மாநகராட்சி ஆணையர்
நெல்லை மாநகராட்சி
திருநெல்வேலி மாநகராட்சி மேயர்மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கவுன்சிலர்கள் யாரும் வாக்கெடுப்புக்கு வரவில்லை. போதிய கவுன்சிலர்கள் வாக்கெடுப்புக்கு வராத காரணத்தினால் மேயர்மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் கைவிடப்பட்டதாக மாநகராட்சி ஆணையரால் அறிவிக்கப்பட்டது. இதனால் மேயரின் பதவி தப்பியது!
செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பு!
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பிறகு, அவர் ஜாமீன் கோரி 2 முறை தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் 3-வது முறையாக ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது நீதிமன்றம். செந்தில் பாலாஜி
முன்னதாக, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 15-வது முறையாக இம்மாதம் 22-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி நேற்று உத்தரவிட்டார். குறிப்பிடத்தக்கது. அன்றைய தினம் குற்றச்சாட்டு பதிவுக்காக அவரை நேரில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/T1HnhS