தென்கிழக்கு ஆசியாவின் சிறிய நாடான புரூனேவின் அரசர் சுல்தான் ஹஸ்ஸனல் போல்கியா. (Brunei Sultan Hassanal Bolkiah). இவரின் 6-வது மகன் இளவரசர் அப்துல் மதீன்(Prince Abdul Mateen - 32). இவரும், அரசரின் சிறப்பு ஆலோசகர்களில் ஒருவரான பெஹின் டத்தோ இசாவின் பேத்தியான அனிஷா ரோஸ்னா இசா-கலேபிக் (Anisha Rosnah Isa-Kalebic- 29)-க்கும் காதலித்து வந்ததாகத் தகவல் வெளியானது. புரூனே இளவரசரின் திருமண விழாபுரூனே இளவரசரின் திருமண விழா
இருவரும் 2022-ம் ஆண்டு இளவரசி ஃபட்ஸிலா போல்கியா, 2023-ல் இளவரசி அஸெமா நிஃமத்துல் போல்கியா ஆகியோரின் திருமண விழாக்களில் மட்டுமே ஒன்றாகக் காணப்பட்டனர். இவர்கள் குறித்த வேறெந்த தகவலும் வெளியாகவில்லை. அதைத் தொடர்ந்து, இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்தது.
அதன் தொடர்ச்சியாக கடந்த 7-ம் தேதி முதல் வரும் 16-ம் தேதி வரை 10 நாட்கள் தொடர்ச்சியாக திருமண விழா கொண்டாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த திருமணத்தின் முக்கிய நிகழ்வான திருமண சடங்கு, சுல்தான் உமர் அலி சைபுதீன் மசூதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.புரூனே இளவரசரின் திருமண விழாபுரூனே இளவரசரின் திருமண விழாபுரூனே இளவரசரின் திருமண விழா
அந்த சடங்கில், ஆண்கள் மட்டுமே, குறிப்பாக அமைச்சர்கள், அரச அதிகாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, நாளை (14-ம் தேதி) சுல்தான் அரண்மனையான இஸ்தானா நூருல் இமானில் நடைபெறும் திருமண விருந்தில், பிரபலங்கள், குறிப்பிடத்தக்க விருந்தினர்கள், பல அரச குடும்பத்தினர் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
யார் யார் கலந்துகொள்வார்கள் என்ற அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றாலும், பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ஜோர்டான் அரச குடும்பத்தினர் உள்ளிட்ட பல்வேறு அரச குடும்பங்கள் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.புரூனே இளவரசரின் திருமண விழாபுரூனே இளவரசரின் திருமண விழா
மணமகன் இளவர் அப்துல் மதீன் பயிற்சி பெற்ற ஹெலிகாப்டர் பைலட் ஆவார். மேலும் ராயல் புரூனே விமானப்படையின் மேஜர், போலோ விளையாட்டில் பதக்கங்களை வென்றிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் சுமார் 2.5 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டு இருக்கிறார்.
மணமகள் அனிஷா ரோஸ்னா இசா-கலேபிக், ராயல் புரூனே ஏர்லைன்ஸின் நிறுவனத் தலைவராகவும், இசா கலலேபிக் சில்க் கலெக்டிவ் என்ற ஃபேஷன் நிறுவன உரிமையாளராகவும் இருக்கிறார். மேலும், Authentiary என்ற சுற்றுலா நிறுவனத்தை நண்பருடன் இணைந்து நடத்தி வருகிறார்.புரூனே இளவரசரின் திருமண விழாபுரூனே இளவரசரின் திருமண விழா
அரச குடும்பம்
புரூனேவின் அரசர் சுல்தான் ஹஸ்ஸனல் பல்கியாஹ், உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர். இவரின் சொத்துமதிப்பு சுமார் 28 பில்லியன் டாலர் மதிப்புடையது.
இந்த அரசக் குடும்பத்திடம், பல ஜெட் விமானங்கள், பல்வேறு ரோல்ஸ் ராய்ஸ், ஃபெராரிஸ் கார்கள் இருக்கின்றன. 1,700 அறைகள் கொண்ட இஸ்தானா நூருல் இமான் எனும் மாபெரும் அரண்மனையில் தான் இவர்கள் வசித்து வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
புருனே: கள்ளக்காதலில் ஈடுபட்டால் கல்லால் அடித்து கொல்லும் மரண தண்டனை அமல்!
http://dlvr.it/T1Kxx0