Tuesday 16 January 2024
Monday 15 January 2024
மும்பையில் திறக்கப்பட்ட நாட்டின் மிகப்பெரிய கடல் பாலம்... என்னென்ன சிறப்புகள்?
மும்பையில் இருந்து நவிமும்பைக்கு கடல் வழியாக 22 கிலோமீட்டர் நீளத்திற்கு கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இக்கடல் பாலம் தென்மும்பையின் சிவ்ரி என்ற இடத்தில் தொடங்கி அருகில் உள்ள நவிமும்பையில் இருக்கும் நவசேவாவிற்கு கட்டப்பட்டுள்ளது. நவிமும்பையில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது. விமான நிலையம் அடுத்த ஆண்டு திறக்கப்படும் நிலையில் அந்த விமான நிலையத்தை பயணிகள் எளிதில் சென்றடையவேண்டும் என்ற நோக்கத்தில் இப்பாலம் 17,840 ரூபாய் கோடியில் கட்டப்பட்டுள்ளது. அதோடு இந்த பாலத்தின் மூலம் புனே, கோவா மற்றும் தென்னிந்தியாவிற்கும் விரைவில் செல்ல முடியும். 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி இந்த கடல் பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார். இப்போது அவரே கட்டி முடிக்கப்பட்ட கடல் பாலத்தை திறந்து வைத்திருக்கிறார்.Atal Setu: இந்தியாவிலேயே மிகப்பெரிய கடல் பாலம்! - அட்டகாசமான பகல், இரவு படங்கள்! | Photo Album
நவிமும்பை உல்வேயில் நடைபெ ற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு இந்த கடல் பாலத்தை திறந்து வைத்தார். விழாவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணைமுதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கடல் பாலத்தை திறந்து வைத்துவிட்டு நவிமும்பையில் கட்டப்பட்டுள்ள ரயில்வே தட நீட்டிப்பு திட்டத்தையும் , புதிய ரயில் நிலையம் ஒன்றையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
கடல் பாலத்தை திறந்து வைத்துவிட்டு கடல் பாலம் வழியாக பிரதமர் நரேந்திர மோடி மும்பைக்கு வந்தார். பிரதமர் வருகையையொட்டி கொலாபாவில் உள்ள நடைபாதைகள் கடைகள் முற்றிலும் அகற்றப்பட்டது. சுவர்கள் அனைத்தும் பெயிண்ட் அடிக்கப்பட்டு சுத்தமாக வைக்கப்பட்டு இருந்தது.நாட்டின் மிகப்பெரிய கடல் பாலம்: 22 கி.மீ நீளமுள்ள அடல் சேது... மும்பையில் திறக்கிறார் பிரதமர் மோடி!
இப்போது மும்பையில் இருந்து நவிமும்பைக்கு செல்ல 2 மணி நேரம் வரை பிடிக்கிறது. புதிய கடல் பாலத்தில் பயணம் செய்வதன் மூலம் வெறும் 20 நிமிடத்தில் சென்றடைய முடியும். நான்கு சக்கர வாகனங்கள் இந்த மேம்பாலத்தில் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும். மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் இந்த மேம்பாலத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இக்கடல் பாலம் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் பாதிக்காத வகையில் கட்டப்பட்டுள்ளது. 6.5 ரிக்கர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டாலும் கடல் பாலம் பாதிக்கப்படாது. அதோடு கடல் உயிரினங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக புதிய வாகனங்கள் செல்லும்போது சத்தம் வராமல் இருக்கும் வகையில் இப்பாலம் கட்டப்பட்டுள்ளது.
கடல் பாலத்தில் போடப்பட்டுள்ள மின் விளக்குகள் கூட கடல் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் வகையில் கடல் பாலத்தில் கட்டப்பட்டுள்ள தூண்களை கடல் உப்பு நீர் பாதிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்த பால நீளத்தில் 16.5 கிலோமீட்டர் கடலில் கட்டப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதி நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. ஜப்பான் வங்கியில் 16 ஆயிரம் கோடி கடன் வாங்கி கட்டப்பட்டுள்ள இந்த கடல் பாலம் திட்டமிட்டதை விட 6 மாதத்திற்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இக்கடல் பாலத்தில் கார்கள் ஒரு முறை செல்ல ரூ.250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கனரக லாரிகள் ஒரு முறை செல்ல 1580 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அடல் சேது | மும்பை கடல் பாலம்
அனைத்து வாகனங்களுக்கும் தினசரி மற்றும் மாதாந்திர பாஸ்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கடல் பாலத்தால் நவிமும்பையை அடுத்து புதிதாக அமைக்கப்பட இருக்கும் மூன்றாவது மும்பைக்கான பணிகளும் விரைவு பெறும். இக்கடல் பால பணிகளை தொடங்குவதில் ஆரம்பத்தில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டது. பல முறை டெண்டர் விடப்பட்டு ரத்து செய்யப்பட்டது. தற்போது, இந்தப் பாலத்தை பிரதமர் நரேந்திரமோடி, நாட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்துள்ளார். இதில் தினமும் 70 ஆயிரம் வாகனங்கள் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
http://dlvr.it/T1PcgY

Pervez Musharraf: `இறந்த பிறகும் மரண தண்டனை...' - முஷரஃப் வழக்கு சொல்லும் செய்தி என்ன?
பாகிஸ்தானில் கடந்த 2007-ம் ஆண்டு நெருக்கடி நிலையை முஷரஃப் அறிவித்தாா். அதற்காக அரசமைப்புச் சட்ட அமலாக்கத்தை அவா் நிறுத்திவைத்தாா்.இது தொடா்பாக நடைபெற்று வந்த தேசத் துரோக வழக்கில் முஷரஃபுக்கு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. இருந்தாலும், சிறப்பு நீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று லாகூா் உயா் நீதிமன்றம் 2022-ல் தீா்ப்பளித்தது.
இது தொடா்பான மனுவை விசாரித்து வந்த 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமா்வு, 2020-ல் லாகூா் உயா் நீதிமன்றம் அளித்த உத்தரவு செல்லாது என்று அறிவித்தது. அதையடுத்து, முஷரஃபுக்கு எதிரான மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் தற்போது உறுதிசெய்துள்ளது.
"நான் நேசிக்கும் என் தாய்மண்ணுக்குச் சில வாரங்களில் திரும்பிவந்துவிடுவேன்" - 2016-ம் ஆண்டு மருத்துவச் சிகிச்சைக்காக துபாய்க்கு விமானம் ஏறியபோது பர்வேஸ் முஷரஃப் சொன்ன வார்த்தைகள் இவை. ஆனால், நீண்டகால உடல்நலக் குறைவு காரணமாக தனது 79-வது வயதில், கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி மரணமடைந்து சடலமாகத்தான் நாடு திரும்பினார்.
பர்வேஸ் முஷரஃப் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே இறந்துவிட்ட நிலையில், தற்போது அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியிருப்பது, விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.பர்வேஸ் முஷரஃப் காலத்தில் இந்தியா-பாகிஸ்தான்; உறவும், பிரச்னைகளும் எப்படி இருந்தன? - ஓர் அலசல்
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் முஷரஃப் வழக்கில் பிறப்பித்திருக்கும் இந்தத் தீர்ப்பு அந்த நாட்டில் மட்டுமன்றி, இந்தியாவிலும் இத்தகைய வழக்குகளின் தீர்ப்புகள் குறித்த விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. ஒருவரின் மரணம், அவர் செய்த குற்றங்களிலிருந்து அவருக்கு `விடுதலை'யைத் தந்துவிடுவதுதான் இங்கே (இந்தியாவில்) சட்ட நடைமுறையாக இருக்கிறது. ஆனால், குற்றம் குற்றம்தானே... ஒருவர் இறந்துவிட்டார் என்பதால், அவர் குற்றவாளி இல்லை என ஆகிவிடாது.விகடன் தலையங்கம்``முஷரஃப் குற்றவாளி என்பது சந்தேகத்துக்கு, விவாதத்துக்கு இடமின்றி சட்டரீதியாக வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. பல தரப்பிலும் வரவேற்பையும், இத்தகைய தீர்ப்பின் அவசியம் குறித்த உரையாடல்களையும் ஏற்படுத்தியிருக்கும் இந்தத் தீர்ப்பு, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு ஒரு சட்டப் பாடமே!" -
முஷரஃப் வழக்கில் அவர் மரணித்த பிறகு, அவருக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனை தொடர்பான தீர்ப்பு குறித்து விகடன் ப்ளஸில் வெளியாகியிருக்கும் தலையங்கத்தை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்------>>> மரணத்துக்குப் பின் மரண தண்டனை; இந்தத் தீர்ப்பை ஏன் வரவேற்க வேண்டும்?!மரணத்துக்குப் பின் மரண தண்டனை; இந்தத் தீர்ப்பை ஏன் வரவேற்க வேண்டும்?!
http://dlvr.it/T1PcPH

`துணை முதல்வராகிறாரா உதயநிதி?' - பரபரத்த தகவல்; மறுத்த முதல்வர்... `வியூகம்' எனச் சாடும் பாஜக
இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, `துணை முதலமைச்சராகப் பதவியேற்கவிருக்கிறார்!' என்ற செய்தி, ஊடகங்களில் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. ஆனால், துணை முதலமைச்சராக உதயநிதி நியமிக்கப்படவிருக்கிறார் என்ற செய்தி உண்மையல்ல, வதந்தி என மறுத்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த நிலையில், இது வெறும் வதந்திதானா... அல்லது இதன் பின்னணியில் வேறு வியூகங்கள் இருக்கின்றனவா என்ற கேள்விக்கு பதில் தேடினோம்!
ஜனவரி முதல் வாரத்திலிருந்தே உதயநிதி முதலமைச்சாராகப் போகிறார் என்ற தகவல்கள், அரசு வட்டாரங்களிலிருந்து கசிய தொடங்கின. குறிப்பாக ஜனவரி 11-ம் தேதி முதல் செய்தி ஊடகங்களும் சமூக வலைதளங்களிலும் உதயநிதி துணை முதலமைச்சராகிறார் என்ற செய்திகள் பரவின. பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ``ஆம், எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்குக்கு துணையாக இருப்போம்” என்ற உதயநிதியின் பதில், மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.ஸ்டாலின்
அதனைத் தொடர்ந்து, ``தி.மு.க-வில் உதயநிதியை விட்டால் வேறு யாரும் இல்லையா... தி.மு.க என்ன கருணாநிதியின் சொத்தா..?'' என கடும் விமர்சனங்கள் கிளம்பின.
இதற்கிடையில் ஜனவரி 13-ம் தேதி பொங்கல் வாழ்த்துமடலை வெளியிட்டார் தமிழ்நாட்டு முதலமைச்சர். அதில், ``வதந்திகளையே செய்திகளாகப் பரப்பி, வாழ்க்கை நடத்தி வயிறு வளர்க்கக்கூடிய பிறவிகள் என் உடல்நிலை குறித்து பொய் தகவல்களைப் பரப்பினர். அது நொறுங்கிப் போகவே... அடுத்த வதந்தியாக உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படவிருக்கிறது என்ற வதந்தியைப் பரப்பத் தொடங்கினர்” எனக் குறிப்பிட்டது பெரும் திருப்பமாக அமைந்தது. உதயநிதி, ஸ்டாலின்
இதெல்லாம் ஒருவகை வியூகம் என பேசத் தொடங்கிய பா.ஜ.க-வின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ``தி.மு.க என்பது கருணாநிதியின் குடும்ப சொத்து. அதில் குடும்பத்தினர் மட்டுமே உயர் பதவிகளுக்கு வரமுடியும். உதயநிதி, துணை முதலமைச்சர் என்பது அதிகாரபூர்வமாகப் பதவி பிரமாணம் மட்டும்தான் செய்யப்படவில்லை. மற்றபடி முதலமைச்சரைவிட அதிகமான அதிகாரம் உதயநிதியிடம்தான் இருக்கிறது. இதுவரை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி பற்றி பல்வேறு கருத்துகளைக் கூறிவிட்டு, பின்பு அவரே மறுத்தார். உதயநிதி அரசியலுக்கு வரமாட்டார் என்றார், ஆனால் வந்துவிட்டார். உதயநிதி அமைச்சராக மாட்டார் என்றார், ஆனால் ஆகிவிட்டார். `மாநிலத்தில் இருமொழி கொள்கைதான்; அண்ணாமலையின் பகல் கனவு பலிக்காது..!' - தமிழ்நாடு அரசு பதில்பி.ஜே.பி எஸ்.ஆர்.சேகர்
அதேபோல் துணை முதலமைச்சர் வதந்தி என்றிருக்கிறார். ஆனால் உறுதியாக உதயநிதியை துணை முதலமைச்சராக அவரே ஆக்குவார். எங்களை பொறுத்தவரை ஸ்டாலினின் இந்த மறுப்பு பொய், சங்கடத்தை தவிர்க்கும் தற்காலிக அறிவிப்புதான். தி.மு.க இப்படி ஒரு பேச்சை உருவாக்கி, என்ன எதிர்வினை வருகிறதென பார்த்திருக்கிறது, எப்போதும்போல மறுப்பு தெரிவித்து, பின்பு வழக்கம்போல் மறுத்ததை அறிவிப்பாக தருவார்கள். இதுவெறும் ட்ரெய்லர்தான், செட்டிங்தான். உதயநிதியை துணை முதலமைச்சராக்க மக்களை இப்போதே தயார் படுத்துகிறார்கள்” என்றார் சல்மா
இதுவெறும் வதந்தியே எனப் பேசத் தொடங்கிய தி.மு.க செய்தித் தொடர்பாளர் சல்மா, ``இவ்விவகாரத்தை தமிழ்நாடு முதலமைச்சரே தெளிவுபடுத்திவிட்டார். தி.மு.க மக்கள் நலன் சார்ந்து பல்வேறு சாதனைகளை புரிந்து கொண்டிருக்கிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், தி.மு.க-மீது திட்டமிட்டு வதந்திகளை அவர்களே ஒன்றுகூடி விமர்சனம் செய்வார்கள். பா.ஜ.க கும்பலுக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இதுதான் அஜெண்டா. உதயநிதி துணை முதலமைச்சராவதற்கு கட்சிக்குள் எந்த எதிர்ப்பும் கிடையாது. உதயநிதியை துணை முதலமைச்சராக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை. அவர் துணை முதலமைச்சராவாரா... எப்போது ஆவர் என்பதையும் தமிழ்நாடு முதலமைச்சரே முடிவெடுப்பார்” என்றார் சுருக்கமாக .
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk``உதயநிதி துணை முதல்வர் ஆகிறாரா?!"- பொங்கல் வாழ்த்து மடலில் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின்
http://dlvr.it/T1NhNm

`மாநிலத்தில் இருமொழி கொள்கைதான்; அண்ணாமலையின் பகல் கனவு பலிக்காது..!' - தமிழ்நாடு அரசு பதில்
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்டதை பயிற்றுவிக்கும் விதமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து `மைக்ரோசாஃப்ட் TEALS' திட்டத்தைப் பள்ளிகளில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருக்கிறது. இதனை வரவேற்ற தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, ``வரும் கல்வி ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவிருப்பதாக உத்தரப்பிரதேச மாநில அரசு, கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பரில் அறிவித்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசும் தற்போது பள்ளிப் பாடத்திட்டத்தை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்வது பாராட்டுக்குரியது. பிரதமர் மோடி கொண்டுவந்த, புதிய கல்விக் கொள்கையை படிப்படியாகத் தமிழ்நாட்டில் செயல்படுத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு, தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட மும்மொழி கல்விக் கொள்கையையும் விரைவில் தமிழ்நாட்டில் கொண்டு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று ட்வீட் செய்திருந்தார்.அண்ணாமலை
இதற்குத் தமிழ்நாடு அரசு, `அண்ணாமலை பகல் கனவு காண்பது போல மும்மொழிக் கொள்கை ஒருபோதும் தமிழ்நாட்டில் உருவாக வாய்ப்பு இல்லை' என எதிர்வினையாற்றியிருக்கிறது.
இதுகுறித்த அறிக்கையில், ``ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவில் பயிற்சியளிப்பதற்காக மைக்ரோசாஃப்ட் TEALS திட்டம் என்னும் திட்டத்தை நாட்டிலேயே முதன்முறையாகத் தமிழ்நாடு அரசு கொண்டு வந்திருக்கிறது. இது குறித்து அண்ணாமலை கூறுகையில், இது தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்ட திட்டம் என்று தெரிவித்திருந்தார். மேலும் வெகு விரைவில் மும்மொழிக் கொள்கையையும் தமிழ்நாடு அரசு கொண்டுவரும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அண்ணாமலை வரலாற்றை மாற்றவோ திரிக்கவோ முயலக் கூடாது.
தமிழ்நாடு அரசு அவரது கூற்றை முற்றிலும் நிராகரிக்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டுக்கென்று வரலாறும் பாரம்பர்யமும் உண்டு. 1970 ஜூலை 16-ம் தேதி அன்றைய கிண்டி பொறியியல் கல்லூரியில் (இன்றைய அண்ணா பல்கலைக்கழகம்) நடந்த தமிழ் மன்ற விழாவில் தந்தை பெரியார் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அங்கு சென்ற தந்தை பெரியாரிடம் கல்லூரிக்கு என புதிய கம்ப்யூட்டரை வாங்கியிருப்பதாக அங்கு இருக்கும் பேராசிரியர்கள் தெரிவிக்க, அதைப் பார்க்க வேண்டும் என்று விரும்பிக் கேட்டார் பெரியார். படியேறிச்செல்ல முடியாத முதுமையில் இருந்தாலும், முதல் மாடிக்கு தன்னை தூக்கிச் செல்லுமாறு வேண்டி, அங்கு சென்று அந்த கம்ப்யூட்டரைப் பார்த்தார். அப்போது அதற்கு கணினி என்கிற பெயர் வைக்கப்படவில்லை. ஐ.பி.எம் கம்ப்யூட்டர் 1620 மாடல் கணினி அது. எந்த தேதியைச் சொன்னாலும் அதன் கிழமையை மிகச் சரியாக அந்தக் கணினி சொல்லி விடும் என்கிற செய்தியை அங்குள்ள பேராசிரியர்கள் சொல்ல, பெரியார் சில தேதிகளை சொல்லி, கிழமை சரியாக வருகிறதா என்று பார்த்தார். தன்னுடைய பிறந்தநாளையும் அவர் சொல்ல சரியாக சனிக்கிழமை என்று கூறியது அந்தக் கணினி.முதல்வர் ஸ்டாலின்
அவரிடம் இந்த கணினி பற்றி கூறியது அன்றைய பேராசிரியரும் பின்னாளில் துணைவேந்தருமான வா.செ.குழந்தைசாமி. வருங்காலத்தில் ஒவ்வொருவரின் சட்டைப் பையிலும் ஒரு தகவல் தொடர்பு கருவி இருக்கும் என்று இன்றைய செல்போன் குறித்து அன்றே கணித்து சொன்னவர் பெரியார். இதன் தொடர்ச்சியாக 1997-லேயே அன்றைய முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி, தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து தமிழ்நாட்டுக்கென தனியே தகவல் தொழில்நுட்பத்துறைக்கான கொள்கை ஒன்றை உருவாக்கி, தனியாக ஒரு துறையை உருவாக்கி அதற்கென ஒரு அமைச்சரை நியமித்தார். தகவல் தொழில்நுட்பத்துறை பற்றி நாட்டின் பிற மாநிலங்கள் பெரிதும் விழிப்புணர்வு அடையாத காலகட்டத்திலேயே தொலைநோக்குப் பார்வையோடு கலைஞர் சிந்தித்து இதற்கான திட்டங்களைத் திட்டினார். டைடல் பார்க் போன்ற கட்டமைப்புகளை மாநிலத்தில் உருவாக்கி உலக நிறுவனங்களின் முதலீட்டு மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிக் காட்டினார். இதன் மூலம் சென்னை ஒரு ஐ.டி ஹப்-ஆக மாறியது இன்றைக்குப் பழைய மகாபலிபுரம் சாலை முழுவதும் காணப்படும் ஐ.டி நிறுவனங்கள் அனைத்துக்கும் அன்றே வித்திட்டது, அன்று கலைஞர் உருவாக்கிய தனி கொள்கைதான்.
இதையடுத்து அரசுத் துறைகளை கணினிமயமாக்கியது கலைஞர் செய்த தகவல் தொழில்நுட்பப் புரட்சி. E-governance எனப்படும் மின் நிர்வாக முறையை முதன்முதலில் திருவாரூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாகவே குக்கிராமங்கள் தொடங்கி தலைநகரம் வரை படிப்படியாக ஒவ்வொரு துறையும் கணினி மயமாகி ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைத்தது. தகவல் சேமிப்பும் எளிதாகி இருக்கிறது. இந்த தொடர் ஓட்டத்தின் தொடர்ச்சியாக செயற்கை நுண்ணறிவுக்கென தனியே ஒரு கொள்கை தமிழ்நாட்டில் 2020-ல் உருவாக்கப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை என்கிற ஒன்று உருவாக்கப்படுவதற்கு முன்பாகவே இவையெல்லாம் நடந்தன. தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் அதில் மாநிலங்கள் அடைய வேண்டிய இலக்குகள் என்று சொல்லப்பட்டிருக்கும் பலவற்றை தமிழ்நாடு ஏற்கெனவே அடைந்துவிட்டது.கல்விக் கொள்கை
எடுத்துக்காட்டாக தேசிய அளவில் மாணவர் சேர்க்கை விகிதத்தை 50 சதவிகிதமாக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. ஆனால், அகில இந்திய மேல்நிலைக் கல்வி ஆய்வறிக்கையின் படி (All India Survey of Higher Education (AISHE) தமிழ்நாட்டின் மாணவர் சேர்க்கை விகிதம் 51.4 சதவிகிதத்தை 2019-20 கல்வியாண்டிலேயே எட்டிவிட்டது. 2035-ம் ஆண்டுக்குள் 50 சதவிகிதத்தை எட்ட வேண்டும் என தேசிய கல்விக் கொள்கை இலக்கு நிர்ணயித்திருக்கிறது. ஆனால், 2035-ல் தமிழ்நாடு 100 சதவிகிதத்தை எட்டிவிடும். தமிழ்நாடு அரசு செய்ததை, செய்துகொண்டிருப்பதைத் தேசிய கல்விக் கொள்கையில் இணைத்துவிட்டு, தேசிய கல்விக் கொள்கையின்படி தமிழ்நாடு செயல்படுகிறது என்று சொல்வது நகைப்புக்குரியது.
குறிப்பாகத் தொழில்நுட்பம் சார்ந்து தமிழ்நாட்டுக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை. நாட்டின் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு எப்போதும் தொழில்நுட்பத்துறையில் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு முன்னோடி மாநிலமாகவே திகழ்ந்து வருகிறது என்பதை அனைவரும் அறிவர். முன்னோடி மாநிலமான தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங் போன்றவற்றில் வருங்காலத்தில் மிகத் தீவிரமாக பயிற்சிகள் அளிக்கப்படும்.செயற்கை நுண்ணறிவு (AI)
ஏனெனில் செயற்கை நுண்ணறிவை கையிலெடுக்கும் மாநிலமே இன்னும் பத்தாண்டுகளில் முன்னணி மாநிலமாக இருக்கப்போகிறது. பெரியார் காட்டிய பாதையில் தமிழ்நாடு அரசு முற்போக்குப் பாதையில் செல்லும் அரசாகவே செயல்படும். அண்ணாமலை பகல் கனவு காண்பதுபோல மும்மொழிக் கொள்கை ஒருபோதும் தமிழ்நாட்டில் உருவாக்க வாய்ப்பு இல்லை. இருமொழிக் கொள்கையே தொடரும்" எனது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அறிக்கையைத் தொடர்ந்து அண்ணாமலை தனது X சமூக வலைதளப் பக்கத்தில், ``செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்து 2018-ம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டு, 2019-ம் ஆண்டுக்கான தேசிய கல்விக் கொள்கை மாதிரி வடிவத்தில் குறிப்பிடப்பட்டு, பின்னர் 2020-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது. ஆனால், இது தொடர்பான தமிழக அரசின் கொள்கை வெளியிடப்பட்டது 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான்.அண்ணாமலை - முதல்வர் ஸ்டாலின்
தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும் முன்பாக தமிழகத்தில் இதற்கான கொள்கை உருவாக்கினோம் என்று அறிக்கையில் கூறப்பட்டிருப்பது பொய் என்பது இதன் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. கிண்டி பொறியியல் கல்லூரிக்கு ஐ.பி.எம் 1620 கணிப்பொறி வாங்கப்பட்ட ஆண்டு 1963. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 1970 ஆம் ஆண்டு, பெரியார் செல்லும்வரை, அந்தக் கணிப்பொறி புதியதாக இருந்து என்று திமுக கூறுகிறதா...
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வரும் நலத்திட்டங்கள், தமிழகத்தின் ஒவ்வொரு மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதே @BJP4Tamilnadu கொண்டிருக்கும் விருப்பம். அதன்படி, உலகத் தரத்திலான, தொலை நோக்குச் சிந்தனையுடன் உருவாக்கப்பட்ட,…— K.Annamalai (@annamalai_k) January 14, 2024
பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17, 1879 அன்று புதன்கிழமை ஆகும். அவர் பிறந்த நாள் சனிக்கிழமை என்று கணிப்பொறி கூறியதாக மற்றுமொரு பிழை அறிக்கையில் இருக்கிறது. 1967-ம் ஆண்டு, அன்றைய பம்பாயிலும், பின்னர் 1990-களின் பிற்பகுதியில், பெங்களூர், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல மாநகரங்கள் தகவல் தொழில்நுட்பத்துறையில் வளர்ச்சியடையத் தொடங்கின. திறமை வாய்ந்த தமிழக இளைஞர்கள் மூலம், தமிழகம் இந்தத் துறையில் முன்னேறி வருகிறது. ஆனால், மற்ற மாநிலங்களுக்குத் தகவல் தொழில்நுட்பம் என்றால் என்னவென்றே தெரியாது என்ற ரீதியில் தி.மு.க அறிக்கை வெளியிட்டிருப்பது நகைப்புக்குரியது" என்று ட்வீட் செய்திருக்கிறார்.கர்நாடகா: ``தேசிய கல்விக் கொள்கைக்கு பதிலாக புதிய கல்விக் கொள்கை!" - கர்நாடக துணை முதல்வர்
http://dlvr.it/T1NhCy

Sunday 14 January 2024
சர்ச்சை... கோபம்... குழப்பம் - நாம் தமிழர் பொதுக்குழுவில் நடந்தது என்ன? | Video
`2024 நாடாளுமன்ற தேர்தலில் சாதிப்பாரா சீமான்?’ - நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வியூகங்கள் என்னென்ன?
http://dlvr.it/T1McQb
http://dlvr.it/T1McQb