நெதர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2009-ம் ஆண்டு இந்தியா வந்தபோது மும்பையை சேர்ந்த நிம்பல்கர் (30) என்பவரை சந்தித்தார். இருவரும் பழகி பின்னர் திருமணமும் செய்து கொண்டனர். இருவரும் நெதர்லாந்து சென்று வாழ ஆரம்பித்தனர். அவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளார். பில்கிஸ் பானோ வழக்கு: சட்டத்தின் பார்வையில் தீர்ப்பின் முக்கியத்துவம் பெறும் கூறுகள்..!
ஆனால், கடந்த ஆண்டு அவர்கள் முறைப்படி கோர்ட் மூலம் விவாகரத்துப் பெற்றுக்கொண்டனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், குழந்தை 15 நாள்கள் தந்தையுடன் விடுமுறையை கழிக்க இந்தியாவிற்குச் செல்ல நெதர்லாந்து கோர்ட் அனுமதித்தது. குழந்தையை இந்தியாவுக்கு அழைத்து வந்த நிம்பல்கர், விடுமுறை முடிந்த பிறகும் நெதர்லாந்துக்கு குழந்தையை அழைத்துச் செல்லவில்லை.
இதையடுத்து குழந்தையின் தாய் நெதர்லாந்து கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். நெதர்லாந்து கோர்ட்டும் குழந்தையை ஒப்படைக்க நிம்பல்கருக்கு உத்தரவிட்டது. ஆனால் குழந்தையை நிம்பல்கர் ஒப்படைக்கவில்லை. இதையடுத்து குழந்தையின் தாய் மும்பை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்தார்.Baby(Representational image)
இம்மனுவை விசாரித்த கோர்ட், தந்தை மற்றும் மகள் இரண்டு பேரும் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டது. அதன்படி நிம்பல்கர் தன் மகளுடன் கோர்ட்டில் ஆஜரானார். குழந்தையை தாயிடம் ஒப்படைக்கும்படி கோர்ட் உத்தரவிட்டது. ஹோட்டல் ஒன்றில் அறை முன்பதிவு செய்து, அங்கு வைத்து குழந்தையை தாயிடம் கொடுக்க நிம்பல்கருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து குழந்தையை பெற நிம்பல்கர் சொன்ன ஹோட்டலுக்கு நெதர்லாந்து பெண் வந்தார். ஆனால் நிம்பல்கர் சொன்னபடி குழந்தையுடன் அங்கு வரவில்லை. இதையடுத்து இது குறித்து அப்பெண் போலீஸில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கணேஷ் பவார் தலைமையில் போலீஸார் நிம்பல்கரின் மும்பை வீட்டிற்குச் சென்று தேடினர். ஆனால் அங்கு நிம்பல்கர் மற்றும் குழந்தை இல்லை.Father`தாம்பத்திய உறவுகொள்ள மறுப்பது மனரீதியில் கொடுமையானது..!’ - கணவருக்கு விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்
இதையடுத்து அவரை கைது செய்ய கோர்ட் வாரன்ட் பிறப்பித்தது. நிம்பல்கர் தனது போனை ஆஃப் செய்து வைத்திருந்தார். அப்படி இருந்தும் போலீஸார் நிம்பல்கரை குஜராத் எல்லையில் உள்ள தாமன் என்ற இடத்தில் கண்டுபிடித்து கைது செய்தனர். அவரை கைது செய்து குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். குழந்தையை அழைத்துச் செல்ல, குழந்தையின் தாய் தன் பெற்றோருடன் இந்தியாவிற்கு வந்திருந்தார்.ிர்ல்
http://dlvr.it/T1S2vv