Thursday 8 February 2024
Vijay: `அரசியல் களத்தில் விஜய்; சாதிப்பாரா... சறுக்குவாரா?' - விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்!
தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய், நேரடியாக அரசியலில் இறங்கப்போவதாகத் தொடர்ச்சியாகப் பேச்சுகள் வந்துகொண்டே இருந்தன. அதிலும், கடந்த ஆண்டு, 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு விஜய் பரிசுத்தொகை அளித்த பிறகு, கிட்டத்தட்ட அந்தச் செய்திகள் உறுதியாகின.விகடன் கருத்துக்கணிப்பு
அதன் பின்னர், விஜய் மக்கள் இயக்கத்தில் தனித்தனியாக வழக்கறிஞர் பிரிவு, மகளிரணி என அடுத்தடுத்த வேலைகளை புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்டுவந்தார். இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி, விஜய் தனது கட்சியின் பெயரை `தமிழக வெற்றி கழகம்' என வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், நமது விகடன் வலைதளப்பக்கத்தில் "அரசியல் களத்தில் நடிகர் விஜய்..." என்ற கருத்துக்கணிப்பு நடத்தினோம். அதில் `சாதிப்பார்', `சறுக்குவார்', `பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்' என்ற மூன்று விருப்பத்தேர்வுகளையும் கொடுத்திருந்தோம். இதில் கலந்துகொண்ட வாசகர்களில்,விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்
அரசியல் களத்தில் நடிகர் விஜய் `சாதிப்பார்' என 23 சதவிகித வாசகர்களும், `சறுக்குவார்' என 35 சதவிகித வாசகர்களும், `பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்' என 42 சதவிகித வாசகர்களும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.
இதே கருத்துக்கணிப்பை நமது ஜூனியர் விகடனுடைய சமூக வலைதளப்பக்கமான ட்விட்டர் எக்ஸ் பக்கத்திலும் நடத்தினோம்.விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்
அதில் 3,728 பங்கேற்பாளர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர். அதனடிப்படையில், அரசியல் களத்தில் நடிகர் விஜய் `சாதிப்பார்' என 45.4 சதவிகித வாசகர்களும், `சறுக்குவார்' என 20.9 சதவிகித வாசகர்களும், `பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்' என 33.7 சதவிகித வாசகர்களும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.``அயோத்தி ராமர் கோயில் விழா... பாஜக-வின் அரசியலா?" - விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வதென்ன?
http://dlvr.it/T2RZzb

புதுச்சேரி: ``கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றிபெற வையுங்கள்!” - சிக்னல் கொடுத்த முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 14-வது தொடக்க விழா 100 அடி சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கட்சியின் நிறுவனத் தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது பேசிய அவர், ``இது ஒரு மகிழ்ச்சியான நாள். புதுவை மாநில வளர்ச்சிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் கட்சியை தொடங்கி, உங்கள் உறுதுணையோடு மக்களிடம் வாக்குகளை பெற அடிக்கல் நாட்டிய நாள். புதுவை மக்களின் நலன், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவே என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. இந்த எண்ணத்தை ஏற்கனவே நாம் ஆட்சியிலிருந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ளோம். தற்போது மீண்டும் கூட்டணி கட்சியுடன் சேர்ந்து வாக்கு கேட்டு ஆட்சியில் அமர்ந்துள்ளோம். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது புதுவை மக்கள் நமக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை அளித்தனர். அப்போதும் நாம் ஆட்சியின் குறைகளை, நிர்வாக சீர்கேட்டை, அவலத்தை சுட்டிக்காட்டினோம்.கட்சி கொடியை ஏற்றும் முதல்வர் ரங்கசாமி
கடந்த கால காங்கிரஸ் ஆட்சி எப்படி செயல்பட்டது என்பதை எல்லோரும் அறிவீர்கள். ஏற்கனவே நடைமுறையில் இருந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை. நிர்வாகமும் சீர்கெட்டு, புதுவையின் வளர்ச்சியே பாதிக்கப்பட்டது. அதையடுத்து ஜனநாயக ரீதியாக பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து, மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளோம். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆசியோடு, புதுவையின் வளர்ச்சிக்கு நல்ல நிர்வாகத்தை சிறப்பாக செய்துள்ளோம். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முடக்கப்பட்ட, நிறுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் மீண்டும் செயல்படுத்தி வருகிறோம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வாழ்வாதாரத்தை உருவாக்கியுள்ளோம். நிர்வாகத்தை சீரமைத்து புதிய உத்வேகத்தோடு செயல்படுத்துகிறோம். காங்கிரஸ் ஆட்சி மத்திய அரசோடும் நல்ல உறவு இல்லாத நிலையில் இருந்தது. இதனால்தான் மாநில வளர்ச்சி பாதிக்கப்பட்டது. ஆனால் நாம் பொறுப்பேற்றவுடன் உள்கட்டமைப்பை மேம்படுத்த அதிக அக்கறை எடுத்துள்ளோம்.
மோசமான சாலைகள் அனைத்தையும் சீரமைத்து வருகிறோம். புதிய சாலைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக பொதுப்பணி, உள்ளாட்சித் துறைக்கு தேவையான நிதி வழங்கியுள்ளோம். கட்சியின் நோக்கமே மாநில அந்தஸ்து பெறுவதுதான். மத்திய அரசு அதை கண்டிப்பாக தரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதற்காகத்தான் பிரதமரை சந்திக்கும்போதும், கடிதம் மூலமும் மாநில அந்தஸ்து வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கட்சியும் நன்றாக வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அரசு பணியிடங்கள் அனைத்தும் காலியாக இருந்தது. இதனால் துறைகளே செயல்பட முடியாத நிலை இருந்தது. தற்போது எந்த முறைகேடுகளும் இன்றி, யாரும் குறைசொல்ல முடியாத வகையில் எல்.டி.சி, யு.டி.சி, காவல், வருவாய், சுகாதாரத்துறை என அரசுத் துறை காலி பணியிடங்களை தொடர்ந்து நிரப்பி வருகிறோம். இன்னும் பல பணியிடங்களை நிரப்ப உள்ளோம்.புதுச்சேரி: `ரூ.10 கோடியில் திருமண மண்டபம் கட்டுகிறார் முதல்வர் ரங்கசாமி!' - நாராயணசாமி சொல்வதென்ன?
சேதராப்பட்டு நிலத்தை மத்திய அரசிடம் இருந்து திரும்ப பெற்றுள்ளோம். அங்கு மருத்துவப் பூங்கா, தகவல் தொழில்நுட்பப் பூங்கா, புதிய தொழிற்சாலைகளை அமைக்க உள்ளோம். இதன்மூலம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளோம். அதில் வெற்றி பெறுவது மிகவும் அவசியமானது. இந்த தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும். தேர்தலில் முழு உத்வேகத்தோடு தொண்டர்கள் பணியாற்ற வேண்டும். கட்சியில் 5 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்படும். அந்த குழுவுக்கு ஆலோசனை கூற 10 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். கட்சியில் அமைப்புகளும் விரைவில் அறிவிக்கப்படும். அடுத்தும் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி புதுவையில் மலர வேண்டும். அதற்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும். அரசுக்கு உறுதுணையாக இருக்கும் பிரதமருக்கும், மத்திய மந்திரிகளுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
http://dlvr.it/T2RZhk

Wednesday 7 February 2024
`ஜெயலலிதா மறைவின்போது, அதிமுக-வை கைப்பற்ற முயன்றவர் நிர்மலா சீதாராமன்!' - மக்களவையில் தயாநிதி மாறன்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி, மக்களவையில் உரையாற்றினார். இன்றும் இதே தீர்மானத்தின்மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி உரையாற்றியது குறித்து, இன்று மக்களவையில் பேசிய தி.மு.க எம்.பி தயாநிதி மாறன், ``வெங்காயம் விலை உயர்கிறது என்றபோது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரும் ஆணவத்துடன், 'நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை. அதனால் விலையேற்றம் குறித்து எனக்குத் தெரியாது' என்றார்.நிர்மலா சீதாராமன்
கொரோனா தொற்றுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை ரூ.100-ஐ தாண்டி விட்டது. காஸ் விலை உயர்ந்துவிட்டது. ரஷ்யாவில் நடக்கும் போர் காரணமாக மலிவு விலையில் கிடைக்கும் கச்சா எண்ணெய்யை அதிக அளவில் விலைக்கு வாங்கி, இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது அம்பானி, அதானி நிறுவனங்கள். அதிலிருந்து பெற்ற கொள்ளை லாபத்தில் இந்தியர்களுக்கு என்னப் பயன் கிடைத்தது... ஆனால், பெட்ரோல் நிலையங்கள், ரயில்வே நிலையங்களில் பிரதமர் மோடி படத்துடன் கூடிய செல்ஃபி பூத் வைக்க 64 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருக்கிறது அரசு.
காங்கிரஸ் ஆட்சியின்போது இந்திரா காந்தி எமெர்ஜென்ஸி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார் எனக் குற்றம்சாட்டினீர்கள். இன்று, அமலாக்கத்துறையைக் கையில் வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குகிறீர்கள். 95 சதவிகித வழக்குகள் எதிர்க்கட்சிகள்மீது மட்டுமே பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. பண மதிப்பிழப்பின்போது, ஒருபக்க விளம்பரத்தில், பிரதமர் மோடியின் முழுப்படத்துடன் பேடிஎம் விளம்பரம் செய்யப்பட்டது. `இனி எல்லாம் டிஜிட்டல் மயம்' எனக் கூறினார் பிரதமர் மோடி.தயாநிதி
தற்போது அந்த பேடிஎம் நிறுவனம் மூடுவிழா கண்டிருக்கிறதே ஏன்... தமிழ்நாட்டு மக்களின் நீட் எதிர்ப்புக்காக பல்வேறு போராட்டங்கள் செய்யப்பட்டன. தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், இந்த நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கிடையே தற்கொலை அதிகரித்து வருகிறது. அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைந்தபோது நிர்மலா சீதாராமன் அ.தி.மு.க-வைக் கைப்பற்றி, முதல்வராகி விடலாம் என்ற கனவு திட்டத்துடன் சென்னைக்கு வந்தார். அப்போது `நீட் தமிழ்நாட்டுக்கு வராது' என வாக்களித்தார். இப்போது அந்த வாக்குறுதி என்னாவானது?" எனக் கேள்வி எழுப்பினார்.Election 2024: நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக குறிவைக்கும் அந்த 9 தொகுதிகள் - ஓர் அலசல்
http://dlvr.it/T2R9qY

`ஊழியர்கள் போராட்டத்தை நிறுத்தி வைக்கப் பணம் கொடுத்தாரா மேயர்?' - பரபரக்கும் கரூர் மாநகராட்சி
கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் 30-க்கும் மேற்பட்டோர் சக ஊழியர் ராஜசேகரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மாநகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஊழியர்களை ஆணையர் ஒருமையில் பேசியதாகவும், மேயர் கவிதா கணேசன் ஊழியர்கள் போராட்டத்தை தடுக்க பணம் கொடுத்ததாகவும் கிளம்பிய தகவல், கரூர் மாநகராட்சி வட்டாரத்தை லைம்லைட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது.
கரூர் மாநகராட்சியில் தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள் 150-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் கரூர் மாநகராட்சி ஆணையராக சுதா பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இங்கு பணியில் சேர்ந்த பிறகு, மேற்படி தொகுப்பூதிய பணியாளர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதாக அவ்வபோது குற்றச்சாட்டுகள் எழுந்தது. பணி நேரத்தில் தங்களை தரக்குறைவாக பேசுவதாகவும், வேலை நேரத்தைவிட கூடுதலான நேரம் பணியாற்ற வற்புறுத்துவதாகவும் பணியாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தொகுப்பூதிய பணியாளரான ராஜசேகர் என்பவரை ஆணையர் சுதா திடீரென பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தீபாவளி பண்டிகையின்போது இனிப்பு, கார வகைகளுக்கான பில்கள் தயாரித்ததில் பிழைகள் இருப்பதாக குற்றம்சாட்டி, ராஜசேகர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இடைநீக்க உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.கரூர்: '5, 10 பைசா நாணயங்களுக்கு பிரியாணி இலவசம்' - கடும் தள்ளு முள்ளு... கடையை மூடிய போலீஸ் ஊழியர்களுடம் பேச்சுவார்த்தை நடத்தும் மேயர்
இதனால், கோபமான 30-க்கும் மேற்பட்ட தொகுப்பூதிய பணியாளர்கள், ராஜசேகரை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்தும், தங்களை ஒருமையில் ஆணையர் பேசுவதாகவும் கூறி, மாநகராட்சி அலுவலகம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினரும், வருவாய்த்துறை ஊழியர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாநகராட்சி ஆணையாளர் சுதா மற்றும் மாநகராட்சி மேயர் கவிதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தின்போது, 'கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா, வருவாய்த்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் குறிப்பிட்ட வரி தொகையினை வசூல் செய்து கொடுக்க வேண்டும்' என டார்கெட் வைத்து அதிக வேலை வாங்குவதோடு, தங்களை ஒருமையிலும் அவர் பேசுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். தாங்கள் போராட்டம் நடத்தும் இப்போதும்கூட, தங்களிடம் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தாமல், மிரட்டும் தொனியில் ஆணையர் தங்களிடம் பேசியதாக ஊழியர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அப்போது, மேயர் கவிதா கணேசன், போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த ஊழியர் ஒருவருக்குப் பணம் கொடுக்க, 'போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட பணம் கொடுக்கிறார் மேயர்' என்று பரபர தகவல் பரவியது. இந்நிலையில், தொடர் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஊழியர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்நிலையில், கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையாளர் சுதா,
"ஊழியர்கள் பணிக்குச் செல்லாமல், போராட்டத்தில் ஈடுபட்ட போது, உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களை ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர். கரூர் மாநகராட்சியில் இரண்டு வகையான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் களப்பணியாளர்கள் வரி வசூல், குடிநீர் விநியோகம், சுகாதார களப்பணியாளர்கள், வரி வசூல் மேற்கொள்ளும் வருவாய்த்துறை பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் ஏற்கெனவே அரசு நிர்ணயித்த பணி நேரத்தில் பணியாற்றி வருகின்றனர். மாநகராட்சி அலுவலகத்துக்குள் பணியாற்றி வரும் ஊழியர்கள் அலுவலகத்தில் உள்ள இருக்கை பணி மேற்கொள்ள குறித்த நேரத்தில் அலுவலகம் வந்து பணிகளை முடித்து, மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாகச் செயல்பட பணியாற்றி வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இரு பிரிவு பணியாளர்களை எனது குடும்பத்தில் ஒருவராக, நினைத்து அனைவரது பணிச்சுமையையும், மாநகராட்சியின் நிதி சுமையையும் குறைக்கும் வகையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி பல்வேறு ஆலோசனைகளை, மாநகராட்சி ஆணையர் என்ற அடிப்படையில் வழங்கி வந்தேன். பேட்டியளிக்கும் சுதா (மாநகராட்சி ஆணையர்)
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வருவாய்த்துறை வரி வசூல் நிலுவைத் தொகை குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், வரி வசூல் மிக குறைவாக உள்ளது குறித்து சுட்டிக்காட்டி, மாநகராட்சி நிர்வாகம் பொது மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர நிதி அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு அனைத்து கள வருவாய்த்துறை பணியாளர்களும், வரி நிலுவை வைத்துள்ள பொது மக்களைச் சந்தித்து வரி செலுத்தும் மையங்களில் வரி செலுத்த அறிவுறுத்த வேண்டும் என, வழிகாட்டுதல்கள் ஆய்வுக் கூட்டத்தில் வழங்கப்பட்டது. இதனால், வருவாய்த்துறை ஊழியர்களுக்கு எந்த கூடுதல் பணியும் வழங்கப்படவில்லை. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசு கல்லூரி முதல்வர்; வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்!
அவர்களுக்கு வழங்கப்பட்ட பணியை சிறப்பாக செய்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில், யாரையும் ஒருமையில் நான் பேசவில்லை. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மாநகராட்சி வருவாய்த்துறை பணியாளர், மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்தப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தியதன் அடிப்படையில், மேல் நடவடிக்கைக்காக துறைரீதியாக அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 20 மாநகராட்சிகளில் வரி குறைவாக வசூல் செய்யும் மாநகராட்சியில் கரூர் மாநகராட்சி 15-வது இடத்தில் உள்ளது. கரூர் மாநகராட்சியில் மாதம் ஒன்றுக்கு 6 கோடி ரூபாய் அளவுக்கு செலவினங்கள் உள்ளது. ஆனால், கடந்த மாதம் மொத்தம் 2 கோடி ரூபாய்கூட வரி வசூல் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், மாநகராட்சியில் பணியாற்றும் 100 பணியாளர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, வருவாய்த்துறை பணியாளர்களின் சுமை குறைக்கப்பட்டுள்ளது. ஆண்டொன்றுக்கு எண்பது கோடி அளவுக்கு வரி வசூல் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், வெறும் ரூ.20 கோடி மட்டுமே வரி வசூல் மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சி வருவாய்த்துறை அலுவலர்கள் நிலுவை வரி தொகையை வசூல் செய்வது, வரி விதிப்பு செய்யப்படாமல் உள்ள கட்டடங்களை கணக்கீடு செய்து வரி விதிப்பது ஆகிய வழக்கமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். கடந்த பத்து மாதங்களாக சரியாக வரி வசூல் வருவாய்த்துறை சார்பில் மேற்கொள்ளப்படவில்லை. கரூர் மாநகராட்சி
மாநகராட்சி நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில், வருவாய்த்துறை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது வருத்தம் அளிக்கிறது. அனைத்து வகை பணியாளர்களுக்கும் அரசு நிர்ணயித்துள்ள விடுப்பு முறையாக வழங்கப்பட்டு வருகிறது. யாரையும் கட்டாயப்படுத்தி விடுமுறை வழங்காமல், இல்லை. கரூர் மாநகராட்சிக்கு நிலுவையில் உள்ள வரி தொகை ரூபாய் 37.5 கோடி. நடப்பு ஆண்டில் மாநகராட்சிக்கு வசூலிக்க வேண்டிய வரி தொகை ரூபாய் 21.5 கோடி. மொத்தமாக 59 கோடி ரூபாய் மாநகராட்சிக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை உள்ளது. கடந்த பத்து மாதங்களில் கரூர் மாநகராட்சியில் வசூலிக்கப்பட்ட வரி தொகை ரூ.8.57 கோடி ரூபாய் மட்டுமே. மாதம் ஒன்றுக்கு 6 கோடி ரூபாய் மாநகராட்சிக்கு செலவு உள்ள நிலையில், வரி வசூல் தொகை நிலுவையாக உள்ளதால் பொதுமக்களுக்கு வடிகால் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள, நிதி இல்லாத சூழல் ஏற்படும் என்பதாலேயே... வரி வசூல் நிலுவைத் தொகையை விரைந்து முடிக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது" என்றார்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மாநகராட்சி மேயர் பணம் கொடுத்ததாகச் சொல்ல்லப்பட்ட விவகாரத்தில், மேயர் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. இது குறித்து, மேயர் கவிதா கணேசன் தரப்பில் பேசியவர்கள், ``திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக தமிழக முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு, கரூர் மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் வழங்கப்பட்டது. இது தவிர, மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேலும் கூடுதலாக ஒரு நாள் சம்பளத்தை வழங்க ஊழியர்களைக் கட்டாயப்படுத்தியதாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக வருவாய்த்துறை கள ஊழியர் செந்தில் என்பவர் இப்படிக் கூறிக் கொண்டிருந்தார். ஊழியர்களுடம் பேச்சுவார்த்தை நடத்தும் மேயர்
அதையடுத்து, `மாநகராட்சி சார்பில் ஊழியர்கள் யாரையும் கட்டாயப்படுத்தி கூடுதல் வெள்ள நிவாரண உதவி தொகையாக ஒருநாள் சம்பளம் பெறப்படவில்லை' என மேயர் விளக்கம் அளித்தார். ஆனால், ஊழியர் செந்தில் தன்னை மாநகராட்சியில் பணியாற்றும் மேலதிகாரி கட்டாயப்படுத்தி ஒரு நாள் ஊதியத்தை வழங்க வற்புறுத்தினார் எனத் தெரிவித்தார். இதனையடுத்து மேயர் கவிதா, `ஒரு நாள் ஊதியத் தொகையை நான் வழங்குகிறேன். இது குறித்து நான் விசாரிக்கிறேன்' எனத் தெரிவித்தார். ஆனால், அதை அவர் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார்" என்றனர். `எங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்கிறது!' - நொய்யல் ஆற்றை நினைத்து நொந்துபோகும் கரூர் விவசாயிகள்
http://dlvr.it/T2Qmgf

Wednesday 17 January 2024
பாகிஸ்தான் எல்லைக்குள் இரானின் தாக்குதல்... அத்துமீறல் எனக் கொதிக்கும் பாகிஸ்தான்! - என்ன நடந்தது?
ஜெய்ஷ் அல் அட்ல் அமைப்பின் இரண்டு தீவிரவாத தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி பாகிஸ்தான் மீது டிரோன், ஏவுகணைகள் மூலம் இரான் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், இது வான்வெளியில் நடத்தப்பட்ட இரானின் அத்துமீறல் எனக் கூறியுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாகவும் மேலும் 3 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது.
பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் அல்-அட்லின் இரண்டு முக்கியமான தலைமையகங்கள் அழிக்கப்பட்டதாக அல் அரேபியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான்
பாகிஸ்தானின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், இரானிய வெளியுறவு அமைச்சகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. உயிரிழப்புகள் நடந்த இடத்தை பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் குறிப்பிடாத நிலையில், அந்த தளங்கள் பலுசிஸ்தானில் இருப்பதாகவும், அது தீவிரவாத அமைப்பின் மிகப்பெரிய தலைமையகத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரானின் தாக்குதலை "தனது வான்வெளியில் நடத்தப்பட்ட அத்துமீறல்" என்று விவரித்த பாகிஸ்தான், ``இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்" எனவும் தெரிவித்தது
"தீவிரவாதம் என்பது எல்லா நாடுகளும் சந்திக்கும் பொதுவான அச்சுறுதல். அதற்கு சரியான கூட்டு நடவடிக்கை வேண்டும் என்று பாகிஸ்தான் எப்போதும் கூறி வருகிறது. இத்தகைய ஒருதலைப்பட்சமான செயல்கள் அண்டை நாடுகள் மீதான இருதரப்பு நம்பிக்கையையும் நம்பகத்தன்மையையும் கடுமையாக குறைக்கிறது" என்று பாகிஸ்தான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பகிரப்படும் சில வீடியோக்களில், பாகிஸ்தான் மீது இரான் நடத்திய தாக்குதலில் 8 மற்றும் 12 வயதுடைய இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாகக் கூறி சேதமடைந்த வீடுகள் காட்டப்படுகின்றன. இரான்
ஜெய்ஷ் அல்-அட்ல் என்பது 2012 ஆண்டு இரானில் உருவாக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பு ஆகும். இது இரானின் தென்கிழக்கு மாகாணமான சிஸ்தான்-பலூசிஸ்தானில் செயல்படும் சன்னி பயங்கரவாதக் குழு. பல ஆண்டுகளாக, ஜெய்ஷ் அல்-அட்ல் இரானிய பாதுகாப்புப் படைகள் மீது ஏராளமான தாக்குதல்களை நடத்தியது.
டிசம்பரில், சிஸ்தான் - பலூசிஸ்தானில் உள்ள காவல்நிலையத்தின் மீதான தாக்குதலுக்கு ஜெய்ஷ் அல்-அட்ல் பொறுப்பேற்றது. அதில் 11 காவல் துறையினர் கொல்லப்பட்டனர்.சிஸ்தான்-பலுசிஸ்தான் என்பது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் எல்லையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/T1VYby

அண்ணன் ஜெகன் Vs தங்கை ஷர்மிளா... எப்படி இருக்கிறது ஆந்திர அரசியல் ஜல்லிக்கட்டு?!
ஆந்திர அரசியல் பல புதிய காட்சிகளைக் காணத் தொடங்கிவிட்டது. அங்கு, இன்னும் நான்கு மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து, சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தற்போதைய முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, இரண்டாவது முறையாக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டுவருகிறார்.ஜெகன்மோகன் ரெட்டி
ஒரு காலத்தில், பெரும் செல்வாக்குடன் ஆளுங்கட்சியாக வலம்வந்த காங்கிரஸ் கட்சி, இழந்த செல்வாக்கை மீட்டு, மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு வரத்துடிக்கிறது. அதற்கான ஒரு உத்தியாக, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஒய்.எஸ்.ஷர்மிளாவை, ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கட்சித் தலைமை நியமித்திருக்கிறது.
முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உடன்பிறந்த தங்கைதான் ஒய்.எஸ்.ஷர்மிளா என்பதுதான் களத்தின் சுவாரஸ்யமே. ஒன்றுபட்ட ஆந்திராவில் செல்வாக்குமிக்க காங்கிரஸ் கட்சித் தலைவராக விளங்கிய ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, ஆந்திராவின் முதல்வராக இருந்தவர். அவரது மறைவுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பதவியை எதிர்பார்த்தார் ஜெகன். குறிப்பாக, முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிடம் பலமுறை கோரிக்கை வைத்தார். ஒய்.எஸ்.ஷர்மிளா - காங்கிரஸ்
ஆனால், ரோசய்யா, கிரண் ரெட்டி போன்ற மூத்த அமைச்சர்களுக்கு முதல்வர் நாற்காலியில் அமரவைத்த காங்கிரஸ் கட்சி, ஜெகன்மோகன் ரெட்டிக்கு அந்த வாய்ப்பைத் தரவில்லை. அதனால், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கி, நடைப்பயணம் எல்லாம் அவர் சென்றார்.
அப்போது, அண்ணனுக்கு துணை நின்றவர்தான் ஒய்.எஸ்.ஷர்மிளா. தாய் விஜயம்மாவுடன் சேர்ந்து ஜெகனுக்கு ஆதரவாகத் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார் ஷர்மிளா. அதன் மூலமாக, மாநில அளவில் தலைப்புச்செய்தியாகவும் அவர் மாறினார்.கே.சந்திரசேகர ராவ், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி
ராஜசேகர ரெட்டியின் ஆதரவாளர்கள் ஜெகன்மோகன் ரெட்டியின் பக்கம் சாய்ந்தார்கள். அதனால், ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி செல்வாக்கு இழந்தது. 2019-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் நாற்காலியை ஜெகன் பிடித்தார். ஜெகனுடன் ஏற்பட்ட கருத்து மாறுபாடு காரணமாக, தெலங்கானா அரசியலுக்குப் போனார் ஷர்மிளா. ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா என்ற புதிய கட்சியைத் தொடங்கி, பி.ஆர்.தலைவரும் முன்னாள் முதல்வருமான கே.சந்திரசேகர ராவுக்கு எதிரான அரசியலை முன்னெடுத்துவந்தார் ஷர்மிளா.
கே.சி.ஆரை எதிர்த்து அவரால் அரசியல் செய்ய முடியவில்லை. தெலங்கானாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் அவரது கட்சி போட்டியிடவில்லை. தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றிபெற்ற நிலையில், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்து, ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா கட்சியை காங்கிரஸுடன் இணைத்துவிட்டார். தற்போது மாநிலத் தலைவர் பதவியையும் காங்கிரஸ் கட்சி அவருக்கு வழங்கியிருக்கிறது. ஷர்மிளா
இதனால், தனது அண்ணனுடன் நேரடியாக அரசியல் களத்தில் மோதும் இடத்துக்கு ஷர்மிளா வந்திருக்கிறார். ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்ட நடந்துவரும் முயற்சியில், ராஜசேகர ரெட்டியின் ஆதரவாளர்களில் ஒரு பகுதியினர் மீண்டும் தாய்க் கட்சிக்குத் திரும்புவார்கள் என்று காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.``வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வரும்” - சசி தரூர் சொல்வதென்ன?
அப்பா முதல்வராக இருந்தார். அண்ணன் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட்டார். எனவே, தானும் முதல்வராக வேண்டும் என்ற ஆசை ஷர்மிளாவுக்கும் இருக்கிறது. இதுதான் சரியான வாய்ப்பு என்று அவர் கருதுகிறார். சந்திரபாபு நாயுடு
இதற்கிடையில், தெலங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவும் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார். ஆனால், ஜெகனுக்கும் பாபுவுக்குமான மோதலைவிட, ஜெகனுக்கும் ஷர்மிளாவுக்கும் இடையே நடக்கவிருக்கும் மோதலைத்தான் ஆந்திரா அரசியல் பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். தெலங்கானாவில் செய்தது போன் இங்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்வாரா, அண்ணனுக்கு எதிராக தங்கையின் ஆக்ஷன் பிளான் எப்படி இருக்கும், அதற்கு அண்ணனின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
http://dlvr.it/T1VYGS