கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 20 இடங்களை தனக்கு எடுத்துக்கொண்டது தி.மு.க. மீதம் உள்ள இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுத்தது. அதில் காங்கிரஸுக்கு 9 தொகுதிகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.கவுக்கு தலா 2 தொகுதிகள், ம.தி.மு.க, கொ.ம.தே.க, முஸ்லிம் லீக், ஐ.ஜே.கே உள்ளிட்டவற்றுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 38 இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது. தேனியில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மட்டும் தோல்வியடைந்தார்.ஸ்டாலின்
இதில் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.முக, கொ.ம.தே.க ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. வி.சி.க-வை பொறுத்தவரையில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் மட்டும் பானைச் சின்னத்தில் போட்டியிட்டார். வி.சி.க-வின் மற்றொரு வேட்பாளரான ரவிக்குமார், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். இதனால் நாடாளுமன்றத்தில் தி.மு.க உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இந்த சூழலில் வரும் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இருக்கும் கட்சிகள் சொந்த சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கின்றன.
இது குறித்து நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், "கடந்த தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் சொந்த சின்னத்தில் போட்டியிட்டன. ம.தி.முக, கொ.ம.தே.க, வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் நின்றன. இந்த சூழலில் வரும் தேர்தலில் சம்பந்தப்பட்ட கட்சிகளிடம் மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என தி.மு.க தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டது. ஆனால், வி.சி.க தரப்பில் பானை சின்னத்திலும், ம.தி.மு.க பம்பரம் சின்னத்திலும் என சொந்த சின்னத்தில் நிற்பதற்கே விரும்புகிறார்கள்.மதிமுக
தி.மு.க கூட்டணிக்குச் செல்ல காய் நகர்த்தும் கமல், டார்ச் லைட் சின்னத்தில்தான் தேர்தலை சந்திக்க போவதாக அறிவித்துவிட்டார். இதேபோல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வழக்கம்போல சொந்த சின்னத்தில்தான் தேர்தலை சந்திப்பார்கள். இதனால் நாடாளுமன்றத்தில் தி.மு.க உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும். எனவே, இந்த விவகாரம் குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கும் தி.மு.க, என்ன முடிவை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றனர் விரிவாக.Election 2024: திருநாவுக்கரசருக்கு பதில் துரை வைகோ... திருச்சியை குறிவைத்த மதிமுக!
http://dlvr.it/T2XVG6