சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜெகநாதன் மற்றும் பதிவாளராக தங்கவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டதற்குப் பிறகு, பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக, தமிழ்நாடு அரசுக்குத் தொடர் புகார்கள் வந்தது. அதையடுத்து, உயர் கல்வித்துறையின் அரசு கூடுதல் செயலாளர் பழனிசாமி தலைமையில் இரண்டு பேர் கொண்ட விசாரணைக் குழுவைத் தமிழ்நாடு அரசு நியமித்து, புகார்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த விசாரணைக் குழு, பெரியார் பல்கலைக்கழகத்தில் பத்து கட்டங்களாக ஆய்வு மேற்கொண்டு, கடந்த 3 ஆண்டுகள் குறித்த ஆவணங்களைச் சரிபார்த்தது மட்டுமல்லாமல், பல்கலைக்கழக ஆசிரியர்கள், தொழிலாளர்கள், தனியார் அமைப்பினர் என அனைவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டது.
இந்த விசாரணைக் குழுவின் அறிக்கை கடந்த 5-ம் தேதி தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில், பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளராகப் பொறுப்பு வகிக்கும் தங்கவேல் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், குறிப்பாகக் கணிதத் துறையில் முனைவர் பட்டம் பெற்று பேராசிரியராக இருந்த தங்கவேல், பெரியார் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல்துறையில் நியமனம் செய்ததில் முறைகேடு நடந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழகம்
மேலும் கணினி அறிவியல்துறைக்குத் தேவையான உபகரணங்களை ஒரே நிறுவனத்தில்... அதுவும், அவரின் உறவினர் நிறுவனத்திலேயே வாங்கியது, இதற்காக இரண்டு முறை கூடுதலாக முன்தொகையைப் பெற்றது, பெரியார் பல்கலைக்கழக வளாக பராமரிப்பு என்ற பெயரிலும், கணினி தொடர்பான ஹார்டுவேர், சாப்ட்வேர் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.
கணினி அறிவியல் மையத்திற்கு உயர்தர கட்டமைப்பு கொண்ட பொருள்கள் வாங்குவதாகக் கூறி, தரம் குறைவான பொருள்களை வாங்கியது உள்ளிட்ட தங்கவேல் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, பழனிசாமி விசாரணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் தீன் தயாள் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நிதியில் முறைகேடு, பெரியார் பல்கலைக்கழகத்தில் போதிய மனித வளம் இருந்தபோதும் பணிகளை அவுட் சோர்சிங் என்ற பெயரில் தனியார் அமைப்புகளுக்குக் கொடுத்ததன் மூலம் நடைபெற்ற முறைகேடு என பல்வேறு முறைகேடுகள் மற்றும் கையாடல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலுவை பணி ஓய்வு செய்திட அனுமதிக்கக் கூடாது என்றும், அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்திட வேண்டும் என்றும், தமிழ்நாடு உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திக், பல்கலைக்கழக துணைவேந்தருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல்
எனவே, பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலுவை, பல்கலைக்கழக துணை வேந்தர் பணியிடை நீக்கம் செய்யக்கூடும் என்கின்றனர்.ஜாமீனில் வந்த துணைவேந்தரைச் சந்தித்து ஆலோசனை நடத்திய ஆளுநர் - சேலம் பெரியார் பல்கலைக்கழகச் சர்ச்சை
http://dlvr.it/T2WjV7