Monday 12 February 2024
`பாஜக தலைவர்களின் இதயத்தில் தமிழகம் இருக்கிறது..!' - சென்னை கூட்டத்தில் பாஜக தலைவர் நட்டா பேச்சு
சென்னை வந்த பா.ஜ.க தேசியத் தலைவர் நட்டா, பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டத்தில் பேசுகையில், ``திருவள்ளுவர், பாரதியார் ஆகியோர் நாட்டுக்குச் செய்த தியாகங்களை நினைவு கூறுகிறேன். பா.ஜ.க தலைவர்களின் இதயத்தில் தமிழகம் இருக்கிறது. குறிப்பாகப் பிரதமர் மோடிக்கு தமிழகம் மிகவும் பிடிக்கும். உலகத்தில் எந்த இடத்துக்குச் சென்றாலும், தமிழகம் குறித்துப் பேசுவார். இங்கிருந்து செங்கோலைக் கொண்டு சென்று, நாடாளுமன்றத்தில் வைத்திருக்கிறோம்.
எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கி இருக்கிறோம். தமிழகத்தில் மிகப்பெரிய கலாசாரம், பண்பாடு இருக்கிறது. மிகவும் பழைமையான மொழியை வைத்திருக்கிறது. அறிவியல், தொழில்நுட்பம் என அனைத்திலும் தமிழகத்தின் பங்கு மிகவும் முக்கியமானது.
தமிழகத்தில் மிகவும் மோசமான தலைவர் இருக்கும் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க ஆட்சியில் தமிழகம் சீரழிந்து கொண்டு இருக்கிறது. இன்று தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருப்போருக்கு அறிவு இல்லை. வரும் வழியில் லைட் இல்லை. மிரட்டிக் கடைகளை மூட வைத்திருக்கிறார்கள். எதற்காக இவ்வளவு போலீஸ் இருக்கிறார்கள்... இதுதான் ஜனநாயகமா?
அதற்காகத்தான் `என் மண், என் மக்கள்' யாத்திரையை நடத்துகிறோம். விரைவில் யாத்திரை 234 தொகுதிகளிலும் பூர்த்தி அடையும். ஊழல் இல்லாத ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். யார் ஊழல் செய்தாலும், விட்டுவைக்க மாட்டோம்.
உலக பொருளாதாரத்தில் 5-வது இடத்துக்கு வந்திருக்கிறோம். மீண்டும் வாய்ப்பு கொடுத்தால், 3-வது இடத்துக்கு வந்துவிடுவோம்.
வாகன உற்பத்தியில் ஜப்பானை முந்திவிட்டோம். 97% மொபைல்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ராம ஜென்ம பூமியை மீட்டிருக்கிறோம். எனவே நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. மீண்டும் நீங்கள் மோடிக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் தி.மு.க, பொய் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஏராளமான திட்டங்களை தமிழகத்துக்கு செய்திருக்கிறோம். குடும்ப அரசியல், கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து செய்வதுதான் தி.மு.க. சிறையில் இருக்கும் அமைச்சர்களுக்கு இன்னும் ஊதியம் செல்கிறது. கொள்ளையடித்தப் பணத்தைப் பாதுகாக்க இந்தியா கூட்டணி அமைத்திருக்கிறார்கள். மீண்டும் பா.ஜ.க-வுக்கு வாய்ப்பு கொடுங்கள் எனச் சொல்லிக்கொண்டு விடைபெறுகிறேன்." என்றார். முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்களை ஈர்ப்பதால், பாஜக-வுக்குப் பலன் இருக்கிறதா?!
http://dlvr.it/T2ckng

Sunday 11 February 2024
ஹங்கேரியா: பாலியல் குற்றவாளிக்கு ஆதரவு; முதல் பெண் குடியரசுத் தலைவர் ராஜினாமா! - காரணம் என்ன?
2022-ம் ஆண்டு ஹங்கேரியா நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார் கத்தலின் நோவக் (46). இந்த நிலையில், அரசு நடத்தும் சிறார் இல்லத்தில், சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை நடந்த விவகாரம் தொடர்பான வழக்கில் முன்னாள் துணை இயக்குநர் கைது செய்யப்பட்டார். அவர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்களைக் காப்பாற்றும் நோக்கில் செயல்பட்டதாகத் தண்டிக்கப்பட்டார்.
இதற்கிடையில், முன்னாள் துணை இயக்குநருக்குக் குடியரசுத் தலைவர் மன்னிப்பு வழங்கி ஆணை பிறப்பித்தார். கத்தலின் நோவாக்-வின் இந்த முடிவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கினகத்தலின் நோவக்
இந்த நிலையில், உலக வாட்டர் போலோ சாம்பியன்ஷிப் போட்டியில் கஜகஸ்தான் - ஹங்கேரியா இடையே நடக்கும் போட்டியைக் காண கத்தார் சென்றிருந்த கத்தலின் நோவாக், உடனடியாக நாடு திரும்பினார். மேலும், அடுத்த சில மணி நேரங்களில் தனது ராஜினாமா குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,``நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். பாலியல் குற்றத்தை மறைத்தவருக்கு நான் மன்னிப்பு வழங்கியதன் மூலம் தவறு செய்துவிட்டேன். நான் காயப்படுத்தியவர்களிடமும், பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்.
நான் எப்போதும் அவர்களை ஆதரிக்கவில்லை. நான் குழந்தைகள் மற்றும் குடும்பங்களைப் பாதுகாப்பதற்கு ஆதரவாக இருக்கிறேன்... இருந்தேன்... இருப்பேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
குடியரசுத் தலைவரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, நீதி அமைச்சர் ஜூடிட் வர்காவும் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.`அடுத்த 25 ஆண்டுகள் நாட்டுக்கு மிக முக்கியமானவை!' - 17-வது மக்களவையில் பிரதமர் மோடியின் கடைசி உரை
http://dlvr.it/T2bdgG

``எடப்பாடி, வேலுமணி மீது ஏன் ரெய்டு நடத்தவில்லை!" - பாஜக, அதிமுக மீது பாயும் தயாநிதி மாறன்
திமுக இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை திமுக சார்பில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன. இதற்கான பரிசளிப்பு விழாவில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநிலச் செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி கலந்துகொண்டார். அப்போது பேசிய தயாநிதி மாறன்,தயாநிதி மாறன்
“அமைச்சர் செந்தில் பாலாஜி எதை செய்தாலும் மிகச்சிறப்பாக செய்வார். அதிமுக-வும், பாஜக-வும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவரை சிறையில் வைத்துள்ளனர். இதுநாள் வரைக்கும் அதிமுக, பாஜக-வுடன் கூட்டணியில் இருந்தது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் வாயை திறந்தார்களா... ஒரு கேள்வி கேட்டார்களா... ஆனால், பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம் 240 கேள்விகளை கேட்டுள்ளார். தி.மு.க நாடாளுமன்றம் சென்றவுடன் தமிழ்நாட்டுக்காக அவ்வளவு கேள்விகளை கேட்டுள்ளோம். நாடாளுமன்றம்
உலக முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். உதயநிதி விளையாட்டுத்துறை அமைச்சர் ஆனவுடன் உலக அரங்கில் நடைபெறும் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தினார். செஸ் , கேலோ இந்தியா போட்டிகள் மாவட்டம் வாரியாக நடத்தியுள்ளார்.
நாம் கட்டும் வரி பணத்தை நமக்கு முழுமையாக மத்திய அரசு கொடுப்பதில்லை. நாம் ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா தான், மத்திய அரசு கொடுக்கிறது அதேநேரத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் கொடுக்கும் 1 ரூபாய்க்கு 2 ரூபாய் 17 பைசா திருப்பிக் கொடுக்கிறது. பா.ஜ.க தமிழ்நாட்டுக்கு எதிரானது. அதற்கு துணை போனது அதிமுக. செந்தில் பாலாஜி மீது பொய் வழக்கு போட்டு கைது செய்தார்கள்.எடப்பாடி பழனிசாமி, வேலுமணி
கூட்டணியை விட்டு வெளியே வந்த பின்னும், எடப்பாடி மீதும், வேலுமணி மீதும் ஏன் இன்னும் வருமானவரி, அமலாக்கதுறை சோதனை செய்யவில்லை. அவர்கள்மீதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. நாங்கள் வெளியே வந்தது மாதிரி நடிக்கிறோம். நீங்களும் அப்படியே நடியுங்கள் என, இரு கட்சிகளிடையே ரகசிய உறவு வைத்துள்ளனர்” என்றார். `பாஜக ஆதரவில்தான் அதிமுக ஆட்சி நடைபெற்றது... இபிஎஸ் செய்தது உட்சபட்ச துரோகம்!' - ஓபிஎஸ் தாக்கு
http://dlvr.it/T2b0zq

'லேகியம் விற்பவர்கள்தான் இப்படிப் பேசுவார்கள்!' - அண்ணாமலையைக் கலாய்த்த ஜெயக்குமார்
கோவை மாவட்டம், சின்னியம்பாளையம் அருகேயுள்ள பிருந்தாவன் திருமண மண்டபத்தில், அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை தயாரிப்பின் ஒரு பகுதியாக, தொழில் அமைப்புகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.அ.தி.மு.க கூட்டம்
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “பா.ஜ.க-வுக்கு ஆதரவாக கூலிக்கு மாரடிக்கும் பணியை ஓ.பி.எஸ் செய்து வருகிறார். தேர்தலுக்குப் பிறகு ஓ.பி.எஸ் பா.ஜ.க-வில் இணைந்து விடுவார். பா.ஜ.க-வுடன் யார் வேண்டுமானாலும் கூட்டணி சேரலாம். அ.தி.மு.க-வைப் பொறுத்தவரையில் பெரிய கூட்டணி மகத்தான கூட்டணி அமையும்.
தமிழகத்தில் பா.ஜ.க இல்லாத கூட்டணிதான் அமையும். பா.ஜ.க தவிர்த்து யார் வேண்டுமானாலும் கூட்டணியில் இணையலாம். அ.தி.மு.க யாரிடமும் கெஞ்ச வேண்டிய நிலையில் இல்லை. அ.தி.மு.க-வை நோக்கிதான் மற்ற கட்சிகள் வரும். தி.மு.க தேர்தல் அறிக்கைக்காக கனிமொழி தமிழகம் முழுவதும் பயணம் செய்கிறார். நான்கு சுவற்றுக்குள் இருந்து கொண்டு மனுக்களை பெற்று வருகிறார். அ.தி.மு.க-வைப் பார்த்து, தற்போது தி.மு.க-வும் ஆடிட்டோரியங்களில் மனுக்களை வாங்கி வருகிறது.அதிமுக கூட்டம்
17 வருடங்களாக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க, இதுவரை தமிழகத்துக்கு என்ன செய்தது. அ.தி.மு.க மாநில உரிமைக்காக பாடுபட்டது. கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது தி.மு.க. அ.தி.மு.க ஆட்சியில் எல்லை தாண்டி மீன்பிடித்த சம்பவங்கள் குறைவாக நடைபெற்றது. அ.தி.மு.க-வை கண்டு இலங்கை அரசு பயந்தது.
மக்களை பாதிக்கின்ற எந்த சட்டமாக இருந்தாலும் அ.தி.மு.க எதிர்க்கும். சிறுபான்மையின மக்கள் எந்த விதத்தில் பாதிக்கப்பட்டாலும், அதை அ.தி.மு.க எதிர்க்கும். பல்வேறு சட்ட திட்டங்களை கொண்டுள்ள இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அனுமதிக்க முடியாது. அண்ணாமலை பல கருத்துகளை கூறி மாட்டிக் கொண்டிருக்கிறார்.அண்ணாமலை
அண்ணாமலை நிச்சயம் லேகியம் விற்பவராகத்தான் இருப்பார். எங்களைப் பொறுத்தவரை தி.மு.க பகையாளி என்றால், பா.ஜ.க-வும் பகையாளி தான். பா.ஜ.க-வுடன் இப்போதும், எப்போதும் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.” என்றார்.வேட்பாளர் தேர்வு; உச்சத்தில் கோஷ்டிப்பூசல்... குழப்பத்தில் திமுக தலைமை! - சேலம் தொகுதி நிலவரம்
http://dlvr.it/T2b0rX

Exclusive: `மீண்டும் தேர்தலில் போட்டியா?' - தமிழிசை ஓப்பன் டாக்!
தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனைச் சந்தித்து, அவரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தேன்!
`` '400 பிளஸ் இடங்களில் வெற்றி உறுதி' என்கிறார் பிரதமர். மறுபக்கம் கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை பா.ஜ.க இன்னும் நிறைவேற்றவில்லை என்கின்றனவே எதிர்க்கட்சிகள்?"
"எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கலாம். கடந்த 10 ஆண்டுகளாக நாடு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பிரதமர் மோடியைத் தவிர வேறு யார் இருந்திருந்தாலும், இந்த அளவுக்கு வளர்ச்சி இருக்குமா என்பது கேள்விக்குறிதான். கொரோனா பாதிப்பிலிருந்து இன்னும் பல நாடுகள் வெளியில் வராதபோதும், ஒரு லட்சம் ஸ்டார்ட் அப்களை உருவாக்கி இருக்கிறோம். எனவே, வளர்ச்சிக்காகவாவது மீண்டும் மோடி வர வேண்டும்."அமித் ஷா, மோடி
" 'ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கிடைக்கும் என்றார் மோடி. ஆனால், 12.5 கோடி பேர் வேலை இழந்திருக்கிறார்கள்' என்கிறதே காங்கிரஸ்?"
" 'இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இருக்கக் கூடாது. வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும்' என பிரதமர் சொல்லியிருக்கிறார். ஒரு லட்சம் ஸ்டார்ட் அப்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறி, பலருக்கு வேலை கொடுத்து கொண்டிருக்கிறார்கள். முத்ரா திட்டம் மூலம் இருபத்தி நான்கரை லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் 30% பெண்கள், பட்டியல், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியாவை பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வரும் நாடாக அறிவித்திருக்கிறது, உலக பொருளாதார முனையம். பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்துக்கு வந்து விட்டோம். விவாதத்திற்கு வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் பேசலாம்."பணி இழப்பு
``பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான், புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு, ராமர் கோயில் விழாவுக்கு குடியரசுத் தலைவர் அழைக்கப்படவில்லை என்கிற விமர்சனமும் எழுகிறதே?"
"அவரை குடியரசுத் தலைவராக்கியதே பிரதமர்தான். அதற்கு எதிராக நின்றது யார் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே தற்போது பேசுவதற்கு உங்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது... குடியரசுத் தலைவர் ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றால், அதற்கு பிரத்யேக புரோட்டோகால் இருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு ராமர் கோயில் நிகழ்ச்சிக்கு குடியரசுத் தலைவர் வந்தால், அங்கு பல நடவடிக்கைகள் தடுக்கப்படும். பூஜைகள் தள்ளிப் போகும். எனவேதான் சில நேரங்களில் அது போன்ற முடிவுகள் எடுக்கப்படுகிறது. சட்டமன்றத்துக்கு ஆளுநர்களை அழைக்காதவர்கள்தான் நாடாளுமன்றத்துக்கு குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை என்கிறார்கள். இதெல்லாம் வேண்டாத விதண்டாவாதம்."குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
``எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலமாக மத்திய அரசு குடைச்சல் கொடுப்பதும் உண்மை தானே?"
"இது ஒரு தவறான கருத்து. முதலமைச்சர்கள் அதிகாரம் படைத்தவர்களாக இருக்க வேண்டும். ஆளுநர் அலுவலகத்தை கொஞ்சம்கூட மதிக்கக் கூடாது என்ற ஒரு சூழ்நிலையில் இருக்கிறார்கள். கேரள ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் கறுப்புக்கொடி காட்டி கலாட்டா செய்கிறார்கள். தெலங்கானாவில் பல பிரச்னைகளை நான் சந்தித்தேன். கொடி ஏற்றுவதற்கு, ஆளுநர் உரைக்கு அனுமதி தரவில்லை. ஆளுநர் செல்லும் இடங்களில் புரோட்டோகால் பின்பற்றப்படவில்லை. இதையெல்லாம் ஏன் யாரும் கேட்கவில்லை... ஆளுநரை சரியாக நடத்தாதபோது அவர்கள் குரல் கொடுத்திருக்கிறார்களா?"ஆர்.என்.ரவி
"ஆளுநர்கள் ஒத்துழைப்பு தராததால்தான், நிகழ்ச்சிகளுக்கு அழைக்கவில்லை என்கிறதே சம்பந்தப்பட்ட மாநில அரசுகள்?"
"மசோதாக்கள்மீதான நடவடிக்கையில் முடிவெடுக்கும் உரிமை ஆளுநர்களுக்கு இருக்கிறது. நான் ஒரு ஃபைலை கிளர்க்குக்கு அனுப்புகிறேன் என்றால், அதில் நோட்ஸ் எழுதுவதற்கு அவருக்கு அதிகாரம் இருக்கிறது. ஆளுநர்கள் முன்புபோல் இல்லை. மக்கள், எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள். தெலங்கானாவில் பழங்குடியினர் இடத்தை பஞ்சாயத்தில் மாற்ற முடிவு செய்தபோது, அந்த மக்கள் எதிர்த்தார்கள். அவர்களுக்கு நான் ஆதரவு கொடுத்தேன். ஆகவே தனிப்பட்ட முறையில்தான் பார்க்க வேண்டுமே தவிர... எல்லா ஆளுநர்களையும் பொதுவான கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு."ஆன்லைன் சூதாட்டம்
"ஆனால் ஆன்லைன் விளையாட்டுகளால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் தானே?"
``அதை நீங்கள் இங்குள்ள ஆளுநரிடம்தான் கேட்க வேண்டும்."அமைச்சர் ரகுபதி
``தென் மாநில ஆளுநர்களுக்கு இடையில் மீடியாக்களில் தோன்றுவதில் மறைமுகப் போட்டியிருப்பதாக, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சொல்கிறாரே?"
"நான் 1999-ல் இருந்து அரசியலில் இருக்கிறேன். எங்கள் அப்பாவை எதிர்த்து நான் ஓர் அரசியல் கட்சியில் சேர்ந்தேன். எனது முயற்சி, தலைவர்களின் ஆதரவு, கொள்கை பிடிப்பினால் மேலே வந்திருக்கிறேன். இன்றுதான் மீடியா வெளிச்சத்தை நான் பெற வேண்டும் என்பது எனக்கு இல்லை. அப்படிப் பார்த்தால் அவர்கள் கட்சியில் செய்வது எல்லாம் மீடியா வெளிச்சத்துக்குதான் செய்கிறார்களா... ஆளுநர்களுக்கும் தங்களது கருத்தை எடுத்துச் சொல்வதற்கு உரிமை இருக்கிறது. அதைத்தான் நான் செய்கிறேன். எனவே, தவறான கருத்து. தெரியாமல் பேசுகிறார்."ஸ்டாலின்
"ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசின் ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?"
"ஆளுநராக இருந்து கொண்டு முற்றிலும் அரசியல் கருத்தைச் சொல்ல முடியாது. தமிழகத்தின் குடிமகள் என்ற வகையில், நிறைய பிரச்னைகளைப் பார்க்கிறோம். முதலில் அனைவருக்கும் ரூ.1,000 என்றார்கள். பிறகு இன்னாருக்கு மட்டும்தான் என்கிறார்கள். அதேபோல் சமீபத்தில் வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பேச முயன்ற தம்பி முருகனைப் பார்த்து டி.ஆர்.பாலு, 'தகுதி இல்லை' என்கிறார். அப்போது உங்களுக்கு என்ன இருக்கிறது... இன்னாரின் மகன் என்பதால், அமைச்சராக்கியிருக்கிறீர்கள். இதன் மூலம் நாம்தான் ஆட்சி செய்ய வேண்டும், வாரிசுகள்தான் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கிறீர்கள். இவர்களைப் போன்றவர்கள் அடிமட்டத்தில் இருந்து எப்படி வந்தார்கள் என நினைக்கிறீர்கள்.
அதேபோல் நிவாரணம் கேட்பதிலும் பெரிய அரசியல் இருக்கிறது. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லாமல், கோவையில் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கிறார், முதல்வர். பிறகு எல்லா பழியும் மத்திய அரசுமீது சுமத்துகிறார்கள். மேலும் தென் மாநிலங்கள் நிதிப்பகிர்வில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்கிறார்கள். அதற்கு 'மாநிலத்தில் இருந்து நிதி குறியீடு எவ்வளவு என கணக்கீட்டு சொல்வதை, நாங்கள் அப்படியே கொடுக்கிறோம்' என நிதியமைச்சர் சொல்லியிருக்கிறார். காங்கிரஸ் ஆட்சியிலும் இதுதான் நடைமுறை. ஆனால் இவர்கள் தொடர்ந்து பாரபட்சமான கருத்தை மத்திய அரசுக்கு எதிராக சொல்லிக்கொண்டே இருந்தால், மக்கள் மத்தியில் எண்ணம் வரும் என நினைக்கிறார்கள்."உதயநிதி
"ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதியை முன்னிறுத்துவதை எப்படிப் பார்கிறீர்கள்?"
" 'வாரிசு அரசியல் என்பது மிகவும் அபாயகரமானது' என பிரதமர் சொல்லியிருக்கிறார். இதனால் பல பேருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. எங்கெல்லாம் அண்ணன் ஸ்டாலின் படம் இருக்கிறதோ அங்கெல்லாம் தம்பி உதயநிதி படம் இருக்கிறது. இதற்கு இடையில் எவ்வளவு பெரிய தலைவர்கள் இருந்தார்கள். அந்த இயக்கத்தை கொண்டு வர அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பும், முயற்சியும் நசுக்கப்படுகிறது என்றுதானே அர்த்தம். தங்களது அறிவாற்றலால் பலர் அந்த இயக்கத்தை வளர்த்திருக்கிறார்கள். தற்போது எனக்கு பிறகு என் மகன் என்ற அதிகார மாற்றத்தை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்... இது மன்னராட்சியா... குடியாட்சியா?"எடப்பாடி பழனிசாமி
"எடப்பாடி பழனிசாமி, 'இனி ஒருபோதும் பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை' என்கிறாரே?"
"நான் இருக்கும்போது அந்த உறவு ஏற்பட்டது. தி.மு.க-வுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் பெற வேண்டும் என்றால், இணைந்திருக்க வேண்டும். பிரிந்து போனது நல்லது இல்லை."பாஜக அண்ணாமலை
"இதன் மூலம் சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்கும் என்கிறாரே, அவர்?"
"பல பேர் பல விதத்தில் அவர்களின் கருத்தைச் சொல்லலாம். வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றிருக்கிறது. அங்கெல்லாம் குறிப்பிட்ட சதவீதம் சிறுபான்மையினர் இருக்கிறார்கள். ஆக, சிறுபான்மை மக்கள் என்றாலே மோடிக்கு எதிரானவர்கள் என்ற மாய பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆகவே இது தவறான வாதம்"ராகுல் காந்தி
" `பிரதமர் மோடிக்கு நிகரான தலைவர் ராகுல் காந்தி' என்கிறதே காங்கிரஸ்?"
"அப்படி மக்களும் நினைக்கவில்லை. நாமும் நினைக்கவில்லை. சமீபத்தில் வந்த 5 மாநிலத் தேர்தல் முடிவுகளைப் பார்த்தோம். பிரதமர் மோடிக்கு இணையாக அவர்கள் கூட்டணியின் ஒருவரை முன்னிறுத்த முடியவில்லை. ராகுல் காந்தி 10 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறார். அந்தக் கட்சியின் தலைவராக இருந்தார். அப்போதெல்லாம் என்ன முன்னேற்றங்களைக் கொண்டு வந்தார். அவர்கள் ஆட்சியில் பிரதமரை முழுமையாகப் பேச விடாமல் வைத்திருந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேல் எனக்கு மிகுந்த மன வருத்தம் தருவது இலங்கை தமிழர் பிரச்னை. நமது தொப்புள் கொடி உறவுகள் உயிரிழந்தபோது, இங்கே இருக்கும் எத்தனை பேர் அங்கு சென்றார்கள்... இன்று தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்கள்கூட `தடுங்கள்' என்று சொன்னார்களா... ஆக, நீங்கள் ஆட்சி செய்யும்போது என்னென்ன தவறுகள் செய்தீர்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்."ஆண்டவர்மணிப்பூர்“ஆண்டவனும் ஆள்பவரும் ஆணையிட்டால்... தேர்தலில் போட்டியிடுவேன்” - ஆளுநர் தமிழிசை ஸ்டேட்மென்ட்!
"இதே குற்றச்சாட்டைத்தான் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர்மீது எதிர்க்கட்சிகள் சுமத்துகின்றனவே?"
``காங்கிரஸ் ஆட்சியின்போதே இருந்த பிரச்னை. உள்துறை அமைச்சர் நேரில் சென்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார்கள்." தேர்தல் - வாக்களித்தல்
"தேர்தலில் பா.ஜ.க-வின் செயல்பாடுகளை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் சூழலில், சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தில் நீதிமன்றம் கண்டித்திருக்கிறதே?"
"ஓர் இடத்தில் நடக்கும் சில தவறுகளை வைத்து அனைவரையும் சொல்லக் கூடாது. வாக்காளர் இயந்திரத்தை குறை சொல்வதாக இருந்தால், தமிழ்நாட்டில் நீங்கள்தானே வெற்றி பெற்றிருக்கிறீர்கள். அப்போது தமிழ்நாட்டில் வெற்றி பெற்றதை இல்லை என்று சொல்கிறீர்களா... அவர்கள் வெற்றி பெறும் போதெல்லாம் வாக்கு இயந்திரங்கள் சரியாக இருக்கும். மற்றவர்கள் வெற்றி பெறும் போது சரியாகச் செயல்படவில்லை என்று கூறுவது தவறான கருத்து!"விஜய்
"சாதி, மதம் போன்ற பிளவுவாத கலாசாரத்துக்கு எதிராக களமாடுவதற்கே கட்சி தொடங்கியிருப்பதாக சொல்லியிருக்கிறாரே, விஜய்?"
"எல்லோரும் அதற்குதான் இருக்கிறார்கள். யார் சாதி, மதப் பிளவை ஏற்படுத்துகிறார்கள்... பிரதமர் `அரசியலமைப்புச் சட்டம்தான் எனது புனித நூல்' என்கிறார். உடனே சாதி, மதத்தை பா.ஜ.க பார்க்கிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்தக் கூடாது. சாதி, மதமற்ற ஒரு சமுதாயத்தை பிரதமர் படைத்துக்கொண்டு இருக்கிறார். சாதி, மத வேற்றுமை பார்க்கவில்லை என்றால், தமிழக முதல்வர் ஏன் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற இந்து மக்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல மறுக்கிறார்... அப்போது வேற்றுமையை நீங்கள் பார்க்கிறீர்கள் என்றுதானே அர்த்தம். எனவே அதில் எனக்கும் பங்கு இருக்கிறது என தம்பி விஜய் சொல்கிறார்"அமித் ஷா
"வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் போட்டியிட விரும்புவதாகச் சொல்கிறார்களே?"
"சமீபத்தில் அமித் ஷாவைச் சந்திக்கச் சென்றேன். உடனே 'புதுச்சேரியில் சீட் கேட்டேன். அதற்கு அவர் முதல்வரைப் பார்க்கச் சொன்னார்' எனப் பேசுகிறார்கள். இதில் எள்ளளவும் உண்மை இல்லை. எனக்கு இரண்டு மாநிலங்களில் வேலை கொடுத்திருக்கிறார்கள். அதை நான் சிறப்பாகச் செய்து வருகிறேன். ஆனால் எனது விருப்பம் மக்கள் பணி. இதையே மக்கள் பணியாகத்தான் ஏற்றுக்கொள்கிறேன். தெலங்கானாவில் பழங்குடியின மக்கள், மாணவ சமுதாயத்துக்கும் சேவை செய்து வருகிறேன். மேலும் 6 கிராமங்களைத் தத்தெடுத்தும் சேவை செய்து வருகிறேன். புதுச்சேரியில் நீட் தேர்வில் 10% இட ஒதுக்கீடு, பெண் குழந்தைக்கு ரூ.50,000 ஒதுக்கியது, ரூ.300 காஸ் மானியம் என மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு நான் உறுதுணையாக இருக்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஆனால் ஆளுநராக மக்களுக்கு நேரடியாக தொடர்பு இல்லாதபோதே இவ்வளவு செய்ய முடிகிறது என்றால், நேரடி தொடர்புக்கு வாய்ப்பு இருந்தால், நாம் எவ்வளவு செய்திருப்போம் என்பதை மக்கள் உணர வேண்டும். ஆண்டவரும், ஆண்டு கொண்டு இருப்பவரும் என்ன சொல்கிறார்களோ... அதை செய்வேன். ஆளுநராக இருக்க வேண்டும் என்றால், இருப்பேன். அடுத்து போட்டியிட வேண்டும் என்றால், போட்டியிடுவேன். அது அவர்களின் கையில் இருக்கிறது. தேசியச் செயலாளர், மாநில பொதுச்செயலாளர், மாநிலத் தலைவர் ஆகிய பதவிகள் நான் கேட்டு கிடைத்தது இல்லை. திறமையைப் பார்த்துக் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து ஐந்தரை ஆண்டுகள் தலைவராக இருந்தேன். சவாலான நேரத்தில் இயக்கத்தை எடுத்துச் சென்றேன் என்பதில், என்மீது தலைவர்களுக்கு மதிப்பு இருக்கிறது. எனக்கு அந்த ஆணை வந்தால், அதை ஏற்று பணியாற்றுவேன்."பாயும் தி.மு.க... கதறவிடும் காங்கிரஸ்... பல்முனை தாக்குதலில் கார்த்தி சிதம்பரம்!
http://dlvr.it/T2b0lQ

`அதிமுக கிடப்பில் போட்ட திட்டங்களை, திமுக செய்து முடிக்கிறது!' - கனிமொழி எம்.பி
தி.மு.க நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கனிமொழி எம்.பி தலைமையில், கோவையில் நேற்றைய தினம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள், தொழில்துறையினர் மற்றும் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை, கனிமொழி கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
`கோவை மாவட்டத்துக்கான நலத்திட்டங்கள் மிகவும் குறைவாகவும் மந்த நிலையிலும் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து உங்கள் கருத்தென்ன?'
``ஒன்றிய அரசாங்கம் தமிழக அரசிடம் பாரபட்சமாக நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் தென் மாநிலங்களுக்குக் குறைவான நிதியே ஒதுக்கப்பட்டது. இதனால் இருக்கக்கூடிய சில பிரச்னைகளால், கோவைக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் போயிருக்கலாமே தவிர... கோவையை தி.மு.க புறக்கணிக்கவில்லை.
நாளைகூட (10-02-2024) விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் புதியதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ரூபாய் 790 கோடி மதிப்பீட்டில் பில்லூர் மூன்றாம் குடிநீர் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். மேலும் பல தொழிற்சாலைகளைக் கோவைக்குக் கொண்டு வர, முதலமைச்சர் பல திட்டங்களை மேற்கொண்டிருக்கிறார். மேலும் மெட்ரோவுக்காக ஒன்பதாயிரம் கோடி ரூபாய், சாலைக்காக முந்நூறு கோடி ரூபாய், குடிநீருக்காக 790 கோடி ரூபாய், மேற்கு புறவழிச் சாலைக்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது." என்றார்.கனிமொழி
`இவையனைத்தும் அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள். தி.மு.க ஆட்சியில் புதிதாக எந்த திட்டங்களும் தொடங்கப்படவில்லையே?'
``அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் பல கிடப்பில் போடப்பட்டிருந்தது. அந்த திட்டங்களை தி.மு.க தான் செயல்படுத்துகிறது."
`தி.மு.க ஆட்சியில் புதிதாக எந்த மருத்துவக் கல்லூரிகளும் தொடங்கப்படவில்லை என்று அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியிருக்கிறாரே?'
``கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில், இந்தியாவிலேயே அதிகமாக அரசுப் பள்ளிகளும் கல்லூரிகளும் இருக்கும் சில மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு மாறியது. ஆனால் தற்போது நமது மண்ணை சேர்ந்த குழந்தைகளே அந்தக் கல்லூரிகளில் படிக்க முடியாத திட்டமான நீட் போன்றவை கொண்டுவரப்பட்டது. இது குறித்து ஏன் அவர்கள் பேசவில்லை?" என்றார். `அடுத்த 25 ஆண்டுகள் நாட்டுக்கு மிக முக்கியமானவை!' - 17-வது மக்களவையில் பிரதமர் மோடியின் கடைசி உரை
http://dlvr.it/T2b0fj