கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் மறுபடியும் சீட் பெற்றுவிட வேண்டும் என்பதற்காக, தலைமை வரை பேசி வருகிறார் ஜோதிமணி. மேலும், கடந்த சில மாதங்களாகவே கரூர் நாடாளுமன்றத் தொகுதி மக்களை சந்தித்து, அவர்களிடம் குறைகளை கேட்டு வருகிறார். அதோடு, தனது தொகுதி நிதியில் இருந்து பல்வேறு திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி, பள்ளி மாணவர்களைச் சந்திப்பது என்று தொகுதி முழுக்க வலம் வந்துகொண்டிருக்கிறார். இதற்கிடையில், 'இந்த முறை கரூர் தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு வழங்க கூடாது. தி.மு.க-வுக்கு ஒதுக்க வேண்டும்' என்று தி.மு.க தரப்பு, தி.மு.க தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிடம் கோரிக்கை வைத்ததாகச் சொல்லப்பட்டது. `ஊழியர்கள் போராட்டத்தை நிறுத்தி வைக்கப் பணம் கொடுத்தாரா மேயர்?' - பரபரக்கும் கரூர் மாநகராட்சிஜோதிமணி
இந்நிலையில்தான், ஜோதிமணிக்கு எதிராக, 'சீட் வழங்க கூடாது' என்று தீர்மானம் நிறைவேற்றி, காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் ஜோதிமணி தரப்பை அதிர வைத்திருக்கிறார்கள்.
கரூர் தாந்தோன்றிமலையில் உள்ள தனியார் திருமணம் மண்டபத்தில், மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் சி.சேகர் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கரூர் மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கமிட்டியில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், 'விரைவில் தமிழகத்துக்கு வருகை தரவுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற பாடுபடுவது, காங்கிரஸ் கட்சி கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கட்சியில் சரிவர பணியாற்றாமலும், பொதுமக்கள் மற்றும் சொந்த கட்சியினரிடம், சரியான அணுகுமுறை இல்லாத காரணத்தினாலும், கூட்டணி கட்சியினரிடம் வெறுப்பு உணர்வை ஏற்படுத்திய காரணத்தினாலும், தொகுதி முழுவதும் பெரும் அதிருப்தி நிலவி வருவதால், இம்முறை ஜோதிமணிக்கு மீண்டும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டாம் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியையும், தமிழக காங்கிரஸ் கமிட்டியையும் கேட்டுக் கொள்வது என ஒரு மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஜோதிமணிக்கு எதிரான தீர்மானம்
அதேபோல, காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் மோதல் போக்கை கடைபிடித்து வரும், எம்.பி ஜோதிமணியை வன்மையாக கண்டிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தவிர, கரூர் தொகுதியை காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் கரூர் மாவட்ட தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினருமான 'பேங்க்' சுப்பிரமணியனுக்கு சீட் வழங்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டியினை கேட்டுக்கொள்வது என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளனர். இந்தக் கூட்டத்தில் பேசிய 'பேங்க்' சுப்பிரமணியன், ஜோதிமணிக்கு எதிராக பேசினார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய 'பேங்க்' சுப்பிரமணியன், "தமிழகத்தில் தி.மு.க ஆட்சி மிகச் சிறப்பாக இருப்பதினால் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி மிகப்பெரிய வெற்றி அடையும். காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட ஜோதிமணி விருப்ப மனு வழங்குவார் என்பதால், நடைபெற்ற கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், ஜோதிமணிக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைமையும், தமிழக காங்கிரஸ் கமிட்டியும், மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 'பேங்க்' சுப்பிரமணியன்
ராகுல் காந்தியின், 'ஒற்றுமை பயணம்' தேசிய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல், ஆட்சி மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்து காத்திருப்பதால் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் தேர்தல் பணியாற்ற காத்திருக்கிறோம்" என்றார்.
அதோடு, காங்கிரஸ் கட்சியின் க.பரமத்தி வட்டார துணை தலைவர் செந்தில்குமார் என்பவர், தன் ரத்தத்தில் எழுதியிருக்கும் கடிதத்தில், 'கரூர் எம்.பி தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு பெற்று தர வேண்டும். எம்.பி ஜோதிமணிக்கு மீண்டும் போட்டியிட சீட் வழங்க கூடாது. முன்னாள் மாவட்ட தலைவர் 'பேங்க்' சுப்பிரமணியனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த கடிதத்தை தலைமைக்கு அனுப்பி வைக்க இருக்கிறார்களாம்.
ஜோதிமணிக்கு எதிராக சொந்தக் கட்சியினரே தீர்மானம் நிறைவேற்றிருப்பது, கரூர் மாவட்ட காங்கிரஸூக்குள் 'அதிரிபுதிரி' பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
http://dlvr.it/T2ggtj