நாம் தமிழர் கட்சியின் வசமிருந்த கரும்பு விவசாயி சின்னத்தை வேறு கட்சிக்கு ஒதுக்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். இவ்விவகாரத்தில் நாம் தமிழர் கட்சிக்கும், பா.ஜ.க-வுக்கும் வார்த்தை மோதல் முற்றியிருக்கிறது. `இது பா.ஜ.க-வின் அப்பட்டமான பழிவாங்கல்’ என சாடுகிறது நாம் தமிழர் கட்சி. `தாமதமாக விண்ணபித்ததே நா.த.க சின்னம் பறிபோக காரணம்’ என்கிறது பா.ஜ.க தரப்பு. இது `பழிவாங்கலா... இல்லை இது தான் நடைமுறை யதார்த்தமா?’நாம் தமிழர் கட்சி சின்னம்
2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம். கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு 2019-ல் 3.8 சதவீத வாக்குகளும் 2021 தேர்தலில் 6.87 சதவீத வாக்குகளும் பெற்றது நா.த.க. இந்நிலையில் `கன்னா கிசான்’ என்ற கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகவை சேர்ந்த பாரதிய பிரஜா ஆகியதா என்ற கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சி 2022-ல் தொடங்கப்பட்டதாகவும் அதுவொரு லெட்டர்பேட் கட்சி என்றும் விமர்சிக்கிறது நா.த.க.
தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள்கூட இல்லாத நிலையில், கட்சியின் சின்னம் பறிக்கப்பட்டிருப்பது நா.த.க-வினரிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய தேர்தல் ஆணையம் விதிமுறைகள் எதையுமே பின்னபற்றவில்லை எனக் குற்றம்சாட்டுகிறார்கள். `அ.தி.மு.க, தி.மு.க-வுக்கு பிறகு தமிழ்நாட்டில் தனித்து நின்று அதிக வாக்கு சதவீதம் வைத்திருக்கும் நா.த.க-வின் இடத்தை பா.ஜ.க பிடிக்க வேண்டும் என எண்ணத்தில் பழிவாங்குகிறது. எங்கள் வளர்ச்சியால் வயிற்றெரிச்சல் அடைந்து பா.ஜ.க இப்படியான நடவடிக்கை மேற்கொள்கிறது’ எனவும் சாடுகிறார்கள் நாம் தமிழர் கட்சியினர். சீமான்
`ஆனால் பா.ஜ.க தரப்பிலோ, சின்னத்தை பெற வேண்டிய தேதியில் பதிவு செய்யாமல் கோட்டைவிட்டுவிட்டு இப்போது வந்த எங்கள்மீது பழிவாங்கல் புகார் கொடுப்பது நகைப்பை ஏற்படுத்துகிறது’ என பதில் தருகிறார்கள். சின்னத்தை மீண்டும் எங்களுக்கே ஒதுக்க வேண்டுமென டெல்லி உயர் நீதிமன்ற மன்றத்தை நாடினார்கள். அதுவும் கைகொடுக்க வில்லை.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறது நாம் தமிழர் கட்சி. இதற்கிடையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையரையும் சீமான் சந்தித்து கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.கன்னா கிசான் சின்னம்
சின்னம் விவகாரத்தில் நா.த.க-வின் குற்றசாட்டுக்கு பதிலளித்து பேசிய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ``நா.த.க-வுக்கு கரும்பு விவசாயி சின்னம் வேண்டுமென்றால் முதலில் விண்ணபிக்க வேண்டும். யார் முதலில் செல்கிறார்களோ அவர்களுக்குத்தான் சின்னம் கிடைக்கும். சென்னையில் வெள்ளம் வந்துவிட்டதால் விண்ணப்பிக்க முடியவில்லை என்கிறார்கள். அவர்கள் விண்ணப்பிக்க கூடாதென நான் தடுக்கவில்லை. இதில் அண்ணாமலைக்கும், பா.ஜ.க-வுக்கும் நாம் தமிழர் கட்சிக்கு இதற்கு முன்பு ஒதுக்கப்பட்ட சின்னம் மீண்டும் ஒதுக்கப்படாததற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?” எனக் காட்டமாக வினவினர்.அண்ணாமலை
இதுகுறித்து விளக்கம் கேட்டு நா.த.க-வின் மாநில செய்தி தொடர்பாளர் பாக்கியராசனிடம் பேசினோம், ``நடப்பு ஆட்சி முடிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பிருந்து தேர்தல் தேதி அறிவிக்கும் நாளுக்கு 5 நாளுக்கு முன்னர் வரை பொதுச் சின்னத்திற்குப் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் விண்ணப்பிக்கலாம் என்பதே விதி. எனவே விண்ணப்பிக்க கால வரையறை இன்று வரை முடிவடையவில்லை. மேலும் மூன்று வருடம் வருமானவரி கட்டிய விவரமும், இரண்டு தேர்தல் செலவுகளைத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த விவரமும் இணைத்து விண்ணப்பித்தால் மட்டுமே பொதுச் சின்னம் கொடுக்கப்படும் என்பது சின்னம் ஒதுக்குவதற்கான விதிமுறைகள். இதையடுத்து பிப்ரவரி முதல் வாரம் விவசாயி சின்னம் கேட்டு போதிய ஆவணங்களுடன் விண்ணபித்தோம். சீமான்
ஆனால் கரும்பு விவசாயி சின்னத்தைக் கர்நாடகாவை சார்ந்த 2022-ல் தொடங்கிய ஒரு கட்சிக்குக் கொடுத்திருக்கிறார்கள். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் விளக்கம் கேட்டபோது, அவர் முன்பே விண்ணப்பித்திருக்கிறார்கள், அதோடு தேசிய கட்சியாகப் பதிவு செய்திருக்கிறார்கள் அதனால் தரப்பட்டிருக்கலாம் என்ற பதிலை சொன்னார்கள். தேர்தல் ஆணையத்தின் விதியை எதையுமே பின்பற்றாத ஒரு கட்சிக்கு எப்படிச் சின்னம் ஒதுக்கினீர்கள் என்றும், அந்தக் கட்சி இருக்கும் கர்நாடகாவில் அவர்கள் வேறு சின்னதை வாங்கிவிட்டு அவர்கள் கட்சி உருவாக்கப்படாத தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில் நாங்கள் விண்ணப்பித்த சின்னத்தைப் பெற்றிருப்பதற்குப் பின்னால் எங்களை முடக்கவேண்டும் என்ற நோக்கமிருக்கிறது என்ற கேள்வியையும் முன்வைத்தோம். அதற்கு எந்தப் பதிலையும் தேர்தல் ஆணையம் தரவில்லை.சே.பாக்கியராசன்
அதன் பின்னர்... First Come First Serve என்பதே சட்டவிரோதம், யார் தகுதி வாய்ந்த கட்சியோ அதற்குத் தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான காலம் முடியும் முன்னரே முதலில் விண்ணப்பித்தார் என்று அவசர அவசரமாகச் சின்னத்தை எடுத்துக்கொடுப்பது ஜனநாயகமற்ற செயல். மேலும் சின்னத்தை பெற்றுள்ள அந்த கட்சி எந்த வரையரைகளையும் கொண்டிருக்கவில்லை. எனவே திட்டமிட்டு ஒரு சின்னத்தை இன்னொருவருக்குக் கிடைக்காமல் முடக்கவேண்டும் என்ற நோக்கத்தில் செய்யும் காரியத்தை தேர்தல் ஆணையமே துணை போவது கொடுமை என டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாதிட்ட நிலையில் வழக்கு தள்ளுபடி ஆகியது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. எனவே. உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறோம்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY'உண்மை தெரிந்து பேசுங்கள்..!' - சின்னம் விவகாரத்தில் சீமானுக்கு அண்ணாமலை பதில்
http://dlvr.it/T3l4qX