புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த சிறுமி, கடந்த 2-ம் தேதி தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். அதையடுத்து 5-ம் தேதி அதே பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தில் விவேகானந்தன், கருணாஸ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து ஒட்டுமொத்த புதுச்சேரியும் போராட்டக்களமாக மாறியிருக்கிறது. இந்த நிலையில், புதுச்சேரி அரசு அனைத்து ஒருங்கிணைந்த ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் செந்தில்குமார், பேராசிரியார் கலைவாணி உள்ளிட்ட ஆசிரியர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். அதில், ``புதுச்சேரியில் முத்தியால்பேட்டை அரசு தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி, கஞ்சா போதை ஆசாமிகளால் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.மாணவர்கள் |கோப்புப் படம்
இது போன்ற நிகழ்வு இனிமேல் எந்த பள்ளி மாணவிக்கும் நடக்கக் கூடாது. அதற்கான கடுமையான நடவடிக்கைகளில் புதுவை அரசு ஈடுபடவேண்டும். பல அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், சர்வ சாதாரணமாக கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை பயன்படுத்த துவங்கியுள்ளனர். அவர்களிடம் ஆசிரியர்கள், குறிப்பாக பெண் ஆசிரியர்கள் இன்னல்கள் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே இது குறித்து மாணவர்களுக்கு தகுந்த விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். அத்துடன் தொடர்ச்சியாக கஞ்சா பயன்படுத்தும் மாணவர்களை உடனடியாக பள்ளியில் இருந்து விடுவித்து, மற்ற மாணவர்களை பாதுகாத்து நல்வழிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு மாற்று சான்றிதழ் கொடுத்து மாற்றுக் கல்வி முறையில் ஈடுபடுத்த வேண்டும். மேலும் கல்வித்துறையில் மாணவர்களின் போதை பழக்கங்களை கட்டுப்படுத்த ஆசிரியர்களுக்கு உரிய பணி பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களுக்கான அதிகாரத்தை அனைத்து வகைகளிலும் அதிகப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளியிலும் காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை, பெற்றோர் மற்றும் ஆசிரியர் சார்ந்த ஒருங்கிணைந்த குழுவை உருவாக்க வேண்டும். கஞ்சா, மது, சிகரெட் போன்ற போதை வஸ்துகளை பயன்படுத்தும் மாணவர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதுவை அரசும், கல்வித்துறையும் பள்ளியின் மதிப்பையும் ஒழுங்கையும் பேணிக்காக்க உறுதுணையாக இருக்கவேண்டும். அதேபோல தவறு செய்யும் மாணவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு, எந்த ஒரு அதிகார மையத்தில் இருந்தும் பரிந்துரை செய்யாமல் இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். எப்பொழுதும் ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் குழந்தைகள் மீது நன்மதிப்பை பெற்றிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குழந்தைகள் நல வாரியத்தில் நேர்மையான உறுதியான குழுவை நியமித்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.புதுச்சேரி அரசு
தற்பொழுது நடைபெற்று இருக்கக்கூடிய கொலை சம்பவம், பெற்றோர்களை குறிப்பாக பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த மன உளைச்சலையும், அச்சத்தையும் உண்டாக்கி இருக்கிறது. சமுதாயத்தில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய எதிர்காலத்தில் கடுமையான சட்டதிட்டங்களை உருவாக்க வேண்டும். அத்துடன் புதுவையில் அதிகரித்து வரும் போதை கலாசார சீரழிவு செயல்பாடுகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க நடவடிக்கை வேண்டும் என்று புதுச்சேரி மேதகு ஆளுநர், மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு கல்வி அமைச்சர், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்களுக்கும் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.புதுச்சேரி: ``அனைத்து ரெஸ்டோ பார்களிலும் கஞ்சா, கொக்கைன்!” - முதல்வர் ரங்கசாமியை விளாசும் அதிமுக
http://dlvr.it/T3p7l8