தி.மு.க மகளிர் அணி சார்பில் உலக மகளிர் தினவிழா தூத்துக்குடி எம்.பி கனிமொழி தலைமையில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, கீதா ஜீவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். எம்.பி கனிமொழி
இக்கூட்டத்தில் பேசிய எம்.பி கனிமொழி, ``மகளிர் தின பரிசாக பிரதமர் மோடி காஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்துள்ளார். சமையல் அறையும், சிலிண்டரும் பெண்களுக்கானது எனச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி. காஸ் சிலிண்டர் விலை குறைத்தது பெண்களை கொச்சைப்படுத்தும் செயல். காஸ் சிலிண்டர் விலையை குறைத்தால் பெண்கள் ஓட்டு போட்டுவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் பெண்கள் ஏமாற தயாராக இல்லை. பெண்கள் முன்னேற்றத்திற்கான அரசு திராவிட மாடல் அரசுதான்.
பிரதமர் மோடி துவாரகா சென்று கடலுக்கு அடியில் தியானம் செய்கிறார். அஸ்ஸாம் சென்று யானை சவாரி போகிறார். இப்படி எத்தனை பகுதிகளுக்குச் சென்று கொண்டிருக்கிறார். ஆனால் இதுவரை மணிப்பூர் மட்டும் செல்ல அவருக்கு மனமில்லை. சாதி, மத அரசியலால் மணிப்பூரில் தீயை மூட்டினார்கள். அங்குள்ள மக்கள் இன்றுவரை உணவு, உடை, இருப்பிடமின்றி இருக்கிறார்கள். மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஆயிரம் பேர் சேர்ந்து 2 பெண்களை வன்கொடுமை செய்தார்கள். அந்த பெண்களுக்கு என்ன நியாயம் கிடைத்திருக்கிறது. நாட்டையே பெண்ணாக போற்றுகிறோம் என்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு என்ன பாதுகாப்பை தந்தார்கள். சமையல் காஸ், விலை குறைப்பு
உத்தரப்பிரதேசத்தில் 16 வயது பெண் நகைகள் அணிந்து கொண்டு இரவில் நடந்து செல்லலாம் என்கிறார்கள். ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால், கடந்த 5 ஆண்டுகளில் பெண்கள், குழந்தைகள்மீதான வன்கொடுமை 2 மடங்கு அதிகரித்துள்ளது. குஜராத் பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை விடுவிக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் தலையீட்டு அவர்களை மீண்டும் சிறைக்கு அனுப்புகிறது. இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். பிரதமர் மோடி
நாட்டில் சராசரி வருமானம் அதிகரித்து நாடு முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்கிறார்கள். ஆனால் முன்னேறியது 3 பேர் தான். அம்பானி, அதானி, பா.ஜ.க. சாமானியர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் முன்னேற்றத்திற்கு எதுவும் செய்யவில்லை. விவசாயிகள் தங்களின் உரிமைக்காக போராட வந்தால் கம்பி வேலி, சிமென்ட் தடுப்பு போட்டு தடுக்கிறார்கள். சாதி, மதத்தால் பிரித்தாளும் ஆட்சி மீண்டும் வந்துவிடக் கூடாது" என்றார். `நாட்டின் ஒற்றுமையைக் காக்க வேண்டுமென்றால் பாஜக ஆட்சியை அகற்றுவதுதான் ஒரே தீர்வு' - கனிமொழி காட்டம்
http://dlvr.it/T3s9L8