கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அதில் காங்கிரஸ் கை சின்னத்தில் நேரடியாக 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியாகியிருந்தது. அதில் வயநாடு தொகுதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். திருவனந்தபுரம் தொகுதியில் மீண்டும் சசி தரூர் போட்டியிடுகிறார். பெரும்பாலும் சிட்டிங் எம்.பி-க்களுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 16 பேர் வேட்பாளர்கள் பட்டியலில் ரம்யா ஹரிதாஸ் என்ற ஒரே ஒரு பெண் வேட்பாளர் மட்டுமே உள்ளார். ரம்யா ஹரிதாஸ் ஆலத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதே சமயம் சி.பி.எம் கட்சி தலைமையிலான இடது முன்னணி கூட்டணியில் கேரள மாநிலத்தில் 20 தொகுதிகளிலும் போட்டியிட்டாலும், சி.பி.எம் கட்சி நேரடியாக 15 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சி.பி.எம் சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான கே.கே.சைலஜா டீச்சர் வடகரா தொகுதியிலும், எர்ணாகுளம் தொகுதியில் கே.ஜெ.ஷைனும் என 2 பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சி.பி.எம் கூட்டணியில் 4 தொகுதிகளில் போட்டியிடும் சி.பி.ஐ கட்சியில், வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக பெண் வேட்பாளரான ஆனி ராஜா களமிறக்கப்பட்டுள்ளனர்.அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷமா முஹம்மது
ஆனால், 16 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களில் ஆலத்தூரில் போட்டியிடும் ரம்யா ஹரிதாஸ் என்ற ஒருவர் மட்டுமே பெண் வேட்பாளர். அதுமட்டுமல்லாது காங்கிரஸ் கூட்டணியில் மொத்தமுள்ள 20 வேட்பாளர்களையும் சேர்த்தாலும் ரம்யா ஹரிதாஸ் மட்டுமே பெண் வேட்பாளர். இது காங்கிரஸ் கட்சியில் உள்ள மகளிர் நிர்வாகிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அந்த அதிருப்தியை பொதுவெளியில் கொட்டித் தீர்த்திருக்கிறார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் ஷமா முஹம்மது. இது குறித்து ஷமா முகம்மது கூறும்போது, "காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் மகளிர்களுக்கான இட ஒதுக்கீடு மிகவும் குறைவாக உள்ளது. மகளீர் இட ஒதுக்கீட்டு மசோதா வருவதற்கு முன்பு கடந்த முறை காங்கிரஸில் மகளிருக்கு 2 சீட் வழங்கப்பட்டது. ஆனல், மகளீர் இட ஒதுக்கீடு மசோதா வந்தபிறகு இந்த முறை ஒரு சீட் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.ஷமா முஹம்மது
காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதில்லை. இதை கட்சி தலைமை புரிந்துகொள்ள வேண்டும். ராகுல் காந்தி எப்போதும் பெண்களுக்காக பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் பெண்களை புறக்கணிக்கிறார்கள். பெண்களுக்கான ஒதுக்கீடு இல்லை என்றால் ரம்யா ஹரிதாஸுக்கும் சீட் கொடுத்திருக்க மாட்டார்கள். கட்சி நிகழ்ச்சிகளில் மேடையில்கூட பெண்களை அமரவைக்க மாட்டார்கள். பெண்களுக்கு எப்போதுமே தோல்வி அடையும் தேர்தல் சீட்டை மட்டுமே வழங்குவார்கள். வடகரா தொகுதியில் இருந்து கே.முரளிதரன் திருச்சூருக்கு மாற்றப்பட்டுள்ளார். எனவே வடகரா தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ ஷாபி பறம்பிலுக்கு பதில் என்னை வேட்பாளராக அறிவித்திருக்கலாம்" என்றார்.
வேட்பாளர்கள், பிரசார களத்தில் இறங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து எதிர் குரல் எழுந்திருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. `வயநாட்டில் மீண்டும் ராகுல்’ - கேரளாவில் சிட்டிங் எம்பி-க்களுக்கு மீண்டும் வாய்ப்பளித்த காங்கிரஸ்!
http://dlvr.it/T3s9Qh