மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு ராஜ்ய சபா சீட் மட்டுமே ஒதுக்கியுள்ளது தி.மு.க. மேலும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அறிவித்திருக்கிறார் கமல். தி.மு.க ம.நீ.ம-வுக்கு இடையே பேச்சுவார்த்தையின் தொடக்கத்திலிருந்தே என்ன நடந்தது என விரிவாக விசாரித்தோம்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடித்திருக்கிறது திமுக. இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சி. ம.தி.முக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் வி.சி.க-வுக்கு தலா இரண்டு தொகுதிகள் என ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதிகபட்சமாக காங்கிரஸுக்கு கட்சிக்கு புதுச்சேரியுடன் சேர்ந்த்து 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின்
மக்கள் நீதி மய்யத்தை பொறுத்தவரை, அதிகாரப்பூர்வ கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறாத நிலையில் முதன் முறையாக மார்ச் 9-ம் தேதி அறிவாலயம் வந்தார் கட்சித் தலைவர் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கீடு செய்யப்படுவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் மக்களவைத் தேர்தலில் ம.நீ.ம போட்டியிடாது என்றும் தி.மு.க-வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் பிரசாரம் மேற்கொள்ளும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நம்மிடம் பேசிய விபரமறிந்தவர்கள் ``தி.மு.க - ம.நீ.ம இடையேயான பேச்சுவார்த்தை கமலுக்கும் உதயநிதிக்கும் இடையே நேரடியாக நடந்திருக்கிறது. மநீம உடனான தொகுதி பங்கீட்டில் உதயநிதியும் கலந்து கொண்டதை காண முடியும். தென்சென்னை அல்லது கோவை தொகுதியில் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்திருக்கிறார் கமல். தேர்தல் நெருக்கத்தில் பார்த்துக் கொள்வோம் என இசைவு தெரிவித்திருக்கிறது தி.மு.க. தென்சென்னையை பொறுத்தவரை தி.மு.க-வின் கோட்டையாக கருதப்படும் பகுதி, மேலும் டிசம்பர் வெள்ளத்தால் சில அதிருப்திகள் நிலவும் வாய்ப்பும் இருப்பதால், அதனை கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுப்பது சரியாக இருக்காது என முடிவெடுத்திருக்கிறது. கமல்
கோவை பொறுத்தவரை, அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் பிரிந்து நிற்கும் சூழலில், இருவருக்குமே கணிசமான வாக்குகள் உள்ள தொகுதி. இந்நிலையில் கமல்ஹாசனை அதுவும் டார்ச் லைட் சின்னத்தில் நிற்க வைப்பது வொர்க்கவுட் ஆகாது என்பது தி.மு.க-வின் அனுமானம். அதேசமயம் எங்களுக்கு `கோவை வேண்டும்’ என அழுத்தமாக வலியுறுத்தியிருக்கிறது சி.பி.எம். பலகட்ட ஆலோசனைகளுக்கு பிறகு `உதயசூரியன் சின்னத்தில் கோவையில் கமலை நிற்க வைக்கலாம்’ என முடிவெடுத்தது தி.மு.க. ஒரு கட்சியின் தலைவர் எப்படி மற்றொரு கட்சி சின்னத்தில் நிற்க முடியும்’ என மறுத்திருக்கிறது ம.நீ.ம தரப்பு. `உதயசூரியன் சின்னத்தில் கோவை அல்லது ராஜ்ய சபா’ இரண்டில் ஒன்றை தொடுங்கள் என தன் முடிவில் உறுதி காட்டி இருக்கிறது அறிவாலயம். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு ராஜ்ய சபா சீட் பெறுவதுமேல் என இம்முடிவை எடுத்திருக்கிறார் கமல்” என்றனர்.
நம்மிடம் பேசிய தலைமைக்கு நெருக்கமான சிலர் ``உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதில் கமல் உள்ளிட்ட ம.நீ.ம முதற்கட்ட தலைவர்கள் யாருக்குமே விருப்பமில்லை. அதனைவிட்டால் போட்டியிட எங்களுக்கு தி.மு.க எந்த வாய்ப்பும் வழங்கவில்லை. இறுதி நிமிடத்தில் கூட்டணி மாற, உகந்த அணிகளும் இல்லை, தனித்து நிற்கும் கட்டமைப்பையும் நாங்கள் தயார் செய்திருக்கவில்லை. எனவே ராஜ்ய சபா சீட்டுக்கு ஒப்புக் கொண்டோம்” என்றார் வருத்தத்துடன்.ஸ்டாலின்
நம்மிடம் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் ஊடகப் பிரிவு செயலாளர் முரளி அப்பாஸ், ``பேச்சுவார்த்தையில் இதெல்லாம் நடந்ததா என்ற வியூகங்களுக்கு பதிலளிக்க முடியாது. பா.ஜ.க-வை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியில் இணைந்திருக்கிறது மக்கள் நீதி மய்யம். `எங்களுடைய தனிப்பட்ட நலனை விட தேசத்தின் நலனே முக்கியமானது’ என்பதால், ராஜ்ய சபா சீட்டை பெற்றிருக்கிறோம். திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரித்து வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறோம். எங்கள் தலைவர் கமல்ஹாசனின் முடிவை கட்சி முழுமனதுடன் ஏற்றுக் கொண்டுள்ளது” என்று முடித்துக்கொண்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWYஎன்ன ஆனது மக்கள் நீதி மய்யம்?
http://dlvr.it/T3v1BG