குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் கேரள கவர்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன், `குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கை கேரள அரசு வாபஸ் பெறவில்லை. பினராயி விஜயன் சங்பரிவாருடன் சேர்ந்து நிற்கிறார்’ என கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் மத்திய அரசுக்கு அடிபணியமாட்டோம் எனவும், ராகுல் காந்தி ஏன் சிஏஏ பற்றி பேசவில்லை எனவும் கேள்வி எழுபினார். செய்தியாளர்கள் சந்திப்பில் பினராயி விஜயன் கூறுகையில், "அரசியலமைப்புக்கு எதிராகவும் பிரிவினைவாத நோக்கத்துடன் குடியுரிமை சட்ட திருத்த மசோதா கேரளத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று உறுதியாக அறிவித்துள்ளோம். அந்த நிலைபாட்டை எல்லா மட்டங்களிலும் உறுதிபடுத்த அரசு முடிவு எடுத்துள்ளது. அதுசம்பந்தமாக மாநில அரசு ஃபைல் செய்துள்ள ஒரிஜினல் சூட் சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் (CAA)
குடியுரிமை சட்டத்தை கொண்டுவந்து தேர்தலுக்கு சற்று முன்பாக அவசரகதியில் செயல்படுத்தி உள்ளது மத்திய அரசு. அதற்கு எதிராக சட்டரீதியாக தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுளது.
இந்திய அரசியலமைப்புக்கு விரோதமாக மக்களை மதரீதியாக பிரிக்கிறது இந்த சட்டம். இது சங்பரிவாரின் தீவிர ஹிந்துத்துவ அஜண்டாவின் ஒரு பகுதியாகும். தேர்தல் சமயத்தில் ஆதாயம் அடையும் நோக்கத்தில் பிரித்தாளும் அரசியலை சங்பரிவார் கையில் எடுத்துள்ளது. இந்த கேவலமான நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச அளவில் கேள்வி எழுப்பப்படுகிறது. ஐநா சபையில் இருந்தும் இந்தச் சட்டத்தின் பாரபட்சம் குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. எந்த வகையில் பார்த்தாலும் இந்தியா என்ற கருத்துக்கு ஒரு சவாலானதாக சிஏஏ சட்டம் உள்ளது.
வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31 அன்றோ அதற்கு முன்போ இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாத பிற மதத்தினருக்கு குடியுரிமை வழங்கலாம் என்கிறார்கள். முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கக் கூடாது என்பதுதான் இந்த சட்டத்தின் கருவாகும். இது அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள விழுமியங்களை வெளிப்படையாகவே மீறும் செயலாகும்.ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை
குறிப்பிட்ட மதங்களை சார்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதன் மூலம் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்களை இரண்டாம் தர குடிமக்களாக கணக்கிடுகின்றனர். குடியேற்றக்காரர்களை முஸ்லிம் என்றும், முஸ்லிம் அல்லாதவர்கள் என்றும் எப்படி பிரித்துபார்க்க முடியும். அரசியலமைப்பு சட்டத்துக்குப் பதில் மனுஸ்மிருதியை ஸ்தாபிக்கும் சங்க பரிவாரின் மூளையிலிருந்து தான் இந்த விஷச் சட்டம் பிறந்திருக்கிறது.
குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிராக கேரளா ஏற்கனவே போராட்டங்களை நடத்தியிருந்தது. சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றியிருந்தோம். அந்த தீர்மானத்துடன் முதலில் ஒத்துப்போவதாக கூறிய காங்கிரஸ் பின்னர் திடீரென நிலைபாட்டை மாற்றியது. அன்றைய கேரள மாநில காங்கிரஸ் தலைவர் அந்த தீர்மானத்தை கிண்டலாக பேசினார். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது காங்கிரஸ் கட்சி தலைமை நடவடிக்கை எடுத்தது.கேரள முதல்வர் பினராயி விஜயன்
குடியுரிமை பிரச்னைகளில் காங்கிரஸின் மெளனம் குற்றகரமானது. சிஏஏ-க்கு எதிராக காங்கிரஸின் தேசிய நிலைப்பாடு என்ன? நியாய யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்திக்கு இது தெரியாதா? இதுபற்றி அவர் ஒரு வார்த்தைகூட பேசவில்லையே. காங்கிரஸ் பொதுச் செயலாளரான கே.சி.வேணுகோபால், ஏன் அவசரம் என்று மட்டும் கேட்டார்.
நாங்கள் மத்திய அரசின் நடவடிக்கைக்கு முன் மண்டியிட்டு மெளனமாக இருக்கமாட்டோம். குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிராக கேரளாவில் போராடியவர்களுக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளை ரத்துசெய்ய தீர்மானித்திருக்கிறோம். 835 வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில் 629 வழக்குகள் நிதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 260 வழக்குகளில் 86 வழக்குகளை வாபஸ்பெற அரசு ஒப்புக்கொண்டது. ஒரே ஒரு வழக்குதான் விசாரணை நிலையில் உள்ளது. வழக்கை ரத்துச்செய்ய வேண்டும் என மனு அளிக்கப்படாததும், பெரிய அளவில் குற்றங்களைக் கொண்ட வழக்குகளுமே தொடர்ந்து நடந்துவருகின்றன. மனு அளிக்கும் வழக்குகள் வாபஸ் பெறப்படும்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
http://dlvr.it/T45Ntg