Friday, 15 March 2024
``நியாய யாத்திரை செல்லும் ராகுல், ஏன் சிஏஏ பற்றி எதுவும் பேசவில்லை?" - பினராயி விஜயன் கேள்வி
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் கேரள கவர்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன், `குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கை கேரள அரசு வாபஸ் பெறவில்லை. பினராயி விஜயன் சங்பரிவாருடன் சேர்ந்து நிற்கிறார்’ என கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் மத்திய அரசுக்கு அடிபணியமாட்டோம் எனவும், ராகுல் காந்தி ஏன் சிஏஏ பற்றி பேசவில்லை எனவும் கேள்வி எழுபினார். செய்தியாளர்கள் சந்திப்பில் பினராயி விஜயன் கூறுகையில், "அரசியலமைப்புக்கு எதிராகவும் பிரிவினைவாத நோக்கத்துடன் குடியுரிமை சட்ட திருத்த மசோதா கேரளத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று உறுதியாக அறிவித்துள்ளோம். அந்த நிலைபாட்டை எல்லா மட்டங்களிலும் உறுதிபடுத்த அரசு முடிவு எடுத்துள்ளது. அதுசம்பந்தமாக மாநில அரசு ஃபைல் செய்துள்ள ஒரிஜினல் சூட் சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் (CAA)
குடியுரிமை சட்டத்தை கொண்டுவந்து தேர்தலுக்கு சற்று முன்பாக அவசரகதியில் செயல்படுத்தி உள்ளது மத்திய அரசு. அதற்கு எதிராக சட்டரீதியாக தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுளது.
இந்திய அரசியலமைப்புக்கு விரோதமாக மக்களை மதரீதியாக பிரிக்கிறது இந்த சட்டம். இது சங்பரிவாரின் தீவிர ஹிந்துத்துவ அஜண்டாவின் ஒரு பகுதியாகும். தேர்தல் சமயத்தில் ஆதாயம் அடையும் நோக்கத்தில் பிரித்தாளும் அரசியலை சங்பரிவார் கையில் எடுத்துள்ளது. இந்த கேவலமான நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச அளவில் கேள்வி எழுப்பப்படுகிறது. ஐநா சபையில் இருந்தும் இந்தச் சட்டத்தின் பாரபட்சம் குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. எந்த வகையில் பார்த்தாலும் இந்தியா என்ற கருத்துக்கு ஒரு சவாலானதாக சிஏஏ சட்டம் உள்ளது.
வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31 அன்றோ அதற்கு முன்போ இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாத பிற மதத்தினருக்கு குடியுரிமை வழங்கலாம் என்கிறார்கள். முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கக் கூடாது என்பதுதான் இந்த சட்டத்தின் கருவாகும். இது அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள விழுமியங்களை வெளிப்படையாகவே மீறும் செயலாகும்.ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை
குறிப்பிட்ட மதங்களை சார்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதன் மூலம் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்களை இரண்டாம் தர குடிமக்களாக கணக்கிடுகின்றனர். குடியேற்றக்காரர்களை முஸ்லிம் என்றும், முஸ்லிம் அல்லாதவர்கள் என்றும் எப்படி பிரித்துபார்க்க முடியும். அரசியலமைப்பு சட்டத்துக்குப் பதில் மனுஸ்மிருதியை ஸ்தாபிக்கும் சங்க பரிவாரின் மூளையிலிருந்து தான் இந்த விஷச் சட்டம் பிறந்திருக்கிறது.
குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிராக கேரளா ஏற்கனவே போராட்டங்களை நடத்தியிருந்தது. சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றியிருந்தோம். அந்த தீர்மானத்துடன் முதலில் ஒத்துப்போவதாக கூறிய காங்கிரஸ் பின்னர் திடீரென நிலைபாட்டை மாற்றியது. அன்றைய கேரள மாநில காங்கிரஸ் தலைவர் அந்த தீர்மானத்தை கிண்டலாக பேசினார். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது காங்கிரஸ் கட்சி தலைமை நடவடிக்கை எடுத்தது.கேரள முதல்வர் பினராயி விஜயன்
குடியுரிமை பிரச்னைகளில் காங்கிரஸின் மெளனம் குற்றகரமானது. சிஏஏ-க்கு எதிராக காங்கிரஸின் தேசிய நிலைப்பாடு என்ன? நியாய யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்திக்கு இது தெரியாதா? இதுபற்றி அவர் ஒரு வார்த்தைகூட பேசவில்லையே. காங்கிரஸ் பொதுச் செயலாளரான கே.சி.வேணுகோபால், ஏன் அவசரம் என்று மட்டும் கேட்டார்.
நாங்கள் மத்திய அரசின் நடவடிக்கைக்கு முன் மண்டியிட்டு மெளனமாக இருக்கமாட்டோம். குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிராக கேரளாவில் போராடியவர்களுக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளை ரத்துசெய்ய தீர்மானித்திருக்கிறோம். 835 வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில் 629 வழக்குகள் நிதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 260 வழக்குகளில் 86 வழக்குகளை வாபஸ்பெற அரசு ஒப்புக்கொண்டது. ஒரே ஒரு வழக்குதான் விசாரணை நிலையில் உள்ளது. வழக்கை ரத்துச்செய்ய வேண்டும் என மனு அளிக்கப்படாததும், பெரிய அளவில் குற்றங்களைக் கொண்ட வழக்குகளுமே தொடர்ந்து நடந்துவருகின்றன. மனு அளிக்கும் வழக்குகள் வாபஸ் பெறப்படும்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
http://dlvr.it/T45Ntg

Thursday, 14 March 2024
TikTok: டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை - காரணம் என்ன..?
உலக அளவில் பொழுதுபோக்கிற்காக அதிகமாகப் பயன்படுத்தப்படும் செயலி டிக்டாக் (TikTok). இந்த செயலின் தலைமை நிறுவனம் பைட்டான்ஸ் (ByteDance) சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. டிக்டாக் மூலம் பயனர்களின் தரவுகளை எடுக்க சீனா, ByteDance நிறுவனத்தை பயன்படுத்தலாம் என்ற அச்சம் பல நாடுகளுக்கு இருந்து வந்தது. இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக கனடா, நியூசிலாந்து, பிரிட்டன், நார்வே, ஆப்கானிஸ்தான் , பெல்ஜியம், டென்மார்க் ஆகிய நாடுகளில் டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்கப்பட்டது.டிக்டாக் (TikTok)`டிஜிட்டல் உலகில் ஏற்பட்ட பெரும் பிளவு!’ - டிக்டாக், வீ சாட் செயலிகளுக்குத் தடைவிதித்த ட்ரம்ப்
தொடர்ந்து, இந்த செயலி பயனர்களின் சம்மதம் இல்லாமலேயே முறைகேடாக தரவுகளை சேகரிப்பதாக குற்றச்சாட்டு அதிகரித்து வந்தது. முன்னதாக, அமெரிக்காவில் மக்களை உளவு பார்த்து அமெரிக்க நாட்டை பற்றிய ரகசிய தகவல்களை சீன அரசுக்கு டிக்டாக் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், அமெரிக்கா முழுவதும் டிக்டாக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயக, குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர்.
2020-ல் டொனால்டு டிரம்ப் டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்க முயற்சி மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் அரசுத் துறையில் பணி செய்பவர்கள டிக்டாக் செயலியைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டது. அப்போது, டிக்டாக் மீதான குற்றச்சாட்டிற்கு அதன் சிஇஒ சவ் சி சூவ் அமெரிக்க நாடாளுமன்றக் குழுவில் ஆஜராகி விளக்கமளித்தார்.
இந்நிலையில், தற்போது 352 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிக்டாக் (TikTok) செயலிக்குத் தடை விதித்து மசோதா நிறைவேறியுள்ளது.
http://dlvr.it/T445NF

ஜிம் முதல் கட்டுப்பாட்டு அறை வரை..! - சென்னை மாநகராட்சி வளாகத்தில் `கருணாநிதி மாளிகை’ திறப்பு!
சென்னை மாநகராட்சி வளாகத்தில் `கருணாநிதி மாளிகை’சென்னை மாநகராட்சி வளாகத்தில் `கருணாநிதி மாளிகை’சென்னை மாநகராட்சி வளாகத்தில் `கருணாநிதி மாளிகை’சென்னை மாநகராட்சி வளாகத்தில் `கருணாநிதி மாளிகை’சென்னை மாநகராட்சி வளாகத்தில் `கருணாநிதி மாளிகை’சென்னை மாநகராட்சி வளாகத்தில் `கருணாநிதி மாளிகை’சென்னை மாநகராட்சி வளாகத்தில் `கருணாநிதி மாளிகை’சென்னை மாநகராட்சி வளாகத்தில் `கருணாநிதி மாளிகை’சென்னை மாநகராட்சி வளாகத்தில் `கருணாநிதி மாளிகை’சென்னை மாநகராட்சி வளாகத்தில் `கருணாநிதி மாளிகை’சென்னை மாநகராட்சி வளாகத்தில் `கருணாநிதி மாளிகை’சென்னை மாநகராட்சி வளாகத்தில் `கருணாநிதி மாளிகை’சென்னை மாநகராட்சி வளாகத்தில் `கருணாநிதி மாளிகை’சென்னை மாநகராட்சி வளாகத்தில் `கருணாநிதி மாளிகை’சென்னை மாநகராட்சி வளாகத்தில் `கருணாநிதி மாளிகை’சென்னை மாநகராட்சி வளாகத்தில் `கருணாநிதி மாளிகை’சென்னை மாநகராட்சி வளாகத்தில் `கருணாநிதி மாளிகை’
http://dlvr.it/T43fMg
http://dlvr.it/T43fMg
நீதிமன்றத்துக்குப் பணிந்த எஸ்.பி.ஐ; வெளிவரப்போகும் தேர்தல் பத்திர விவரங்களால் பாஜகவுக்கு பாதிப்பா?
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திரங்கள் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லையென்றும், அது அரசியலைமைப்பு சட்டத்துக்கு முரணானது என்றும் கூறிய உச்ச நீதிமன்றம் அதை ரத்து செய்து உத்தரவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் இதுவரை விநியோகிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது. ஆனால் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) தேர்தல் பத்திரங்களின் தகவல்களை எடுக்க ஜூன் 30 வரை கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.
ஆனால், அந்த கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம் மார்ச் 12-ம் தேதிக்குள் தேர்தல் பத்திரங்களின் தகவல்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கெடு வைத்தது. தேர்தல் பத்திரம் electoral bondsதேர்தல் பத்திர வழக்கு: சூடு கொடுத்த உச்ச நீதிமன்றம்... ஆடிப்போன SBI... சரியும் பங்கு!
இதையடுத்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எடுப்பதில் வேலைகள் அதிகம், அதனால் ஜூன் 30 வரை கால அவகாசம் வேண்டும் என்று கேட்டிருந்த பாரத ஸ்டேட் வங்கி, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிட்டபடி மார்ச் 12-ம் தேதி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருக்கிறது. இந்தத் தகவல்கள் மார்ச் 15-ம் தேதி தேர்தல் ஆணயத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பித்துள்ள விவரங்களில் என்ன இருக்கிறது என்பது குறித்த முதல்கட்ட விவரங்கள் வெளியாகியிருக்கின்றன. கடந்த 2019 ஏப்ரல் மாதத்திலிருந்து கடந்த பிப்ரவரி 15-ம் தேதி வரையிலான காலத்தில் விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மொத்தம் 22,217 என்றும், அதில் 22,030 பத்திரங்கள் பணமாக்கப்பட்டிருக்கின்றன என்றும் தெரியவந்திருக்கிறது.
மேலும் உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டபடி பத்திரங்கள் விற்கப்பட்ட தேதி, அதன் மதிப்பு, பத்திரத்தை வாங்கியவர் யார் உள்ளிட்ட விவரங்களையும், இந்தப் பத்திரங்களை எந்தெந்த அரசியல் கட்சிகள் எந்தெந்த தேதிகளில் பணமாக்கியிருக்கின்றன என்ற விவரங்களையும் பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.இந்திய தேர்தல் ஆணையம் - SBI - Electoral Bond
இந்த விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட்ட பிறகு அரசியல் கட்சிகளுக்குக் கொடுக்கப்பட்ட நன்கொடைகளின் விவரங்கள் நமக்குத் தெரியவரும்.
தேர்தல் பத்திரங்களில் பெரும்பகுதி நன்கொடையைப் பெற்றிருப்பது பாஜக என்பது ஏற்கெனவே தெரிந்த விஷயம். ஆனால், இப்போது தேர்தல் பத்திரங்களின் விவரங்கள் அனைத்தும் வெளியாகும்போது யார் யார் எந்த கட்சிக்கு நன்கொடை வழங்கியிருக்கிறார்கள் என்பது தெரியவரும்போது அது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. பெரும்பாலும் ஆளும்கட்சிகளுக்குத்தான் நன்கொடைகள் அதிகமாக வர வாய்ப்புள்ளது. இந்த தேர்தல் பத்திர நடைமுறையைக் கொண்டுவந்ததும் பாஜகதான் என்பதால் வெளியாகும் விவரங்கள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.மோடி | பாஜக `தேர்தல் பத்திர விவகாரத்தை திசை திருப்பவே CAA..!' - CPM கே.பாலகிருஷ்ணன் தாக்கு
தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, இந்திய வரலாற்றில் தேர்தல் பத்திரங்கள் மிகப்பெரிய ஊழலாக இருக்கப் போகிறது என்றும், இந்த விவரங்கள் வெளியாவதன் மூலம் நரேந்திர மோடி அரசின் உண்மையான முகமும், ஊழல் தொழிலதிபதிகளின் முகமும் வெட்டவெளிச்சமாகும் என்று கூறியிருந்தார்.
உண்மையில் வெளியாகப்போகும் தேர்தல் பத்திர விவரங்கள் என்ன தாக்கத்தை உண்டாக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
http://dlvr.it/T43FxB

Tamil News Live Today: எடப்பாடி, அண்ணாமலைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் அவதூறு வழக்கு!
எடப்பாடி, அண்ணாமலைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் அவதூறு வழக்கு!
வேலூர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்
வேலூர் மாநகராட்சிக்குஉட்பட்ட 58-வது வார்டு அரியூர் பகுதியில் ‘ரிங் ரோடு’ அமைக்கும் திட்டத்துக்காக 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மாற்று இடம் தராமல் இப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டி, கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்கள் இன்று வேலூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதையொட்டி, போலீஸாரும் அதிகளவில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.புதுச்சேரி:
அமைச்சராக பதவியேற்றார் பி.ஆர்.என் திருமுருகன்
காரைக்கால் வடக்கு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமுருகன் புதுச்சேரி அமைச்சராக பதவியேற்றார். துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அவருக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், தலைமை செயலாளர் சரத் சவுகான், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாஜக மாநில தலைவர் செல்வகணபதி உள்ளிட்டவர்கள் பங்கேற்பு.
சென்னை கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு!
அமலாக்கத்துறை
ST கூரியர் நிறுவனத்தில் இன்று காலைமுதல் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது. சென்னையின் பல்லாவரத்தில் இருக்கும் நிறுவன அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு கிளைகளிலும் இந்த சோதனை நடந்து வருகிறது. இந்நிறுவனம் ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனியின் சகோதரர் அன்சாரிக்கு சொந்தமானதாக சொல்லப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
http://dlvr.it/T42wtH

தென்காசி: செயல் அலுவலரை ஒருமையில் பேசிய பேரூராட்சி தலைவர்- சர்ச்சை வீடியோவும், விளக்கமும்!
தென்காசி மாவட்டம், இலஞ்சி பேரூராட்சியின் தலைவராக இருப்பவர் சின்னத்தாய். தி.மு.க சேர்மனான இவர், இலஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றிவரும் செயல் அலுவலர் சுதா என்பவரை தரக்குறைவாக பேசும் வீடியோ, சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் பரவியது. இது குறித்து பேரூராட்சி அலுவலர்களிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "செயல் அலுவலர் சுதா கடந்த வியாழன் அன்றுதான் செங்கோட்டை புதூர் பேரூராட்சியிலிருந்து பணியிட மாறுதலாகி இலஞ்சி பேரூராட்சிக்கு வந்தார். இந்தநிலையில் இலஞ்சி பேரூராட்சியில் முன்னாள் உறுப்பினர்களாக இருந்த அ.தி.மு.க.வை சேர்ந்த சிலர் செயல் அலுவலர் சுதாவை சந்தித்து பொதுமக்கள் கோரிக்கை தொடர்பாக பேசிவிட்டு சென்றனர்.சேர்-ஐ எடுக்கும் காட்சி
இதைக்கேள்விப்பட்ட பேரூராட்சித் தலைவர் சின்னத்தாய், 'தலைவர் என்கிற முறையில் என்னை பார்க்க வருபவர்களிடத்தில் என் அனுமதியில்லாமல் எப்படி பேசலாம்' எனக்கூறி செயல் அலுவலரிடம் கடுமையாக பேசினார். அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் அலுவலகத்தில் இருந்த சேர்-ஐ எடுத்து அடிக்க பாய்ந்ததோடு, மட்டுமல்லாமல் செயல் அலுவலரை ஒருமையில் பேசியதும் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பேரூராட்சி தலைவரின் இந்த செயலை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் பரப்பியதன் பேரில்தான் இந்த விஷயம் வெளியே தெரிந்தது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சிகள் இயக்குனர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர்.ஆவேசத்தில்...
செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி தலைவர் என இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டதன்பேரில் பேரூராட்சி தலைவர், செயல் அலுவலர் என இருவருக்குள்ளும் சமாதானம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது" என்றனர்.
இந்த விவகாரம் குறித்து பேரூராட்சி தலைவர் சின்னத்தாயிடம் விளக்கம் பெற முயற்சித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், 'தலைவர் சின்னத்தாய் மருத்துவ காரணங்களுக்காக வெளியே சென்றிருக்கிறார். பேரூராட்சியில் நடந்த குழப்பம் சுமுகமாக முடிக்கப்பட்டு விட்டது. பேரூராட்சி அலுவலகத்தில் எந்த பிரச்னையும் இல்லை" என சுருக்கமாக முடித்துக் கொண்டனர்.`சட்டமன்றத்தில் எனக்கெதிராக காங்கிரஸும், திமுக-வும் கூட்டுச்சதி செய்தன!' - விஜயதரணி சொல்வதென்ன?
http://dlvr.it/T42jQD