பறிபோன அமைச்சர் பதவி!
கடந்தகால திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி, தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி குற்றம் சாட்டப்பட்ட நிலையில் ஏற்கனவே இந்த வழக்கில் இருந்து இருவரும் விடுவிக்கப்பட்டிருந்தார்கள். இருந்தபோதிலும் இந்த வழக்கின் மேல்முறையீட்டில் கடந்த டிசம்பர் மாதம் பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும், 50 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.பொன்முடி
இந்த தீர்ப்பின் காரணமாக பொன்முடி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும், அமைச்சராகும் தகுதியையும் இழந்தார். திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி கலியானதாகவும் மார்ச் மாதம் முதல் வாரம் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டது. இருந்தபோதிலும், இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்யப்பட்டிருந்தது. இந்த விசாரணையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக, பொன்முடியின் மீதான தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மீண்டும் அமைச்சர் பதவி!
உச்ச நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைத்ததால், தீர்ப்புக்கு முந்தைய நிலையே தொடரும். அதாவது அவர் சட்டமன்ற உறுப்பினராகவே தொடர்வார் என்ற பொருள். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக வெளியான அறிவிப்பைத் திரும்பப் பெறுவதாகத் தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி பொன்முடி மீண்டும் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் தக்கவைத்திருக்கிறார் என்பது உறுதியாகிறது.பொன்முடி
இதனால், பொன்முடி மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப் பட்டது. எதிர்பார்த்தபடி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பொன்முடியை அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கும்படி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்குக் கடிதம் எழுதியிருந்தார். தமிழக அரசு சார்பில் இப்படி ஒரு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆளுநர் ரவி டெல்லிக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ளார். ஆளுநர் சனிக்கிழமை சென்னை திரும்பும் நிலையில், அதுவரை பதவிப் பிரமாணம் செய்துவைக்க வாய்ப்பு இல்லை.
ஆளுநர் பயணமும் - பதவிப் பிரமாணமும்!
ஆளுநரின் திடீர் பயணம் குறித்து ஆளுநர் மளிகை வட்டாரத்திலும், சட்டமன்ற அலுவலகத்திலும் விசாரித்தோம். "பொன்முடிக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கச் சொல்லி 13-ம் தேதி மதியமே ஆளுநர் மாளிகைக்குக் கடிதம் வந்துவிட்டது. இருந்தபோதிலும், நீதிமன்ற உத்தரவு குறித்த இணைப்புகள் அதில் இல்லை. மேலும் ஆளுநர் மாளிகையிலிருந்து தமிழக அரசிடம் சில ஆவணங்கள் கேட்கப்பட்டன. நீதிமன்ற உத்தரவுகள் குறித்த முழு விவரமும் வந்த பிறகு அதுகுறித்து சட்ட ஆலோசனை பெறவேண்டிய நிலை இருக்கிறது.ஆளுநர் ரவி
ஆளுநர் டெல்லி பயணத்தில் பொன்முடியை மீண்டும் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து சட்ட ஆலோசனை செய்ய உள்ளார். அனைத்து ஆலோசனைகளும் பெற்ற பிறகு மீண்டும் சென்னை வந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேநேரத்தில், ஆளுநர் தமிழகம் திரும்புவதற்கு முன்பாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் நடத்தை அமலுக்கு வந்துவிடும். இருந்தபோதிலும், அமைச்சராகப் பதவியேற்பதற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஏற்கனவே சபாநாயகர் தெளிவுபடுத்தியிருக்கிறார்." என்றார்கள். மறுபுறம், ஆளுநர் பயணம் ஏற்கனவே திட்டமிட்டது எனவும் அதற்கும் இந்த தீர்ப்புக்கும் தொடர்பு இல்லை என்றும் சொல்லப்படுகிறது. ஆளுநர் மீண்டும் தமிழகம் வரும்போதுதான் அனைத்தும் தெரியவரும்
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWYஜாபர் சாதிக் வாக்குமூலமும் பிரபலங்களும்... போதைப்பொருள் வழக்கு நிலவரம் என்ன?!
http://dlvr.it/T46N5M