திருவாரூர் மாவட்டம், கிடாரம் கொண்டான் பகுதியில் அமைந்துள்ளது திரு விக அரசு கலைக் கல்லூரி. இக்கல்லூரியில் 3,500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். கல்லூரி ஆண்டு விழாவும், நுண்கலை மன்ற விழாவும், கல்லூரியில் அமைந்துள்ள மாதவி கலை அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினர்களாகத் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் மற்றும் தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் நா.தனராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், ``இது கல்லூரி நிகழ்ச்சி என்பதால், அரசியல் பேசக் கூடாது. ஆனால் இதைச் சொல்லியே ஆக வேண்டும். திராவிட மாடல் ஆட்சியில் தலையாயக் கொள்கைகளில் ஒன்று பெண்களுக்கு, முன்னுரிமையும் சம உரிமையும் வழங்குவது. அக்கொள்கை முயற்சியின் வெற்றியாக, இக்கலை அரங்கத்தில் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளே அதிக அளவில் இடம் பெற்றிருக்கிறீர்கள். தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியை பெண்களுக்கு ஒதுக்க திமுக முடிவா?! - ரேஸில் யார் யார்?!
பெண் கல்வியை ஊக்கப்படுத்த அரசுப் பள்ளிகளில் பயின்று, கல்லூரியில் கல்வி பயிலும் மாணவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் என்ற புதுமைப் பெண் திட்டம் துவக்கப்பட்டது. திராவிட மாடல் ஆட்சியில் மகளிருக்குக் கட்டணமில்லா இலவச பேருந்து , மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், மகளிர் உரிமைத்தொகை என மகளிர் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற திட்டங்களை நம் முதல்வர் அறிவித்திருக்கிறார்.
எனக்குள் ஒரு பயம்... என்ன இது, எதை எடுத்தாலும் மகளிருக்கான திட்டங்களையே அறிவித்துக் கொண்டிருக்கிறார்களே... இப்படியே தொடர்ந்தால், முன்னர் பெண் குழந்தைகள் பிறந்தால், கள்ளிப்பால் கொடுத்துக் கொலைசெய்யும் வழக்கம் இருந்ததைப்போல, வரும் காலங்களில் ஆண் குழந்தைகள் பிறந்தால் கள்ளிப்பால் கொடுத்துக் கொலைசெய்யும் நிலை வந்துவிடுமோ எனப் பயந்து கொண்டிருந்தேன். ஆனால், நம் முதல்வர் அவர்கள் தமிழ் புதல்வன் என்ற அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரி பயிலும் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் என்ற சிறப்பான திட்டத்தை அறிவித்திருக்கிறார்" என்றார்.
தொடர்ந்து பேசியவர், ``இக்கல்லூரியில் உள்ள மாதவி கலையரங்கத்தில் அனைத்து மாணவர்களும் அமரும் வகையில் இட வசதி இல்லை... எனவே, புதிய கலையரங்கம் அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளீர்கள். நம் முதல்வர் அவர்கள் திருவாரூர் என்றாலே நிச்சயம் இல்லையென்று சொல்ல மாட்டார். இது குறித்து அரசுடன் கலந்தாலோசித்து நிச்சயம் கோரிக்கை நிறைவேற்றப்படும். அதுவரை இருக்கும் கலையரங்கத்தில் மாணவர்களுக்கும் இடமளித்து ஆண்களுக்கான சம உரிமையை மாணவிகள் வழங்க வேண்டும்" என்றார். சிக்கிய ரூ.75 லட்சம்; திமுக எம்.எல்.ஏ மகனிடம் ஊழல் தடுப்பு அதிகாரிகள் சோதனை - பூண்டி கலைவாணன் பதில்
http://dlvr.it/T46qg9