பாஜக அரசு கடந்த 2018-ல் தேர்தல் பத்திரம் திட்டத்தைக் கொண்டுவந்தது. இதில் எந்தெந்த அரசியல் கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றது என்பது மட்டுமே தெரியும். ஆனால், யார் எந்தக் கட்சிக்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்பது தெரியாது. ஆர்.டி.ஐ மூலம்கூட யாராலும் அறிந்துகொள்ள முடியாத வகையில்தான், பா.ஜ.க இந்தத் திட்டத்தை உருவாக்கியது. ஆனால், இது கறுப்புப் பணத்தை ஒழிக்கும் என பா.ஜ.க கூறியது. இதனால், யார் எந்தக் கட்சிக்கு எவ்வளவு கொடுத்தார் என்பதையே சட்ட ரீதியாக ரகசியமாக வைக்கும் இந்தத் திட்டம் எப்படி கறுப்புப் பணத்தை ஒழிக்கும், இது மேலும் கருப்புப் பண பதுக்கலைத்தான் அதிகரிக்கும் என உச்ச நீதிமன்றத்தில் ADR, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உட்பட மூன்று தரப்புகள் மனு தாக்கல்செய்தன.உச்ச நீதிமன்றம் - தேர்தல் பத்திரம்
பின்னர், இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்தத் திட்டம் சட்டவிரோதம் எனக் கூறி ரத்து செய்து, அனைத்து தேர்தல் பத்திர தரவுகளையும் வெளியிட உத்தரவிட்டது. மேலும், ஒரு நிறுவனம் ஆளுங்கட்சிக்குத் தேர்தல் பத்திரம் மூலம் நிதி கொடுக்கிறதென்றால், அதற்குப் பிரதிபலனை எதிர்பார்க்கும், பின்னர் ஆளுங்கட்சியும் அரசு ஒப்பந்தங்கள் போன்றவற்றைக் கைமாறாகக் கொடுக்கும் சூழல் உருவாகும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
இத்தகைய சூழலில், எஸ்.பி.ஐ அளித்த தேர்தல் பத்திர தரவுகளை நேற்று முன்தினம், எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு மதிப்பில் தேர்தல் பத்திரங்களைப் பெற்றது, எந்தெந்த அரசியல் கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றது எனத் தனித்தனியாக இரண்டு பட்டியலாகத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில், யார் எந்தக் கட்சிக்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்பது தெரியாவிட்டாலும், மேகா இன்ஜினியரிங் போன்ற நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் வாங்கிய சில நாள்களில் பல கோடி மதிப்பில் அரசு ஒப்பந்தங்களைப் பெற்றிருக்கின்றன என்பது எளிதாகத் தெரியவருகிறது என எதிர்க்கட்சி தலைவர்கள் சாடுகிறார்கள்.இந்திய தேர்தல் ஆணையம் - SBI - Electoral Bond
இன்னொருபக்கம், பா.ஜ.க-வுக்கு மட்டும் எப்படி மொத்த தேர்தல் பத்திரங்களில் (2019 ஏப்ரல் டு 2014 ஜனவரி) பாதியளவு நிதி (ரூ.6,000 கோடி) சென்றிருக்கும், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற மத்திய ஏஜென்சிகள் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டி நிதி வாங்கப்பட்டிருக்கிறது என எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. இதில் சிறப்பு விசாரணை நடத்தவேண்டும் என காங்கிரஸும் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேர்தல் பத்திரம் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்துசெய்திருக்க வேண்டாம் எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா டுடே கான்க்ளேவ் நிகழ்ச்சியில் இதுபற்றி பேசிய அமித் ஷா, ``இந்திய அரசியலில் கறுப்புப் பணத்தை ஒழிக்கவே தேர்தல் பத்திரம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேசமயம், இதில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நானும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன். ஆனால், தேர்தல் பத்திரத்தை முழுமையாக ரத்து செய்வதற்குப் பதிலாக, அதை இன்னும் மேம்படுத்தியிருக்க வேண்டுமென நினைக்கிறேன்" என்று கூறினார்.அமித் ஷா
மேலும், பா.ஜ.க-வுக்கு மட்டும் எப்படி ரூ.6,000 கோடி எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கேள்விகளுக்கு, ``மொத்தம் ரூ.20,000 கோடி மதிப்புள்ள தேர்தல் பாத்திரங்களில் பா.ஜ.க-வுக்கு ரூ.6,000 கோடி கிடைத்தது. மீதமிருப்பவை எங்கே சென்றது... திரிணாமுல் ரூ.1,600 கோடி, காங்கிரஸ் ரூ.1,400 கோடி, பி.ஆர்.எஸ் ரூ.1,200 கோடி, பிஜு ஜனதா தளம் ரூ.750 கோடி, தி.மு.க ரூ.639 கோடி. 303 எம்.பி-க்கள் இருந்தும் எங்களுக்கு ரூ.6,000 கோடிதான். மீதமிருக்கும் 242 எம்.பி-க்களின் கட்சிகள் ரூ.14,000 கோடி பெற்றிருக்கின்றன. நான் சொல்கிறேன்... கணக்குகள் எல்லாம் முடிந்த பிறகு அவர்களால் மக்களைச் சந்திக்க முடியாது" என்று அமித் ஷா கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWYElectoral Bond: ``கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பணம் பறிக்கும் வழி” - ராகுல் காந்தி காட்டம்
http://dlvr.it/T48YNr